தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
London: Fire station closures endanger lives லண்டன்: தீயணைப்பு நிலையம் மூடப்படுவது உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது
By Allison
Smith and Paul Bond Use this version to print| Send feedback இம்மாதம், 10 தீயணைக்கும் நிலையங்கள் மூடப்படல், 552 தீயணைப்போர் வேலை இழத்தல் மற்றும் 14 தீயணைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படமுடியாமற் போதல் ஆகியவற்றை லண்டன் முழுவதும் காண்கிறது இந்த வெட்டுக்கள் லண்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி மேயர் போரிஸ் ஜோன்சன் மூலம் வந்துள்ளன; இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 45 மில்லியன் பவுண்டுகளை வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து சேமிக்க செய்யப்பட்டுள்ளது. இது அசாதாரண அழுத்தங்ளை, எஞ்சியிருக்கும் நிலையங்கள் மீது கொடுக்கும், நகர மக்கள் தொகைக்கு ஆபத்தை அதிகரிக்கும். தற்போதைய வெட்டுக்கள் 29 மில்லியன் பவுண்டிற்கு மட்டுமே இருப்பதால், இது சமூகநல ஒடுக்கீட்டு வெட்டில் இன்னும் அடுத்தபடியைக் குறித்து நிற்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் Fire Brigades Union (FBU) தீயணைக்கும் படைப் பிரிவு வெட்டுக்களை நிறுத்தும் சட்டபூர்வச் சவால்களின் திறனைப் பற்றி போலித் தோற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் தொழிற்சங்கம், லண்டன் தீ அவசரநிலை திட்டமிடல் ஆணையத்தை (LFEPA) ஊக்குவித்தது; இந்த அமைப்பு, மேயரின் நேரடி அதிகாரத்தின்கீழ் உள்ள அமைப்பாகும். இது பின்னர் ஏழு உள்ளூர்க் குழுக்கள் முடிவெடுக்கும் வழிவகையின் சட்டத்தன்மைக்கு எதிராக அளித்த சவால்களுக்கு ஆதரவு கொடுத்தது. ஜோன்சனின் வழிவகை சட்டபூர்வமானது என உயர்நீதிமன்றம் பின்னர் கொடுத்த தீர்ப்பு, மூடலுக்கு அது பச்சை விளக்கைக் காட்டியது; அதுதான் இப்பொழுது நடைபெறுகிறது. தீயணைக்கும் நிலையங்கள் மூடப்படலும், தீயணைக்கும் இயந்திரங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் இழப்பும் செயல்படுத்தப்பட்டுவரும் பணி குறைப்பின் ஒரு பகுதியாக மட்டுமே உள்ளது. ஐந்து தீயணைக்கும் இயந்திரங்கள் வேறு நிலையங்களில் பயன்படுத்தப்படும். சிறப்பு தீயணைக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 16ல் இருந்து 14 எனக் குறைக்கப்படும். மாற்றுக் குழு ஏற்பாடுகள் சில நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும். நிலைய மற்றும் குழு மேலாளர்கள் எண்ணிக்கை முதலில் 256 எனக் குறைக்கப்பட்டு, இறுதியில் இந்த எண்ணிக்கை 200 என இருக்கும். இஸ்லிங்டன், காம்டென், சௌத்வார்க், டவர் ஹாம்லெட்ஸ், ஹாக்னி, லுவிஷ்ஹாம் மற்றும் கிரீன்விச் குழுக்களுடைய நீதித்துறைப் மறு ஆய்வு விண்ணப்பம், வெட்டுக்கள் குறித்த பெரும் சீற்றத்தையும் கவலையையும் காட்டுகிறது. தீயணைக்கும் படையினர், நகரவைக்குழு அதிகாரிகள் மற்றும் FBU, உள்ளூர்வாசிகள் அனைவரும் தெளிவான நிரூபணத்தை, மூடல்கள் “பொறுப்பற்றவை, தவறு”, “உயிர்களுக்கு ஆபத்துத் தரும்” என்பதற்கு கொடுத்துள்ளனர். 