தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி Growing social inequality in Germany ஜேர்மனியில் அதிகரிக்கும் சமூக சமத்துவமின்மைBy
Denis Krasnin Use this version to print| Send feedback சமூக நல அமைப்புகளின் ஒரு கூட்டணியான மத்திய சமத்துவ கூட்டமைப்பு "சமுதாயம்: நெருக்கடியில் இருக்கிறது?” என்ற 2014இற்கான அதன் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. கவனமாக ஆராயப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஜேர்மனியில் அச்சமூட்டுகின்ற சமூக சூழ்நிலைப்பற்றி ஊடகங்களில் வெளிவரும் சாதகமான தகவல்களுக்கு உறுதியாக மாறுபட்டவகையில் நிலைமைகளின் ஒரு தெளிவான காட்சியை அந்த அறிக்கை வழங்குகின்றது. வேலை செய்வோரின் எண்ணிக்கை ஒரு புதிய உயர்ச்சியான 2012இல் 41.6 மில்லியன் அளவை அடைந்துவிட்டது என ஊடகங்கள் ஒரு வெற்றியாக தெரிவித்திருக்கும் போது வேலைசெய்த மணித்தியாலங்களின் எண்ணிக்கையுடன் அந்த அறிக்கை முரண்படுகின்றது. 1960இல் 26 மில்லியன் மக்கள் பணியில் இருந்தபோது வேலை செய்த மொத்த மணித்தியாலத்திற்கு சற்று அதிகமாக 58 பில்லியன் மணித்தியாலங்களுக்கு அண்ணளவாகவே இது இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் சரமாசரி வேலைநேரங்கள் கூடுதலாக இருந்தன என்பதை ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சமீபத்திய ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பு பாரிய மோசமான சமூக விளைவுகளுடன் கூடிய பகுதிநேர பணியின் வெடிப்புமிக்க அதிகரிப்புடன் தொடர்புபட்டிருக்கிறது. 1993 மற்றும் 2012இற்கு இடையிலான காலத்தில் சமூக காப்புறுதியுடன் கூடிய முழுநேர வேலைகளின் எண்ணிக்கை 25.5 மில்லியனிலிருந்து 21.8 மில்லியனுக்கு குறைந்துள்ளன. கட்டாயம் சமூக காப்புறுதி கூடிய முழுநேர வேலைவாய்ப்பு சதவிகிதத்தில் ஒரு குறைப்பிற்கான "தெளிவான போக்கு" இருக்கிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதே காலகட்டத்தின் போது, பகுதிநேர வேலைகள் 7.1 மில்லியன் அளவிற்கு இரட்டிப்பாகியது. பகுதி நேரமாக வேலைப்பார்க்கும் இருவரில் ஒருவர் குறிப்பாக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2012இல் மேலும் ஒரு 4.8 மக்கள் மட்டுப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பில் இருந்தனர். அவர்கள் சிறிய வேலைகள் அல்லது ஒரு குறுகிய கால, நடுத்தர அல்லது தற்காலிக அடிப்படையில் வேலை செய்கிறார்கள். மத்திய தொழிலாளர் முகமையிடமிருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில், ஏறத்தாழ ஒரு 3 மில்லியன் கூடுதல் மக்கள் அவர்களின் முக்கிய வேலைக்கு மேலாக இது போன்ற வரையறுக்கப்பட்ட ஒரு இரண்டாவது வேலை செய்கின்றார்கள். புள்ளிவிபரங்களில் உள்ள வேலைவாய்ப்பின்மையின் குறைப்பு பற்றி அரசாங்கம் புகழ்ந்து கூறிக்கொள்வது இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளின் அதிகரிப்புடன் சம்பந்தப்பட்டுள்ளது. நீண்டகாலம் வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு அதாவது ஒரு வருடத்திற்கும் அதிகமாக ஒரு வேலை இல்லாமல் இருந்தவர்கள் வறுமையிலிருந்து வெளிவருவது மென்மேலும் கடினமானது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மூன்றில் ஒரு பங்கு வேலையில்லாதவர்கள், இந்த வகையில் சேர்ந்துவிடுவார்கள். ஆயினும் அந்த புள்ளிவிபரம் இப்படிப்பட்ட ஒவ்வொருவரையும் கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளாது. உதாரணமாக, ஒரு நீண்டகாலம் வேலையில்லா நபர் ஒரு கட்டாய பயிற்சித்திட்டம் ஒன்றில் கலந்துகொண்டால் அவர் வேலைவாய்ப்பின்மை புள்ளி விபரத்திலிருந்து நீக்கப்படுகிறார். 2012இன் கடைசி மாதம், இது குறைந்த பட்சம் 392,000 என்று கணக்கிடப்பட்டது. நோய்வாய்பட்டிருந்தவர்கள், மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தையுடன் இருக்கும் பெற்றோரில் ஒருவர் மற்றும் வயது முதிர்ந்தோர் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. மே மாதம், "வேலை செய்ய தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் அரச உதவிபெற தகுதியானவர்கள்" அனைவரின் எண்ணிக்கை (வேலை செய்ய தகுதி வாய்ந்தவர்கள் வேலைவாய்ப்பற்றவர்களுக்கான உதவி II அல்லது ஹார்ட்ச் IV சமூகநல உதவி பெறுவார்கள்) 4.43 மில்லியனாக இருந்தது. வேலைவாய்ப்பற்றவர்களுடன், வேலை பார்த்தும் அரச உதவியை சார்ந்திருக்கும், 1.3 மில்லியன் தொழிலாளர்களை இது உள்ளடக்கி இருந்தது. நீண்டகால வேலைவாய்ப்பின்மையிலிருந்து வெளியேறுவது கடினமாக இருக்கிறது. மூன்றில் ஒருவர் மட்டுமே கட்டாய சமூக காப்புறுதியுடன் ஒரு வேலை பெற முடிகிறது. பெரும்பாலானவர்களுக்கு, நிலையற்ற வேலை சூழல்கள் காத்திருக்கின்றன. வேலை செய்துக்கொண்டிருந்த போதிலும், நிறைய பேர் அரசிடமிருந்து கிடைக்கும் பலன்களையே இன்னும் சார்ந்திருக்கிறார்கள். பாதிப் பேர் மட்டுமே எந்த வகையான ஒரு வேலையாக இருந்தாலும் ஒரு வருடத்திற்கும் அதிகமாக அதில் தொடர்திருக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் மீண்டும் ஒருமுறை வேலையற்றவர்களாக ஆகிறார்கள் மேலும் அவர்கள் வேலைவாய்ப்பு மையத்தின் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை பின்பற்ற வேண்டியவர்களாகிறார்கள். வறுமை குறித்த ஆராய்ச்சியாளர் இரேனெ பெக்கேர்ட்டின் கூற்றுபடி, 1.5 மில்லியன் வேலையற்றவர்கள் அடிப்படை சமூக நல உதவியைப் பெற உரிமையுடையவர்களாக இருந்தபோதும் அவர்கள் அதை கேட்பதில்லை. ஒரு மணி நேரத்துக்கு €8.50 என்று திட்டமிடப்பட்ட குறைந்தபட்ச ஊதியம், குறைந்த ஊதிய வேலைகளில் உள்ளோருக்கும் தகுதிக்கு குறைந்த வேலையில் உள்ளோருக்கும் உதவாது. அறிக்கையில் இருக்கும் கணக்குப்படி மாதம் 350 யூரோவிற்கு ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுக்கும் ஒரு