தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : எகிப்து Egyptian junta steps up repression after constitutional referendum எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு அரசியலமைப்பு வாக்கெடுப்பிற்குப்பின் அடக்குமுறையை அதிகப்படுத்தியுள்ளது
By Johannes Stern Use this version to print| Send feedback ஜனவரி 14-15 வாக்கெடுப்பில் அரசியலமைப்பு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஆதரவு கொண்ட எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவும் அதன் அரசியல் ஆதரவாளர்களும் எதிர்த்தரைப்பை நசுக்குவதோடு, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீண்டகால சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை அகற்றிய தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் போராட்டங்களுக்கு முன்பு இருந்த சர்வாதிகாரத்தை மீட்க முற்படுகிறது. கடந்த வெள்ளியன்று பாதுகாப்புப் படைகள் இஸ்லாமியவாத முஸ்லிம் சகோதரத்துவம் (MB) அழைப்பு விடுத்திருந்த எதிர்ப்புக்களை நசுக்கியது; நான்கு பேர் கொல்லப்பட்டனர், குறைந்தப்பட்சம் 15 பேர் காயமுற்றனர். எகிப்திய சுகாதார அமைச்சரக அறிக்கையின்படி சனிக்கிழமை அன்றும் மூன்று எதிர்ப்பாளர்கள் தலைநகர் கெய்ரோவிலும் ஒருவர் Fayoum இலும் கொல்லப்பட்டனர். எதிர்ப்பாளர்கள் கிசா மற்றும் மின்யாவிலும் காயமுற்றனர். திங்களன்று கெய்ரோ பல்கலைக்கழக செய்தித்தொடர்பாளர் ஒருவர் –280,000 மாணவர்களுடன் எகிப்திலேயே மிகப் பெரிய பல்கலைக்கழகம் – பல்கலைக்கழகக் குழு வளாகத்திற்குள் பொலிசை அனுமதிக்க ஒப்புக் கொண்டுள்ளது என தெரிவித்தார். இராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்புக்கள் நடைபெறுகின்றன, பல நேரமும் MB க்கு நெருக்கமான மாணவர்கள் ஏற்பாடு செய்பவை; இந்த செமஸ்டர் முழுவதும் இவை நடைபெற்றன. கடந்த வியாழக்கிழமை உட்பட பல மாணவர்கள் பொலிஸ் படைகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர். செவ்வாயன்று பொலிஸ் கல்விக்கூடத்தில் ஆற்றிய உரையில், பாதுகாப்பு மந்தியும் நடைமுறைச் சர்வாதிகாரியுமான அப்டெல் பத்தா அல்-சிசி எகிப்திய இராணுவமும் பொலிசும் “பாதுகாப்பு, உறுதிப்பாடு” இவற்றைக் குலைக்கும் எந்த முயற்சியையும் சக்தியுடன் எதிர்கொள்ளும் என்றார். இராணுவத்தையும் பொலிசையும் அவர் “நாட்டின் பாதுகாப்புக் கேடயங்கள்” என வர்ணித்து, “வாக்கெடுப்பு நடத்தும் வழிவகை உலகிற்கு நம் நாட்டில் பாதுகாப்பை செயல்படுத்தும் திறனை நிரூபித்துள்ளது; என்று பெருமை பேசினார். வாக்கெடுப்பு, ஜனநாயக வழிவகைகளை கேலிக்கூத்தாக்கியுள்ளது. இது குருதிக்கறை படிந்த இராணுவ ஆட்சிக்குழு அதன் ஜூல 3 இராணுவ ஆட்சி சதிக்கு ஒரு போலி சட்டப்பூர்வ மறைப்பை அளிக்கும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும். ஒரு சமூகப் புரட்சியைத் தவிர்க்கவும், அரசியலமைப்பில் இராணுவ சர்வாதிகாரத்தை நிலைப்படுத்தவும் இஸ்லாமிய ஜனாதிபதி மகம்மது முர்சிக்கு எதிரான தொழிலாள வர்க்க வெகுஜன எதிர்ப்பால் நடத்தப்பட்டது. புதிய அரசியலமைப்பு இராணுவத்தின் சக்தி, சலுகைகளை பாதுகாக்கிறது; இதுதான் ஆதிக்கம் மிகுந்த அரசியல் சக்தியாகவும், எகிப்தின் முதலாளித்துவ ஆட்சிக்கு அடித்தளமாகவும், 1952ல் சுதந்திர அதிகாரிகள் கமால் அப்தெல் நாசரின் கீழ் நடத்திய ஆட்சி சதிகாலத்தில் இருந்து தொடர்கிறது. இது இராணுவ ஆட்சியை அரசுக்குள் அரசாக பங்கெடுக்க, அதற்கு நடைமுறை தன்னாட்சியையும், சிவில் மக்களைக் கண்காணிக்கும் அதிகாரத்தையும், எதிர்ப்பை அடக்க பரந்த அதிகாரங்களையும் கொடுத்துள்ளது. 