World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India’s “judiciary acts on the agenda of the capitalists”

—says lawyer for Maruti Suzuki workers facing frame-up murder charges

இந்தியாவின் "நீதித்துறை முதலாளித்துவவாதிகளின் நிகழ்ச்சிநிரலின் மீது செயல்படுகிறது"

கொலை குறித்த பொய் வழக்குகளை முகங்கொடுத்துள்ள மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கான வழக்கறிஞர் கூறுகிறார்.

By Deepal Jayasekera and Arun Kumar
8 January 2014

Back to screen version

படுகொலை மற்றும் ஏனைய கடுமையான பொய் குற்றச்சாட்டுக்களை முகங்கொடுத்துள்ள 148 மாருதி சுஜூகி இந்தியா (MSI) தொழிலாளர்களின் சட்ட பாதுகாப்பை முன்னெடுத்துவரும் வழக்கறிஞர் ராஜேந்திர பதக் சமீபத்தில் அவர்களின் வழக்கு குறித்து உலக சோசலிச வலைத் தளத்தோடு  உரையாடினார்.

கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட வழக்கோடு, இந்த தொழிலாளர்கள் ஏறத்தாழ 18 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். MSI நிர்வாகத்தால் வழங்கப்பட்ட "சந்தேகத்திற்குரியவர்கள்" பட்டியலின் அடிப்படையில் பொலிஸால் கைது செய்யப்பட்ட அவர்களில் மாருதி சுஜூகி தொழிலாளர் சங்கத்தின் (MSWU) ஒட்டுமொத்த தலைமையும் மற்றும் அதன் மிக ஈடுபாடு கொண்ட பல அங்கத்தவர்களும் உள்ளடங்குவர். MSWU தொற்சங்கம் ஹரியானாவின் MSI மானேசர் கார் உற்பத்தி ஆலையில் நிலவும் அடிமையுழைப்பு நிலைமைகளுக்கு சவால்விடுக்க, அரசு ஆதரவிலான மற்றும் நிறுவனத்திற்கு தலையாட்டும் ஒரு தொழிற்சங்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டது.

MSWU இல் போர்குணமிக்கவர்களுக்கு எதிராக சட்டபூர்வமாக ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசும், இந்தியாவின் மிகப் பெரிய வாகனத்துறை உற்பத்தியாளரும் தங்களின் பழிவாங்கும் நடவடிக்கைத் தொடங்க மற்றும் போதுமான அளவிற்கு வளைந்து கொடுக்காத 2,000கும் அதிகமான ஏனைய தொழிலாளர்களை மானேசர் ஆலையிலிருந்து துப்புரவாக்க, 2012 ஜூலை 18இல் MSI மனிதவள மேலாண்மை துறையின் மேலாளர் அவானிஷ் குமார் தேவ் உயரிழப்பதற்கு இட்டு சென்ற, நிறுவனத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு தகராறை கைப்பற்றினர்.

மாருதி சுஜூகி அப்போதிருந்து அதன் மானேசர் உற்பத்தி ஆலையில் உற்பத்தியை வேகப்படுத்தி உள்ளது. அரசு, அதன் பங்கிற்கு, தொழிலாளர் சக்தியை அச்சுறுத்த மற்றும் கண்மூடித்தனமாக, மலிவு-உழைப்பு வேலையிட அதிகாரத்தை அமுலாக்க அது தயாராக இருப்பதை இந்தியாவின் முன்னணி வாகனத்துறை உற்பத்தி மையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ள ஒன்றின் அனைத்து தொழில் வழங்குனர்களுக்கும் எடுத்துக்காட்ட, ஒவ்வொரு வேலை நாளிலும் அந்த ஆலைக்குள் டஜன் கணக்கான பொலிஸை நிலை நிறுத்துகிறது.

