சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

With Syria talks in disarray, UN yanks invitation to Iran

சிரியாவுடனான பேச்சுக்கள் குழம்புகையில், ஐ.நா ஈரானுக்கான அழைப்பை பின்வாங்குகிறது

By Bill Van Auken 
21 January 2014

Use this version to printSend feedback

பிரதான சக்திகள் சிரியாவின் மூன்று ஆண்டு கால மோதலுக்கு அரசியல் தீர்வு காண ஏற்பாடு செய்துள்ள பேச்சுக்களில் கலந்து கொள்ள ஈரானுக்கு விடுத்த அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை திடீரென இரத்து செய்து விட்டது.

ஜெனீவா II பேச்சுக்கள் என்று அழைக்கப்பட்டதின் திட்டங்கள், திங்களன்று வாஷிங்டனும் அமெரிக்க ஆதரவுடைய புலம்பெயர்ந்த முன்னணியான சிரியத் தேசியக் கூட்டணியும் (SNC), .நா ஈரான் பங்குகொள்ளுமாறு கொடுத்த கடைசி நேர அழைப்பிதழை நிறுத்துமாறு காலக்கேடு விதித்தபோது குழம்பிப்போயின.

சுவிட்சலாந்தில் ஜெனீவா II பேச்சுக்கள் எனப்படுவது ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்கள் முன் வந்துள்ள இந்த முரண்பாடுகள் சமாதான மாநாடு எனப்படுவது இரத்துச்செய்யப்படலாம் என்னும் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸுடன் துருக்கியைத் தளம் கொண்ட கிளர்ச்சியாளர்என்று அழைக்கப்படும் அவர்களது கைக்கூலிகளும் ஈரான் பங்கு பெறுவதை எதிர்த்துள்ளன. ஈரான், ரஷ்யாவுடன் சேர்ந்து சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் சிரிய அரசாங்கத்தின் மிக நெருக்கமான நட்பு நாடாகும். முக்கிய மேற்கத்தைய சக்திகள் தெஹ்ரான் வருவது பேச்சுக்களை தாங்கள் நடத்துவதின் முக்கிய இலக்கிற்கு விரோதமானது எனக் காண்கின்றன. அவர்களின் முக்கிய நோக்கம், தமது நீண்ட இரத்தம் தோய்ந்த பினாமிப் போரினால் அடைய முடியாமல் போன ஆட்சி மாற்றத்தை, இராஜதந்திர அழுத்தம் மூலம் அடைய விரும்புகின்றன.

ஞாயிறன்று அழைப்பை அறிவித்த ஐ.நா. செயலர் பான் கி-மூன், திங்களன்று இந்த நடவடிக்கை தூண்டிய குழப்பத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளதாககூறியதுடன், .நா சபையின் விருப்பத் தேர்வுகளை தான் பரிசீலிப்பதாகவும் கூறினார்.

ஈரானுக்கான அழைப்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான வாஷிங்டனின் கோரிக்கையின் போலிக்காரணம், ஜெனீவா I அறிக்கை எனப்படுவதின் விதிகளில் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் ஈரான் கையெழுத்திடவில்லை என்பதாகும். அந்த ஆவணம் ஜூன் 2012ல் சிரியர்கள் பங்கு பெறாத ஒரு மாநாட்டில் இயற்றப்பட்டது. இந்த ஆவணம் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஒரு இடைக்கால ஆட்சிக்குழுஅமைக்கவும், அதில் அசாத் அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் பரஸ்பர இணக்கத்துடன்எதிர்த்தரப்பு உறுப்பினர்களும் இருப்பர் என அழைப்பு விடுகிறது.

ஒபாமா நிர்வாகம் இதை, அதிகாரத்தில் இருந்து அசாத் உடனடியாக நிபந்தனையின்றி அகற்றப்படுதல் என விளக்கம் கொடுக்கின்றது. ஆனால் இது அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

ஞாயிறன்று பான் கி-மூன், நாட்டின் வெளியுறவு மந்திரி ஜவாட் ஜரிப் ஜெனீவா I இன் முக்கிய விதிகளை ஏற்பதாகத் தெரிவித்த பின் ஈரான் அழைக்கப்பட்டது என்றார். பாங்கி மூன், “வெளியுறவு மந்திரி ஜரிப்பும் நானும் இந்த பேச்சுவார்த்தைகளின் இலக்கு, பரஸ்பர ஒப்புதலுடன் முழு நிறைவேற்று அதிகாரங்களுடன் இடைக்கால அரசாங்க அமைப்பை நிறுவுவதாக இருக்க வேண்டும் என்பதில் உடன்பட்டோம்என்றார்.