தனி நபர், வாரத்திற்கு 37.7 மணி நேரம் வேலை செய்த பிறகும் Hartz IVஇல் இருக்கும் யாரோ ஒருவரைவிட மிக மோசமான நிலையில் இருப்பார். அந்த குறைந்த பட்ச ஊதியம் யாரையும் ஏழ்மையிலிருந்து காப்பாற்றாது, ஆனால் Hartz IVஇற்காக அரசாங்கம் செலவழிக்கும் சுமையை பகுதியளவில் நீக்கும். குறைந்த ஊதியம் மற்றும் பகுதி நேர வேலைகள் விரிவாக்கத்தின் ஒரு மேலதிக விளைவாக வருமானத்திற்கும் மற்றும் சொத்துக்கும் இடையேயான ஒரு அதிகரிப்பு இருக்கிறது. மக்களின் வருமான சதவிகிதம் அதாவது ஊதியங்கள் 1993இல் 73.5 சதவிகிதத்திலிருந்து 2012இல் 64.2 சுருங்கிவிட்டது. மூலதன வருமானத்தின் சதவிகிதத்தில் ஒரு தொடர்ச்சியான அதிகரிப்பு இருந்தது. அறிக்கையின் படி, தொழிலாளர்களின் வறுமை மற்றும் அந்நியப்படுத்தப்படல் ஒரு தொடர்ச்சியான போக்காக காணப்படுவதுடன், உறுதியடைந்தும் கொண்டிருக்கிறது. மக்கள் தொகையில் பதினைந்து சதவிகிதம் ஏழைகள் அதாவது அவர்கள் சராசரி வருமானத்தை விட 60 சதவிகிதம் குறைவாக சம்பாதிக்கிறார்கள். ஜேர்மனியில் ஏழ்மை படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. மேற்கு ஜேர்மனி அதேபோல் அந்த முன்னாள் கிழக்கு ஜேர்மனி இரண்டிலும் ஆனால் ஏறத்தாழ சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வளர்ந்துள்ளது என்று ஆசிரியர்கள் எழுதுகின்றனர். தெளிவாக "ஒரு பெரிய மற்றும் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான மக்கள் வாழ்க்கை மேம்படுத்தப்படுவதில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளார்கள்.” டோர்ட்முண்ட், லைப்சிக், ட்யூஸ்பேர்க், பேர்லின், பிரேமன், எசன், ஹனோவெர் மற்றும் ட்ரெஸ்டென் ஆகிய பெரிய நகரங்கள் வறுமையின் முக்கிய பகுதிகளாக இருக்கின்றன. இந்த ஒவ்வொரு நகரத்திலும் ஐவரில் ஒருவர் ஏழை, மற்றும் முதல் மூன்று நகரங்களில் நான்கில் ஒன்று வறுமையில் இருக்கிறார். அத்துடன், பத்து பெரியவர்களில் ஒருவர் அதிகமாக கடனாளியாக இருக்கிறார் மேலும் அவரின் சொந்த கடனையே கட்ட இயலாத நிலையில் இருக்கிறார். 2009இல், 6.19 மில்லியன் மக்கள் வருடம் முழுவதும் கடனில் இருந்தார்கள். 2013 அளவில் இது மேலும் 390,000 என்ற அளவிற்கு அதிகரித்தது குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் வயதானவர்களின் எண்ணிக்கை தீவிரமாக வளர்ந்தது." 2004 மற்றும் 2013 க்கும் இடையே 20 வயதுக்கு கீழ் கடன்பட்டவர்களின் எண்ணிக்கை மும்மடங்காகியது. அதே நேரம் 70 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமாக அதிகரித்தது. "வேலைவாய்ப்பின்மை, குடும்ப சூழ்நிலை, நோய் மற்றும் அவர்களின் சொந்த வியாபாரத்தை ஸ்தாபிக்க தவறியது ஆகியவை இதற்கான முக்கியமான காரணங்களாகும்..” வேலை வழங்கும் மையங்களால் கடனில் மூழ்க நிர்பந்தப்படுத்தவர்களின் அளவு குறைவானதல்ல என்பது சேர்க்கப்பட