தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் Far-right demonstration in Paris calls for resignation of President Hollande பாரிஸில் தீவிர வலதுகளின் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி ஹாலண்டின் இராஜிநாமாவைக் கோருகிறது
By Antoine Lerougetel Use this version to print| Send feedback பிரான்சின் தீவிர வலது கடந்த ஞாயிறன்று “சீற்ற தினம்” ஒன்றை ஏற்பாடு செய்து பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்டை இராஜிநாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தது. பாரிஸில் 17,000 பேர் அணிவகுத்தனர் என்று பொலிஸ் மதிப்பீடு செய்துள்ளது. Médiapart செய்தித்தளம், கூட்டு “எட்டு வெவ்வேறு பதாகைகளின்கீழ் போராட்டங்கள் ஒன்றுபடும் இயக்கத்தை அறிவித்துள்ளது: வரிவிதிப்பு, கல்வி, இளைஞர்கள், குடும்பம், தேசிய அடையாளம், மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு, தடையற்ற தொழில், அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பு என. பல தீவிர வலது குழுக்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டன; அவற்றுள் தேசிய புரட்சிகர குழுக்கள், தேசிய முன்னணி, நிலமும் மக்களும்; மற்றும் இவான் பெனெடெட்டி, முன்னாள் தேசிய முன்னணி மற்றும் Oeuvre Française இன் தலைவர், கடந்த ஜூலை மாதம் ஒரு மாணவர் கிளெமென்ட் மெரிக்கை நவ-பாசிஸ்ட்டுக்கள் கொலை செய்தபின் கலைக்கப்பட்டது, ஆகியோர் அடங்குவர். தீவிர-வலது இஸ்லாமியவாத நகைச்சுவை நடிகர் Dieudonné M‘Bala M’Bala வின் ஆதரவாளர்களும் இருந்தனர்; இவர்கள் Robert Faurisson போன்ற இன அழிப்பை (Holocaust) மறுப்பவர்களுடன் பகிரங்கமாக தொடர்பு உடையவர்கள். அணிவகுப்பில் கோஷமிடப்பட்ட நவ-நாசி யூத விரோத கருத்துக்களில், “ஐரோப்பாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறு”, “பிரான்ஸ் பிரெஞ்சு மக்களுக்கு”, “ஹாலண்ட் போதும், தொழில், குடும்பம், தந்தை நாடு” – இந்த கோஷத்தின் கடைசி மூன்று சொற்கள் பாசிச பெத்தான் ஆட்சியின் தாரகமந்திரம் ஆகும், அது இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஆக்கிரமிப்புடன் ஒத்துழைத்தது. வலதுசாரி பிரெஞ்சு அரசியல்வாதிகளிடம் இருந்து அணிவகுப்பு பலதரப்பட்ட அனுதாப சமிக்ஞைகளை பெற்றது. மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியம் (UMP), சீற்ற தினத்திற்கு ஆதரவு விடுக்கவில்லை, ஆனால் அதன் முன்னாள் கல்வி மந்திரியும், கட்சியின் துணைத் தலைவருமான Luc Chatel, “நான் அதற்கு ஆதரவு தரவில்லை, ஆனால் அதை புரிந்துகொள்கிறேன்” என்றார். முன்னாள் வீட்டுதுறை மந்திரியும் சிறிய கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவருமான Christine Boutin தான் “சீற்றமுடைய மக்களி கூட்டு” என்பதுடன் உடன்பாட்டாலும், வன்முறை வரும் என்ற பயத்தில் அதில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறினார். மரீன் லு பென்னின் தலைமையில் வழிநடத்தப்படும் தேசிய முன்னணி (FN)—இவருடைய தந்தை இகழ்வான முறையில் இன அழிப்பை (Holocaust) ”வரலாற்று விவரம்” என உதறித்தள்ளியவர்— சீற்ற தினத்திற்கு ஆதரவு அளிக்கத் தயங்கினார். அவரது