10 மூடப்பட்ட நிலையங்களும் மிகவும் அடர்த்தியாக மக்கள் உடைய சில பகுதிகளில் இருந்தன; இவை லண்டன் பெருநகரத்தில் மிக ஆபத்தான தீ ஏற்படும் இடங்கள் ஆகும்: காம்டெனில் பெல்சைஸ், டவர் ஹாம்லெட்டில் பௌ, இஸ்லிங்டடனில் கிளெர்க்கன்வெல், லுவிஷ்ஹாமில் டௌன்ஹாம், ஹாக்னியில் கிங்ஸ்லாந்து, கென்சிங்டன், செல்சீயில் நைட்பிரிட்ஜ், நியூஹாமில் சில்வர்டௌன், கிரீன்விச்சில் வுல்விச், சௌதார்க் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர். இந்த நிலையங்கள் லண்டனின் மையப்பகுதியின் பணிக்கும் இணைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் வெஸ்ட் எண்டில் ஒரு மேற்கூரை சரிந்து 70பேருக்கும் மேல் காயமுற்ற நிலையில் 8 தீயணைக்கும் நிலையங்கள் எஞ்சின்களை அனுப்பின. மூன்று, வெஸ்ட்மின்ஸ்டர், நைட்பிரிட்ஜ் மற்றும் சௌத்வார்க் ஆகியவை இப்பொழுது மூடப்பட்டுவிட்டன. கிளெர்க்கென்வெல் மற்றும் பெலைஸ் இரண்டும் தலைநகரில் மிகப் பழைய தீ அணைக்கும் நிலையங்கள் ஆகும், கிளெர்க்கென்வெல் 1870களில் இருந்து உள்ளது. சட்டபூர்வ சவால் ஐந்தாவது லண்டன் பாதுகாப்பு திட்டத்திற்கு எதிராக விடப்பட்டது; லண்டன் உட்பகுதியில் பெருகியுள்ள தீ இடர்களுக்கு குழுக்கள் பொறுப்பல்ல என வாதிடப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற ஜோன்சன், திட்டம் சட்டபூர்வமாக ஏற்கப்பட்டது குறித்து தான் “மகிழ்ச்சி அடைந்துள்ளதாக” தெரிவித்தார். “அனைத்துத் தொடர்புடையவர்களும்” தீர்ப்பை ஏற்று, “உறுதியான, பாதுகாப்பை அளிக்க” உழைக்க வேண்டும் என்றார். ஜோன்சன் வாடிக்கையான பாசாங்குத்தன புகழை தான் சமீபத்தில் குறைத்துவிட்ட தீயணைக்கும் படையினருக்கு அளித்தார்; “லண்டனின் தீயணைப்போர் உலகில் சிறந்தவர்கள், ஒப்பிடமுடியாத விடையிறுப்புக் காலத்தில் செயல்படுபவர்கள். ஆனால், நாம் பணியைத் தொடர்ந்து நவீனப்படுத்த வேண்டும், அதையொட்டி அது முற்றிலும் 21ம் நூற்றாண்டு தீயணைக்கும் சவால்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்.” தன்னுடைய உண்மையான கவலைகளைச் சுட்டிக் காட்டிய அவர் பாதுகாப்புத் திட்டம் “2014/15ல் சமச்சீர் வரவு-செலவுத் திட்டம் உறுதிசெய்யப்படும்” என்றார். இதன் பொருள் “எங்கெல்லாம் இயலுமோ, கட்டாயப் பணிநீக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும், ஆனால் லண்டன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது) LFEPA தலைவர் ஜேம்ஸ் கிளெவெர்லி “லண்டன் மக்கள் உலகில் மிக வேகமான விடையிறுப்புக் காலத்தை