சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈரான்

Iranian president declares country “open for business”

ஈரானிய ஜனாதிபதி நாடுவணிகத்திற்கு திறக்கும்என அறிவிக்கிறார்

By Keith Jones 
27 January 2014

Use this version to printSend feedback

ஈரானிய ஜனாதிபதி ஹாசான் ருஹானி ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸின் நடைபெற்ற உலக பொருளாதார அரங்கிற்கு கடந்தவாரம் பயணித்து உலக நிதிய உயரடுக்கின் ஆதரவை நாடியதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இஸ்லாமிய குடியரசு இணங்கி நடப்பதற்கான ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

ருஹானியுடன் வெளியுறவு மந்திரி ஜவாட் ஜரிப், எரிசக்தி மந்திரி பிஜன் ஜன்கனே ஆகியோரும் வந்திருந்தனர்.

வியாழன் உரை, செய்தியாளர் பேட்டிகள் மற்றும் மேலைத்தலைவர்கள், ஐரோப்பிய எண்ணெய் பெருநிறுவனங்களின் தலைவர்கள் உட்பட வணிகர்களுடன் மூடிய கதவுகளுக்கு பின்னாலான ஒருதொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் ருஹானி ஈரான் அனைத்து நாடுகளுடனும் ஆக்கபூர்வ ஈடுபாடு கொள்ள விரும்புவதாகவும், தொழில்வழங்குனர், பெரும் பொருளாதார நிறுவனங்களை வரவேற்கத்தயார் என்றும் கூறினார்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே புதிய பேச்சுக்களையும் அவர் வரவேற்றார். சுவிஸ் தொலைக்காட்சி நிலையத்திற்கு நாங்கள் விரோதப் போக்கை நட்பாக மாற்ற வேண்டும் என்றார். யூரோ நியூஸுக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், ருஹானி ஈரானின் மிக முக்கியமான, மரபார்ந்த, வரலாற்று உறவுகளை ஐரோப்பாவுடன் புதுப்பிக்க அஸ்திவாரங்கள் போடப்பட்டுள்ளன என்றார்.

ஈரானுக்கும் P6 (.நா.பாதுகாப்புக்குழுவின் 5 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜேர்மனி)க்கும் இடையே 6 மாத இடைக்கால உடன்பாடு ஏற்பட்டு 48 மணி நேரத்தில் ருஹானி டாவோஸுக்கு பயணித்தார். அந்த உடன்பாட்டின்படி, ஈரான் பெரும் சலுகைகளை அமெரிக்கா, அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்குக் கொடுத்துள்ளது. அதன் பொது அணுத் திட்டத்தை உறைய வைத்துவிட்டது அல்லது மூடிவிட்டது. இதற்கு ஈடாக வெள்ளை மாளிகை அதன் மட்டுப்படுத்தப்பட்ட, இலக்குவைக்கப்பட்ட, திரும்பப் பெறக்கூடிய பொருளாதார தடை நிவாரணங்களை கொடுத்துள்ளதாக பெருமை பேசிக்கொண்டது.

அடுத்த 6 மாதங்களில் ஈரான் படிப்படியாக இப்பொழுது வெளிநாட்டு வங்கிகளில் உறைந்துள்ளது 4.2 பில்லியன் டாலர்கள் அதன் சொந்தப் பணத்தையே பெற உள்ளது. அத்துடன் பெற்ரோலியத்திலிருந்து பெறும் பொருட்கள், மதிப்புடைய உலோகங்கள், கார்ப் பகுதிகள் வணிகம் நடத்த அனுமதிக்கப்படும். இது ஈரானுக்கு 7 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிவாரணத்தை அளிக்கும். இது ஈரானுக்கு ஒவ்வொரு 6வாரமும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் தண்டிக்கும் பொருளாதார தடையினால் வெளியே செல்லாத ஏற்றுமதிகளின் மதிப்பிற்குச் சமம் ஆகும்.

