சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

The Hobbit: The Desolation of Smaug: The filmmakers waste considerable talent and skill

The Hobbit: The Desolation of Smaug: திரை படைப்பாளிகள் கணிசமான  செயல்திறனையும் சாமர்த்தியத்தையும் வீணடிக்கின்றனர்.

By Christine Schofelt
17 December 2013

Use this version to printSend feedback

ஜே.ஆர்.ஆர்.டால்கீனின் நாவலைத் தழுவி, ஜாக்சன், ஃபிரான் வால்ஷ், ஃபிலிப்பா போவென்ஸ் மற்றும் கிலெர்மோ டெல் டோரோ ஆகியோரது திரைக்கதையில், பீட்டர் ஜாக்சன் இயக்கியது.

அநேகமாக, நம்மை மனிதனாக்குகிற அல்லது நாம் வாழும்முறை தொடர்பான சில உள்ளுணர்வுக்காக, அல்லது சுவாரஸ்யமான சாகசம் ஒன்றிற்காக அல்லது நாம் வாழும்முறையிலிருந்து தப்பிக்கும் ஒரு கணத்தை கொடுக்கும் ஒரு கதை என்பன போன்ற பல காரணங்களுக்காக ஒருவர் திரையரங்கினுள் நுழைகிறார். எனது பார்வையில், ஜே.ஆர்.ஆர்.டால்கியின் The Hobbit (1937) ஐ அடிப்படையாகக் கொண்ட, மூன்று பகுதிகளைக் கொண்டதன் இரண்டாம் பகுதியான The Hobbit: The Desolation of Smaug திரைப்படம் இவற்றுள் எவற்றுடனும் சிறிதே சம்பந்தப்பட்டிருக்கிறது.

முதலாவதாக தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இணை எழுத்தாளர் பீட்டர் ஜாக்சன், தனது சொந்த தயாரிப்பின் பெரும் விரிவாக்கத்தில் ஒரு பயங்கரத்தை எதிர்கொள்கிறார், சிறிய, வசீகரமான குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றிலிருந்து உருவாக்கப்பட்ட, மூன்று நாடகத் தொகுதியான The Hobbit, அதன் முன்னோடியான The Lord of the Rings (2001-2003)  தொடர்களை விடவும் அதிகமான ஒரு மாபெரும் வியாபார நிகழ்வாக வேலைவாய்ப்புகள், அரங்குகள் மற்றும் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரம்கூட (நியூசிலாந்து) இதை சார்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு பரிசோதனை, தன்னியல்பானதன்மை அல்லது நேர்மையான இளகியமனம் ஆகியவற்றுக்கான இடமில்லை. இது தீவிரமான, பில்லியன் டாலர்கள் வியாபாரமாகும்!


T
he Hobbit: The Desolation of Smaug

ஆரம்பத்தில் சுருக்கமான முன்கதை ஒன்றின் விதிவிலக்குடன், The Hobbit: ஒரு எதிர்பாராத பயணம் விடப்பட்ட இடத்தில் The Desolation of Smaug ஆரம்பிக்கிறது. ஹாபிட் பெயரைகொண்ட பில்போ பேக்கின்ஸ் (Martin Freeman) மற்றும் அவரின் அணியை சேர்ந்த குள்ளர்களும் ஏற்கெனவே ஒரு கடினமான பயணத்திற்கு பின்னர் லோன்லி மலைப்பகுதிக்கு தங்கள் வழியில் தொடர்ந்து செல்கின்றனர். இப்போதும் அரண்மனைக்குள் இருந்து வரும் தங்க-ஆசை மிகுந்த நெருப்பு விலாங்கான (dragon) ஸ்மாக்கிடம், தாங்கள் இழந்த தங்களது சொந்த நிலத்தை மீண்டும் கைப்பற்றலாம் என்று குள்ளர்கள் நம்புகிறார்கள்,