தொடர்ந்து பெறுவர்” என வலியுறுத்தினார். பாதுகாப்புத் திட்டம் லண்டன் தீயணைக்கும் படை பராமரிக்கும் விடையிறுப்பு நேரமான “முதல் தீயணைக்கும் எஞ்சின் நெருக்கடி நேரத்தில் சராசரி 6 நிமிடத்திற்குள் இருக்கும், இரண்டாம் தீயணைக்கும் எஞ்சின், தேவையானால், எட்டு நிமிடத்திற்குள் இருக்கும்.” “இது நாட்டின் எந்த நெருக்கடிப்பணியின் விடையிறுப்பு இலக்கு நேரத்தில் மிக விரைவானது, சில தீயணைக்கும் படையினரைவிட கிட்டத்தட்ட இருமடங்கு விரைவாகும்” என்று பீற்றிக் கொண்டார். சராசரி விடையிறுப்பு நேரங்கள் இந்த “ஒப்புமையில்லாத” அளவுகளில் மூடல்களுக்குப் பின் தொடர்ந்து இருக்க முடியாது. ஆறு காம்டன் பிரிவில் வசிக்கும் மக்கள் ஒரு நிமிடம் அதிகமாக அல்லது அதையும் விட அதிகமாக தீ எஞ்சின் வருவதற்குக் காத்திருக்க எதிர்பார்க்கப்படுகின்றனர். பெல்சைஸ் பிரிவு அதிக பாதிப்பிற்கு உட்படும், சராசரி காத்திருக்கும் நேரம் கிட்டத்தட்ட இரு மடங்காக 4 நிமிடம் 37 நொடிகளில் இருந்து 7 நிமிடம் 59 நொடி ஆகும். பெல்சைஸ் தீ அணைப்பவர் கீரோன் காஷின், 10 ஆண்டு அனுபவசாலி, மூடலை உயிர்களை இடருக்கு உட்படுத்தும் “முழு இழிவான செயல்” என்றார். முந்தைய வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களின் விளைவினால், விடையிறுப்பு நேரம் ஏற்கனவே இங்கிலாந்திலும் வேல்ஸிலும் கணிசமாக அதிகரித்துவிட்டது. 2008ல் மூன்று நிகழ்வுகளில் ஒன்று ஐந்தி நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் விடையிறுத்தது. 2012 ஐ ஒட்டி இது, ஆறு நிகழ்வுகளில் ஒன்று எனப் போய்விட்டது. முன்னேறுதல் என்றால் லண்டன் தீயணைப்புப்படை 6 நிமிடத்தில் முதல் வாகனத்துடன் எதிர்பார்க்கும் இலக்கை அடையும், இரண்டாவது எட்டு நிமிடத்தில் அடையும் நோக்கை கொண்டுள்ளது. இரண்டாம் வாகனம் தேவை என்பது நிகழ்வு இன்னும் தீவிரமானது என்பதை குறிக்கும். நாடு முழுவதும் தீயணைப்போர் பணிகளில் வெட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். அரசாங்கத் திட்டங்கள்படி அவர்கள் இப்பொழுது, தற்போதைய 55 ஆண்டுகளுக்கு பதிலாக 60 ஆண்டுகள் உழைத்தால்தான் முழு ஓய்வூதியம் பெறமுடியும். 55ல் பணிநீக்கம் செய்யப்படுபவர்கள், தகுதியற்றவர் அல்ல எனக் கருதப்படுபவர், ஓய்வூதியத்தில் பாதியை இழக்கக் கூடும். தீயணைப்போரை முன்னணிப்பங்கில் தொடரவிடுவது அவர்கள் வாழ்வையும் பொதுமக்கள் வாழ்வையும் இடரில் தள்ளும். சமீபத்திய அரசாங்க மறு ஆய்வு, பாதிக்கும் மேலான தீயணைப்போர் 50 முதல் 54 வயது வரை இருப்போர் முன்னணி வேலைகளில் தீ, மீட்புப் பணிகளைச் சந்திக்க இயலாது எனக் காட்டுகிறது. 55, அதற்கு மேல் உள்ளவர்களில் மூன்றில் இரு பகுதியினர் அத்தகைய நிலையில் உள்ளனர். நூற்றுக்கணக்கான தீயணைப்போர் கணிசமான குறைந்த ஓய்வூதியங்களுடன் பணிநீக்கம் செய்யப்படலாம்.