மருமகள், FN இன் பிரதிநிதி மரியோன் மரேஷால் லு பென், தன்னுடைய உள்ளூர் கிளை, சீற்ற ஆர்ப்பாட்ங்களில் கலந்து கொண்டபின் எண்ணத்தை மாற்றிக் கொண்டார், ஏனெனில் “Dieudonné ஆதரவாளர்கள் மற்றும் இணைய தளத்தில் பறிமாற்றத்தின் மோதல் தன்மையினால்” என்றார். மிக இழிந்த, பிற்போக்கு சக்திகளால் மட்டுமே ஹாலண்டிற்கு எதிர்ப்பு காட்டி அணிவகுப்பு நடத்தப்பட்டது, பிரான்சில் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் தலைமை இல்லாத நிலையை பிரதிபலிக்கிறது. இடது பக்கத்தில், ஹாலண்டின் நவ-காலனித்துவ போர்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்திடம் ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. அவர் 1958க்குப் பின் பிரான்சின் மிக செல்வாக்கற்ற ஜனாதிபதியாக ஆகிவிட்டார். போலி இடது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற சோசலிஸ்ட் கட்சி (PS) சார்பு மத்தியதர வர்க்க குழுக்கள், பரந்த “இடது” என்ற அரசியல் நிலைப்பாட்டில் காணப்படுபவை உள்ள சூழலில், இந்த எதிர்ப்பிற்கு வெளிப்பாடு இல்லை. மேலாதிக்கம் செலுத்துவோர் வலதுசாரி அரசியலில் மிக இழிந்த கூறுபாட்டினர் ஆவர். சமீபத்திய உள்ளூர் இடைத் தேர்தல்களில் நவ-பாசிச FN, PS ஐவிட அதிகம் வாக்குகள் பெறுகிறது. மே மாதம் நடைபெற உள்ள ஐரோப்பிய தேர்தல்களில், கருத்துக்கணிப்புக்கள்; பிரதான பாராளுமன்ற கட்சிகளுக்கும் முன்னதாக, அதாவது PS மற்றும் முன்னாள் கன்சர்வேடிவ் ஜனாதிபதி சார்க்கோசியின் UMP ஐயும் விட FN க்கு மிக அதிக வாக்குகளை கொடுக்கின்றன. சீற்ற தினம், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி நிராயுதபாணிகளாக்க, தங்கள் போலீஸ் அரசு, முதலாளித்துவ சார்பு நிகழ்ச்சி நிரல்களை மறைக்க, பேரினவாதம், ஓரினச்சேர்க்கை, மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பை பயன்படுத்தும் ஒரு ஐரோப்பா தழுவிய வளர்ச்சியின் எடுத்துக்காட்டாக உள்ளது. கடந்த ஆண்டு அவர்கள் பிரான்சில் ஓரினத் திருமணத்திற்கு எதிராக வெகுஜன அணிவகுப்புக்களை ஏற்பாடு செய்தனர்; ஜனவரி 19ல் ஆயிரக்கணக்கானவர்களை கருக்கலைப்பிற்கு எதிராக திரட்டினர். போலி இடதுசக்திகள் ஹாலண்டிற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்கியுள்ளது மட்டும் இன்றி, தொடர்ச்சியான அரசாங்கங்களின் போர்கள், பேரினவாத கொள்கைகளுக்கு ஆதரவையும் கொடுத்துள்ளன; இது பிரெஞ்சு அரசியல் தீவிரமாக வலதிற்கு மாற்றப்பட்டு, FN அரசியல் நடைமுறையில் ஒருங்கிணைய மட்டுமே உதவும். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), Jean-Luc Melenchon உடைய இடது கட்சி, மற்றும் NPA ஆகியவை, இஸ்லாமிய முக்காடு மற்றும் பர்தாவிற்கு எதிரான சட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளன. இவையும், தொழிற்சங்கங்களும் ஐரோப்பிய ஒன்றியம், வங்கிகள் ஆணையிடும் சிக்கனக் கொள்கைகளை அவர் செயல்படுத்துவார் என்பதை முற்றிலும் அறிந்திருந்தும், தேர்தல் வேளையில் நிபந்தனையற்ற ஆதரவை ஹாலண்டிற்கு கொடுத்தன. ஹாலண்டின் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ், ரோமாக்களை குற்றவிசாரணைக்கு உட்படுத்தியதற்கு எதிராக இவை