World Socialist Web Site www.wsws.org |
Iran and US finalize interim nuclear deal ஈரானும் அமெரிக்காவும் இடைக்கால அணுசக்தி உடன்பாட்டை இறுதி செய்கின்றனBy Keith
Jones நேற்று வாஷிங்டனும் தெஹ்ரானும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜேர்மனியுடன் இணைந்து ஏழு வாரங்ளுக்கு முன் அடையப்பட்ட ஈரானின் அணுசக்தி குறித்த இடைக்கால உடன்பாடு ஜனவரி 20ல் இருந்து செயற்பாட்டிற்கு வருமென அறிவித்தன. நவம்பர் 24ல் முடிவுற்ற ஆறு மாத கால இடைக்கால உடன்பாட்டின்படி ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளுக்கு – பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி—பெரும் சலுகைகளைக் கொடுத்துள்ளது; அதன் சிவிலிய அணு சக்தி திட்டத்தை பின் வாங்குதல், சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் மிக ஆழ்ந்த ஆய்வு முறைக்குப் பணிதல் என. இதற்கு ஈடாக மேலைச் சக்திகள் தெஹ்ரானுக்கு ஒபாமா நிர்வாகம் பெயரிட்டுள்ள ஒரு “நிதானமான”, “மாற்றத்தக்க” பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளதை கொடுத்துள்ளன; இந்த தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கியவை ஆகும். ஆயினும்கூட, இடைக்கால உடன்பாட்டை செயல்படுத்தும் பேச்சுக்கள் நீடித்தவை என நிரூபணம் ஆயின; அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தெஹ்ரானிடம் இருந்து கூடுதல் சலுகைகளை பறிக்க முற்பட்டன. ஜெனிவாவில் பல சுற்று “தொழில்நுட்ப” பேச்சுக்கள் நடைபெற்றன; மிகச் சமீபத்தியவை கடந்த வியாழன், வெள்ளி அன்று நடைபெற்றன. ஈரானின் துணை வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி கருத்துப்படி, அவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கையின் துணைத்த தலைவர் ஹெல்கா ஷ்மித்தும் இன்னும் நேற்றைய காலை இருந்த வேறுபாடுகளைத் தீர்க்க உழைத்திருந்தனர். இடைக்கால உடன்பாடு செயல்படுத்துவதில் உள்ள பூசல் பிரச்சினைகள் பற்றி பகிரங்கமாக அதிகம் கூறப்படவில்லை. ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளும் ஈரானின் சிறந்த யூரேனிய செறிவிற்கான மைய விலக்குகள் வளர்ப்புத் திறனைக் குறைக்க முற்படுகின்றன; இடைக்கால உடன்பாடு அத்தகைய ஆய்வை ஈரான் நடத்தும் உரிமை குறித்த வரம்பு ஏதும் வைக்கவில்லை என்றாலும். பூசலுக்கான மற்றொரு கருத்து சர்வதேச அணுசக்தி நிறுவன (IAEA) ஆய்வாளர்கள் எத்தனை முறை ஈரானிய வசதிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவர் என்பதாகும். BBC ஜனவரி 20 ஐ ஒட்டி 20 ஆய்வாளர்கள் அன்றாடம் போர்டோ (Fordo) யுரேனிய செறிவு வசதியை அணுக இயலும், அவர்கள் மாதாந்திர ஆய்வுகளை செயலில் இல்லாத அரக் கன நீர் உலையில் நடத்த அனுமதிக்கப்படுவர். மூன்றாம் பெரிய தடுப்பு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் நிறைய “பாதுகாப்பு முறைகள்” தடைகள் “நிவாரணத்துள்” கட்டமைக்கப்ப வேண்டும், அதையொட்டி