World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Paris Conference  on Syria: US, European allies renew push for regime-change

பாரிசில் சிரியா பற்றிய மாநாடு: அமெரிக்க, ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆட்சி மாற்றத்திற்கு அழுத்தத்தைப் புதுப்பிக்கின்றன

By Alex Lantier 
13 January 2014

Back to screen version

பாரிசில் நடைபெற்ற இரண்டு நாள் சிரிய நண்பர்கள் குழு என்பதின் கூட்டத்திற்கு வருகை தந்த, உயர்மட்ட அமெரிக்க, ஐரோப்பிய இராஜதந்திரிகள், டமாஸ்கஸில் ஆட்சி மாற்றத்திற்கு அழுத்தங்களைப் புதுப்பித்தனர்.

அமெரிக்க அதிகாரிகள், சிரிய இஸ்லாமிய எதிர்த்தரப்பு சக்திகளுக்கு புதிய ஆயுதங்களை அளிக்கத் தயாரிக்கின்றனர் என்னும் தகவல்களுக்கு இடையே பேச்சுக்கள் வந்துள்ளன. சிரியாவுடனும் மற்றும் லெபனான், ஈரானில் அதன் நட்பு அமைப்புக்களுடன் போரிடுவதற்கு, அல் குவேடாவுடன் பிணைப்பு கொண்ட சிரிய எதித்தரப்பிற்கு ஆதரவு தருவதற்குக் கிட்டத்தட்ட போருக்குத் தயாராக இருந்த நான்கு மாதங்களுக்குப் பின்னர், நேட்டோ சக்திகள் மீண்டும் குறுங்குழுவாத மோதல்களை தூண்டியுள்ளனர்; இவை பிராந்தியத்தை கொதிகலன் ஆக்கியுள்ளன.

ஞாயிறு பாரிஸ் கூட்டம், ஜனவரி 22 “இரண்டாம் ஜெனிவா” பேச்சுக்களில் கலந்து கொள்ள அமெரிக்க ஆதரவுடைய சிரிய எதிர்த்தரப்பில் உள்ள பல இஸ்லாமிய போராளிகள் குழுக்களிடம் குவிப்பு காட்டியது. ஜெனிவா பேச்சுக்கள் எதிர்த்தரப்பு போராளிகள் தற்போதைய ஆட்சியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள இடைக்கால அரசாங்கத்திற்காக நடக்கின்றன; அது சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவி விலக வழிசெய்யும்.

சிரிய நண்பர்கள் குழுவில் உள்ள நாடுகள் – அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, துருக்கி, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், கட்டார், எகிப்து மற்றும் ஜோர்டன்—ஞாயிறு கூட்டத்திற்குப் பின் அறிக்கை ஒன்றை வெளியிட்டன. “அசாத்தும், தங்கள் கரங்களில் குருதிக்கறையுள்ள அவருடைய நெருக்கமான கூட்டாளிகளும், சிரியாவில் செய்வதற்கு பங்கு எதையும் கொண்டிருக்கவில்லை” என உறுதிபடுத்தி, அறிக்கை சிரிய எதிர்தரப்பிடம் கூறியது: “நாம் உங்களை விரைவில், எதிர்த்தரப்பு சக்திகள் அரசியல் வழிவகையில் பங்கு பெற ஒரு குழுவை அமைக்க அழைக்கிறோம்.”

அமெரிக்க ஆதரவுடைய ஆட்சி மாற்றத்திற்கு எதிர்த்தரப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட கருவி என்னும் பங்கு, போலி இடது குழுக்களான அமெரிக்காவின் சர்வதேச சோசலிச அமைப்பு, பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியின் மார்க்ஸ் 21 குழு ஆகியவற்றின் பிற்போக்குத்தனப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவை சிரிய எதிர்த்தரப்பை “புரட்சியை”நடத்துகிறது எனப் பாராட்டுகின்றன.

சிரிய தேசிய கூட்டணி (Syrian National Coalition -SNC) உடைய தலைவர் அஹ்மத் ஜர்பாவைச் சந்தித்தபின் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி அறிவித்தார்: “சிரிய எதிர்தரப்பு ஜெனீவாவிற்கு வரும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். இது ஜர்பாவுடன் இன்று ஆக்கபூர்வமான பேச்சு ஆகும். அவரும் மற்றவர்களும் ஜெனிவாவில் இருப்பர் என நம்புகிறேன். இரு திறத்தாரும் ஒன்றாக வருவதை எதிர்பார்க்கிறேன்”

அசாத் ஆட்சியைப் பொறுத்தவரை, முதல் தினத்தில் இருந்தே அவர்கள் பேச்சுக்களுக்குத் தயார் என்று கூறுவதாக நாங்கள் கூறப்படுகிறோம்” என்றார் அவர்.

