சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

As Geneva talks open, US advances trumped-up torture charges against Syria

ஜெனீவா பேச்சுக்கள் ஆரம்பிக்கையில், அமெரிக்கா சிரியாவிற்கு எதிராக போலியாக தயாரிக்கப்பட்ட சித்திரவதைக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது

By Alex Lantier 
22 January 2014

Use this version to printSend feedback

சிரியப்போர் குறித்து ஜெனீவா II சர்வதேச பேச்சுக்கள் சுவிட்சர்லாந்தில் இன்று ஆரம்பிக்க இருக்கையில், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக சர்வதேச மனித உரிமைகள் காவலர்களால் முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற சித்திரவதை, கொலை குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக அமெரிக்கச் செய்தி ஊடகம் நேற்று குரல்கொடுத்துள்ளது.

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் ஜெனீவா பேச்சுக்களை டமாஸ்கஸில் ஆட்சிமாற்றத்தினை கட்டாயப்படுத்துவதற்கு பயன்படுத்தும் வாஷிங்டனின் நம்பிக்கை விரைவாக மறைகையில் இக்குற்றச்சாட்டுக்கள் வெளிப்படுகின்றன. அசாத்தின் படைகளின் முன் தோற்றுள்ளபோதும் இன்னும் அசாத்  பதவியகற்றப்படவேண்டும் என்று கோரிக்கையை எழுப்பும் எதிர்த்தரப்புப் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட பேச்சுக்களில் கலந்து கொள்ள மறுத்துள்ளனர். எதிர்த்தரப்பினரின் நன்கு அறிந்த நெருக்கமான அல் குவேடாவுடனான பிணைப்புக்களை சுட்டிக்காட்டிய அசாத், ஜெனீவா பேச்சுக்களின் நோக்கம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல் என்றுதான் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதாவது அமெரிக்க ஆதரவுடைய எதித்தரப்பிற்கு எதிராக போராடுவதாக இருக்கவேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இருவரும் ஜெனீவா மாநாடு குறித்தும் வரவிருக்கும் சொச்சி ஒலிம்பிக்ஸ் குறித்தும் தொலைபேசி ஊடாக நேற்று பேசியதாகத் தகவல்கள் வந்துள்ளன. ரஷ்ய நகரமான வொல்கோகிராடில் கடந்த மாதம் தற்கொலைக் குண்டுகளுக்குப்பின், அமெரிக்க ஆதரவு உடைய சிரிய எதிர்தரப்பிற்கு ஆதரவாக போராடிய மாஸ்கோ சேஷ்ஷேனிய  இஸ்லாமிய பயங்கரவாதிகள் பலரும் ஒலிம்பிக்கை தாக்கலாம் என அஞ்சுகிறது.

ரஷ்யாவுடன் சிரியாவின் முக்கிய நட்பு நாடான ஈரான் பங்கு பெற்றால் சவுதி அரேபியாவும் சிரிய எதிர்த்தரப்பும் இதைப் புறக்கணிப்பதாக அச்சுறுத்தியபோது ஜெனீவா பேச்சுக்களுக்கான திட்டங்கள் இந்த வாரம் ஒரு படுதோல்வியில் சரிந்தன. இதன் பின் வாஷிங்டன் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈரானுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பை இரத்து செய்ய கட்டாயப்படுத்தியது. முன்னாள் அமெரிக்க மத்திய கிழக்கு தூதர் டென்னிஸ் ரோஸ், நியூயோர்க் டைம்ஸிடம் ஜெனீவா பேச்சுக்கள் வெற்றியடையும் எனத் தான் நினைக்கவில்லை என்றார். ஒரு நிகழ்ச்சிநிரல் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும், பங்குகொள்ளும் அனைத்து பிரிவினரும் குறைந்தப்பட்ச உடன்பாடுகளை அடைய விரும்பவேண்டும், நடைமுறைப்படுத்தும் அனுசரணையாளர்கள் சில அடிப்படை இலக்குகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும், போராடுவோருக்கு சில சமரசங்களை ஏற்படுத்திக்கொள்ள போதுமான உந்துதல் இருக்கவேண்டும். இவற்றில் பெரும்பாலானவை இங்கு இல்லை. எனத்தெரிவித்தார்.

