சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Deflation threat poses new dangers to world economy

பணச்சுருக்கம் உலக பொருளாதாரத்திற்கு புதிய அபாயங்களை முன்நிறுத்துகிறது

Nick Beams
17 January 2014

Use this version to printSend feedback

2014இல் உலக பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி ஏற்படுமென்ற நம்பிக்கைமிக்க புது வருட முன்மதிப்பீடுகளின் மீது, ஒரு பலமான அடி விழ நீண்டகாலம் எடுக்கவில்லை.

புதனன்று வாஷிங்டனில் தேசிய பத்திரிகையாளர் மன்றத்தின் ஓர் உரையில், சர்வதேச நாணய நிதி மேலாண்மை இயக்குனர் கிறிஸ்டீன் லகார்ட், பணச்சுருக்க போக்குகள் (Deflationary trends) பலமடைந்து வருவது உலகப் பொருளாதாரத்திற்கு ஓர் கொடிய அச்சுறுத்தலை முன்வைக்கின்றதென்று எச்சரித்தார்.

அவர் கூறினார், “பணவீக்கம் (Inflation) பல மத்திய வங்களின் இலக்குகளை விட குறைவாக இருந்து வருகிறது என்பதோடு சேர்ந்து, நாம் அதிகரித்து வரும் பணச்சுருக்க அபாயங்களையும் பார்க்கிறோம். அது மீட்சிக்கு பேரழிவுகரமானதாக விளங்கும்,” என்றார். “பணவீக்கம் ஒரு வேதாளம் என்றால், பணச்சுருக்கம் என்பது ஒரு பூதம், அதை தீர்க்கமாக எதிர்த்து போராட வேண்டும்,” என்றார்.

ஆனால் நிஜமான பொருளாதார விரிவாக்கத்தைக் கொண்டு வருவதற்கு எதையும் செய்யாமல், அதேவேளையில் வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களுக்கு மிக-மலிவு பணமாக ட்ரில்லியன் கணக்கான டாலர்களை எது வழங்கி உள்ளதோ அத்தகைய, அமெரிக்க பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளின் காலவரையற்ற "பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கையைத்" எதிர்காலத்தில் தொடர்வதைத் தவிர, நிலைமையைச் சமாளிக்க வேறெந்த கொள்கை முனைவுகளையும் லகார்ட் வழங்கவில்லை.

அவர் கூறினார், “வேகமான வளர்ச்சி உறுதியாக வேரூன்றி இருக்கும் போது மட்டும் தான் மத்திய வங்கிகளால் அதிகளவிலான பாரம்பரிய செலாவணி கொள்கைகளுக்கு திரும்ப முடியும்,” என்றார்.

மத்திய வங்கியாளர்கள் "பணச்சுருக்கம்" என்ற சொல்லை கூட உச்சரிக்க பயப்படுகின்ற நிலையில், விலைகள் வீழ்ச்சியாலும் அதிகரித்துவரும் சர்வதேச அபாயத்தினாலும் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜப்பானிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைப் போன்ற அதேமாதிரியான ஒரு பணச்சுருக்க நெருக்கடியை குறிப்பிட்டுக் காட்டிய முதல் உயர்மட்ட கொள்கை வகுப்பாளர் லகார்ட் ஆவார் என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

பெரும்பாலான பிரதான மத்திய வங்கிகளுக்கான பணவீக்க விகித இலக்கு ஓராண்டுக்கு 2 சதவீதமாகும். ஆனால் அமெரிக்காவில் பணவீக்கம் ஏறக்குறைய 1.0 சதவீதமாக உள்ளது, ஜப்பானிலும் சுமார் அதேயளவிற்கு உள்ளது. அது ஏறத்தாழ ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்தப்பட்ட அபேனோமிக்ஸ் (Abenomics) என்றழைக்கப்படுவதன் விளைவாக பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான அளவுகளில் இருந்து இந்த குறியீட்டிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. அபேனோமிக்ஸின் கீழ் நாட்டின் பணப்புழக்கத்தை இரட்டிப்பாக்கும் ஒரு கொள்கைக்கு அபே அரசாங்கமும் ஜப்பான் வங்கியும் பொறுப்பேற்று உள்ளன.

ஐரோப்பாவில் பணவீக்கம் இன்னும் கீழாக உள்ளது. யூரோ மண்டலத்தில் விலை உயர்வுகளின் ஆண்டு விகிதம் டிசம்பரில் வெறும் 0.8 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்தது, அதேவேளையில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 12 சதவீதத்தில் இருந்தது.

