தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The catastrophe unleashed by US imperialism in the Middle East மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பேரழிவு
Bill Van
Auken Use this version to print| Send feedback பாக்தாத் உடனான படைகளை நிலைநிறுத்தும் உடன்படிக்கையைப் (status of forces agreement) தக்க வைப்பதில் தோல்வி அடைந்த பின்னர் ஈராக்கில் இருந்து கடைசி அமெரிக்க போர் துருப்புகளைத் திரும்ப பெற நிர்பந்திக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 2011இல், ஜனாதிபதி பராக் ஒபாமா "யுத்தத்தின் எழுச்சிக்காலம் முடிவடைகிறது" என்ற உத்தரவாதத்தை மீண்டும் மீண்டும் அளித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு சற்று அதிமான காலத்திற்குப் பின்னர், அந்த ஒட்டுமொத்த பிராந்தியமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் காரணமாக, ஓர் ஆழ்ந்த அச்சுறுத்தலாக பிராந்தியம்-தழுவிய ஒரு போர் எழக்கூடிய சாத்தியக்கூறுடன், வன்முறையால் சூழப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் தற்போது சிரியாவில் ஒரு அரசியல் தீர்வை கொண்டுவருவதற்காக ரஷ்யாவுடனும், மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மீது ஓர் உடன்படிக்கையை எட்டுவதை மற்றும் பொருளாதார தடைகளைக் குறைந்தபட்சம் பகுதியாக நீக்குவதை அடிப்படையாக கொண்ட ஒரு சமரசத்தின் மீதும் ஈரானுடனும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மக்களால் பெரிதும் எதிர்க்கப்பட்ட நிலையில், சிரியாவில் ஒரு நேரடி தலையீடு செய்வதன் விளிம்பிலிருந்து வாஷிங்டன் பின்வாங்கிய பின்னர் கடந்த செப்டம்பரில் இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்பட்டன. எவ்வாறிருந்த போதினும், சிரியாவின் மீது குண்டுவீசுவதில் இருந்து பேச்சுவார்த்தைக்கு திரும்பிய மாற்றமானது, அமைதியான மற்றும் இராஜாங்க முறைக்கு திரும்புவதற்கு அப்பாற்பட்டு, அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுத்தலின்" பாகமாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக முக்கிய உலகளாவிய எதிரியான சீனாவுடன் மோதலைத் தொடர்வதற்கு ஈரானுடனான மோதலைத் தணிப்பது இன்னும் சாதகமான நிலைமைகளை உண்டாக்கும் என்ற மூலோபாய கருத்துருவின் அடித்தளத்தில் எழுந்திருந்தது. இருந்தபோதினும் வாஷிங்டன் அதன் முன்னுரிமையை கவனமாக நடைமுறைப்படுத்த முடியாமல் உள்ளது. மத்திய கிழக்கில் அதன் சொந்த உருவாக்கமான கட்டவிழ்ந்துவரும் ஒரு பேரழிவிலிருந்து அது தன்னைத்தானே விடுவித்துக் கொள்வதில் மிகவும் சிரமத்தைக் கண்டு வருகிறது. சிரியாவில் சுமார் 130,000 மக்களின் உயிரை பறித்துள்ள மற்றும் 9 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேற நிர்பந்தித்த, ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க ஆதரவிலான யுத்தம், அதிகளவில் சிரிய எல்லைகளைக் கடந்து லெபனானுக்குள்ளும் பரவி உள்ளது. அங்கே படுகொலைகளும், தற்கொலைப் படை தாக்குதல்களும் மற்றும் ஆயுதமேந்திய மோதல்களும் அன்றாட நிகழ்வுகளாக மாறி உள்ளன, அதற்கடுத்து ஈராக்கின் பல்லூஜா மற்றும் ரமாதி ஆகிய மேற்கத்திய நகரங்களில் ஈராக்கிய இராணுவம் மற்றும் உள்ளூர் ஆயுதக்குளுக்களுக்கு இடையிலான ஓர் ஆயுதமேந்திய மோதல் இருந்து வருகிறது.