இந்த அழுத்தமான பின்னணியில், அமெரிக்க செய்தி ஊடகமும் வெளியுறவுக் கொள்கை நடைமுறையும் சிரிய ஆட்சி மீது அழுத்தம் கொடுத்து, தேவையானால் டமாஸ்கஸுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு போலிக் காரணத்தையும் கொடுக்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. CNN மற்றும் கார்டியன் செய்தித்தாளுக்குக் கொடுத்த அறிக்கை ஒன்று, சிரிய ஆட்சி கொடூரமான வகையில் 11,000 காவலில் இருந்தவர்களை பட்டினிபோட்டு, சித்திரவதை செய்து, கொலை செய்தது குறித்து புகைப்படங்களை வைத்திருப்பதாக தெரிவிக்கிறது.

அறிக்கையும் அதன் செய்தி ஊடகத்திற்கு முன்வைக்கப்பட்ட விதமும் ஒரு அரசியல் மோசடியும், ஒரு ஆத்திரமூட்டுதலுமாகும். சிரியாவிற்குள் இருக்கும் அல்குவேடாடன் தொடர்புடைய எதிர்த்தரப்பு ஆயுததாரிகளுக்கு நிதியுதவி வழங்கும் கட்டாரினால் நியமிக்கப்பட்ட லண்டன் சட்ட அலுவலகமான Carter-Ruck இனால் தலைமை தாங்கப்பட்ட 31பக்க அறிக்கை அது கூறும் குற்றங்களுக்கு நம்பகமான சாட்சியங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.

இது, மூன்று அனுபவமுடைய அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்திய செயலர்களால் தயாரிக்கப்பட்டது. இதில் சீயேரா லியோனுக்கான ஐ.நா.சபையின் சிறப்பு நீதிமன்றத்தில் இரு முன்னாள் தலைமை வழக்குதொடுனர்களான டெஸ்மோண்ட் டி சில்வா (QC), பேராசிரியர் டேவிட் கிரேன் மற்றும் முன்னாள் யூகோஸ்லேவியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குத்தொடுனரான ஜெப்ரி நைஸ் (QC) அடங்குகின்றனர்.

பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பு (DIA) முன்னாள் ஊழியரான கிரேன் கார்டியனிடம்: இப்பொழுது நம்மிடம் காணாமற்போன மக்களுக்கு என்ன நடந்தது பற்றிய நேரடிச்சான்று உள்ளது. இதுதான் சித்திரவதை செய்யப்பட்டு கொலையுண்டு, அகற்றப்பட்ட ஆகக்குறைந்தது 11,000 மக்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய முதலில் நிரூபிக்கக் கூடிய நேரடிச் சாட்சியமாகும். இது வியப்பானது... புகைப்படத்தை எடுத்த நபர் எங்களிடம் உள்ளார். சந்தேகத்திற்கு சிறிதும் இடமில்லாத வகையிலான சாட்சியம் இது. எனக்கூறினார்.

உண்மையில், அந்த அறிக்கை கிரேனின் கூற்றுக்களுக்கு ஆதரவளிக்க சான்றுகள் எதையும் கொண்டிருக்காததுடன் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அசாத்தின் படைகளால் கொல்லப்பட்டவர்கள் என நிரூபிப்பதற்கும்கூட முடியாதுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்படும் அனைத்து சான்றுகளும் ஒருவரும் காணாத புகைப்படங்கள், இரகசியப் பெயர் சீசர் என்ற செயலர் ஒருவரின் சிறிய பதிவுத்தகட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் செப்டம்பர் 2011ல் இருந்து சிரிய எதிர்த்தரப்புக் குழுக்களுடன் இணைந்து இயங்கி வருகின்றார்.

சீசர் சுருக்கமாக பெயரிடப்படாத மத்திய கிழக்கு நாடொன்றில் மூன்று வக்கீல்களாலும் ஜனவரி 12, 13, 18 திகதிகளில் பேட்டி காணப்பட்டார். வக்கீல்களுக்கும் தொடர்புடைய அறிக்கையை தயாரித்த குற்றவியல் தடயசான்றுகள் குழுவினருக்கும் சீசரின் முழு பதிவுத்தகட்டின் உள்ளடக்கத்தையும் காண அனுமதி கொடுக்கப்படவில்லை.