இக்குழு மலைக்கான கதவினை திறக்கும் துவாரத்தை கண்டுபிடிப்பதற்காக, டுரின் தினத்தன்று (குள்ளர்களின் புத்தாண்டு) சூரிய அஸ்தமனத்திற்குள் அங்கு செல்ல வேண்டும். தீயசக்தியின் ஆற்றல்களை சேகரித்துக் கொண்டிருக்கும் நயவஞ்சகரான நெக்ரோமேன்சரை (Benedict Cumberbatch) தேடுவதில் ஹந்டால்ஃப் (Ian McKellen) முன்னதாக அவர்களை விட்டுச்செல்கிறார்.

வழியில், குள்ளர்களும் ஹாபிட்டும் குட்டிச்சாத்தான்களால் சிறையிலடைக்கப்படுகின்றனர். முதல் பகுதியிலிருந்து இவர்களை தொடர்ந்து கொண்டிருப்பவர்களான கொடூரமான ஆர்க்ஸ்களுடன் (மோசமான மனித உருகொண்ட தேவதைகள்) சண்டையிடும் வேளையில், அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து நீரோட்டங்கள் மற்றும் சரிவான நீர்வீழ்ச்சிகளின் வழியாக ஒரு நீண்ட பீப்பாய் சவாரியின் மூலமாக அவர்கள் தப்பிக்கிறார்கள்.

இவர்களுக்கு இரண்டு குட்டிச்சாத்தான்கள் உதவுகின்றன. குறிப்பாக வேறு எந்த பெண் கதாபாத்திரங்களும் இல்லாததால், இந்த படத்திற்காக டௌவ்ரியல் (Evangeline Lilly) கண்டுபிடிக்கப்பட்டார். உதவிகரமாக இருக்கும் இரண்டாவது குட்டிச்சாத்தானாக, மிகப்பிரபலமான லிகோலஸ் (Orlando Bloom) கதாப்பாத்திரமாகும். டால்கீன் இதனை உருவாக்கியபோது The Hobbit இல் அவர் தோன்றவில்லை. இந்த இரு கதாபாத்திரங்களின் சேர்க்கை சூடான மற்றும் தேவையற்ற காதல் கட்டங்களுக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறது.


The Hobbit: The Desolation of Smaug

மீண்டும் மீண்டும் ஒரு முடிவற்ற பயணத்தையே இது நமக்கு ஞாபகப்படுத்துகிறது. The Hobbit, The Desolation of Smaug, தொடர்ச்சியான மயிரிழை உயிர்தப்பல்கள், கணணிகளால் உருவாக்கப்பட்ட காட்சிகள்  நிரம்பிய சண்டை காட்சிகள் மற்றும் இன்னும் கிறுகிறுக்க வைக்கும் காட்சிகளினூடாக நகர்கிறது, ஜாக்சனின் ஹொபிட் முதல்பாக கதையினை முடிவற்ற வகையிலான செங்குத்தான மலைகள் மற்றும் கிட்டத்தட்ட தங்களை குறைவாகக் காட்டிக் கொள்ளும் கதாப்பாத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்த போதிலும், இந்த பாகம் முட்டாள்தனமான உயர்வான மாடிப்படிகள் மற்றும் நடைபாதைகள், உயர்ந்த மரக்கிளைகள் மற்றும் கதாப்பாத்திரங்கள் கயிறுகள், சங்கிலிகள், கம்பிகள் மற்றும் பலவற்றில் தொங்குவது போன்றவற்றுக்கு முக்கியத்துவமளிக்கிறது. துரத்தல் காட்சிகளிலிருந்து சண்டைக்காட்சிகளுக்கு, பின் துரத்தல் காட்சிகளுக்கு பின் மறுபடியும் அதற்கு திரும்புவது என்று, ஜாக்சனின் சமீபத்திய போலி-புராண இழுவைகள் பரபரப்பாக இருந்தாலும், இறுதியில் ஒரு களைப்பான சவாரியாகிவிடுகிறது,

அனைத்து சண்டைக்காட்சிகளும் சம்பவங்களும் உண்மையில் சற்று பரபரப்பாகவே உள்ளன.