கடன் வழங்கும் அமைப்புமுறை மற்றும் நிதியியல் அமைப்புமுறையின் அஸ்திவாரங்களை பணச்சுருக்கம் ஆட்டங்காண செய்ய அச்சுறுத்தி வருகிறது என்பதே லகார்ட் மற்றும் ஏனைய நிதியியல் அதிகாரிகளின் முக்கிய கவலையாகும். விலைகள் வீழ்ச்சி அடைகின்றன அல்லது மிக மெதுவான விகிதத்தில் உயர்கின்றன என்றால், கடன் வாங்கக்கூடியவர்கள் அவர்களின் உண்மையான கடன் சுமை காலப்போக்கில் அதிகரிக்கும் என்று அஞ்சி, கடன்வாங்க தயங்குவார்கள். இதேபோல, பணச்சுருக்கம் என்பது ஏற்கனவே கடன்களைப் பெற்றுள்ளவர்களின் கடன் சுமையை அதிகரிக்கிறது.

யூரோ மண்டலம் 2014இல் நிதியியல் நெருக்கடியைக் கடந்துவிடும் என்று கூறிய ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோஸே மானுவேல் பாரோசோவின் கருத்துரைகளோடு விடயத்தைக் கையிலெடுத்த ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) தலைவர் மாரியோ திராஹி, ஐரோப்பிய நெருக்கடி தீர்ந்துவிட்டதென அறிவிக்கும் அளவிற்கு நிலைமை "முதிர்ச்சி" அடைந்து விடவில்லை என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் பணச்சுருக்க ஆபத்து குறித்த லகார்டின் எச்சரிக்கை வந்தது.

ஐரோப்பிய பொருளாதாரம் "பலவீனமாக" இருப்பதாகவும், “எத்தனை காலத்திற்கு தேவைப்படுகிறதோ அதுவரையில் செலாவணி கொள்கையில் ஓர் இணக்கமான நிலைப்பாட்டை ECB கொண்டிருக்கும் என்பதை அது பலமாக வலியுறுத்துகிறது" என்றும் திராஹி கூறினார்.

அதேவேளையில் அவர் அந்த சொல்லைப் பயன்படுத்தவில்லை. இது, யூரோ மண்டலத்திற்குள் பணச்சுருக்க அழுத்தங்கள் குறித்தும் மற்றும் அவற்றை பின்னோக்கி திருப்புவதற்கு மத்திய வங்கியின் இயலாமை குறித்தும் ECB தலைவர் அதிகளவில் கவலை கொண்டுள்ளார் என்பதற்கான நிச்சயமான அறிகுறி என்பதாக பரவலாக கூறப்பட்டது.

HSBC வங்கியின் தலைமை பொருளியல்வாதி ஸ்டீபன் கிங், பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில்: “இழந்துபோன தசாப்தத்தில் இருந்த ஜப்பான் வடிவிலான பணச்சுருக்கத்தை யூரோ மண்டலம் முகங்கொடுக்கவில்லை என்று கடந்த வாரம் மரியோ திராஹி மறு உத்தரவாதம் அளித்திருக்கலாம், ஆனால், வெளிப்படையாகக் கூறுவதானால், அவரது மறு உத்தரவாதம் முழுநம்பிக்கையளிப்பதாக இல்லை என்றார்.

உத்தியோகபூர்வ வட்டி விகிதங்கள் பூஜ்ஜிய அளவிலோ அல்லது பூஜ்ஜியத்திற்கு அருகிலோ இருப்பதோடு சேர்ந்து, பணவீக்கமும் கூடுதலாக வீழ்ச்சி அடைவதென்பது "நிஜமான வட்டி விகிதங்களை உயர்த்தி, கடனை மிக குறைந்தளவே ஜீரணிக்க கூடியதாக மாற்றும், மேலும் நிதியியல் அமைப்புமுறையைப் பொறுத்த வரையில், திருப்பிசெலுத்தப்படாத கடன்களில் ஓர் அதிகரிப்பு அச்சுறுத்தும். இன்று யூரோ மண்டலத்தில் இருப்பதைப் போன்று, ஏற்கனவே பலவீனமாக உள்ள ஒரு நிதியியல் அமைப்புமுறையானது, பின்னர் படுமோசமான நிலைமைகளில் போய் முடியும். பொருளாதார மீட்சியின் ஆரம்ப அறிகுறிகள் ஒரு போலி வெளிச்சம் என்பதை தவிர வேறொன்றுமில்லை என்பதை நிரூபிக்கும்,” என்றவர் குறிப்பிட்டார்.

குறைந்த பணவீக்கம் குறைந்த வளர்ச்சிக்கு இட்டு செல்கிறது, அவர் குறிப்பிட்டார், அதேவேளையில் "கடன் வழங்கும் முறை மெதுமெதுவாக மூச்சுத் திணறுகிறது.”