234வது விதி, ஆயுதப்படைகளின் மிக்குயர் குழு (SCAF) பாதுகாப்பு மந்திரியை நியமிக்கும் என்றும், விதி 203, தேசியப் பாதுகாப்புக் குழு, இராணுவத் தலைவர்கள், உளவுத்துறைத் தலைவர்கள் ஆதிக்கத்தில் இராணுவ வரவு செலவு திட்டத்தை முடிவெடுக்கும், தேசியப்பாதுகாப்பு பிரச்சினைகளயும் முடிவெடுக்கும் என்று கூறுகிறது. விதி 204 இராணுவ வழக்குகளில் குடிமக்கள் தொடர்ந்து குற்றவிசாரணைக்கு உட்படுத்துவதை அனுமதிக்கிறது. இப்பிற்போக்குத்தன ஆவணத்தின் மீதான வாக்கு –1971 அரசியலமைப்பையும் விட அதிகமாகச் செல்கிறது, அதுதான் முபாரக் சர்வாதிகாரத்திற்கு அடிப்படை, 2012 அரசியலமைப்பிற்கும் அடிப்படை, இப்பொழுது இராணுவம் மற்றும் MB க்கு இடையே உள்ள உடன்பாட்டின் விளைவு ஆகும்; இது கிட்டத்தட்ட இராணுவம் நாட்டைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்த நேரத்தில் நடைபெற்றுள்ளது. இராணுவத் துருப்புக்களும் குறைந்த உயரத்தில் பறந்த அப்பாஷ் தாக்கும் ஹெலிகாப்டர்களும் அண்டைப்புறங்களில் ரோந்து வந்தன, பொலிசும் இராணுவப் படைகளும் வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். வாக்கெடுப்பிற்கு முன்னதாக எதிர்ப்பு ஆர்ப்பாட்ட எதிர் சட்டம் ஒன்று வெளியிடப்பட்டது, இராணுவம் மற்றும் வாக்கெடுப்பின் எதிர்ப்பாளர்கள் மூர்க்கத்தனமான முறையில் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். வாக்கெடுப்பிற்கு சற்று முன் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் உள்துறை மந்திரி மகம்மது இப்ராகிம் “ஒவ்வொரு வெள்ளியன்றும் 500 முதல் 600க்கு மேற்பட்டவர்கள் கைதாகின்றனர்” எனப் பெருமை அடித்துக் கொண்டார். ஆட்சியின் தீவிர அக்குமுறை மூலோபாயம் பற்றி அவர் விவரித்தார்: “ஆரம்பத்தில் நாங்கள் ஆர்ப்பாட்டம் வன்முறையாக காத்திருந்தோம்; ஆனால் இப்பொழுது அவர்கள் கூடியவுடன் எதிர்கொள்கிறோம். நாங்கள் எதிர்கொள்கையில், சிலர் ஓடுகின்றனர், ஆனால் யாரைப் பிடிக்கமுடியுமோ, அவர்களை பிடிக்கிறோம்.” உள்துறை, சுகாதார அமைச்சரகங்களின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, பாதுகாப்புப் படைகள் 703 எதிர்ப்பாளர்களைக் கைது செய்து, 27 பேரை வாக்கெடுப்பிற்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமைகளில் கொன்றுள்ளனர். இரண்டு நாட்கள் வாக்கெடுப்பில் “கலகத்திற்கும் வாக்கெடுப்பை தடைசெய்வதற்கும்” முயன்ற MB உறுப்பினர்கள் உட்பட 444 பேர், உள்துறை அமைச்சரகத்தால் கைதுசெய்யப்பட்டனர் என்றார். பாதுகாப்புப் படைகள் நாடு முழுவதிலும் 11 பேரைக் கொன்றன, இதில் மேற்புற எகிப்திய நகரமான சோக்கில் இருந்த 14 வயதுப் பையனும் அடங்குவான். இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் சூழலில், மிக்குயர் தேர்தல் குழு (Supreme Electoral Committee -SEC) சனிக்கிழமை அன்று “ஆமாம்” வாக்குகள் 98.1% என்று அறிவித்தது; இது முபாரக்கின் மோசடித் தேர்தல்களைத்தான் நினைவுகூர்ந்த முடிவாகும். உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படிக்கூட, வாக்காளர் பங்கு பெற்றது மிகவும் குறைவு. SEC கருத்துப்படி 53.5 மில்லியன் மக்களில் 20.1 மில்லியன்தான் வாக்களித்துள்ளனர். 38.9 சதவிகிதத்தில் வாக்கெடுப்பு, முபாரக் அகன்றபின் நடந்த வாக்குகள் அனைத்திலும் மிகவும் குறைவான பங்கையே கண்டது. மார்ச் 2011 அரசியல் அமைப்பு வாக்கெடுப்பிலும் ஜூன் 2012 ஜனாதிபதி தேர்தல் சுற்றுக்களிலும் வாக்களித்தல் முறையே 41%, 49% என இருந்தன. MB தலைமையிலான ஆட்சி சதி எதிர்ப்புக் குழு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இராணுவ ஆட்சி பரந்த முறையில் வாக்குகளைத் திரித்துள்ளது என்று குற்றம் சாட்டியது. அவர்கள், “வாக்குப்பெட்டிகள் ஊழலின் கைகளில் இரவு முழுவதும் வைக்கப்பட்டது, சட்டவிரோதமாக மில்லியன் கணக்கான போலி வாக்குகள் போடப்பட்டது, முபாரக் ஆட்சிக் குழுவில் இருந்த பழைய வழக்கம் தொடர்ந்தது; அதுவும் கள்ளத்தனம், மோசடி