தன்னுடைய பதிவுத்தகட்டில் 55,000 புகைப்படங்கள் இருப்பதாகவும், இவை கைது செய்யப்பட்டவர்கள் சித்திரவதை செய்து, கொலை செய்த பின்னர் இப்புகைப்படங்களை சீசர் இராணுவப் பொலிஸாக பணி செய்தபோது எடுக்குமாறு அசாத் அரசாங்கத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறுகிறார். அசாத் அரசு, 11,000 பேரைச் சித்தரவதை செய்து கொலை செய்தது என்றால், எதற்காக சீசரை கவனத்துடன் அதை ஆவணப்படுத்த கேட்டுக்கொண்டது என்பதற்கு நம்பகமான விளக்கம் ஏதும் இல்லை.

அறிக்கை கூறுகிறது: கிட்டத்தட்ட 5,500 புகைப்படங்கள் மொத்தத்தில் குற்றவியல் தடயச்சான்றுகள் குழுவால் ஆராயப்பட்டன. இந்த 5,500 படங்களுள், 835 கொல்லப்பட்ட மொத்த நபர்கள் விரிவாக மதிப்பிடப்பட்டன. இவற்றுள் 20% செய்யப்பட்ட உளவியல்அதிர்ச்சியின் சாட்சியங்களை காட்டின, 30% பலதரப்பட்ட தாக்கங்களை கொண்டிருந்தன. 42% நலிவிழந்து போயிருந்ததை காட்டின.

அதாவது, அறிக்கையை எழுதியவர்கள் 11,000 பேர் கொல்லப்பட்டனர் என்பதற்கு சாட்சியத்தை காணவில்லை. இந்த எண்ணிக்கைக்குத்தான் அவர்கள் முற்றிலும் எந்த மத்திய கிழக்கு ஆட்சி அவருக்கு ஆதரவு கொடுத்தாலும் சீசரையே நம்பியிருந்தனர். செய்தி ஊடகத்தில் மேற்கோளிடப்பட்ட 11,000 கொல்லப்பட்டனர் என்பதற்குரிய அடிப்படை சாட்சியே கிடையாது.

அறிக்கை டஜன் கணக்கான புகைப்படங்களை காட்டுகிறது. அவற்றுள் பல மிகவும் கொடூரமான நலிந்த உடல்கள் உள்ளன. ஆனால் சீசரும் Carter-Ruck குழுவும் புகைப்படம் குறித்த திகதி, முத்திரைகள் மற்றும் இடத்தின் தகவல்களையும் சிதைத்துள்ளனர் என்பதால் எவரால் எங்கு அவர்கள் கொல்லப்பட்டனர் என அறிவது மிகவும் கடினமாகும்.

அசாத் ஆட்சி சித்திரவதையை செய்யும் என்பது அறியப்பட்டுள்ளது என்றாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அசாத்திற்கு எதிராக அல்குவேடாவிற்கு ஆதரவளிக்க திரும்புவதற்கு முன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனப்படுவதின் கீழ் மேற்கு நாடுகளின் உளவுத்துறை அவர்களிடம் கையளித்த சந்தேகத்திற்கு உரியவர்களை சித்திரவதை செய்திருந்தாலும் அந்த ஆட்சி ஒன்றுதான் சந்தேகத்திற்கு உரியது என ஏற்கமுடியாது.

இஸ்லாமியவாத எதிர்ப்பு பிரிவினர் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியப் பகுதிகளில் கொலைக்குழுக்களை கொண்டு கூட்டாக கொலைசெய்ததாலும், செய்தியாளர்களை காவலில் வைத்ததாலும், கைதிகளை அடித்ததாலும், அமெரிக்க ஆதரவுடைய சக்திகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட குடிமக்களை பற்றி அவ்வறிக்கை எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என ஒருவர் நம்ப முடியும்.

அறிக்கை முடிவுரையாக: கவனமாக சீசரை பேட்டி கண்டு அவருடைய சாட்சியத்தை கிடைக்கும் சான்றுகளுடன் மதிப்பிட்டபோது, விசாரணைக்குழு அவருடைய பங்கிற்கு அவர் உண்மையான, நம்பத்தகுந்த சாட்சி எனக் கண்டுள்ளது. அவர் பரபரப்பு ஏற்படுத்துபவர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை, ஒரு தரப்பினை சார்ந்தவர் என்றும் தோன்றவில்லை. என்றது.