பிரச்சாரம் ஏதும் செய்யவில்லை; அதேபோல் ஆவணமற்ற குடியேறிய தொழிலாள்களுக்கு எதிரான செயல்கள், மக்களை மிகப்பெரிய முறையில் மின்னணு மூலம் ஒற்று அறிதல், ஹாலண்டின் வெளிநாட்டுப் போர்கள் இவற்றிற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்யவில்லை. இவை ஹாலண்டிற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு ஓய்வூதிய வெட்டுக்கள் குறித்து பேச்சு நடந்ததற்கு ஒரு சம்பிரதாய எதிர்ப்பை மட்டும் காட்டின. ஆனால் நடவடிக்கையை அவை எதிர்க்கவில்லை என்பதாலும், ஹாலண்டிற்கு தொழிலாள வர்க்கம் எதிர்ப்புக் காட்டும் என்னும் அச்சத்தாலும், அவர்கள் பரந்த முறையில் ஹாலண்டின் ஆதரவாளர்கள் என்று சரியாக உணரப்படுவதாலும், இந்த எதிர்ப்புக்கள் சிதைந்து போயின. திங்களன்று 3.3 மில்லியன் முற்றிலும் வேலையற்ற மக்கள் (10.6%), 489 மில்லியன் பகுதியளவு வேலையின்மை என்னும் மிக அதிக எண்ணிக்கை அறிவிப்பு, 2013 முழுவதும் இடைவிடாமல் கூறப்பட்டுவந்த அதாவது அவர் வேலையின்மை உயர்வை மாற்றிவிடுவார் என்ற ஹாலண்டின் பொய்யை அம்பலப்படுத்தின. PS அரசாங்கம் இராஜிநாமா செய்ய வேண்டும் என அழைப்பு விடுவதற்குப் பதிலாக, அதே நாளிலே, தொழிற்சங்கங்களும் முதலாளிகள் அமைப்புக்களும், சமூகப் பங்காளிகள் என அழைக்கப்படுவோர், பிரதம மந்திரி Jean Marc Ayrault ஐ சந்தித்து ஹாலண்டின் தொழிற்சங்கங்கள் முதலாளிகளுடன் கொண்ட பொறுப்பு உடன்பாட்டில் (Responsibility Pact) பொதிந்துள்ள மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை எப்படி செயல்படுத்துவது என்று விவாதிக்க கூடினர். இதில் முதலாளிகளுக்கு 30 பில்லியன் யூரோக்கள் வரி விலக்குகள் மற்றும் சமூகநலச் செலவுகளில் 20 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களும் அடங்கும்; இவை போட்டித்தன்மையை விரிவாக்கவும், பெருவணிகத்தின் இலாபங்களை தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் அதிகரிக்கும் வடிவமைப்பு கொண்டவை. முதலாளிகள் அமைப்பான Medef இன் உடனடி விடையிறுப்பு, வரிச்சலுகைகள் இருமடங்காக 60 பில்லியன் யூரோக்களுக்கு வேண்டும் என்று கோரி, நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற யோசனையை நிராகரித்திருந்தது. ஜனவரி மாதம் 14ம் திகதி Intersyndicale கூட்டு தொழிற்சங்க குழுவின் அறிக்கை – கம்யூனிஸ்ட் கட்சி மேலாதிக்கம் கொண்ட CGT, ஆசிரியர்கள் சங்கமான FSU, PS பிணைப்புடைய CFDT மற்றும் UNSA— இன்னும் தொடர்ச்சியான வணிக சார்பு கொள்கைகளுக்கு முக்கியமாக அழைப்பு விடுத்தன. இந்த அறிக்கை “இன்னும் கூடுதலான தெளிவுடன் வணிகத்திற்கு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்க நிதியுதவி அளித்தல்.... வேலைகளை தோற்றுவிக்க வணிகங்களுக்கு உதவியும் வரிச் சலுகைகளும் பொது நிபந்தனைகளாக இருக்க வேண்டும்” என அழைப்பு விடுத்தது. இந்த அபிவிருத்திகள், ஹாலண்டின் பிற்போக்குத்தன கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் உள்ள பரந்த எதிர்ப்பு, PS மற்றும் போலி இடது சக்திகளுக்கு எதிராக அரசியல் ரீதியாக இயக்கப்படும் ஒரு சுயாதீன இயக்கத்தில் மட்டும்தான் வெளிப்பாட்டை காணும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. |
|
|