நிதியியல் சந்தைகளுக்கான அமெரிக்க மத்திய வங்கியின் உதவியை நிறுத்துவதற்கு இது நேரமில்லை என்று தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் லகார்ட் வலியுறுத்திய அதேநாள், சிகாகோ பெடரல் ரிசர்வ் தலைவர் சார்லெஸ் எவான்ஸ் வழங்கிய உரையில் அது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

அவரது குறிப்புகளின் பல புள்ளிகளில், பெடரலின் "உயர்ந்தளவில் இணக்கமான" செலாவணி கொள்கை, "வரவிருக்கும் சில காலத்திற்கு" செயல்பாட்டில் இருக்க வேண்டி உள்ளதென மீண்டும் மீண்டும் வலியுறுத்திய அவர், கூடுதலாக இதையும் சேர்த்துக் கொண்டார். “கையிலுள்ள பணியை செய்துமுடிக்க நமக்கு அசாதாரணமான செலாவணி கொள்கை அவசியமாகும்,” என்றார்.

உத்தியோகபூர்வ வடிவத்தில், “கையில் உள்ள வேலை" என்பது ஒரு சமயத்தில் "வழக்கமான" பொருளாதார வளர்ச்சி அளவுகள் என்று எவை கூறப்பட்டதோ அமெரிக்க பொருளாதாரத்தைத் திரும்ப அந்த அளவுகளுக்கு கொண்டு வருவதும் மற்றும் வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பதுமாகும். ஆனால் எந்தவொரு நடவடிக்கையாலும், இந்த வேலையை இதுவரையில் செய்து முடிக்க முடியவில்லை.

கடந்த ஆண்டின் போது உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் வீழ்ச்சி அடைந்திருந்த போதினும், அது பெரிதும் ஏனென்றால் இருக்கும் வேலைகள் போதாமையால் தொழிலாளர் பிரிவிலிருந்து அதிகளவிலான மக்கள் வெளியேறி வருவதால் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க பொருளாதாரத்தின் செயல்பாடு, ஒரு குறைந்த வேலைகிடைக்கும் விகிதத்துடன் அண்மையில் மில்லியன் கணக்கானவர்களின் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைகளைக் குறிப்பிட்டு காட்டி, அதிகளவில் கட்டுக்கடங்காது போய் கொண்டிருக்கிறது.

பெரும் செல்வந்தர்கள் மட்டும் தான் பெடரல் திட்டத்தினால் ஆதாயமடைந்துள்ளனர், நடைமுறையில் அவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் மற்றும் ஆழமடைந்து வரும் நெருக்கடியிலிருந்து இலாபம் அடைந்து வருகின்றனர். வியாழனன்று, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் "வங்கியாளர்களின் பங்குகள் ஜெட் வேகத்தில் மதிப்பைப் பெறுகின்றன" என்ற தலைப்பின் கீழ் அமெரிக்க வங்கியாளர்களின் உயர்ந்துவரும் கொடுப்பனவுகளை எடுத்துக்காட்டியது. வங்கியாளர்களின் பங்கு விலை உயர்ந்ததால் கோல்ட்மேன் சாச்ஸ் கொடுப்பனவுகள் கடந்த ஆண்டில் 600 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளதாக அந்த செய்தியிதழ் குறிப்பிட்டது.

லகார்ட் அவரது உரையில் ஒப்புக் கொண்டதைப் போல, 2009இல் இருந்து அமெரிக்காவில் சுமார் 95 சதவீத வருவாய் ஆதாயங்கள் மக்கள் தொகையில் மேலே உள்ள ஒரு சதவீதத்தினருக்கு சென்றுள்ளது. அவர் கூறினார், “இது ஸ்திரப்பாடு மற்றும் நீடித்ததன்மைக்கான ஒரு குறிப்பு அல்ல.”

உலகளாவிய வளர்ச்சி "மெதுவான வேகத்தில் உள்ளது" என்று எச்சரித்த அவர், “உலகளாவிய பொருளாதாரத்தை செயல்பாட்டில் வைக்க" வளர்ந்துவரும் சந்தைகளின் மீது அதிகளவிலான நம்பிக்கை உருவாகிவிட்டது என்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில், அவை உலக வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கிற்கு பொறுப்பேற்றிருந்தன, ஆனால் தற்போது அதிக எண்ணிக்கையிலான வளர்ந்துவரும் சந்தைகள் வேகம் குறைந்து வருகின்றன.

பிரதான முதலாளித்துவ நாடுகளின் நிதியியல் அடைப்பானில் திடீரென ஏற்படும் ஏதேனும் அடைப்பு, இந்த பகுதிகளில் 80 சதவீதத்தை விட அதிகமான அளவிற்கு மூலதன ஓட்டத்தைச் சுருக்கிவிடும் என்று இந்த வாரம் உலக வங்கியிடமிருந்து வந்த ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. அது பெரும் பொருளாதார சேதத்தையும் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் நெருக்கடியையும் ஏற்படுத்தும்.

எவ்வித "மீட்சியும்" நிகழ்வதில் இருந்து வெகுதொலைவில், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் மேற்கொண்டு அழிவுகரமான விளைவுகளோடு, முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகநிலைமுறிவு தீவிரமடைந்து வருகிறது என்பதை புத்தாண்டின் முதல் வாரங்கள் தெளிவுபடுத்தி உள்ளன.