ருஹானி தன்னுடைய டாவோஸ் வருகையை ஈரானின் அணுத்திட்டத்தின் இறுதி உடன்பாட்டை அடையும் ஆர்வத்தையும் வலுப்படுத்த பயன்படுத்தினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் இல்லை என்றால் நினைத்துப் பார்க்க முடியாததாகும்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வேறுபாடு இல்லாமல் வாஷிங்டனின் குடியரசு, ஜனநாயக நிர்வாகங்கள் ஈரானின் அணு நோக்கங்களை பயன்படுத்தித் போலியாக தயாரிக்கப்பட்ட ஆதாரமற்ற கூற்றுக்கள் மூலம் தெஹ்ரானைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்தவும், ஆட்சி மாற்றத்திற்காக அரசியல் அடித்தளத்தை அமைக்கவும் முயன்றன.

P-6 உடன் ஈரானிய விருப்பமான ஒரு வலுவான, தீவிர உடன்பாடு ருஹானியால் அறிவிக்கப்பட்டது. அவர் தெஹ்ரானுடைய நீண்டகால ஈடுபாடான அணுவாயுதங்களை நாடுவதில்லை என்பதை வலியுறுத்தி, ஈரானின் இடைக்கால அணு உடன்பாடு வருங்கால உடன்பாடுகள், ஈடுபாடு ஆகியவற்றிற்கு ஒரு முன்னோடி எனவும் ஒரு குறிப்பிட்ட விடயத்திற்கும் அப்பால் செல்கிறது என்று கூறினார்.

இவை ஆப்கானிஸ்தானில் இருந்து லெபனான் வரை மத்தியகிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த மூலோபாய நலன்களுக்கு தெஹ்ரான் உதவும் அடையாளச் சொற்கள் ஆகும். சமீபத்திய மாதங்களில் தெஹ்ரான் பலமுறையும் மத்திய கிழக்கில் வாஷிங்டன் ஸ்திரப்படுத்திக்கொள்ள உதவுவதாக வலியுறுத்தியுள்ளது. 2001ல் அமெரிக்க ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க மற்றும் ஹமின் கர்சாயை அதன் கைப்பாவை ஜனாதிபதியாக நியமிப்பதில் உதவிய அதன் பங்கையும் வலியுறுத்தியுள்ளது.

ருஹானி ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்க எண்ணெய் பெருநிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்குவதில் இன்னும் வெளிப்படையாக இருந்தார். ஐரோப்பிய எண்ணெய் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் அடுத்த செப்டம்பருக்குள் அரசாங்கம் ஈரானின் எரிசக்தித்துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஈர்க்கும் வகையில் நலன்களை அளிக்கும் என்றார்.

BP, Total, Shell, Eni ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் உயர் நிர்வாகிகள், ருஹானி மற்றும் ஈரானிய எரிசக்தி மந்திரி ஜான்கனே கொடுத்த தவகல்கள் பற்றி ஆர்வம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது. எரிசக்தி மந்திரி ஜான்கனே அதே பதவியை 1990களில் கொண்டிருந்தபோது ஈரானின் எண்ணெய்த்துறையில் ஐரோப்பிய முதலீடு விரைவான விரிவாக்கத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.

ஈரான் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுக்கு திறந்துவிட விரும்புகிறது என்று இத்தாலியின் Eni யின் தலைவர் பாவோலோ ஸ்கரோனி, ராய்ட்டர்ஸிடம் கூறினார். இது ஒரு தாக்கம்மிக்க கொடுப்பனவு என்று வந்திருந்த எண்ணெய் நிர்வாகிகளில் மற்றொருவர் தெரிவித்தார்.

அமெரிக்க ஐரோப்பிய பொருளாதாரத் தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைத்தன. ஏற்கனவே அது 2008-09 ல் எண்ணெய் விலைகளி சரிவு, 2008-09 உலக நிதியச் சரிவு ஆகியவற்றினால் தீவிரமாக அதிர்விற்கு உட்பட்டுள்ளது. 2011ல் இருந்து அரசாங்க வரவு-செலவுத் திட்டத்தின் பெரும் தொகையை அளிக்கும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகள் பாதியாகி விட்டதுடன், பணவீக்கம் மற்றும் வேலையின்மை உயர்ந்துவிட்டன.

தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு வெடிப்பை நினைத்து அஞ்சும் ஈரானிய முதலாளித்துவமும் அதன் மதசார்பு அரசியல் உயரடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் புதிய உடன்பாட்டை காண விழைகிறது. இந்த நோக்கத்தை அடுத்து, அதிகாரத்தை இயக்குவது தேசிய ஒற்றுமை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அரசின் சீர்திருத்தவாத பழைமைவாத கொள்கையளவு பிரிவுகள் என அடையாளம் காணப்பட்ட நபர்களை அடக்கியுள்ளது. இது ருஹானியாலும் அவருடைய அரசியல் ஆசானான முன்னாள் ஜனாதிபதி ஹஷேமி ரப்சஞ்சானி இருவராலும் அமைக்கப்பட்டது,

ருஹானி-ரப்சஞ்ஜானி பிரிவு நீண்ட காலமாக வாஷிங்டனுடன் சமரசத்திற்கான உந்துதலுக்கு தலைமை தாங்கி, அமெரிக்க ஆதரவுடைய ஷாவின் குருதி கொட்டிய சர்வாதிகாரத்தை அகற்றிய 1978புரட்சியைத் தொடர்ந்து தொழிலாள வர்க்கத்திற்கும் வறியோர்க்கும் கொடுக்கப்பட்ட சமூக சலுகைகளில் எஞ்சியிருப்பதையும் அகற்ற முயல்கிறது.

வாஷிங்டனை நோக்கி அரசின் நகர்வும் மற்றும் ஈரானிய பொருளாதாரத்தை மறுகட்டமைப்பது என்னும் அதன் திட்டமும் 2010 ல் ருஹானி எழுதிய நூல் ஒன்றில் வெளிப்படுத்தப்படுகின்றது. ஈரானின் தேசிய பாதுகாப்பும் பொருளாதார அமைப்புமுறையும் என்னும் அந்நூல் ஐரோப்பிய, வட அமெரிக்க அரசாங்கங்கள் தொடரும் புதிய தாராளவாதக் கொள்கையை பாராட்டி, ஈரானின் மிகவும் அடக்குமுறையான தொழிற்துறை சட்டங்களைக் கண்டிக்கிறது. இந்நூல், குறைந்தபட்ச ஊதியம் குறைக்கப்படவேண்டும் என வாதிடுவதுடன், ஈரானின் மூலதனச் சொந்தக்காரர்கள் செல்வத்தை தோற்றுவிக்க வேண்டும் என்றால் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் வாதிடுகிறது. நம் முதலாளிகளும் ஆலைகளும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று, தொழிற்சங்கங்கள் ஆகும். தொழிலாளர்கள் தொழில் வழங்குனரின் கோரிக்கைகளுக்கு இன்னும் வளைந்து கொடுக்க வேண்டும் என்று ருஹானி எழுதினார்.

ஈரானிய முதலாளித்துவம் வாஷங்டன் மத்தியகிழக்கில் ஸ்திரப்படுத்திக்கொள்ள அதன் சேவையை வழங்கவும், ஈரானின் மூலவளங்கள், தொழிலாள வர்க்கத்தை கொள்ளையடிப்பதில் இலாபங்களை பெருக்குவதில் உதவ வருகையில், ஒபாமா நிர்வாகம் அது தெஹ்ரானின் திக்கற்ற சரணாகதியைவிட எதையும் விரும்பவில்லை என்று தெளிவாக்கியுள்ளது.