இருமடங்காகவும், மும்மடங்காகவும் ஈரான் உலக வங்கி முறையில் இருந்து தேக்க நிலையில் தொடரும், அதன் எண்ணெய் ஏற்றுமதிகள் 2011 அளவுகளில் பாதியில்தான் இருக்கும் என்பது உறுதியாகும். இடைக்கால உடன்பாட்டின்கீழ், ஈரான் தடைகள் நிவாரணத்தில் $7 பில்லியனுக்கு சற்று அதிகமாகப்பெறும். இது ஈரானுக்கு, எண்ணெய் ஏற்றுமதிகளில் ஆறு வாரங்களுக்கு ஆகும் செலவு குறித்த தடைகளுக்கு சமம் ஆகும். மேலும் இந்த $7 பில்லியனில் $4.2 பில்லியன் ஈரானின் சொந்தப் பணம் ஆகும்; சீனா, இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகள் ஈரானுக்கு எண்ணெய் வழங்கலுக்குப் பணம் கொடுப்பதில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன; ஆனால் எண்ணெய் அவற்றிற்கு ஏற்கவே வழங்கப்பட்டுவிட்டது. (உண்மையில் இது $70 பில்லியன் ஈரானிய நிதிகள் தற்பொழுது வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டிருப்பதில் சிறிய பகுதிதான் என்பது குறிப்பிடப்பட வேண்டும்.) செயற்பாட்டு உடன்பாடு பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. ஆனால் $4.2 பில்லியன் எட்டு தவணைகளில் கொடுக்கப்படும் என்றும், பல பணம் கொடுத்தல்கள் வெளிப்படையாக ஈரான் அதன் 20% செறிவு உடைய யுரேனியத்தை உடன்பாடு முடிவதற்குள் முற்றிலும் அகற்றுவது என்னும் இலக்கை நிரப்புவதை ஒட்டி இருக்கும். கடைசிப்பணம் கொடுத்தல், “ஈரானுக்கு அது உடன்பாட்டின் கடைசித் தினம் (ஜூலை 20) வரை கொடுக்கப்பட மாட்டாது” என்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஞாயிறன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இடைக்கால உடன்பாடு இறுதி செய்யப்பட்டுள்ளதை வரவேற்றார். “ஈரான் முதல் தடவையாக அதிக அளவு செறிவு செய்யப்பட்ட யுரேனிய சேமிப்பை அகற்றுகிறது; அத்தகைய செறிவை இயலச்செய்யும் உள்கட்டுமானம் சிலவற்றையும் அகற்றுகிறது” என்றார் அவர். மிகவும் குறைந்த வரம்புடைய, தடைகள் நிவாரணத்திற்கு வந்துள்ள நிபந்தனைகளின் தன்மையை ஒபாமா வலியுறுத்தினார்; இவை எந்த நேரத்திலும் மாற்றப்பட முடியும், வாஷிங்டன் தெஹ்ரான் இடைக்கால உடன்பாட்டின் விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கருதினால் என்றார் அவர். “பரந்த தடைகளை கடுமையுடன் தொடர்ந்து நாம் செயல்படுத்துவோம். ஈரான் அதன் உறுதிகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், நம் தடைகளை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுப்போம்” என்றார் ஜனாதிபதி. அதே நேரத்தில் ஒபாமா, ஈரான் மீது இன்னும் கடுமையான தடைகள் என்னும் அச்சுறுத்தலைக் கொண்ட சட்டத்தை இயற்றும் அமெரிக்க காங்கிரசின் முயற்சிக்கு எதிராகப் பேசினார். அத்தகைய நடவடிக்கை இடைக்கால உடன்படிக்கையை வீணடித்துவிடும் என்று எச்சரித்த அவர், உடன்பாடு செயலில் இருக்கையில் ஈரான் அமெரிக்கா கருத்துப்படி அதன்படி நடக்கிறது என்றுள்ள வரை கூடுதல் தடைகளைச் சுமத்தும் எந்தச் சட்டத்தையும் தடுப்பதிகாரம் செலுத்தி