FBU, இதற்கு விடையிறுப்பாக ஐந்து மணிநேர வெளிநடப்பை கிறஸ்துமஸுக்கு முன்பு அழைப்பு விடுத்தது. இதைத்தொடர்ந்து புத்தாண்டுக்கு முன் 6 மணி நேர வெளிநடப்பு மற்றும் 2 மணிநேர வெளிநடப்பு ஜனவரி 3ல் நடைபெற்றது. பணிகள் தடைக்கு உட்படாது என்பதற்கு அவர்கள் அனைத்து முயற்சியையும் எடுத்தனர். எசெக்ஸ் உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (ECFRS) புத்தாண்டுக்கு முன் வேலைநிறுத்தம் செய்த தீயணைப்போருக்கு ஊதியம் தர மறுத்தது. அது அவர்களை ECFRS நிலையங்களில் இருந்து அகற்றவில்லை என்றாலும், அவர்கள் தங்கள் பணிக்காலத்தில் எஞ்சியிருந்த 9 மணி நேரத்திற்கு பணிக்குத் திரும்ப வேண்டும் எனக் கோரப்பட்டனர். 15 பணிநேர மணிக்காலத்தை இட்டுநிரப்ப அவசரகாலக் குழுக்கள் அமைக்கப்பட்டன. உள்ளூர் FBU தான் “ஏமாற்றம் அடைந்துள்ளதாகக்” கூறியது. தீயணைப்போரின் சீற்றம், 2004ல் தொழிற் கட்சியில் இருந்து இணைப்பை வெட்டிக் கொள்ள வகை செய்தது. 2005ல் Matt Wrack, தொழிற்சங்கத் தலைவர்களின் “திறமையற்ற குழு” எனப்படுவதின் உறுப்பினர், போலி இடது சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவாளர், FBU பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் விளைகிறது. இது தொழிற்சங்கத்தின் தன்மையைச் சிறிதளவும் மாற்றவில்லை. கடந்த ஆண்டு FBU வின் பிராந்தியச் செயலர் போல் எம்பெரி, LFEPA ஜோன்சனின் திட்டங்களுக்கு எதிர்ப்போக்கு உடையது என வளர்த்தார். LFEPA “தங்கள் முந்தைய கூட்டத்தில் வெட்டுக்களை நிராகரித்தது சரி, நாம் மீண்டும் அப்படித்தான் செய்வோம் என நினைக்கிறேன். அவர்கள் ஒன்றும் மேயரின் சர்வாதிகாரக் கோரிக்கைக்கு இணங்கும் சட்டபூர்வக் கட்டாயத்தில் இல்லை” என்றார். தொழிற்சங்கம், பெரிய லண்டன் அதிகாரசபை சட்டம் 1999 (Greater Londn Authority Act 1999) மேயருக்கு LFEPA க்கு குறிப்பான இயக்க நெறிகளை வழங்கும், அதையொட்டி அது செயல்படும் அதிகாரத்திற்கு ஒப்புதல் கொடுத்தள்ளது என்பதை நன்கு அறியும். அவர் இப்பொழுது அவ்வாறு செய்துள்ளார். சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) இல் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துணை கருவிகளால் ஒரு முக்கிய பங்கு வகிக்கப்பட்டுள்ளது. சோசலிஸ்ட் வேர்க்கரில் ஓய்வூதிய வேலைநிறுத்தங்கள் தொடர்பான ஒரு கட்டுரை வரவிருக்கும் நிலைய மூடல்களைப் பற்றி குறிப்பு ஏதும் காட்டவில்லை, FBU வின் தடைக்கு உட்பட்ட செயலை “தொடர்ந்த திட வேலைநிறுத்தங்கள்” எனப் பாராட்டியது. சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) தீயணைப்போர் “தொடர்ந்து தங்கள் தொழிற்சங்கத் தலைமைக்கு மேலும் கூடுதலான வேலைநிறுத்தங்கள் தேவை என அழுத்தம் கொடுக்க வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளது. |
|
|