ஒரு நீண்ட நேர்காணலில், ராஜேந்திர பதக் சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் நிலைமைகளைக் குறித்தும், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாட்களில் அவர்கள் எந்த மாதிரியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை அம்பலப்படுத்த அவருடைய முயற்சிகள் குறித்தும், எந்த பொய்களின் மீது இந்த ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அமைந்திருக்கின்ற என்பதைக் குறித்தும், இந்த நீதித்துறையின் வர்க்க தரப்பைக் குறித்தும், மற்றும் ஸ்ராலினிச இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாருதி சுஜூகி தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு வர தவறியமை குறித்தும் விவாதித்தார்.

சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 120 (B)இன் கீழ், அதாவது குற்றஞ்சார்ந்த சதித்திட்டத்தின் கீழ், கொலை குற்றச்சாட்டுக்களை முகங்கொடுத்திருப்பதாக வழக்கறிஞர் பதக் விளக்கினார். தொழிலாளர்களில் எட்டு பேர், அவர்கள் அனைவருமே MSWU நிர்வாகிகள், தேவ்வை கொலை செய்ததில் நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்; ஏனையவர்கள் படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்ததாக அல்லது அதற்கு உடந்தையாய் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அதற்கு கூடுதலாக, தொழிலாளர், கலகஞ் செய்ததில் இருந்து தாக்குதல் நடத்தியது வரை, சொத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியது வரை, ஏனைய பல குற்றஞ்சார்ந்த குற்றச்சாட்டுக்களையும் முகங்கொடுக்கின்றனர்.

ஜோடிக்கப்பட்ட இத்தகைய குற்றச்சாட்டுகளுக்காக தண்டிக்கப்பட்டால், அந்த தொழிலாளர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுவார்கள். “கொலை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம்,” என்று கூறிய பதக், “ஏனைய குற்றங்களுக்கு 5-7 ஆண்டுகளில் இருந்து அல்லது 20-30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வேறுபடும். ஆனால், சிறிய காயங்களை ஏற்படுத்தியதற்கான தண்டனை 3-6 மாதங்களாக இருக்கும்,” என்றார்.

பதக் கூறுகையில், சட்டம் மற்றும் அரசியல் காரணங்கள் இரண்டினாலும், நீதிமன்றங்கள் மரண தண்டனை வழங்குவதற்கான சாத்தியக்கூறு இருக்காது என்றார். “அரிதினும் அரிய வழக்குகளில்" மட்டும் தான் தலையாய தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பதை இந்திய உச்ச நீதிமன்றம் வரையறுத்திருப்பதாக பதக் கூறினார்.

MSI மேலாளர் தேவ் படுகொலை சம்பந்தமாக, ஜூலை 18 தகராறைத் தூண்டி தேவ்வை படுகொலை செய்த நிறுவனத்தால் வரவழைக்கப்பட்ட "முரடர்கள்" மூலமாக நிறுவனம் காரியத்தில் ஈடுபட்டதென்று குற்றஞ்சாட்டி, MSI நிர்வாகத்திற்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை ஆகஸ்ட் 2012இல் தாம் பதிவு செய்திருப்பதாக பதக் விவரித்தார். அது ஒன்றரை ஆண்டு கால நீண்ட தாமதத்திற்குப் பின்னர் பெப்ரவரியில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

பாதிக்கப்பட்ட MSI தொழிலாளர்கள் தேவ்வை தாக்க எந்தவொரு காரணமும் இருக்கவில்லை, ஆனால் நிர்வாகத்திற்கு காரணம் இருந்தது என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன என்பதே அந்த குற்றச்சாட்டின் ஒரு முக்கிய கூறாக உள்ளது.

தேவ் தொழிலாளர்களுக்கு அனுதாபம் காட்டி இருந்தார் மற்றும் மாநில தொழிலாளர் நலத்துறையில் MSWU பதிவு செய்வதிலும் கூட அவர்களுக்கு உதவி இருந்தார். அதன் விளைவாக, நிர்வாக ஊழியர்களின் ஏனைய அங்கத்தவர்கள் அவருக்கு விரோதமாக மாறி இருந்தனர்.

