World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின் Riots in Burgos, Spain reveal simmering social tensions பேர்கோஸ் கலகங்கள், ஸ்பெயினில் கொதித்து கொண்டிருக்கும் சமூகப் பதட்டங்களை வெளிப்படுத்துகின்றன.
By Alejandro López வடக்கு ஸ்பெயினில் உள்ள சிறு மாநில நகரமான பேர்கோஸ் வெகுஜன எதிர்ப்புக்களையும், அமைதியின்மையையும் தொழிலாள வர்க்கப் புறநகரான கமொனாலில் கண்டுள்ளது. கமொனால் இல் உள்ள பிரதான வீதியை ஒரு சந்தைக்கான அகலமான வீதியாக மாற்றும் நோக்கம் கொண்ட கட்டுமானப்பணிகள் தொடங்கியவுடன் அமைதியின்மை தூண்டப்பட்டது. புறநகர்ப்பகுதி, திட்டத்திற்கு எதிர்ப்பைக் கொண்டுள்ளது, ஏனெனில் அதற்கான அதிக செலவு 8.5 மில்லியன் யூரோக்கள் ஆகும். இதைத்தவிர கார் பாதைகள் அகற்றப்படும், இலவசமாக காரை நிறுத்தும் இடங்கள் குறையும் மற்றும் நிலத்தடியில் கார்நிறுத்தம் கட்டப்பட வேண்டும், இவையனைத்திற்கும் 19,800 யூரோக்கள் ஒவ்வொரு நிறுத்த இடத்திற்கும் 40 ஆண்டு குத்தகைக்குக் கொடுக்கப்பட வேண்டும். திட்டத்தை நிறுத்தக்கோரும் மனு ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கையெழுத்துக்கள் சேர்ந்தன. மேயர் மனுவைப் புறக்கணித்து அமைப்பாளர்களை பார்க்க மறுத்துபோது, 3000 பேர் கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜனவரி 10 அன்று மற்றொரு எதிர்ப்பு நடைபெற்றது. அடுத்த நாள், இயந்திர இயக்குனர்கள் வருவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; அத்துடன் “கமொனாலுக்கு அகல வீதி தேவை இல்லை” என்ற கோஷங்கள் இருந்தன. கூட்டம் வன்முறையில் பொலிசாரால் கலைக்கப்பட்டது; அவர்கள் 17 ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர், ஒரு சிறுவன் உட்பட, இரண்டு பேர் காயமுற்றனர். மேலும் எதிர்ப்புக்கள், தடுப்புக்கள் மற்றும் பொலிஸ் வன்முறை தொடர்ந்த நாட்களில் ஏற்பட்டன. ஞாயிறு மாலை கிட்டத்தட்ட 1,000 பேர் உள்ளூர் செய்தித்தாள் Diario de Burgos அலுவலகத்திற்கு முன் “அவர்கள் விற்றுவிட்டனர்; உண்மையில் இங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அவர்கள் தகவல் கொடுக்கவில்லை” என்று கூச்சலிட்டனர். மேயர், 200 கலக எதிர்ப்புப் பிரிவு பொலிசை அழைத்தார்; அவர்கள் பலமுறையும் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர். “பயங்கரவாதத்தை எதிர்த்தல், விடையிறுத்தல் என்பதை முக்கிய செயலாகக் கொண்ட” சிறப்பு செயற்பாடுகள் குழுகூட (Grupo Especial de Operaciones, GEO), எதிர்ப்பை அண்டை நகரான வல்லடோலிட்டி இல் இருந்து நசுக்க அனுப்பப்பட்டது. மாட்ரிட்டின் மேயர் அனா போடெல்லா atentados என விளக்கி கண்டித்தார்; ஸ்பெயின் மொழியில் இது பயங்கரவாதத் தாக்குதலைக் குறிக்கும். இதுவரை 46க்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டனர்; “பொது ஒழுங்கை சீர்குலைப்பு மற்றும சேதங்களுக்கு” காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டனர். பெரும்பாலானவர்கள் 18ல் இருந்து 24 வயது வரை உள்ளனர். ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு பிணைஎடுப்புத் தொகை 3000 யூரோக்களில் விடுவிக்கப்பட்டனர்; இன்னும் 7 பேர் சிறைத்தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர்.