இத்திரைப்படத்தில் கணிசமான திறமை மற்றும் சாமர்த்தியத்தையும் இயக்குனர் வீணடித்திருக்கிறார். சில கைதேர்ந்தவர்கள் உள்ளிட்ட- நடிகர்கள் மிகை ஒப்பனை, கணணிகளால் உருவாக்கப்பட்ட காட்சிகளின் அம்சங்கள் மற்றும் மங்கலான வசனங்களால் வீணடிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, நெக்ரோமேன்சர் மற்றும் நெருப்பு விலாங்கான ஸ்மாக் போன்று, அவரது குரல் கண்டுபிடிக்க முடியாத வகையில் மாற்றப்பட்டிருக்கும் வேளையில், இத்திரைப்படத்தில் பென்னடிக்ட் கம்பேர்பேட்சுக்கு ஏன் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று கேட்க வேண்டியிருக்கிறது. இக்கதாபாத்திரங்களுக்கு கம்பர்பேட்ச்சால் கொண்டுவரப்பட்டிருக்கூடிய எந்த உணர்ச்சியும் படத்தொகுப்பு மற்றும் சிறப்பு அம்சங்களால் வீணடிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் புத்தகத்தில் எழுதியவாறே எடுக்கப்பட்டிருக்கும் பகுதி என்றால் அது ஸ்மாக் மற்றும் பில்போ பேக்கின்ஸுக்கு இடையிலான வசனமாக இருக்கலாம். இம்மாற்றம் பெருமளவு நேரடியாக டால்கீனின் நாவலிலிருந்து மேம்படுத்தப்பட்டிருப்பதோடு, அது மூல படைப்பில் முக்கியமான உணர்ச்சிகரமான பகுதிகளுள் ஒன்று. ஆனால், இதில் குறிப்பாக குரல் ஒலியின் பயன்பாடு ஏமாற்றமளிக்கிறது. அச்சுறுத்தல் போன்ற ஒரு உணர்வினை ஏற்படுத்துவதற்கு பதிலாக, ஒருவர் சந்தேகிப்பதுபோல், கம்பர்பேட்ச்சின் குரலை வலுவாக்குவதாக நினைத்து செய்திருப்பது, இறுதியாக கார்ட்டூன் போன்றும் கவனத்தை திருப்புவதாகவும் ஆகிவிட்டது. இதிலும், முந்தைய திரைப்படத்தின் பேக்கின்ஸ் மற்றும் கொல்லமிற்கு (Andy Serkis) இடையிலான  நீட்டிக்கப்பட்ட காட்சியில் இருப்பது போன்று  பார்வையாளர் ஃபிரீமேனின் நடிப்புத்திறத்தினை கணநேர கண்ணோட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும் ஆனால் அது சற்றுநேரத்திற்கே. கொல்லமின் காட்சியில் இருந்தது போன்றே, இத்திரைப்படத்தில் படைப்பாளிகள் காட்சிப்படுத்தியிருப்பது போல், இந்த ஒன்றும் பொருத்தமற்றதாகத் தெரிகிறது.

ஹந்டால்ஃப்பாக  நடிக்கும் இயான் மெக்கெல்லன் சுருக்கமான, பொருத்தமற்ற காட்சியால் புறக்கணிக்கப்படுகிறார். இவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட வசனங்கள் என்பதால், இவர் கதாப்பாத்திரத்தில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்க முடியும். ஜாக்சன் இக்கதாபாத்திரத்தை சரியாகப் பயன்படுத்தாதது குற்றம் போலத் தெரிகிறது.