நாங்கள் மிக கவனத்தோடு எங்களின் வழக்கை பொலிஸிற்கு எதிராக பதிவு செய்துள்ளோம்,” என்று கூறிய பதக், “MSI மேலாளர் தேவ் எவ்வாறு கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார், அதற்கான நோக்கம் என்ன என்பதற்கு எதிராக நாங்கள் மிக உன்னிப்பான ஆதரங்களைப் பெற்றுள்ளோம். இதுபோன்ற கொலை வழக்குகளில், பின்புல மூளை (mens rea), அதாவது குற்றத்தனமான மூளை மிகவும் முக்கியமானதாகும். உங்களுக்கு குற்றத்தன்மை கொண்ட மூளை இருந்தால் ஒழிய, நீங்கள் ஒரு குற்றத்தைச் செய்ய முடியாது. எங்களின் வழக்கில் நாங்கள் இதை நிரூபிப்போம். திரு. அவானிஷ் தேவ்' கொலை செய்வதற்கான பின்புல மூளை தொழிலாளர்கள் மத்தியில் கிடையாது,” என்று தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸால் பதிவு செய்யப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு MSI நிர்வாகத்திற்கு எதிரான அவரது குற்றச்சாட்டை சமபலத்தோடு வழங்கி, அவரது பிரேரணையை நீதிமன்றங்களில் நியாயப்படுத்த, பதக் ஒரு இந்திய சட்ட முன்மாதிரியை மேற்கோளிட்டு காட்டினார். பதக் கூறுகையில், “ஒரு குற்றத்தின் மீது இரண்டு தரப்பு பார்வை இருந்தால், இரண்டு தரப்பையும் குற்ற வழக்குகளாக பதிவு செய்ய வேண்டுமென தமிழ்நாடு நீதிபதி சதாசிவம் ஒருமுறை ஒரு தீர்ப்பு வழங்கி இருந்தார். தொழிலாளர்கள் இவ்விதத்தில் தேவ்' படுகொலை செய்தார்கள் என்று நிர்வாகம் கூறுகிறது, அதேவேளையில் வேறு வழியில் நிர்வாகம் அவரை படுகொலை செய்துள்ளதென்று நாங்கள் கூறுகிறோம். நீதிபதி சதாசிவம் கூறியதைப் போல, பொலிஸ் இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து, இருதரப்பினரையும் கைது செய்து, அவர்களையும் கம்பிகளுக்குப் பின்னால் இட்டு, இரண்டு தரப்பையும் குற்றஞ்சாட்டி, இரண்டு வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்,” என்றார்.

இறுதியாக எங்களால் உண்மையை நெம்பி எடுக்க முடியுமென்பதில்" நம்பிக்கையோடு இருப்பதாக பதக் தெரிவித்தார்.

ஆனால் அதுவொரு சுலபமான வேலை இல்லை. நாம் முதலாளித்துவ உலகை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறோம். தொழிலாளர்களை சுமார் 20 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்த அவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், நீதிபதிகளுக்கு இலஞ்சமும் கூட கொடுப்பார்கள்.”

இந்த விஷயத்தில், பதக் கூறுகையில், நீதிமன்றங்கள் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு பிணை வழங்க மறுத்தமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார். இந்தியாவில், பிணை கோரும் மனுக்கள் ஒவ்வொரு வழக்கிற்கு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. “சிலவேளைகளில் சந்தேகத்திற்குரியவர்கள் பல ஆண்டுகளுக்கும் பிணை பெற முடியாது. இது பெரும்பாலும் கொடிய குற்றங்களுக்காக இருக்கும். ஆனால் மாருதி சுஜூகி தொழிலாளர்களின் இதுபோன்ற ஒரு வழக்கில், [ஒரு ஆண்டிற்கும் மேலாக சிறையில் இருந்த பின்னரும் பிணை அளிக்க மறுப்பதென்பது] அசாதாரணமானதாகும்.”

வழக்கைத் தொடுத்தவரின் சாட்சி பட்டியலில் இருக்கும் அனைத்து 18 நபர்களும் நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள் என்ற உண்மையின் முக்கியத்துவத்தை வழக்கறிஞர் பதக் அடிக்கோடிட்டு காட்டினார்: “தங்களின் சக தொழிலாளர்களுக்கு எதிராக எந்தவொரு தொழிலாளரும் [பொய்] சாட்சிகள் வழங்க மாட்டார். அவர்கள் தங்களின் வேலையை வேண்டுமானாலும் விடுவார்களே தவிர அவ்வாறு செய்ய மாட்டார்கள்.”

சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமைகள் மற்றும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த கேள்விக்கான ஒரு பதிலில், பதக் கூறினார்: “பல தொழிலாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் ஏனைய வியாதிகளுக்கு உள்ளாகி உள்ளனர். மருத்துவ சிகிச்சை அடிப்படையில் பிணை கோரிய எனது மனுக்கள் தொடர்ந்து நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. சிறை அதிகாரிகள் சிறையிலேயே சிகிச்சை அளிக்க முடியுமென கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில், தேவைப்படும் சிகிச்சை, சிறைச்சாலையில் கிடைப்பதில்லை. ஆகவே அவர்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது.”

 “அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சாப்பிட உணவு இல்லை. உடை மற்றும் மருத்துவ கவனிப்புகளுக்கும் பணமில்லை. அவர்களின் குழந்தைகளால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அது மிகவும் பரிதாபகரமாக உள்ளது.”

பதக்கின் வலியுறுத்தலின் பேரில், சிறையில் அடைக்கப்பட்ட பதிமூன்று தொழிலாளர்கள் ஜூலை-ஆகஸ்ட் 2012இல் காவலில் எடுக்கப்பட்ட போது, மூட்டை நீட்டிவைத்தல் மற்றும் தண்ணீரில் மூழ்கடித்தல் உட்பட அவர்கள் என்ன மாதிரியான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை விவரித்து கடந்த மார்ச்சில் ஹரியானா டைரக்டர் ஜெனரல் ஆஃப் பொலிஸ் மற்றும் குர்காவ் பொலிஸ் கமிஷனருக்கு குற்றச்சாட்டுக்களை அனுப்பினார்கள். சித்திரவதை செய்ய தொழிலாளர்களுக்கு "முறையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்வதில் பொலிஸ் வேண்டுமென்றே காலந்தாழ்த்தி" வருவதைக் குறிப்பிட்டு, பொலிஸிற்கு எதிராக பதக்கும் கூட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அது குறித்து பதக் விவரிக்கையில், “2012 செப்டம்பர் 21இல் எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் முன்னிலையில் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தாலும் கூட, அந்த சமயத்தில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான பெரும்பாலான உடல்ரீதியிலான ஆதாரங்கள் மறைந்து போயிருந்தன,” என்றார்.

எவ்வாறிருந்த போதினும், ஒட்டுமொத்த MSWU தலைமையும் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் MSI மானேசர் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட MSWU இடைக்கால கமிட்டி, பொலிஸ் ஒடுக்குமுறைக்கு அஞ்சுவதால், சித்திரவதை குறித்து அவர் இதுவரையில் ஒரு நீதிமன்ற குற்றச்சாட்டைப் பதிவு செய்யவில்லை: கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுவிக்க கோரி மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் மீண்டும் வேலையில் அமர்த்த கோரி "2014 ஜனவரி 15இல் கெய்தாலில் இருந்து குர்காவ் வழியாக டெல்லிக்கு அவர்கள் பாத யாத்திரை [நீண்ட பேரணி] தொடங்கும் போது அவர்கள் பொலிஸால் துன்புறுத்தப்படுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்."

பொலிஸ் உங்களை விட்டு வைக்கப் போவதில்லை. அவர்களின் அரசியல் குருக்களால் என்ன செய்யச் சொல்லி அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறதோ அதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் நீங்கள் சொல்வதையோ அல்லது நான் சொல்வதையோ கேட்கப் போவதில்லை. அவர்கள் முதல்வர் சொல்வதைத் தான் கேட்பார்கள்,” என்பதை அவர்களுக்கு விளக்கி, MSWU இடைக்கால கமிட்டியின் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்க அவர் முயன்று வருவதாக பதக் தெரிவித்தார்.