உண்மையில் கட்டார் முடியாட்சி நிதியளித்துள்ளமை, அமெரிக்க உளவுத்துறையுடன் அதன் பிணைப்புக்கள் மற்றும் சிரிய எதிர்த்தரப்பினால் வழங்கப்பட்ட காணப்படாத சாட்சியத்தை அது தங்கியிருப்பது என்பது அந்த அறிக்கை ஒருதரப்பினை சார்ந்ததே என்றுதான் காட்டுகிறது.

CNN இடம் டி சில்வா ஒப்புக்கொண்டுள்ளபடி, இறுதியில் நம் முடிவுகளின் சரியான தன்மை தொடர்புடைய மக்களின் நேர்மையை பொறுத்துள்ளது. தொடர்புடைய மக்கள் என அறிக்கையில் குறிப்பிடப்படுபவர்கள் அரசியலில் அல் குவேடா பிணைப்புடைய இஸ்லாமியவாதிகளின் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள். இதில் கடந்த மே மாதம் எதிர்த்தரப்புப் படைகள் கான் அல் அசாலில் இரசாயனத் தாக்குதல்கள் நடத்தியதும் அடங்கும். இவர்கள் அதை அசாத்தின் படைகள்மீது குற்றம் சாட்ட முற்பட்டனர். ஆனால் அவர்கள் கண்டுபிடிப்பு எத்தகைய நம்பகத்தன்மையையும் உண்மையையும் கொண்டிருக்கவில்லை.

அமெரிக்க அரசியல் ஆளும்வர்க்கம் இந்நிகழ்வுகளை எதிர்கொண்ட முறை அதன் திவால்தன்மையையை நிரூபிக்கிறது. இன்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கா நடத்தும் அபு கிரைப் சிறை மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருந்த ஈராக்கில் இருந்து ஆயிரக்கணக்கான படங்கள் பெரும் சித்திரவதை, கற்பழிப்பு,  காவலில் இருப்பவர்கள் கொலை என்று ஆவணப்படுத்தி வெளிவந்தன. இப்புகைப்படங்கள் பின்னர் புதைக்கப்பட்டு, ஒரு சில கீழ்நிலையிலுள்ள படையினர்  தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் ஈராக்கிய கைதிகளை மிருகத்தனமாக நடத்துவது, முழு ஈராக்கிய மக்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மிருகத்தனமாக நடத்துவது தொடர்கின்றது.

இதற்கு மாறாக, அமெரிக்கா இப்பொழுது மத்திய கிழக்கில் புதிய போர்களை ஆரம்பிக்கும் விளிம்பில் நிற்கையில், முற்றிலும் ஆதாரமற்ற சித்திரவதை பற்றிய புகைப்படங்கள் உள்ளடங்கிய அறிக்கை செய்தி ஊடகத்திற்கு வெளியிடப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் அண்மித்த இலக்கு பேயுருவாக காட்டப்படுகின்றது.

பத்து ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஏகாதிபத்தியம் திரிக்கப்பட்ட உளவுத்துறைத் தகவலை ஈராக்கிற்கு எதிராக சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை நடத்தப் போலிக்காரணமாக பயன்படுத்தியது போல் அரசாங்கமும் மனித உரிமைகள் அதிகாரிகளும் இச்சமீபத்திய ஆத்திரமூட்டல்களை அசாத்திற்கு எதிராக அழுத்தங்களை அதிகரிக்க பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்க அதிகாரிகள் கார்டியனிடம்: நாங்கள் இந்த ஆட்சியின் செயல்களை மிக வலுவாக கண்டித்து, கைதிகளை நடத்துவதில் சர்வதேச விதிகளுக்கு இணங்கியிருக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த அறிக்கை ஜெனீவா பேச்சுக்களின் சூழல் முழுவதையும் மாசுபடுத்திவிட்டது என்றும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

மத்திய கிழக்கு/வட ஆபிரிக்க சர்வதேச மன்னிப்புச்சபை, ஏன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபை இன்னும் சிரிய நிலைமை பற்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குதொடுனருக்கு அறிவிக்கவில்லை என்று கோருகிறது.