கிட்டத்தட்ட 300 பக்கங்கள் கொண்ட (பதிப்பினைப் பொறுத்து) 1937 நாவல், சுவாரஸ்யமான மற்றும் பொழுதுபோக்காக இருந்தது. டால்கினின் கருத்து தொழிற்துறைக்கு முந்தைய காலகட்டத்துக்கு திரும்பி போவதற்கான ஆசையை உள்ளடக்கிய ஒரு கற்பனாவாதமாகும். நன்மை மற்றும் தீமை குறித்த அவரின்  கருத்துக்கள், முதல் உலகப்போரில், அவரது தனிப்பட்ட அனுபவங்களால் வலுவாக பாதிக்கப்பட்டதாய் இருந்தது. மேலும் அவர் அவ்வனுபவங்களை நீடித்த தாக்கங்களோடு கூடிய சுவாரஸ்யமான படைப்பாக மாற்றினார். சற்று நகைச்சுவையோடு எழுதியதுடன், கலை குறித்த புரிதலும் கொண்டிருந்தார். The Hobbit, உருவாக்கப்பட்ட அதே உலகில் Fellowship of the Ring இனை உருவாக்கிய டால்கின் அதில் சுவாரஸ்யமான கேள்விகளைக் கேட்டு, தெளிவான குறிக்கோள்களுடன் நன்றாக-அமைக்கப்பட்ட சில கதாப்பாத்திரங்களை உள்ளடக்கினார். சுருக்கமாக சொல்வதென்றால், அங்கு ஒரு நல்ல மற்றும் ஆரவாரமற்ற அல்லது முடிந்தால் இரண்டுமுள்ள வகையில் ஒரு திரைப்படத்தினை உருவாக்குவதற்காக  விஷயம் இருந்தது எனலாம்.

ஆயினும், ஜாக்சன் தனது சமீபத்திய திரைப்படத்தில் செய்திருப்பது என்னவென்றால், அவர் பெருமளவு ஆரம்பத்திலிருந்து செய்திருப்பது போன்றே, டால்கீன் நுணுக்கமாக உள்ளடக்கியிருப்பவற்றுள் எதையாவது அடித்துவெளியே எடுப்பதே. ரசிகனுக்கு என்ன தேவைஎன்பது குறித்த எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளரது குறுகியபார்வை ஆடம்பரமானவற்றை விட வேறெதையும் பாராட்டுவதற்கான பார்வையாளர்களின் திறனை புறக்கணிக்கிறது. இத்தகைய புத்தகங்கள் பல தலைமுறை வாசகர்களால், சுவாரஸ்யமாக மீண்டும் மீண்டும் படிக்கப்படுகின்றன என்பது, வெளிப்படையாக சிறிதளவே பொருள்படுகிறது. இது, இந்த மெல்லிய, இறுக்கமாக-பிணைக்கப்பட்ட புத்தகத்தை, மூலக்கதையை கதையை முன்னோக்கி உந்தாத, பெருமளவிலான துரத்தல் மற்றும் சண்டைக்காட்சிகள் நிரம்பிய பரந்த மூன்றுபாக வெற்றிப்படமாக மாற்றுவதற்கான ஜாக்சன் மற்றும் அவரின் கூட்டினரின் ஆர்வத்தையே காட்டுகிறது

நெக்ரோமேன்சரின் அடையாளத்தினை வெளிப்படுத்துவது, நெருப்பு விலாங்குடனான உரையாடல் மற்றும் காண்பிக்கப்படும் சிறு விஷயங்கள், போன்றவற்றில் ஏதாவது நிகழும் என்று பார்வையாளன் காத்திருக்கிறான், ஆனால் அது, காத்திருத்தல் மற்றும் குதிரை சவாரி, வெட்டிச் சாய்த்தல், துரத்தல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவை வார்த்தைகளில் மட்டுமே வந்து எந்த பயனுமில்லாமல் போய்விடுகிறது. இறுதியாக, உண்மையில் ஆபத்திற்குள்ளாக்கப்படும் ஒரே விஷயம் என்றால் அது பார்வையாளரின் பொறுமையே.