World Socialist Web Site www.wsws.org |
US imperialism and Iraq’s descent into civil war அமெரிக்க ஏகாதிபத்தியமும் உள்நாட்டு யுத்தத்திற்குள் ஈராக் சரிவதும்
Bill Van Auken ஈராக்கிய நகரமான பல்லூஜாஹாவின் மீது இரண்டு முறை காட்டுத்தனமான முற்றுகைகளை அமெரிக்க இராணுவம் நடத்திய ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், அந்நகரம் மீண்டுமொருமுறை ஓர் இரத்தந்தோய்ந்த ஆயுதமேந்திய மோதலை முகங்கொடுத்துள்ளது. ஈராக்கிய ஜனாதிபதி நௌரி அல்-மலிக்கியின் இராணுவம் பல்லூஜாஹின் புறநகர் பகுதிகளில் குண்டுகள் ஏந்திய இராணுவ டாங்கிகளைக் குவித்துள்ளதோடு, அண்டையிலிருந்த அப்பாவி மக்கள் மீது குண்டுகளையும், சிறியரக பீரங்கி குண்டுகளையும் வீசியது, அதில் எண்ணிக்கையற்ற மக்கள் காயமடைந்தனர். உயிருக்கு அஞ்சி ஆயிரக்கணக்கானவர்கள் நகரை விட்டு வெளியேறினர். குடிநீர், உணவு மற்றும் எரிபொருள் கிடைக்காத நிலைமையானது ஓர் இரங்கத்தக்க பேரழிவை உருவாக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அந்நகரின் குடிவாசிகள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களைச் சரணடைய செய்ய தூண்டவில்லை என்றால் அந்நகரின் மீது ஒரு முழு அளவிலான தாக்குதலைத் தொடங்க இருப்பதாக மலிக்கி அறைகூவல் விடுத்துள்ளார். 2004 ஏப்ரலில் மற்றும் மீண்டும் நவம்பர்-டிசம்பரில், அமெரிக்க ஆக்கிரமிப்பால் பல்லூஜாஹ் ஒரு படுகொலைக் களமாக மாற்றப்பட்டது. AC-130 ஸ்பெக்டர் யுத்தவிமானங்கள், F-16 போர் விமானங்கள் மற்றும் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை கொண்டு வான்வழி மூலமாக அந்நகரம் தாக்கப்பட்டது. அந்நகரைத் தாக்க தரைப்படையாக 10,000த்திற்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகளின் ஒரு படைக்கு ஆதரவாக டாங்கிகள் மற்றும் மத்தியரக பீரங்கிகளும் இருந்தன. குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் வெள்ளை பாஸ்பரஸ் ஏவுகணைகளும் (இவை ஜெனிவா தீர்மானங்களின் கீழ் இரசாயன ஆயுதங்களால் தடை செய்யப்பட்டவை ஆகும்) மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. மருத்துவமனைகளும், அவசரநேர வாகனங்களும் இலக்காக்கப்பட்டன. இறுதியில், அந்நகரில் என்ன எஞ்சி இருந்ததோ அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு சேதப்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த கட்டிடங்களில் ஐந்தில் ஒன்று முழுமையாக அழிப்பட்டிருந்தன. நூறு ஆயிரக் கணக்கானவர்கள் வீடற்ற அகதிகளாக ஆக்கப்பட்டார்கள். அந்த இரண்டு முற்றுகைகளில் குறைந்தபட்சம் 120 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டனர், அதேவேளை எத்தனை ஆயிர ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர் என்பதன் மீது எவ்வித துல்லியமான எண்ணிக்கையும் இதுவரை இல்லை. பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் பல்லூஜாஹ், ரமாதி மற்றும் ஈராக்கின் மேற்கத்திய அன்பார் மாகாணத்தின் ஏனைய இடங்களில் நிலவும் தற்போதைய நிலைமைகளை, ஒரு தசாப்தமாக அப்பகுதியைச் சாந்தப்படுத்த அமெரிக்க ஆக்கிரமிப்பால் பெரும் "தியாகங்கள்" செய்யப்பட்ட நிலையில், இத்தகைய சம்பவங்கள் என்னவொரு அதிர்ச்சியை