அரசாங்க பாதுகாப்பு மந்திரி பிரான்ஸிஸ்கோ மார்ட்டினேஸ் வாஜ்குவெஜ் SER வானொலி நிலையத்திற்குக் கொடுத்த பேட்டியில், கமொனாலில் வன்முறை ஸ்பெயினின் பல பகுதிகளுக்கு “பயணிக்கும் வன்முறைக் குழுக்களின்” வேலை என்றதோடு, “மீண்டும் நாம், வன்முறைக் குழுக்கள் புறநகர் பக்க இயக்கங்களில் ஊடுருவி, எப்படி மகத்தான சமூக சேதத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதைக் காண்கிறோம்” என்றார். இது ஒரு பொய். கைது செய்யப்பட்டவரில் இருவரைத்தவிர, மற்ற 44 பேரும் பேர்கோசில் வசிப்பவர்கள் ஆவர். ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளும் அதன் செய்தி ஊடகமும் அமைதியின்மைக்கு வெளி போராட்டக்காரர்கள் மீது குற்றம் சாட்டுவதை, கடந்த ஆண்டுகளில் பிற வெகுஜன எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்களின் போது செய்துள்ளனர், உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் அதன் சமூக எதிர்ப் புரட்சியால் தோற்றுவிக்கப்பட்டுள்ள வெடிப்புத்தன்மையுடைய சமூக சூழலை அவர்கள் மறைக்கலாம் என்று நம்புகின்றனர். ஜனவரி 15 அன்று, 5,000 க்கும் மேலானவர்கள் பேர்கோஸில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் அகன்ற வீதித் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என ஆர்ப்பரித்தனர். அதே நேரத்தில் 48 பிற ஸ்பெயின் பெருநகரங்கள், சிறு நகரங்களில் சிறு எதிர்ப்புக்களும் நடைபெற்றன; இதில் மாட்ரிட், சியுடாட் ரியல், லோக்ரோனோ, ஓவிடோ, செவைல், வல்லடோலிட், கிஜோன் நகரங்கள் அடங்கும். மாட்ரிட்டில் 1000 பேர் மையபூர்டா டெல் சோல் சதுக்கத்தில் “நாம் அனைவரும் கமொனால்” என்றும், “சிறையில் போராடுபவர்களுக்கு சுதந்திரம் அளி” என்றும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டங்கள் சமூக இணைய தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மூலம் அமைக்கப்பட்டன. சில எதிர்ப்பாளர்கள் ஆளும் மக்கள் கட்சியின் மாட்ரிட் தலைமையகத்திற்கு சென்றபோது, பொலிசார் தாக்கினர், 14 பேரைக் கைது செய்தனர்; இவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர். செய்தி ஊடகம், தொந்திரவுகளை, ஒரு கட்டுமான திட்டம் குறித்த ஒரு அற்ப பூசல் போன்றும், வன்முறையை “தொழில்நேர்த்தி உடைய போராட்டக்காரர்கள்” ஏற்படுத்திய விளைவு என்றும் சித்தரித்துள்ளது; மோதல், ஸ்பெயின் முழுவதும் சமூக நிலைமைகளின் வெடிப்புத் தன்மையைத்தான் அடித்தளத்தில் கொண்டுள்ளது. இவை ஐந்து ஆண்டுகள் முந்தைய சோசலிஸ்ட் கட்சி (PSOE) அரசாங்கம், மற்றும் தற்போதைய ஆளும் PP ஆகியவற்றால் கொண்டுவரப்பட்ட சிக்கனக் கொள்கையின் விளைவுகள் ஆகும்; பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையின்மையை பேரழிவுதரும் மட்டங்களில் கொண்டுவந்துள்ளன. பேர்கோசில் அமைதியின்மை, வெடிப்புத்தன்மை உடைய வெகுஜன வேலையின்மை 27% என்னும் சமூக நிலைமைகள் —இளைஞர்களிடையே இது 56%-- மக்களில் 20%ஐ பாதிக்கும் வறுமைத் தரங்கள், சமத்துவமற்ற நிலை அதிர்ச்சிதரும் அளவில் இருப்பது, சமூக சூழ்நிலையில் அடுத்த காலத்தில் என்ன வர இருக்கிறது என்பதற்கான ஒரு முன்னோட்டமாக உள்ளது. 180,000 மக்களைக் கொண்டுள்ள பேர்கோசில் 32,000 பேருக்கு வேலையில்லை. வேலையின்மை விகிதங்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களை அண்டை பெருநகரங்களான மாட்ரிட்டிற்கு அனுப்பியுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தின்படி, 4537 பேருக்கு உணவு, உடைகள், பள்ளி பொருட்கள் 2009 ல் கொடுக்கப்பட்டன, இது 2012ல் 13,884 ஆகப் பெருகியுள்ளது. செப்டம்பர் 2013ல் 10,000க்கும் மேலானவர்கள் உணவுப் பொட்டலங்களை பெற்றனர். அதே நேரத்தில் நகர சபை, 135 மில்லியன் யூரோக்களுடனுடன் சமூகநலச் செலவுகளைக் குறைக்கிறது. அவர்கள் இப்பொழுது கமொனாலில் ஒரு மழலையர் பள்ளியை மூடுகின்றனர்; ஏனெனில் பழுதுபார்க்க 13,000 ஆயிரம் யூரோக்கள் இல்லை என வாதிடுகின்றனர். அகன்ற வீதி திட்டம் கட்டுமான நிறுவனங்களுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் இடையே நெருக்கமான உறவிற்கு மற்றொரு உதாரணம் ஆகும். இவை கடந்த தசாப்தத்தில் ஏராளமான ஊழல் வழக்குகளில் வெளிப்பட்டுள்ளன. திட்டத்தில் முக்கிய ஆதாயம் அடையப்போவது, கட்டுமான நிறுவனம் BMG Engineering and Architecture உடைய Antonio Miguel Mendez Pozo. “முதலாளி” என அறியப்படுபவராவர். இவர் ஒரு செய்தித்தாளான Diario de Burgos ன் சொந்தக்காரரும் ஆவார். போசோ 1992ல் கட்டுமான மோசடி வழக்கு ஒன்றில் ஆவணங்களைத் தவறாகக் கொடுத்ததற்கு 7 ஆண்டு கால சிறை தண்டனை பெற்றார்; அதில் அவர் 9 மாதங்களைக் கழித்துள்ளார். பேர்கோசின் PP மேயர் சேவியர் லாகால், 2006ல் ஒரு சர்ச்சையில் தொடர்பு கொண்டிருந்தார்; போசோவின் மகன் தலைமை தாங்கிய பயணத்தில், பிரெஞ்சு ரிவியேராவிற்கு சென்றிருந்தார், அனைத்துச் செலவுகளும் பல கட்டுமான செல்வந்தர்களால் கொடுக்கப்பட்டது. லாகால் இப்பொழுது, அகன்ற வீதி திட்டம் 15 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்றும் நகர அதிகாரிகள் தொழிலாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய முடியாது என்றும் வாதிட்டுள்ளார். |
|