தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Surveys of British youth find growing anger and despair பிரித்தானிய இளம் தலைமுறையினர் பற்றிய மதிப்பீடுகள் அதிகரிக்கும் சீற்றத்தையும், அதிருப்தியையும் கண்டுபிடித்துள்ளன
By Julie Hyland Use this version to print| Send feedback பிரித்தானியாவில் பத்து இளைஞர்களில் ஒருவர் “தான் வாழ்வதில் எவ்வித அர்த்தமுமில்லை” என்று உணர்கின்றனர். சமீபத்தில் தலைப்புக்களைப் பற்றிய Prince Trust நடத்திய YouGov கருத்துக்கணிப்பில் இந்த குழப்பமளிக்கும் கண்டுபிடிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 16 முதல் 25 வயதான 2,161 பேர் நேர்காணல் செய்யப்பட்டதை அடித்தளமாகக் கொண்ட இப்புள்ளி விவரத்தை முழு இளைஞர்களுக்கும் ஒப்பிட்டால், 16 முதல் 25 வயது வரை இருக்கும் 750,000 பேருக்கு இது பொருந்தும் என்று இந்த அறக்கட்டளை சுட்டிக் காட்டியுள்ளது. இதைத்தவிர, பேட்டி கண்டவர்களில் 40% பேர், பல வகையான உளவியல் சிக்கல்களை அனுபவித்துள்ளனர். இதில் தம்மையே வெறுத்துக்கொள்வதும், எதிர்காலம் பற்றி பீதியான மனத்தாக்கங்களும் அடங்கும். வியத்தகு முறையில், நீண்டகாலம் வேலையற்று இருப்போர், தாங்கள் வாழ்வதில் அர்த்தமேதுமில்லை என்று நம்புவர்களில் இரு மடங்கு அதிகமாக உள்ளனர். கருத்து தெரிவித்தவர்களில் 281 பேர் Neets (வேலையில், கல்வியில், பயிற்சியில் இல்லை -not in employment, education or training) என வகைப்படுத்தப்பட்டிருந்தனர், 166 பேர் 6 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமாக வேலையில் இல்லை. நீண்ட காலம் வேலையற்றோரில் மூன்றில் ஒருவர் தற்கொலைக்கு சிந்தித்துள்ளனர். இத்தகைய அனுபவம் பிரித்தானிய இளைஞர்களுக்கு பிரத்தியேகமானது ஒன்றல்ல. உலகளவில், இளம் தலைமுறைதான் 2008 பொருளாதார சரிவு மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆகியவற்றின் விளைவுகளின் முழுச் சுமையை தாங்குகிறது. இதில் இன்னும் விசித்திரமானது என்னவெனில் இந்த மதிப்பீடு Prince’s Trust க்காக நடத்தப்பட்டது. இந்த அமைப்பிற்கு இளவரசர் சார்ல்ஸ் தலைமை தாங்குகிறார். அவரோ பிரபுத்துவ சலுகை மற்றும் சமூக சமத்துவமின்மையை உள்ளடக்கிய நிறுவனத்தின் உருவம் ஆவார். ஆனால் இவ் அறக்கட்டளை இளம்தலைமுறையினரிடையே “சுய முன்னேற்றத்தை” வளர்க்க முயல்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், YouGov கருத்துக் கணிப்பின் முடிவுகள், அரியணை வரிசையில் இரண்டாவதாக உள்ள இளவரசர் வில்லியம் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியுடன் ஒரேநேரத்தில் வெளியிடப்பட்டன. மாட்சிமை தங்கிய அரச குடும்ப கேம்ப்ரிட்ஜ் இளவரசர், ஏனைய விண்ணப்பதாரர்களுக்கு நிர்ணயித்த இலக்கைவிட குறைவான தரத்தை அடைந்திருந்தாலும் விவசாய மேலாண்மை துறையில் பத்துவார கால வாடிக்கைப் படிப்பை மேற்கொள்வார். Prince’s Trust இந்த இளம்தலைமுறையினரின் மனநல, சுகாதார பிரச்சினைகள் மதிப்பீட்டை, அரசாங்கம் மற்றும் சுகாதார நிறுவனங்களிடம் இருந்து தன் பணிக்கு நிதி திரட்ட ஆதரவைப் பெற பயன்படுத்துகிறது. இதன் பணி நீண்டகால வேலையற்றுள்ள உளநிலை பிரச்சினைகளில் இருக்கும் இளம் மக்களுக்கு உதவுவதாகும். ஆனால் இவ்வமைப்பு, இந்த பிரச்சனைக்குள்ளான போக்கை ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சினைபோல் எடுத்துக்காட்டி, அது தனிப்பட்ட நபர்களின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்க்க முடியும் என்பது