அந்த உடன்பாடு, புதன் அன்று பேச்சுக்கள் ஆரம்பிக்கையில் அதில் பங்குபெறும் 30 நாடுகளில் ஒன்றாக ஈரானையும் சேர்த்திருக்கும். ஆனால் அது நேரடியாக அசாத் ஆட்சிக்கும் மேற்கு ஆதரவுடைய எதிர்த்தரப்பு முன்னணிக்கும் இடையேயான ஐ.நாவின் அனுசரணையிலான வெள்ளி சமாதானப் பேச்சுக்களில் பங்கு பெறாது. இதில் பங்கு பெறும் அரசாங்கங்களில், கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள், நிதி மற்றும் வெளிநாட்டு ஜிகாத் போராளிகளை அனுப்புவதில் மிகவும் நெருக்கமாக ஈடுபட்டுள்ள நாடுகளான அமெரிக்கா சவுதிஅரேபியா, கட்டார், துருக்கி ஆகியவை உள்ளன.

எனினும் ஈரானிய அதிகாரிகள், பின்னர் தெஹ்ரான் எதிலும் கையெழுத்திட்டுள்ளது என்பதை மறுத்துள்ளனர். “முன்னர் அறிவித்தபடி, ஜெனீவா II மாநாட்டில் பங்கு பெற நாங்கள் எந்த முன்னிபந்தனையையும் ஏற்கவில்லை. எந்தவித முன்னிபந்தனையும் இன்றி உத்தியோகபூர்வ அழைப்பை அடுத்தே பங்கு பெறுகிறோம்என திங்கள் அன்று வெளியுறவு அமைச்சரக செய்தித்தொடர்பாளர் மர்ஜியா அப்கான் தெரிவித்தார்.

திங்கள் பிற்பகல் இந்த அறிக்கைகளை பான் கி-மூன் பிடித்துக்கொண்டார். சிரிய தேசிய முன்னணி ஈரானுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது நிறுத்தப்பட வேண்டும் அல்லது தான் பேச்சுக்களில் இருந்து விலகிக்கொள்வதாக காலக்கெடு விதித்தது. ஒரு எழுத்து மூல அறிக்கையில், ஈரான் Geneva I ஆவணத்தில் கூறப்பட்ட விதிகளை ஏற்கத் தவறியதற்காகமிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகபாங்கி மூன் தெரிவித்தார். தெஹ்ரானின் பிந்தைய அறிக்கைகள் தான் பெற்ற உத்தரவாதங்களுடன் இணைந்து இருக்கவில்லைஎன்றும் கூறினார்.

.நா. தலைமைச் செயலர், சிரிய தேசிய முன்னணி ஈரான் ஒதுக்கப்படாவிட்டால் பேச்சுக்களைப் புறக்கணிக்கும் என்று கூறியது குறித்தும் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகஒப்புக்கொண்டார்.

அவர் (பான்) ஈரானை ஜெனீவா அறிக்கைக்குப் பின்னுள்ள உலக கருத்தொற்றுமையுடன் இணையுமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறார்என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். “அந்த அடிப்படை புரிந்துகொள்ளலுக்கு வெளியே ஈரான் இருக்க தீர்மானித்துள்ளதை அறிந்த பான், Mongreux ஒரு நாள் கூட்டம் ஈரான் இல்லாமல் நடக்காது என்று முடிவெடுத்தார்.”

வாஷிங்டனுக்கும், பொதுவாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளுக்கு இயைந்து நடப்பவரான ஐ.நா. தலைமைச்  செயலருக்கும் இடையேயான ஒரு முரண்பாடு பேச்சுக்களை பின்னடிக்க வைக்கும் அளவிற்கு ஏன் வந்துள்ளது என்பது தெளிவில்லை.