வேண்டும். வறுமையிலிருக்கும் அடிமட்ட ஏழையின் நிலை குறித்து அறிவியல் ரீதியாக விளக்கமாக ஆராயப்பட்டிருந்தது. செல்வந்தர்கள் பற்றிய நிலை வேறாக இருக்கிறது: ஆய்வுகளிலிருந்து அடிப்படை புள்ளிவிபரங்களில் இருந்து, அதன் மூலம் இருக்கும் மிகவுயர்ந்த செல்வத்தை ஓரளவு எடுத்துக்காட்டுவதன் மூலம் தற்போதிருக்கும் செல்வ உறவுகளை முற்றாக எடுத்துக்காட்டுவதில்லை. ஆனால் சமூக சமத்துவமின்மையின் ஒரு உயர் மட்டத்தை இந்த முழுமைப்பெறாத தகவல்கள் காண்பிக்கின்றன. ஆய்வுகளின் படி, கடன்கள் மற்றும் வங்கி கடன்கள் ஆகியவற்றை கழித்தபின், ஜேர்மனியில் ஒரு சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் €83,008 என்ற அளவிலும், மொத்த குடும்பச் சொத்து €6.3 டிரில்லியன் என்ற அளவிற்கும் இருக்கின்றன. உண்மையில், மிகவும் ஏழ்மையான 40 மில்லியன் குடும்பங்களில் 20 சதவிகிதம் பேர் ஒரு சராசரியாக €4,600 என்ற அளவுக்கு கடன் வைத்திருக்கிறார்கள், அதே சமயத்தில் மிகவும் செல்வசெழிப்பு மிக்க 10 சதவிகிதம் பேர் €1.15 மில்லியன் அளவிற்கு சராசரி சொத்து மதிப்பாக கொண்டிருக்கிறார்கள். ஜேர்மனி, எல்லாவற்றையும் விட சொத்துகளை சமனற்றமுறையில் பகிர்ந்துகொடுக்கும் நாடாக ஐரோப்பாவில் முன்னணியில் நிற்கின்றது. உயர்மட்ட 10 சதவிகிதினர் உள்ளேயே, சொத்து பகிர்மானத்தில் ஒரு அகன்ற வேறுபாடும் இருக்கிறது. போஸ்டன் கன்சல்டிங் என்ற வணிக ஆலோசனை நிறுவனத்தின் ஒரு ஆய்வுபடி, ஜேர்மனியில் 0.002 சதவிகிதமேயான 839 குடும்பங்கள், US$100 மில்லியன் அல்லது €73.5 மில்லியனுக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளன. Manager Magazin இன் கடந்த வருடத்திலிருந்து செல்வந்தர்களின் பட்டியல் படி, மிகவும் செல்வ செழிப்பு மிகுந்த 100 ஜேர்மானியர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள், ஒரு சராசரியாக €3.63 பில்லியன் மதிப்பிற்கு சொத்து வைத்துள்ளார்கள் இது ஒரு சாதனை அளவாகும். அந்த வருடாந்திர அறிக்கை இந்த தீர்மானத்திற்கு வருகிறது அதாவது, கண்டறியப்பட்டவை அனைத்தும் "ஆழமாகும் சமூக பிளவுகள்" பற்றி குறிப்பிடுபவையாக இருக்கின்றன "அத்துடன், சமூக இணக்கம் குறைகிறது.” ஆளும் வர்க்கத்திடம், அதிகமான சொத்து மறுபகிர்மான நடவடிக்கைகளை எடுக்க கோரும் ஒரு முறையீட்டுடன் அது முடிவடைகிறது. அதன் காரணமாக மீண்டும் "சமூக இணக்கம்” வளர முடியும் என்கின்றது. கடந்தகால அறிக்கைகளுக்கான பதிலிறுப்பு இது போன்ற முறையீடுகள் பிரயோசனமற்றவை என்பதையே உறுதிப்படுத்துகிறது. 2011 ஆண்டு அறிக்கையில், மத்திய சமத்துவ சங்க தலைவர் உல்றிச் ஷ்னெடர், லண்டன் மற்றும் ஏனைய பெரிய பிரிட்டிஷ் நகரங்கள் போன்றவற்றில் உள்ளது போல சமூக அமைதியின்மை குறித்து எச்சரிக்கிறார். அப்பொழுதிருந்து, மக்களில் பெரும்பாலானவர்களின் சமூக சூழ்நிலைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றன. |
|
|