ஜர்பாவும் ஏகாதிபத்திய ஆதரவுடைய SNC யும் சிரியாவிற்குள் போராடும் இஸ்லாமிய எதிர்த்தரப்புக் குழுக்களுடன் நலிந்த தொடர்பைத்தான் கொண்டுள்ளனர் என்ற நிலையில், ஜர்பா ஜெனிவா பேச்சுக்களுக்கு எதிர்தரப்பை கொண்டுவரமுடியுமா என்பது தெளிவில்லை. பாரிஸில் அல் ஜசீராவின் நிருபர் ஜாக்கி ரோலண்ட் சிரிய எதிர்த்தரப்பு அதிகாரிகள் கெர்ரியின் பேச்சுக்களுக்கு அவர்கள் வருவர் என்னும் கூற்றை ஆதரித்து அறிக்கைகள் ஏதும் கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். “கூட்டணி அந்த அழைப்பிற்கு “சரி என்று” சொல்லத் தயாராக இருக்கிறது என்றார் அவர்.

ஆனால் விவாதங்களின் குரல் குறித்தும் ஆட்சி மாற்றத்திற்கான புதிய குவிப்பு குறித்தும் தான் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஜர்பா குறிப்புக் காட்டியுள்ளார்; “நாம் அனைவரும் பஷர் அல் அசாத் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு சிரியாவில் வருங்காலம் இல்லை என்பதில் உடன்பாடு கொண்டுள்ளோம். அவர் புறப்படுவது தவிர்க்க முடியாதது”

பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரோன்ட் ஃபாபியுஸ் கூறினார்:பயங்கரவாதத்திற்கு பஷர் அல்-அசாத்தின் ஆட்சி தீனி போடுகிறது. அந்த ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”

இத்தகைய ஃபாபியுஸின் அறிக்கைகள் முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் தொடரும் அரசியலளவில் குற்றம் சார்ந்த கொள்கையை மூடி மறைக்கும் இழிந்த முயற்சி ஆகும்; இவை வேண்டுமென்றே சிரியாவில் குறுங்குழுவாத உள்நாட்டுப் போரைத் தூண்டுகின்றன; இதில் நேட்டோ மற்றும் பேர்சிய வளைகுடா முடியாட்சிகள் அல்குவேடாவுடன் பிணைந்த சுன்னி இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களை நம்பியுள்ளன. கடந்த செப்டம்பர் மாத தோல்வியில் இருந்து இச்சக்திகளை மீட்க கிட்டத்தட்ட போருக்கு பின்னர் அமெரிக்கவும் அதன் இணை சதித்திட்ட நாடுகளும் அல்குவேடா பிணைப்புடைய எதிர்தரப்பை மறுகட்டமைக்க முயல்கின்றனர்; அதையொட்டி அதை இன்னும் நேரடியாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் இணைக்க.

வடக்கு நகரங்களான அலெப்போ, இட்லிப், ரக்கா ஆகியவற்றிற்கு அருகே இஸ்லாமிய எதிர்த்தரப்புப் போட்டிப் பிரிவுகளிடையே மோதல் வெடித்துவிட்டது. லண்டன் தளம் உடைய, எதிர்த்தரப்பு ஆதரவு கொண்ட சிரிய Observatory for Human Rights  இப்பூசல் 697 உயிர்களைப் பறித்துவிட்டது, அதில் 100 பேர் குடிமக்கள், 21 பேர் தூக்கிலிடப்பட்டனர் என்று கூறுகிறது.

அமெரிக்க ஆதரவுடைய இஸ்லாமியப் பிரிவுகளுக்கும் ISIS எனப்படும் ஈராக், சிரிய இஸ்லாமிய நாட்டிற்கும் இடையே மோதல் தொடங்கிவிட்டது எனத் தோன்றுகிறது; பிந்தையது வாஷிங்டன் ஆதரவில் இல்லை இப்பொழுது; குறிப்பாக அமெரிக்க ஆதரவுடைய ஆட்சி, பிரதம மந்திரி நூரி அல் மாலிகி, அண்டை ஈராக்கிய நாட்டில் இருப்பதற்கு எதிரான சுன்னி எழுச்சியில் சேர்ந்தபின்.