.நா. செய்தித் தொடர்பாளர், ஈரானுக்குக் கொடுத்த அழைப்பில் அவசரம்ஏதும் இல்லை என்றும், நடவடிக்கை குறித்து வாஷிங்டனுக்கு அவ்வப்பொழுது தெரிவிக்கப்பட்டது என்றும் கூறினார். ஆனால் இறுதியில் பான் ஆழ்ந்த அமெரிக்க அழுத்தத்திற்கு அடித்து பணிந்து போகவேண்டியதாயிற்று.

ரஷ்யாவும், சிரியாவிற்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதருமான லாக்டர் பிராஹ்மியும் மாநாட்டிற்கு முன்னதாக பல மாதங்கள் சிரிய ஆட்சியுடன் நெருக்கமாக இருக்கும் இப்பிராந்தியத்தில் செல்வாக்கு கொண்ட ஈரான் பேச்சுக்களில் பங்குபெற வேண்டும் என்று வாதிட்டிருந்தனர்.

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் திங்கள் அன்று ஈரானை ஒதுக்கும் மேற்கு கோரிக்கைகளை கடுமையாக கண்டித்தார். “நேரடியாக நிலைமையில் தாக்கம் செலுத்தக்கூடியவர்கள் வருவார்கள் என்பதை உறுதிப்படுத்தாதது மன்னிக்கமுடியாத குற்றம் என நினைக்கிறேன்என்றார் அவர்.

ஜெனீவா II மாநாட்டில் ஈரான் பங்கு பற்றினால், எத்தகைய இலஞ்சங்களையும் அச்சுறுத்தல்களையும் கொண்டு சிரிய தேசிய முன்னணியில் உள்ள அதன் நம்பிக்கையாளர்களை கலந்து கொள்ள வற்புறுத்த முடியாது என்பதை வாஷிங்டன் கண்டுகொண்டுள்ளது என்பது சாத்தியம்.

ஈரான் பங்குபெற்றாலும் இல்லாவிடினும், சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகள் மூலம் முக்கியமாக என்ன சாதிக்கப்பட முடியும் என்பது தெளிவில்லை. 100,000 மக்களுக்கும் மேலாக பினாமிப் போரில் கொன்று, முழுச் சமுதாயத்தையும வீண்டித்தபின், அமெரிக்க ஏகாதிபத்தியமும் இப்பிராந்தியத்திலுள்ள அதன் நட்பு நாடுகளும் குருதி கொட்டுவதை நிறுத்த எத்தகைய உடன்பாட்டையும் கொண்டுவர முடியவில்லை எனத் தோன்றுகிறது.

ஜெனீவா பேச்சுக்களை தொடரும் தீவிர அழுத்தங்கள், இவை குழப்பத்தில் முடியும் வாய்ப்பு என்பவை ஒபாமா நிர்வாகம் நேரடி இராணுவத் தலையீட்டில் இருந்து சற்று தள்ளி இருந்தாலும், மற்றும் கடந்த செப்டம்பரில் ஈரானுடன் பேச்சுக்கள் மூலம் உடன்பாட்டைக் காண முற்பட்டாலும், பிராந்தியத்தில் ஒரு பரந்த போருக்கான ஆபத்து தொடர்கிறது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சிரிய தேசிய முன்னணியும் பேச்சுக்களில் பங்குபெறுவது பற்றிய வாக்களிப்பு நடாத்தியதன் மூலம் கிட்டத்தட்ட சிதைத்துவிட்டது. அது முக்கியமான சிரியாவில் தளத்திலுள்ள இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கிடையே செல்வாக்கைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அது சமீபத்திய மாதங்களில் அரசாங்க படைகளுடன் மோதுவதற்கு ஒப்பாக தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்வதில் அதிக நேரத்தை செலவழிக்கின்றது.