நிறுத்திவிடுவதாகவும் உறுதி அளித்தார். செய்தி ஊடகத் தகவல்கள்படி, 59 செனட்டர்கள், ஜனநாயக செனட் வெளியுறவுக் குழுத் தலைவர் பாப் மெனென்டெஸ் உட்பட மற்றும் 14 பிற ஜனநாயக செனட்டர்கள், ஈரானை இன்னும் கடுமையான தடைகள் மூலம் தாக்கும் சட்டவரைவிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர்; இதில் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகள் அனைத்தையும் 2015 ஒட்டிப் படிப்படியாக அகற்றுவதும் அடங்கும்; இடைக்கால உடன்பாடு முடிந்த மறுநாள். (இடைக்கால உடன்பாட்டின் கீழ், அது பரஸ்பர உடன்பாட்டின்படி இன்னும் கூடுதல் ஆறு மாதக்காலத்திற்கு விரிவாக்கப்பட முடியும்.) செனட் சட்ட வரைவு, எந்த இறுதி உடன்பாடும் ஈரானின் யுரேனிய அடர்த்தித் திறனை அகற்ற வேண்டும் என்று கூறுகிறது—இக்கோரிக்கையை தெஹ்ரான் தான் ஒருபொழுதும் ஏற்காது என வலியுறுத்தி வந்துள்ளது. ஈரான்மீது கூடுதல் தடைகளைச் சுமத்தும் முயற்சிக்கு அமெரிக்க அரசியல், தேசியப்பாதுகாப்பு உயரடுக்கின் முக்கிய பிரிவு ஊக்கம் அளிக்கிறது, இஸ்ரேலிய அரசாங்கமும் ஊக்கம் அளிக்கிறது. இப்பொழுது தன் வனப்புரையில் சற்று நிதானமாக இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தெனியாகு இருந்தாலும், அவர் நவம்பர் 24 உடன்பாட்டை உரத்துக் கண்டித்து, இஸ்ரேல் அதற்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்திருந்தார்; அதாவது ஈரான்மீது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை அச்சுறுத்தலை கொடுத்தார். செனட் சட்டவரைவிற்கு விடையிறுக்கையில், ஈரானிய பாராளுமன்றத்தில் 290ல் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈரானின் யுரேனிய அடர்த்தி 60%கு அதிகப்படுத்தும் மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர். அமெரிக்காவுடன் சமரசம் வேண்டும் என்பதற்கு வலுவான ஆதரவாளரான, ஈரானின் வெளியுறவு மந்திரி, மசோதா சட்டமாக இயற்றப்பட்டால் அரசாங்கம் கீழ்ப்படிவதை தவிர வேறு தேர்வு கிடையாது என்று எச்சரித்துள்ளார். 6 மாத கால இடைக்கால உடன்பாடு “கடிகாரத்தை பின் நோக்கி வைக்கும்” என்றும், நேரடி அமெரிக்க ஈரானிய மோதலைத் தாமதப்படுத்தும் என்றும் அதையொட்டி பேச்சுக்கள் ஈரானின் அணுத்திட்டம் குறித்த “இறுதித் தீர்மானத்தை” இயற்ற நடத்தப்படும் என்றும் தெரிகிறது. ஈரானிய அரசாங்கத்தின் கருத்துப்படி, “இறுதி உடன்பாடு” பேச்சுக்கள் அடுத்த மாதம் தொடங்கும். வாஷிங்டன் சந்தேகத்திற்கு இடமின்றி, அவற்றை ஈரான்மீது அழுத்தத்தை அதிகரிக்க இடைக்கால உடன்பாட்டிற்கு பயன்படுத்தியது போல் மீண்டும் பயன்படுத்தும். நேற்றைய தங்கள் கருத்துக்களில் ஜனாதிபதி ஒபாமாவும், வெளிவிவகாரச் செயலர் கெர்ரியும் வரவிருக்கும் பேச்சுக்கள், இடைக்கால உடன்பாட்டை தோற்றுவித்த பேச்சுக்களைவிடக் கடினமாக இருக்கும் என்றனர். கடந்த மாதம் ஓர் உரையில் ஒபாமா ஈரானிய அமெரிக்க சமரசத்திற்கான