கடந்த திங்கள் அன்று, இடைக்கால உடன்பாடு நடைமுறைக்கு வந்த அதே தினம், அமெரிக்கா ஐ.நாவை, ஈரானுக்கு சிரியப் போரில் அரசியல் முடிவு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கு பெறக் கொடுத்திருந்த அழைப்பை இரத்து செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. அமெரிக்கா ஈரான் ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதற்குக் காரணம் அது வாஷிங்டனின் கோரிக்கையான மாநாட்டின் நோக்கம் அதன் நட்பு நாடான சிரியாவில் பாத்திஸ்ட் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்கு முன்னதாகவே உடன்பாடு தெரிவிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு அங்கு ஒரு இடைக்கால அரசாங்கம் இருக்க வேண்டும், இதில் அமெரிக்காவின் இஸ்லாமியவாத கிளர்ச்சி கைக்கூலிகள் பாதி இடங்களை பெற்றுக்கொள்வர்.

இதன்பின் வியாழன் அன்று அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி ஈரான் மீது போர் என வலியுறுத்தினார். ஈரான் யுரேனிய அடர்த்தியை 5%க்கும் மேலாக மீண்டும் கொண்டுவந்தால், இராணுவ விருப்பத் தேர்வு அமெரிக்காவிடம் உள்ளது, அது செய்ய வேண்டியதை தயாரித்துச்செய்யும் என்பதுதான் என்றார். ஈரான் ஒரு பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் நாடு என்று கெர்ரி கண்டித்து, லெபனிய ஷியைட் ஆயுதக்குழுவான ஹெஸ்போல்லாவை ஆதரிப்பது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரினார்.

இதற்கு மறுநாள் டாவோஸில் உலகப் பொருளாதார அரங்கில், கெர்ரி ஈரான் கையெழுத்திட்ட அணுசக்தி பரவா உடன்பாட்டில் உறுப்பினராக இருக்கையில் ஈரானின் உரிமைகளுக்கு முற்றிலும் முரணான தொடர்ச்சியான கோரிக்கைகளை தெளிவாக முன்வைத்தார். ஒரு முழுச் சுற்று பொது தேவைக்கான அணுத்திட்ட முறைப்படித்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தி. ஈரான்மீது சட்டவிரோத 2003 படையெடுப்பை ஆரம்பிக்க முன் சதாம் ஹுசைனிடம் கோரியவற்றை மாதிரியாகக் கொண்ட வகையில் கெர்ரி தெஹ்ரான்தான் அதன் அணுசக்தி திட்டம் சமாதான நோக்கங்களுக்குத்தான் என நிரூபிக்க வேண்டும், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தை சட்டவிரோதமாக்கும் அமெரிக்கா இயற்றிய தீர்மானங்கள் உள்ளடங்கலான ஐ.நா. பாதுகாப்புக்குழு தீர்மானங்களுக்கும் முற்றிலும் உடன்படவும் வேண்டும் என்றார்.

ருஹானியின் டாவோஸ் மாநாட்டு உரைக்கு விடையிறுக்கையில், அமெரிக்காவும் தானும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரான்மீது சுமத்தியுள்ள கடுமையான தடைகளைச் செயல்படுத்தும் உறுதியையும் வலியுறுத்தி உள்ளது. இதில் உலக வங்கியியல் முறையில் இருக்கும் அதன் நிதிகள் உறையவைக்கப்பட்டுள்ளதுடன், அதன் எண்ணெய் ஏற்றுமதிகள் இலக்கிற்கு உள்ளாகியுள்ளன.

அனைத்து நிறுவனங்களுக்கும் நம் தகவல் ஒன்றுதான் என்று அமெரிக்க நிதி அமைச்சரகத்தின் இரண்டாம் நிலை அமைச்சர் டேவிட் கோகன் தெரிவித்தார். ஈரான் வணிகத்திற்கு இன்னும் திறக்கத்தயாராக இல்லை.... இப்பொழுது ஈரானுடன் மீண்டும் ஈடுபாடு கொள்ளும் நேரமல்ல. இக்கருத்தை அடிக்கோடிட்டுக்காட்டும் வகையில் அமெரிக்க நிதியத் தடைகளை ஈரான் கடந்து செல்ல உதவியதற்காக ஜேர்மனியின் Deutsche Borse பத்திரப்பரிமாற்ற துணைநிறுவனம் ஒன்றை 152 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்துமாறு நிதித்துறை அமைச்சு அறிவித்தது.