கூட்டணியின் இயலாத்தன்மை, பெரும்பாலான சாதாரண சிரியர்கள் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர் குழுக்கள் மத்தியிலும் ஆதரவை இழக்கச் செய்துள்ளது. பேச்சுக்களில் அது பங்கு பெறவில்லை என்றால், கூட்டணி எவரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது இன்னும் தெளிவற்றுப் போகும்என வாஷிங்டன் போஸ்ட் அப்பட்டமாகக் கூறியுள்ளது. “செல்லவில்லை என்பதின் பொருள், கூட்டணியில் எஞ்சியிருக்கும் பிரிவுகளின் ஆதரவை இழப்பதாகும். எவ்வாறாயினும் மேற்கு நட்பு நாடுகளே இக்குழுக்களை தோற்றுவிக்க உதவின.”

தன் பங்கிற்கு அசாத், இராஜிநாமா கோரிக்கையை வெளிப்படையாக நிராகரித்து, AFP செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில், இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் மற்றொரு பதவிக்காலத்திற்கு தான் நிற்பது "குறிப்பிடத்தக்க" வாய்ப்பைக் கொண்டுள்ளது என்றார்.

சுவிட்சர்லாந்து பேச்சுக்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்திய சிரிய ஜனாதிபதி, சிரிய தேசிய முன்னணியுடன் ஒரு அரசாங்கத்தை அமைப்பது என்பது ஒரு நல்ல நகைச்சுவையேதவிர வேறு ஒன்றும் இல்லை என்றார். அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்பினர் 30 நிமிட புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கே எல்லைக்கு வருகின்றனர், பின்னர் ஓடிவிடுகின்றனர். அவர்கள் அரசாங்கத்தில் எப்படி அமைச்சர்களாக முடியும்?” என்றார்.

கடந்த வெள்ளியன்று கெர்ரி, வாஷிங்டனின் ஆட்சிமாற்றத்திற்கான அதன் குறிக்கோளை அடைய, அசாத் ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை என்றால் அதன் இலக்கைத்தொடர வேறு விருப்புரிமைகள் இல்லாமல் இல்லைஎன எச்சரித்தார்.

சமீபத்திய மாதங்களில், அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாமிய முன்னணியுடன் (Islamic Front) உறவுகளைத் தொடர்வதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த இராணுவக் குழுக்கள் வடகிழக்கு சிரியாவின் மேற்கத்தைய ஆதரவுடைய அல் குவேடாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய ஈராக்கிய அரசு மற்றும் லெவன்ட் (ISIS) உடனான ஆயுத மோதல்கள் போது மிக்குயர் இராணுவக் குழுவுடன் (Supreme Military Council) முறித்துக் கொண்டன. ஒபாமா நிர்வாக அதிகாரிகள், கிளர்ச்சியாளர்களுக்கு மீண்டும் உதவி தருவது குறித்து விவாதித்துள்ளனர். அவற்றில் சில இஸ்லாமிய முன்னணியின் கைகளுக்கும் செல்கின்றன என்பதை ஒப்புக்கொண்டுமுள்ளனர்.

ஆனால் இத்திட்டங்கள், முன்னணியின் போராடும் மிகப் பெரியகுழுவின் மூத்த தலைவர் அஹ்ரர் அல் ஷாம், தனது குழுதான் சிரியாவில் அல் குவேடாவின் உண்மையான பிரதிநிதியே தவிர ISIS அல்ல என்ற பகிரங்க அறிக்கையினால் சிக்கலாகிவிட்டது. டிவிட்டரில் கொடுத்துள்ள அறிக்கையில், அல்குவேடா நிறுவனர் ஒசாமா பின் லேடனுக்கும், அதேபோல் அதன் தற்போதையே பெயரளவுத் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரிக்கும் தனது விசுவாசத்தை அதன் தலைவர் அபு கலேட் அல் சுரி வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் சிரியாவிற்குள் உள்ள போட்டி இஸ்லாமியவாத போராளிகளுக்கு இடையே உள்ள மோதல்களில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்துவைக்குமாறு அல் குவேடாவால் தான் நியமிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

இதற்கிடையில், இஸ்லாமிய முன்னணியின் இராணுவக்குழுத் தலைவர் ஷஹாரன் அல்லௌஷ், ட்விட்டர் மூலம், தான் குழுத் தலைமையிடம் Geneva II  இன் ஒரு விரும்புவோர் பட்டியலில் இரு தரப்பினரையும் இணைத்துக்கொள்ளுமாறுகோரியதாக அறிவித்துள்ளார்.