மற்றும் ஏமாற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற என்ற நிலைப்புள்ளியில் இருந்து எடுத்துக்காட்ட தொடங்கி உள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நோக்கமாக கொண்ட மற்றும் ஈராக்கிய மக்களுக்கு ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக ஈராக் யுத்தம் மீண்டும் ஒருமுறை சித்தரிக்கப்பட்டு வருகிறது. பல்லூஜாஹ் மீதான அந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் ஒரு யுத்த குற்றத்தை உள்ளடக்கி இருந்தது. அதன் நோக்கங்களில், பரந்த வீச்சில் மற்றும் முரட்டுத்தனத்தில், அது ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் எதிர்ப்பு காட்டிய மக்களுக்கு எதிராக நாஜிக்களால் வழங்கப்பட்ட ஒருவிதமான கூட்டு தண்டனையோடு ஒப்பிடக்கூடியதாக இருந்தது. அது ஒட்டுமொத்த அமெரிக்க யுத்தத்தின் குற்றவியல் குணாம்சத்தின் அடையாளமாக இருந்தது. இல்லாத "பேரழிவு ஆயுதங்கள்" மற்றும் பாக்தாத்திற்கும் அல் கொய்தாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்த பொய்களை அமெரிக்க மக்களிடையே திரித்துவிட்டு, அந்த யுத்தமானது மத்திய கிழக்கில் மற்றும் அதன் எரிசக்தி ஆதாரவளங்களின் மீது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலதிக நோக்கங்களால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு சற்று முன்னர் ஒபாமா அமெரிக்க துருப்புகளை ஈராக்கிலிருந்து திரும்பப் பெற உத்தரவிட்டார், இருந்த போதினும் எஞ்சியிருக்கும் அமெரிக்க துருப்புகளுக்கான சட்டப்பூர்வ விதிவிலக்கைப் பெற தவறியுள்ளது. எவ்வாறிருந்த போதினும், ஈராக்கிய மக்கள் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் ஒன்பது ஆண்டுகளுக்கு நெருக்கமான காலத்தில் ஏற்பட்ட கசப்பான மரபுவழிகளை கையாள விடப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மிக குறிப்பிடத்தக்க வகையில் லிபியாவில் மௌம்மர் கடாபியைக் கவிழ்த்து போடுவதன் மூலமாகவும் மற்றும் சிரியாவில் பஷார் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்கான ஒரு யுத்தத்தை ஆதரித்து தூண்டிவிடுவதன் மூலமாகவும் அப்பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின் வேட்கை தொடர்ந்துள்ளது. பல்லூஜாஹ் மற்றும் ரமாதியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களின் விளைவுகள், கடந்த காலத்திலும் மற்றும் நிகழ்காலத்திலும், ஒட்டுமொத்தமாக ஒரு வெடிப்பார்ந்த வடிவத்தை எடுத்துள்ளது. அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு போராட்டமாக பெரு நிறுவன ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அந்த சண்டை, ஒரு திட்டமிட்ட பிரித்தாளும் மூலோபாயத்தின் பாகமாக, அமெரிக்க யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பால் தூண்டப்பட்ட குழுங்குழுவாத பிரிவுகளில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அவை வடக்கில் உள்ள குர்திஷ் சிறுபான்மைக்கு பிராந்திய தன்னாட்சியைத் தொடர அனுமதித்துள்ள அதேவேளையில், எல்லைகள் மற்றும் எண்ணெய் வளத்திற்கான உரிமைகள் மீதான மோதல்கள் அங்கே உள்நாட்டு யுத்தத்திற்குள் வெடிப்பாக எழ அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற போதினும், அவை சிறுபான்மை சுன்னி மக்களுக்கு எதிராக ஈராக்கின் பெரும்பான்மை ஷியைட் மக்களை எதிர்த்து நிலைநிறுத்துவதில் வெற்றி கண்டன. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் நிறுவப்பட்ட பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியின் அரசாங்கம், அன்பார் மக்களின் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட பாதுகாப்பு படைகளைப் பயன்படுத்தியும், மற்றும் இத்தகைய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான போராட்டங்களை அல்கொய்தா பயங்கரவாதத்தின் நடவடிக்கைகளாக முத்திரை குத்தியும், முன்னணி சுன்னி அரசியல் பிரபலங்களை இரக்கமின்றி கழித்தொழித்து, பகிரங்கமாகவே ஒரு குறுங்குழுவாத நிகழ்ச்சிநிரலை பின்தொடர்ந்துள்ளது. டிசம்பரின் முடிவில், ரமாதியில் நாடாளுமன்றத்தின் ஒரு பிரபல சுன்னி பிரிவு உறுப்பினரான அஹ்மத் அல்-அல்வானியைக் கைது செய்ய (அந்த நிகழ்முறையில் அவரது சகோதரர் மற்றும் ஐந்து மெய்காவல் சிப்பாய்களை கொன்றது), பின்னர் டிசம்பர் 30இல் ஒரு போராட்ட கூட்டத்தை உடைப்பதற்கு பாதுகாப்பு படைகளை அனுப்ப (அது பல மாதங்கள் அதே நகரில் தங்கி இருந்ததோடு, குறைந்தபட்சம் 17க்கும் அதிகமானோரைக் கொன்றது) திரும்பியதன் மூலமாக மலிக்கி அரசு தற்போதைய மோதலைத் தொட்டுள்ளது. மக்கள் கோபம் சீறிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஈராக்கில் உள்ள அல் கொய்தா இணைப்பு பெற்ற Islamic State மற்றும் தலைமறைவாக இருக்கும் உள்ளூர் பழங்குடியினர் அமைப்பு (ISIS) ஆகிய இரண்டு ஆயுதமேந்திய குழுக்களுமே பொலிஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதுடன், பாதுகாப்பு படைகளை விரட்டியடித்து உள்ளூர் சோதனைச்சாவடிகளை அமைத்தன, அவை துல்லியமாக பல்லூஜாஹ் மற்றும் ரமாதியின் பெரும்பகுதியை பிடித்திருந்தன. மலிக்கிக்கு அதன் முழு ஆதரவைத் தெரிவித்தும், அவரது இராணுவத்திற்கு ஹெல்பயர் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் உட்பட ஆயுதங்களை அவசரமாக அனுப்பி வைத்தும் ஒபாமா நிர்வாகம் விடையிறுப்பு காட்டி உள்ளது. அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் F-16 யுத்த விமானங்களை அந்த ஆட்சிக்கு அனுப்ப தாமதமாகி கொண்டிருந்ததை முடிவுக்கு கொண்டு வர, அது காங்கிரஸ் மீது முழு அழுத்தத்தைச் செலுத்தியது. முன்பை விட இன்னும் அதிகமாக குழுவாத மற்றும் சர்வாதிகார தன்மைக்கு மாறி உள்ள ஓர் ஆட்சியின் கைகளில் கிடைக்கும் இந்த ஆயுத தளவாடங்கள், சாமானிய குடிமக்களைப் படுகொலை செய்ய பயன்படுத்தப்படக்கூடும் என்பது ஒபாமா வெள்ளை மாளிகைக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. அல் கொய்தாவின் அச்சுறுத்தலால் ஒரு தவிர்க்கவியலா உந்துதலாக, அதன் இராணுவ உதவிகளை வாஷிங்டன் எடுத்துக்காட்டி உள்ளது. அத்தோடு பல்லூஜாஹைக் கைப்பற்றி உள்ளவர்களை "அப்பிராந்தியத்தின் மிகவும் அபாயகரமானவர்கள்" என்று வெளியுறவுத்துறை செயலர் ஜான் கேரி வர்ணித்துள்ளார். எதார்த்தம் என்னவென்றால் வாஷிங்டன் இன்னமும் பாக்தாத்தின் மீது தக்க வைத்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் செல்வாக்கின் பிரதான கருவிகளில் இதுபோன்ற உதவியும் ஒன்றாக