அங்கே இல்லாத பேரழிவு ஆயுதங்கள் குறித்த பொய்களின் அடிப்படையில் ஊக்குவிக்கப்பட்ட ஈராக்கிய யுத்தம், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் ஒரு திட்டமிட்ட சூறையாடும் நடவடிக்கையாகும். அது மூலோபாயரீதியில் முக்கியத்துவம் பெற்ற மற்றும் எண்ணெய் வளம்மிக்க அந்த பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை மற்றும் ஒட்டுமொத்த உலகத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அப்பட்டமான சக்தியை ஒரு "அதிர்ச்சியும் அச்சுறுத்தலுடன்" எடுத்துக்காட்டும் நோக்கத்தை கொண்டிருந்தது. அந்த நிகழ்முறையில், அமெரிக்க இராணுவம் ஒரு பலவீனமான, ஏற்கனவே யுத்தத்தால் சிதைக்கப்பட்ட மற்றும் பொருளாதார தடைகளால் பாழாக்கப்பட்ட ஒரு பலமற்ற சமூகத்தை துண்டாடுவதில் மட்டும் வெற்றி பெறவில்லை, மாறாக ஒட்டுமொத்த அப்பிராந்திய அரசு அமைப்புமுறைக்கும் குழிபறிப்பதிலும் வெற்றி பெற்றது. ஈராக்கின் அண்ணளவிலான ஒன்பது ஆண்டுகால யுத்தத்தில் பாரிய உயிரிழப்புகளுக்கு (ஒரு சமீபத்திய அமெரிக்க-கனடிய ஆய்வில் 500,000க்கும் மேலானவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது) மட்டும் வாஷிங்டன் பொறுப்பல்ல, மாறாக மத்திய கிழக்கில் தொடர்ந்து மோதல்கள் கட்டவிழ்ந்து வருகின்ற நிலையில் ஏற்படவிருக்கின்ற இன்னும் மில்லியன் கணக்கிலான மரணங்களுக்கும் அது பொறுப்பாகும். அப்பிராந்தியத்தில் ஒரு புதிய பிரிவினையின் இரத்தத்திற்கான விலை, சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய பிரிவினையின் இழப்புகளை மங்கச்செய்துவிடக்கூடும். ஈராக்கிலேயே, இத்தகைய ஆபத்துக்களைத் தெளிவாக பார்க்க முடிகிறது. சுன்னி மக்கள் அதிகம் உள்ள அன்பார் மாகாணத்திற்கு எதிராக ஷியைட் மேலாதிக்கம் கொண்ட பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கி அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பிரிவினை அடிப்படையிலான ஒடுக்குமுறையால் சமீபத்திய சண்டை தூண்டிவிடப்பட்டது. பிரபல சுன்னி அரசியல்வாதியின் வன்மையான கைது நடவடிக்கை மற்றும் ரமாதியில் ஓராண்டு பழமையான சுன்னி போராட்ட கூடாரத்தின் மீது இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறை ஆகியவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல்லூஜா மற்றும் ரமாதியின் கட்டுப்பாட்டை சுன்னி போராளிகள் கைப்பற்ற இட்டு சென்றது. போராளிகளுக்கும் ஈராக்கிய இராணுவத்திற்கும் இடையிலான ஆயுதமேந்திய மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த சண்டையில் ஈடுபட்டிருப்பவர்களில் அல் கொய்தாவோடு இணைப்பு பெற்ற ISIS அமைப்பும் (ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அமைப்பு) உள்ளது. அது எல்லை கடந்து சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கத்திய ஆதரவிலான மறைமுக போரில் ஈடுபட்டுள்ள மிக பிரபல பிரிவுகளில் ஒன்றாகும். பல ஊடகங்கள் குறிப்பிடுவதைப் போல, அந்த பிரிவினைவாத மோதல் சுன்னி மற்றும் ஷியாவிற்கு இடையில் பண்டைய காலந்தொட்டு வழிவழியாக வரும் ஒரு இரத்த மோதல் அல்ல. அது பிரித்தாளும் மூலோபாயத்தின் பாகமாக பிரிவினைவாத பிரச்சினையைச் சுரண்ட முயன்ற அமெரிக்க தலையீட்டால் தூண்டிவிடப்பட்டு எரியூட்டப்பட்டது. இந்த குற்றவியல் கொள்கை 2007-2008இன் அமெரிக்க இராணுவ "எழுச்சியின்" போர்வையின் கீழ் நடத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் அதன் வெளிப்பாட்டைக் கண்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் மலிக்கி அரசாங்கம் பதவிக்கு கொண்டு வரப்பட்டது, அதேவேளையில் ஈராக்கிய இராணுவம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் கட்டாயமாக சேர்க்கப்பட்ட அதன் துருப்புகளைக் கொண்டது என்பதில் இருந்து பல்வேறு ஷியைட் கட்சிகளின் பிரிவினைவாத போராளிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஓர் ஆயுதமேந்திய படையாக மாற்றப்பட்டது. அல்கொய்தாவைப் பொறுத்த வரையில், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முன்னர் வரை அது ஈராக்கில் இருந்திருக்கவில்லை. இப்போது அது சிரியாவின் அமெரிக்க பின்புலத்திலான யுத்தத்தால் பரந்தளவில் பலப்படுத்தி