இப்போர் வாஷிங்டனுக்கு மீண்டும் அதன் நேரடி உதவி சிரிய எதிர்ப்பிற்குக் கொடுப்பதை தொடரத் தளம் கொடுத்துள்ளது. டிசம்பர் 11ல் அமெரிக்க தான் உத்தியோகபூர்வ உதவி ஆயுதங்கள் கொண்ட கப்பல்களை அனுப்புவதை நிறுத்திவிட்டதாகவும், அது CIA மேற்பார்வையில் இரகசிய ஆயுதங்கள் அனுப்பப்பட்டதை கண்காணிக்கப்பட்டது என்றும், இது சுதந்திர சிரிய இராணுவத்திற்கு அமெரிக்க உதவி அளிக்கப்படுகிறது என்பது வெளிப்பட்டதற்குப்பின் ஏற்பட்டது, FSA இஸ்லாமிய முன்னணி எனப்படும் அல்குவேடா பிணைப்புடைய போராளிகள் கூட்டத்திற்கு சென்றுவிட்டது எனவும் கூறப்பட்டது. இப்பொழுது வாஷிங்டன் மீண்டும் FSA விற்கு ஆயுதங்கள் அளிப்பதைத் தொடரத் தயாராகிறது, இஸ்லாமிய முன்னணி ISIS சக்திகள் மீது தாக்குதல்களை நடத்துவதைத் தொடர்ந்து.

பெயரிட விரும்பாத ஒரு மூத்த நிர்வாக நியூ யோர்க் டைம்ஸிடம் வாஷிங்டன் FSA க்கு ஆயுதம் அளிக்கிறது என்றார்; “இஸ்லாமிய முன்னணியின் கைகளில் அது சேர முடியாது என்று 100% கூறுவதற்கு இல்லை.”

அமெரிக்கா தன் நடவடிக்கைகளை அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்பிற்கு அல்குவேடாவில் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும்  முயற்சி என்று அளித்தாலும், இதில் முக்கியமாக ஆதாயம் அடைபவர்கள் ISIS ன் போட்டி அமைப்புக்கள்தான், இஸ்லாமிய முன்னணி மற்றும் அல்நுஸ்ரா முன்னணி. அல்நுஸ்ராவே வெளிப்படையாக அல் குவேடா தலைவர் அய்மன் அல் ஜவஹிரிக்கு விசுவாசத்தை உறுதிபடுத்தியுள்ளார்.

FSA அல் நுஸ்ரா போல் அமெரிக்க உதவி புதுப்பிக்கப்படுவதில் ஆதாயம் அடையாது எனக் குறிப்பிடும் Le Nouvel Observateur பிரான்சின் Institute for the Near East, Beirut ன் Romai Caillet ஐ மேற்கோளிட்டுள்ளது: “அல் நுஸ்ரா இரட்டை வேடம் போடுகிறது. பல தலைமையகங்களைக் கொண்டுள்ளது, பெரும்பாலும் வன்முறை இன்றி. எப்படி போக்கு உள்ளது என்பதை ஒட்டி நிலைப்பாடுகளை கைவிடலாமா வைத்திருக்கலாமா என யோசிக்கிறது. பல போராளிகளும் ஏற்கனவே அல்நுஸ்ராவிற்கு விசுவாசத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.”

Romai Caillet  மேலும் சேர்த்துக்கொண்டார், ISIS உண்மையில் சிரியாவில் மறைந்து விட்டது என்றால், நாட்டில் கொல்லப்படாத, கைப்பற்றப்படாத, நாட்டில் இருந்து நீங்காத அனைத்து  வெளிநாட்டுப் போராளிகளும் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற அல்நுஸ்ராவிற்குச் செல்லுவர், ஏனெனில் பலர் தங்கள் மனைவியர், குழந்தைகளுடன் வந்துள்ளனர்.”

அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில் ஆட்சி மாற்றத்திற்காக கொண்டுவந்துள்ள மூலோபாயம், சுன்னி இஸ்லாமிய சக்திகளுடன் உடன்பாடுகளை அதிகரித்துக் கொள்ள—2011ல் எகிப்திய சர்வாதிகாரம், ஹொஸ்னி முபாரக் தொழிலாள வர்க்கத்தால் அகற்றப்பட்டதை அடுத்து—பிராந்தியத்தைச் சீரழித்துள்ளது. சிரியாவை சிதைத்தபின், இப்பொழுது அது முழு மத்திய கிழக்கையும் போரில் ஈடுபடுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

சிரிய ஆட்சிக்கும், அமெரிக்கா ஆதரவுடைய எதிர்த்தரப்பிற்கும் இடையே மோதல் சிரியாவையும் பிராந்தியத்தையும்  பேரழிவிற்குத் தள்ளிவிட்டது; 2.3 மில்லியன் மக்கள் சிரியாவிற்கு வெளியே உள்ள அகதிகள் முகாமிற்குச் சென்றுள்ளனர்; உள்நாட்டில் கிட்டத்தட்ட 6.5 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். மொத்தத்தில் இது சிரியாவின் மக்கட்தொகையான 22.4 மில்லியனில் மூன்றில் ஒரு பகுதி ஆகும்.

சிரியாவிற்குள் சமூகப் பேரழிவு பரவுதல் குறித்துப் பேசிய ஐ.நா. மனிதாபிமான விவகாரங்கள் தலைவர் சீமாட்டி வலேரி அமோஸ் BBC இடம் கூறினார்: “நோய்வாய்ப்பட்டவர்கள், காயமுற்றவர்கள் வெளியேறமுடியவில்லை, அவர்களுக்கு நாம் உணவும் அளிக்க முடியவில்லை. அவர்கள் பட்டினி விளிம்பில் உள்ளதாகத் தகவல்கள் உள்ளன. இதில் யார்மோக் பாலஸ்தீனிய அகதி முகாமும், டமாஸ்கஸின் மையத்திற்கு நெருக்கமாக இருப்பதும் அடங்கும்.”

ஈராக்கிலும் போர் விரிவாகிறது; குறிப்பாக சுன்னிப் பெரும்பான்மை பகுதிகளான மேற்கு ஈராக், சிரிய எல்லைக்கு அருகே; அமெரிக்க அதிகாரிகள் நாட்டில் மீண்டும் படையெடுப்பிற்கு கருதுகின்றனர்; இதுவோ 2003 படையெடுப்பாலேயே பேரழிவிற்கு உட்பட்டுவிட்டது. இப்பொழுதுள்ள போர் USA Today கூறுவது போல், “மத்திய கிழக்கில் பெரும் போருக்கு வாய்ப்பை அதிகரிக்க உதவிட்டது, கணக்கிலடங்கா இறப்புக்கள் வரும், உலக எண்ணெய் பங்குகள் சேதம் அடையும், இறுதியாக அமெரிக்க இராணுவத் தலையீடு வரும்.”

நேற்று தொடர்ந்த கார்க்குண்டுகளால் மற்றும் பாக்தாத், துஸ் குர்மாடா என்று வடக்கு ஈராக்கின் சலாஹிதீன் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடுகளில் 22 பேர் கொல்லப்பட்டனர், 80க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.

ஈராக்கிய ஆட்சி, பல்லுஜாவிற்கு வெளியே அதன் படைகளைப் பெரிய அளவில் கொண்டுள்ளது; இங்கு சுன்னி இஸ்லாமியச் சக்திகள் நகரத்தை எடுத்துக் கொண்டுவிட்டனர், மாலிகி அரசாங்கத்திற்கு எதிராக வைத்துள்ளனர். அவருக்குத்தான் ஒபாமா நிர்வாகம் இராணுவக் கருவி உதவியை விரைந்து கொடுக்கிறது.

முன்னாள் அமெரிக்க இராணுவ உளவுத்துறை அதிகாரி ஜெசிகா லெவிஸ் AFP இடம் கூறினார்: “அமெரிக்க மரைன்களே 2004ல் பல்லுஜாவை தாக்குவதில் இடர் உற்றனர். ஈராக்கிய இராணுவம் ஒப்பிடத்தக்க போர் என்னும் முறையை நீடிக்கத் தயாராக இல்லை. ஒரு தாக்குதலில் ஈராக்கிய பாதுகாப்புப் படைகள் பீரங்கியை அதிகம் பயன்படுத்தியும் அச்சுறுத்தலை அடக்க ஆயுதங்களைப் பயன்படுத்தியும் பல்லுஜாவைத் தரைமட்டம் ஆக்கலாம்.