போல் காட்டுகின்றது. அறக்கட்டளையின் ஆய்வுகளில் உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து அதிகம் கூறப்படவில்லை. அதேபோல் அதைத்தொடர்ந்து ஒவ்வொரு அரசாங்கமும் நடைமுறைப்படுத்தும் தீய சிக்கன நடவடிக்கைகள் குறித்தும் ஏதும் கூறப்படவில்லை. ஐரோப்பா முழுவதும் முதலாளித்துவம் இந்த நெருக்கடியை, தொழிலாள வர்க்கத்தை 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த நிலைமைக்கு அல்லது அதையும் விட மோசமான நிலைக்கு கொண்டு செல்லத்தான் பயன்படுத்துகிறது. இளைஞர்கள் கௌரவமான வேலை இல்லாத, சுகாதாரம் இல்லாத, கல்வி வாய்ப்பு இல்லாத வருங்காலத்தை ஏற்க வேண்டுமென்றே தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்படுகின்றனர். கிரேக்கம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் இளைஞர் வேலையின்மை விகிதம் 60%க்கும் மேலாக உள்ளதுடன், இது உயர்ந்து வருகிறது. ஐரோப்பிய முதலாளித்துவமோ இதை அடைவதற்காக கடுமையாக தொழிலாளர் சந்தையை மறுகட்டமைக்க முனைகின்றது. இதே வழிவகைதான் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. 2010ல் பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் லிபரல் டெமக்ராடிக் கூட்டணி, ஆட்சிக்கு வந்தபின் செய்த முதல் விடயங்களில் ஒன்று ஏழை தொழிலாள வர்க்க இளைஞர்களுக்குக் கொடுத்த கல்வி பராமரிப்பு நிதியுதவியை அகற்றி, மேலும் பல்கலைக்கழக கட்டணங்களை மூன்று மடங்கு ஆண்டு ஒன்றிற்கு 9,000 பவுண்டுகளாக அதிகரித்ததாகும். அதன் நோக்கம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கல்வி வாய்ப்பற்று இருக்க வேண்டும் என்ற வேண்டுமென்றே எடுக்கப்பட்ட செயலாகும். இதன் மூலம் ஊதியங்களும் பணிநிலைகளும் மோசமாக்கப்பட முடியும். ஆய்வின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்த அரைவாசியினர் பட்டதாரி தகுதியற்ற வேலைகளிலேயே உள்ளனர். பெரிய தொகை கடன்களுடன், பலரும் ஆண்டு ஒன்றிற்கு 29,000 பவுண்டுகளை விடக் குறைவான வேலையில் உள்ளனர். இதுதான் ஒருகாலத்தில் பட்டதாரியின் ஆரம்ப ஊதியம் என்று உறுதியளிக்கப்பட்டது; சிலர் ஊதியமில்லாத “உள்பயிற்சி வேலையில்” உழைக்கின்றனர். பட்டப்படிப்பு இல்லாதவர்கள் இன்னும் குறைவான ஊதியம் உடைய வேலைக்குத் தள்ளப்படுகின்றனர். பலநேரமும் ஒப்பந்தம் இல்லாத (zero-hour contracts) பகுதி நேர வேலைகளுக்கு. வேலையற்று இருப்போரின் நிலைமை இன்னும் மோசமானதாகும். 16 முதல் 24 வயது வரையான கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இளைஞர்கள் பிரித்தானியாவில் வேலையில் இல்லை. அவர்களில் பாதிப்பேர் நீண்டகால வேலையற்றோர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். டிசம்பர் மாதம் சான்ஸ்லர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன், வேலையின்மை நலன்களை 25 வயதிற்கு உட்பட்டோருக்கு இன்னும் குறைக்கும் திட்டங்களை முன்வைத்தார். இது வீட்டு நலனுக்கு உதவும் அவர்கள் சலுகைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கானவர்களை வறுமையில் தள்ளி, ஊதியங்களை இன்னும் குறைக்கும். சராசரி ஊதியங்கள் ஏற்கவே 2008ல் இருந்து மோசமான சரிவைக் கண்டுள்ளன. ஓஸ்போர்னின் வரவு-செலவுத் திட்ட கணிப்பு குறித்துக் கூறுகையில், நிறுவனத்தின் தீர்மானம் அரசாங்கம் முதல் முழு ஆண்டில் அதன் இலக்கை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதில் சராசரி ஊதியங்கள் 2017 முதல் 2018 வரை “மந்த நிலைக்கு முந்தைய அளவிற்கு மீளும்” என எதிர்பார்க்கப்பட்டது. சராசரி ஊதியம் 2018ல் 