வாய்ப்புக்கள் “50-50” க்கும் மேல் இல்லை என்றார். செப்டம்பர் தொடக்கத்தில் கடைசி நேரத்தில், அமெரிக்கா ஈரானின் நெருக்கமான நட்பு நாடான சிரியாவைத் தாக்குவதில் இருந்து பின்வாங்கியது; தெஹ்ரானுடன் ஒரு “இராஜதந்திர” திருப்பத்தை செய்தது. அப்பொழுது முதல் ஒபாமாவும் கெர்ரியும் பலமுறை, மோதல் மற்றும் போர் என்னும் பாதையில் செல்வதற்கு முன்னர், தெஹ்ரானை பணிய வைக்க மிரட்ட முடியுமா என ஆராய்வது வாஷிங்டனுடைய நலன்களுக்கு பொருந்தும் என்று கூறியுள்ளனர். இந்த மாற்றத்திற்குப் பின்னே, ஒபாமா நிர்வாகத்தின் கவலையான, அமெரிக்காவுடைய மத்திய கிழக்கு ஆக்கிரமிப்பு அதன் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” என்பதை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதும் உள்ளது; அதாவது சீனாவைத் தனிமைப்படுத்தி இராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் அதன் முயற்சிகளுக்கு. வாஷிங்டன், பலமுறையும் அமெரிக்காவுடன் சமரசத்திற்கு ஆர்வம் காட்டும் ஈரானின் முதலாளித்துவ ஆட்சியாளர்களை மத்திய கிழக்கில் அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு உதவப் பயன்படுத்தப்பட முடியும் என்று கணக்கிட்டுள்ளது. பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தியுள்ள பொருளாதாரப் பேரழிவு தொழிலாள வர்க்க எதிர்ப்பு வெடிப்பை ஏற்படுத்தும் என்னும் அச்சம் கொண்ட இஸ்லாமியக் குடியரசுத் தலைவர்கள், அமெரிக்காவிற்கு பிராந்தியத்தில் அதன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த உதவ முன்வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து லெபனான் வரை, மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள் ஈரானின் எரிசக்தி வளங்களை அணுகவும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரை, ஈரானுடனான அணுசக்திப்பூசல் என்பது, அதை தனிமைப்படுத்தி மிரட்ட மற்றும் ஆட்சி மாற்றத்திற்காக ஆக்கிரோஷ போரைத் தொடக்கும் அதன் தயாரிப்புக்களுக்கு அரசியல் மறைப்பை அளிக்க ஒரு போலிக்காரணமாகத்தான் எப்பொழுதும் உள்ளது. “பேரழிவு ஆயுதங்கள்” என்னும் போலிக் குற்றச்சாட்டின்கீழ் இரண்டாம் போருக்கான தளம் தயாரிக்கப்படும் நோக்கத்துடன் அணுசக்தி பிரச்சினை முதலில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகத்தால் 2003ல் ஈராக் மீது அமெரிக்க படையெடுத்த உடன் அறிவிக்கப்பட்டது. பின்னர் நடந்த ஈராக்கிய எழுச்சி வாஷங்டனை தாமதப்படுத்தியது. ஆனால் அமெரிக்க அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டும் பிரச்சாரங்கள் தொடர்ந்தன. அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகள், 2011ல் இருந்து ஈரான் மீது திணித்த பொருளாதாரத் தடைகள் மற்றும் ஜனவரி 20ல் இடைக்கால உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தாலும் இன்னும் தொடர்பவை—போர் இல்லாத நேரத்தில் ஒரு நாட்டின்மீது சுமத்தப்படும் கடுமையான தடைகளுள் ஒன்றாகும். |
|