கொண்டுள்ளதோடு, பணமும் ஆயுதங்களும் வாஷிங்டனால் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளால் "கிளர்ச்சியாளர்கள்" என்றழைக்கப்படுபவர்களுக்கு வெள்ளமென பாய்ச்சப்பட்டுள்ளது. அன்பாரில் ஷியைட் அரசாங்கத்திற்கும் மற்றும் சுன்னியினருக்கும் இடையில் மோதல் கட்டவிழ்ந்திருக்கின்ற நிலையில், வடக்கு ஈராக்கில் உள்ள ஏறக்குறைய தன்னாட்சி பெற்ற குர்திஷ் பிராந்திய அரசாங்கத்திற்கும் (KRG) மற்றும் பாக்தாத் ஆட்சிக்கும் இடையே, KRGஇன் ஒருதலைபட்சமான எண்ணெய் விற்பனை ஒரு பன்னாட்டு துருக்கிய எண்ணெய் குழாய் வழியாக அன்னிய நாட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டுமென்பதன் மீது ஒரு புதிய இரத்தந்தோய்ந்த மோதல் வெடிக்கக்கூடிய சாத்தியக்கூறை பெற்றுள்ளது. மலிக்கி அரசாங்கத்தால் சட்டவிரோதமானதாக கூறப்படும் அந்த நகர்வு, ஒரேயடியாக KRG'இன் சுதந்திரத்திற்கும் மற்றும் ஒரு பிரிவினைக்கும் ஒருபடி நெருக்கமாக எடுத்து செல்வதாக பார்க்கப்படுகிறது. அது எண்ணெய் வளம்மிக்க கிர்குக் நகரின் மீது ஒரு கடுமையான போராட்டத்தைக் கொண்டு வரக்கூடும். சுழன்றுவரும் நெருக்கடிக்கு வாஷிங்டனின் விடையிறுப்பானது நெருப்பில் எண்ணெய் வார்ப்பதைப் போல அதன் ஆத்திரமூட்டும் தன்மை மூச்சடைக்க வைக்கும் விதத்தில் உள்ளது. ஈராக்கில் அல் கொய்தாவுடன் இணைப்புள்ள பிரிவுகளை பூண்டோடு அழிப்பதற்காக என்று கூறி ஒபாமா நிர்வாகம் ஹெல்பயர் ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை மலிக்கி ஆட்சிக்கு துரிதமாக அனுப்பி வைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ள ஏறத்தாழ அதே சமயத்தில், சிரியாவில் அல் கொய்தாவின் மிகவும் "மிதமான" பிரிவு என்று ஊக்குவிக்கப்பட்டு வருபவை உட்பட அந்த "கிளர்ச்சியாளர்களுக்கான" நேரடி உதவியைப் புதுப்பிக்கும் முடிவையும் அறிவித்துள்ளது. இந்த இரண்டாவது முடிவைத் தொடர்ந்து இத்தகைய பிரிவுகளுக்கும் ISIS'க்கும் இடையே பல மோதல்கள் தொடர்கின்றன. அமெரிக்க கொள்கையின் இந்த இரக்கமற்ற மற்றும் குற்றஞ்சார்ந்த குணாம்சம் திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கத்தில் தொகுக்கப்பட்டது. அது ஒப்புக் கொண்டதாவது: “1980களில் நடந்ததைப் போல அமெரிக்காவின் உதவி மீண்டும் அதையே திருப்பி தாக்கக்கூடிய ஆபத்து அங்கே உள்ளது. அப்போது சோவியத்'களுக்கு எதிராக சண்டையிட்டு வந்த முஜாஹீதீன் போராளிகளுக்கு வழங்கப்பட்ட ஆதரவு பல ஆண்டுகளுக்குப் பின்னர் பயங்கரவாத இயக்கங்களுக்கான விளைநிலங்களை உருவாக்க உதவின. ஆனால் இந்த அபாயம் அதைவிட மதிப்புடையதாக இருக்கலாம்.” முதல் உலக யுத்தத்தின் 100வது நினைவாண்டு நெருங்கி வருகின்ற நிலையில், பழைய காலனித்துவ அதிகாரங்களான பிரான்ஸ் மற்றும் பிரிட்டனால் 1916இன் ஸ்கெஸ்-பிகாட் உடன்படிக்கையின் (Sykes-Picot agreement) மூலமாக அப்பிராந்தியத்தில் பிளவின் மீது கட்டப்பட்ட அரசு அமைப்புமுறை, புதிய ஏகாதிபத்திய தலையீடுகளால் மற்றும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி அரேபிய உலகின் ஒடுக்கப்பட்ட நாடுகளின் மீது ஏற்படுத்தி உள்ள தாக்கங்களால் சிதைக்கப்பட்டு வருகிறதென்பது மிகமிக தெளிவாகி வருகிறது. இந்த நிகழ்வு ஒரு பிரிவினைவாத இரத்த ஆற்றில் அப்பிராந்தியத்தை மூழ்கடிக்க அச்சுறுத்தி வருவதோடு, ஒரு புதிய உலகளாவிய மோதலை பற்றவைக்கவும் உதவிசெய்கிறது. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீனமான பலத்தை ஒன்றுதிரட்டுவதன் மூலமாக மட்டுமே பதிலளிக்க முடியும். மத்திய கிழக்கில் உள்ள தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், ஐக்கிய மத்திய கிழக்கு சோசலிச அரசுகளுக்கான ஒரு பொதுவான போராட்டத்தில் அனைத்து தேசிய மற்றும் பிரிவினைவாத எல்லைகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடும் ஒரு புதிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். யுத்தம் மற்றும் இராணுவவாதத்தின் ஆதாரத்தை, அதாவது முதலாளித்துவ இலாப அமைப்புமுறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அர்பணிக்கப்பட்ட ஒரு பாரிய சோசலிச யுத்த-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்களின் முன்னால் உள்ள பணியாக உள்ளது. |
|
|