இல்லாமல் ஒரு தேர்தலையும் அனுமதித்தது இல்லை.” என்று எழுதினர். அதன் மோசடித்தன்மை இருந்தபோதிலும்கூட, அரசியலமைப்பு வாக்கெடுப்பு அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள இராணுவ ஆட்சிக் குழுவின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களால் புகழப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காத்தரின் ஆஷ்டன் இழிந்த முறையில் ஞாயிறு அறிக்கை ஒன்றில், “எகிப்திய மக்களையும் பொறுப்பான அதிகாரிகளையும் பெரிதும் ஒழுங்கான முறையில் வாக்கெடுப்பை நடத்தியதற்கு பாராட்டுகிறேன்.” என்றார். அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, “எகிப்தின் கொந்தளிப்பான கடந்த மூன்று ஆண்டுகளாக ஜனநாயகத்தில் பங்கு பெற செய்யும் பரிசோதனை, நம் அனைவருக்கும் ஜனநாயகத்தில் ஒரு வாக்கு நிர்ணயிப்பதில்லை, அதைத்தொடரும் பல நடவடிக்கைகளும் என்பதை நினைவுறுத்துகிறது.” ஞாயிறன்று அல்-சிசி ஐ சந்தித்த அமெரிக்க காங்கிரஸ் குழு ஒன்று அவரை வாக்கெடுப்பின் வெற்றிக்குப் பாராட்டியது. எகிப்திய இராணுவச் செய்தித்தொடர்பாளர் கேர்னல் அஹ்மத் அலி “குழுவின் உறுப்பினர்கள் எகிப்திய அரசாங்கம் பாதுகாப்பு உறுதிக்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவை மீண்டும் கூறி, எகிப்தின் உண்மை நிலையை காங்கிரசிற்கு தெரிவிக்கும் தங்கள் ஆர்வத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர்.” என்றார். ஜனவரி 25ல் எகிப்திய புரட்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவுநாள் நெருங்குகையில், இவை, இராணுவ ஆட்சிக்குழுவின் அடக்குமுறைக் கொள்கைகள் தீவிரமடைந்துள்ளதற்கான குறியீட்டு வார்த்தைகளாகும். திங்கள் அன்று நியூ கெய்ரோவில், புதிய பொலிஸ் துருப்பினருக்கான நிகழ்ச்சியில் பேசிய உள்துறை மந்திரி இப்ராகிம், சட்டம் மற்றும் ஒழுங்கை கலைக்கும் எந்த முயற்சியும் தீவிர வலிமையுடன் சந்திக்கப்படும் என்றார். “25 ஜனவரி மக்கள் கொண்டாட்டங்களுக்கான” தயாரிப்புக்களை தான் தன் துணை அலுவலர்களுடன் விவாதித்ததாகவும் பல பாதுகாப்புத் தலைவர்களுடன் விவாதித்ததாகவும் கூறினார். பாதுகாப்புப் படைகள் ரோந்துகளையும் சோதனைச்சாவடிகளையும் முக்கிய இடங்களில் தீவிரப்படுத்தும் என்றும் பாதுகாப்புப் படைகள் “எந்த தாக்குதல்களையும் நிறுத்த ... கனரக ஆயுதங்கள் கொடுக்கப்படும்” என்றும் கூறினார். அரசியலமைப்பின் பிற்போக்குத்தனம், தாராளவாத மற்றும் “இடது” அமைப்புக்கள் என்று எகிப்தின் வசதி படத்த மத்தியதர வகுப்பின் பிற்போக்குதன பங்கைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எகிப்தில் தொழிலாள வர்க்கப் புரட்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், தேசிய தீர்வு முன்னணி (NSF), ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் மற்றும் போலி இடது புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) ஆகியோர் தாமரோட்டிற்கு ஆதரவு கொடுத்தன –அது ஒரு வலதுசாரி சதித்திட்டம், மூர்சிக்கு, MB க்கு எதிரான பரந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பை இராணுவத்திற்குப்பின் தள்ளும் அமைப்பாகும். தாமரோட் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்த கட்சிகள், அமைப்புக்கள் பலவும் இராணுவ சர்வாதிகாரத்துடன் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. திங்களன்று இப்ராகிமுடன் நடத்திய பேச்சில், தாமரோட் தலைவர்கள் பலமுறையும் பொலிசை “அவர்கள் தாய்நாட்டைக் காக்கச் செய்யும் தியாகங்களுக்கு” பாராட்டினர். தன் பங்கிற்கு இப்ராகிம், இளைஞர் இயக்கங்களையும் புரட்சிகர சக்திகள் என்பவற்றை சந்திப்பதிலும் களிப்பு அடைவதாகவும் அவற்றை “நாட்டின் வருங்காலத்திற்கான நம்பிக்கை” என்றார். |
|
|