தொழிலாளர் கிளர்ச்சிக்கு அஞ்சி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பண முதலீடு செய்யாமல் போகலாம்", அத்தகையவர்களுக்கு தாம் ஒரு நேர்மறையான சேதியை அனுப்ப விரும்புவதால் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர் பிணை வழங்கப் போவதில்லை என்ற ஹரியானா உயர்நீதிமன்ற ஒரு நீதிபதியின் அறிவிப்பின் மீது கருத்து கூறும்படி WSWSஆல் கேட்கப்பட்ட போது, பதக் கூறினார், “நீதிபதிகள் முதலாளித்துவவாதிகளின் தரகர்களாக வேலை செய்து வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் நியமனங்களாக உள்ளனர். உங்களுக்கு திறமை இல்லை என்றாலும் கூட, உங்களுக்கு அரசியல் பின்புலம் இருந்தால் நீங்கள் பின்புல வழிகளில் ஒரு நீதிபதியாக ஆக முடியும்.”

நீதித்துறை, முதலாளித்துவவாதிகளின் நிகழ்ச்சிநிரலின் மீது செயல்படுகிறது. நீதித்துறை இந்த சேதியை வழங்கும்: ஆம், நாங்கள் உங்களோடு உள்ளோம். நீங்கள் விரும்பிய நீதியை நாங்கள் வழங்குவோம். அது மோடி தலைமையிலான [உத்யோகப்பூர்வ எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளர்] அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது மன்மோகன் சிங் தலைமையிலானதாக [தற்போதைய பிரதம மந்திரி] இருந்தாலும் சரி நீதிமன்றங்கள் அவர்கள் பக்கம் உள்ளன.”

வழக்கறிஞர் பதக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் உறுப்பினர் ஆவார், ஆனால் இராஜினாமா செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். “சிபிஎம் காங்கிரஸ் கட்சி சார்பானது. அது காங்கிரஸின் இரண்டாம் குழுவாக [B-team] உள்ளது. துரதிருஷ்டவசமாக நானும் அந்த கட்சியில் உள்ளேன். [ஆளும்] காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளை விட அது சுமாரானது. ஆனால் அது என்னவாக இருக்க வேண்டுமோ அவ்வாறு இல்லை. சிபிஎம் தொழிலாள வர்க்கத்திற்காக ஒன்றுமே செய்யவில்லை. அவர்கள் [சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி] [2004இல் இருந்து 2009 வரையில்] 62 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த போது தொழிலாள வர்க்கத்திற்கு சார்பான தொழிலாளர் நலச்சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம்.

சிபிஎம், மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதோடு நடைமுறையில் அவர்களைப் பாதுகாக்கவும் ஒன்றும் செய்யவில்லை.”

பதக் தொடர்ந்து கூறினார், “மாருதி தொழிலாளர்களின் போராட்டம் வரவிருக்கின்ற மாதங்கள் மற்றும் ஆண்டுகளுக்கும் தொடரும். இந்த வழக்கு உடனடியாக முடிவுக்கு வரப் போவதில்லை. அரசியல்ரீதியாக, யார் அதிகாரத்திற்கு வந்தாலும் ஒன்றும் மாறப் போவதில்லை. எகிப்தைப் போன்ற ஒரு புரட்சி இந்த நாட்டிற்குத் தேவைப்படுகிறது. தொழிலாள வர்க்கத்தில் இருந்து தலைவர்கள் வர வேண்டும். விவசாயிகள் அவர்களைப் பின்தொடர்வார்கள்.”

WSWS' வாசிக்கும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அவர் கூற விரும்பும் சேதி என்னவென்று கேட்ட போது, அவர் கூறினார்: “உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். அவர்கள் அரசியல்ரீதியாகவும், நிதியியல் ரீதியாகவும், அறரீதியாகவும் மற்றும் அனைத்து வழிகளிலும் மாருதி சுஜூகி தொழிலாளர்களை ஆதரிக்க வேண்டும். எல்லா கடினங்களுக்கு இடையிலும், மாருதி சுஜூகி தொழிலாளர்கள் இன்றும் கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள்.”