உள்ளது. துருப்புகள் வெளியேறினாலும் கூட, அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை உள்ளடக்கிய அமெரிக்க தூதரகத்தை மையமாக கொண்ட 1,000 ஆட்களைக் கொண்ட ஈராக் பாதுகாப்பு-கூட்டுறவு அலுவலகம் அங்கே எஞ்சி உள்ளது. ஆக்கிரமிப்பு முடிவடைந்ததில் இருந்து, அது 9 பில்லியன் டாலர் மதிப்பிலான நூற்றுக்கணக்கான இராணுவ விற்பனை ஒப்பந்தங்களைக் காப்பாற்றி வைத்துள்ளது. முன்னாள்-சிறப்பு நடவடிக்கைகள் துருப்புகளைச் சேர்ந்த பெரும்பான்மையினரைக் கொண்ட அமெரிக்க ஒப்பந்ததாரர்கள், “ஆலோசகர்கள்" என்ற பெயரில் ஈராக்கிய படைகளில் "ஊடுருவி" உள்ளனர். அல் கொய்தாவின் அச்சுறுத்தல் என்று கூறப்படுவதைப் பொறுத்த வரையில், அதுவும் பெரிதும் வாஷிங்டனின் சொந்த தயாரிப்பாகும். சிரியாவில் எல்லை கடந்த ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க பின்புலத்திலான யுத்தத்தால் பரந்தளவில் ISIS பலமூட்டப்பட்டுள்ளது, அங்கே சிரியாவில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளால், குறிப்பாக சவூதி அரேபியாவால் அதற்கு ஆயுத உதவிகளும், நிதியுதவிகளும் அளிக்கப்படுகின்றன. மலிக்கி பல்லூஜாஹாவில் ISIS மீது குண்டுவீச ஈராக்கிற்கு கூடுதலாக ஏவுகணைகளை அவசரகதியில் அனுப்புகின்ற வாஷிங்டன், அலெப்போவில் ISIS படைகள் மீது சிரியாவின் குண்டுவீச்சை அது தூற்றுகிறது. இதுவே அப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கையின் போலித்தனத்தையும் ஆத்திரமூட்டல்களையும் எடுத்து காட்டுகின்றன. இந்த வெட்டவெளிச்சமான முரண்பாட்டில், அல் கொய்தாவை வாஷிங்டன் இரண்டுவிதமாக பயன்படுத்துகிறது என்பதே உள்ளார்ந்து இருப்பதாகும். அது எங்கே அதற்கு தேவைப்படுகிறதோ அங்கே—1980களில் ஆப்கானிஸ்தானிலும் மற்றும் மிக சமீபத்தில் லிபியா மற்றும் சிரியாவில் பயன்படுத்தியதைப் போல—அதையொரு பகடைக்காயாகவும், பின்னர் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலும் இன்று மீண்டும் ஈராக்கிலும் அதன் தலையீட்டை நியாயப்படுத்த அதையொரு அரக்கனைப் போலவும் பயன்படுத்துகிறது. பல்லூஜாஹில் அது பற்ற வைத்துள்ள நெருப்பில் குளிர்காய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இருக்கும் வாய்ப்பை திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் ஈராக் விவகாரத்தில் வாஷிங்டன் மற்றும் தெஹ்ரானின் "பொதுவான எதிரிகள்" என்பதை உயர்த்திக் காட்டும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு காட்டி இருந்தது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான நல்லிணக்கம் ஈரானிய அணுசக்தி திட்டம் மீதான ஓர் உடன்படிக்கையைக் கடந்து அப்பிராந்தியத்தில் "ஸ்திரப்பாட்டிற்கான" ஒரு துருப்பாக ஈரான் திரும்பும் அளவிற்கு நீடிக்க முடியும் என்று அது ஆலோசனை வழங்கியது. இருந்த போதினும், அதுபோன்றவொரு மறுஒழுங்கமைப்பு மத்திய கிழக்கைக் கிழித்துக் கொண்டிருக்கும் ஆழ்ந்த சமூக, அரசியல் மற்றும் வர்க்க மோதல்களைத் தீர்க்கப் போவதில்லை, மாறாக குறிப்பாக சீனா உடனான மோதலின் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மேலாதிக்கத்திற்கான வேட்கைக்காக அதனால் அந்த நிலைமைகள் இன்னும் அதிகமாக சுரண்டப்படும். |
|