2003ல் இருந்ததைவிடக் குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் பல இல்லங்கள் “ஊதியத்தில் 15 ‘இழப்பு ஆண்டுகளை” அனுபவித்திருக்கும்.” “கடந்தகால போக்குகள் மீண்டும் வந்தால், சராசரி ஆண்களின் வார வருமானங்கள் 2018இல் 520 பவுண்டுகளை அடையும் என இவ்வமைப்பு கணிக்கின்றது. இது 2008 உடன் ஒப்பிடும்போது 8% சரிவாகும்”. அதன் ஆய்வு “22-29 வயதில் இருப்பவர்களின் சராசரி வார ஊதியம் 2008ல் இருந்து 2018க்குள் 10% குறையும்.” எனவும் கூறுகின்றது. இத்தகைய தீவிரவீழ்ச்சி கார்டியனுடைய பொருளாதார வல்லுனர் ஆதித்யா சக்ரபூர்த்தியை எதிர்காலம் இதை “தொழிற்சந்தையில் நிரந்தர மாற்றம் என்று பதிவு செய்யும். பிரித்தானியா சராசரி அமெரிக்கத் தொழிலாளியின் தேக்க மாதிரியை எடுத்துக் கொண்டுள்ளது; இதையொட்டி பெரும் பங்குதாரர்களுக்கும் முதலாளிகளுக்கும் பாரிய இலாபங்கள் கிடைக்கும்.” எனக் கூறவைத்துள்ளது. இதைத்தவிர, பொதுநலம், சுகாதாரம், கல்விக்கான, வேலைக்கான வாய்ப்புக்கள், மில்லியன் கணக்கான பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்கள் பணிநிலைகள் பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதாவது 2018 அளவில் அரசாங்கம் சமூகநல சேவைகளுக்கு செலவழிப்பது தேசிய வருமானத்தில் 11% என்றுதான் இருக்கும். “உறுதியாக, இந்த அமைப்புமுறை அதன் இளைஞர்களுக்கு எவ்வளவு நாட்களுக்கு இவ்வளவு சிறிதாக கொடுக்கிறது என்று நீங்கள் வியக்க வேண்டியிருக்கும்” என அவர் முடிக்கிறார். அவருடைய அறிவிப்பு முக்கியமானது. ஏனெனில் YouGov கருத்துக் கணிப்புடன் இணைந்து “தற்கொலை எச்சரிக்கை” என்ற தலைப்பில் இன்னொரு செய்தி வந்துள்ளது. அது இயலாமை, நம்பிக்கையின்மை என்பதை மட்டும் முக்கியமாக இல்லாமல் விஷேடமாக இளம்தலைமுறையினர் மத்தியில் பாரிய அதிருப்தி கொதித்துவருவதாக குறிப்பிடுகின்றது. டிசம்பர் மாதம் கார்டியன்-ICM ன் புதிய ஆய்வு பிரித்தானியாவின் அரசியல் அமைப்புமுறையில் இருந்து அதிகரித்துவரும் அந்நியப்படுதல் போக்கை ஆவணப்படுத்துகிறது. நேர்காணல் காணப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேரிடம் சீற்றபோக்கு காணப்படுகின்றது. 18 முதல் 24 வயது வரை உள்ளர்கள் தங்களை தற்போதைய அரசியல் அமைப்பின் மீது சீற்றம்கொண்டவர்கள் என விவரித்தனர். இது பிரித்தானிய நகைச்சுவை நடிகர் ரஸல் பிராண்ட் கடந்த ஆண்டு தெரிவித்த கருத்திற்கு காட்டிய உத்தியோகபூர்வ அரசியல்தட்டின் சீற்றத்திற்கான காரணத்தை காட்டுகிறது. அப்பொழுது அவர் இளைஞர்கள் வாக்களிப்பதில்லை, காரணம் “அரசியல் வர்க்கத்தின் பொய்கள், துரோகம், ஏமாற்றுத்தனம் ஆகியவை பல தலைமுறைகளாக நடக்கின்றன. ஒரு புரட்சி தேவை” என்றார். இன்னும் அடிப்படையில் பிரித்தானிய இளைஞர்களிடையே பரந்த அதிருப்தியும் அந்நியப்படல் போக்குமே ஆகஸ்ட் 2011 கலகத்திற்கு காரணமாகும். அதற்கு எதிராக அதிகாரிகள் காட்டிய அடக்குமுறையும் மற்றும் பொலிஸ் அரச கண்காணிப்பு கட்டமைக்கப்படுவதையும்தான் எட்வார்ட் ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியுள்ளார். வறுமை, இராணுவவாதம், போர் என்பதை தவிர இளந்தலைமுறைக்கு வேறெதுவும் வழங்குவதில்லை என்பதில் ஆளும் உயரடுக்கு நனவாக இருக்கிறது. சுகாதாரத் திட்டங்கள் அல்லது அதன் இளம் பாதிப்பாளர்களுக்கு அத்தகைய உதவியை ஏற்பாடு செய்வதற்கு முற்றிலும் மாறாக, இது தவிர்க்க முடியாத சமூக எதிர்ப்புக்களை எதிர்பார்த்து அதற்காக அடக்குமுறை பொலிஸ் நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்கின்றது. |
|
|