World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The New York Times pronounces on destabilisation of the Middle East

மத்திய கிழக்கின் ஸ்திரமின்மை மீது நியூ யோர்க் டைம்ஸ் கருத்துக்களை வழங்குகிறது

Chris Marsden
7 January 2014

Back to screen version

ஆட்சி மாற்றத்திற்காக சிரியாவின் மேற்கத்திய ஆதரவிலான குறுங்குழுவாத யுத்தம், ஈராக் மற்றும் லெபனானிற்குள் தங்களைத் தாங்களே சுன்னி மற்றும் ஷியா பிரிவுகளில் நிலைநிறுத்தி கொண்டுள்ள சக்திகளுக்கு இடையே பரவி வரும் நிலையில், நியூ யோர்க் டைம்ஸ் இந்த கோரமான சூழ்நிலையை அப்பிராந்தியத்தில் வாஷிங்டன் போதிய ஈடுபாடு காட்டாததால் ஏற்பட்டதென்று சாட்ட முன்வந்துள்ளது.

ஜனவரி 4இல் வெளியான "மத்திய கிழக்கின் அரசியல் வெற்றிடம் போராளிகளைத் தூக்கிவிடுகிறது,” என்ற கட்டுரை தாராளவாத ஏகாதிபத்தியத்தின் குரலை ஒலிக்கிறது.

அந்த அமெரிக்கசாதனை பத்திரிகை", ஈராக்கின் இஃபல்லூஜா மற்றும் ரமாதி நகரங்களில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகளோடு" பல அமெரிக்க சிப்பாய்கள் சண்டையிட்டு இறந்ததை மேற்கோளிடுகிறது.

அப்பிராந்தியத்தில் எழுந்த அனைத்து மோதல்களையும், "அமெரிக்க மத்திய கிழக்கிற்குப் பிந்தைய எழுச்சிகளாகவும், அப்பிராந்தியத்தின் குறுங்குழுவாத விரோதங்களைக் கட்டுப்படுத்த எந்த மத்தியஸ்தருக்கும் சக்தியில்லை, அல்லது விருப்பமில்லை" என்றும் அது குறிப்பிடுகிறது.

இது தான் ஈராக் மற்றும் சிரியா இரண்டிலும் "வெறித்தனமான இஸ்லாமியவாதிகளை" தழைத்தோங்க அனுமதித்துள்ளதென்று நமக்கு சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிலைமையை "இரண்டு மாபெரும் எண்ணெய்வள சக்திகளான, ஈரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையிலான போராட்டங்களுக்கு காரணமாக்குவதோடு, அவற்றின் ஆட்சியாளர்கள் முறையே ஷியைட் மற்றும் சுன்னி இஸ்லாமை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறி, ஏறத்தாழ ஏதோவொரு விதத்தில் அவர்கள் மதவெறுப்பை உண்டாக்கும் ஒரு குறுங்குழுவாத நிகழ்ச்சிநிரலை ஆத்திரமூட்டும் விதத்தில் நடைமுறைப்படுத்துவதாக" டைம்ஸ் எழுதுகிறது.

இவை அனைத்தையும் இணைத்து செயலிழக்க செய்வதென்பது மதக்குழுக்கள் மற்றும் குறுங்குழுக்களின் பரம விசுவாசிகளிடம் முற்றிலும் அப்பட்டமாக முறையிடுவதாகும்,” என்பதையும் டைம்ஸ் சேர்த்துக் கொள்கிறது.

ஈராக்கிய உள்நாட்டு யுத்தத்தை அமெரிக்கா ஓர் ஆக்கிரமிப்போடு "முடிவுக்கு கொண்டு வந்திருந்ததாக" அந்த பத்திரிகை ஒரு சிறிய ஆதாரத்தைத் குறிப்பிடுகிறது. அப்போது அந்த ஆக்கிரமிப்பு "தேசியத்தைக் கட்டியெழுப்பும் அமெரிக்காவின் ஒரு முயற்சி" என்பதாக நியாயப்படுத்தப்பட்டது.

மத்திய கிழக்கில் கட்டவிழ்ந்துவரும் சம்பவங்களுக்கு தரப்படும் இந்த விளக்கம், வேண்டுமென்றே மற்றும் சுயநலத்தோடு செய்யப்படும் வரலாற்றின் பொய்மைப்படுத்தலுக்கு ஒப்பானதாகும்.

தீவிரமடைந்துவரும் நெருக்கடிக்கான பழி வெள்ளை மாளிகையின் வாசலில் தங்கி உள்ளது, அதற்கு காரணம் ஒரு தோற்று போன கொள்கை அல்ல, மாறாக அது ஏனென்றால் அப்பிராந்தியத்தையும் மற்றும் அதன் எண்ணெய் வளங்களையும் ஆக்கிரமிக்க அதனால் செய்யப்பட்டு வரும் மற்றும் வரலாற்றுரீதியில் செய்யப்பட்ட அதன் முயற்சிகளால் விளைந்ததாகும்.

1990'இல் முதல் வளைகுடா யுத்தம், 2003'இல் ஈராக்கிய ஆக்கிரமிப்பு, லிபியாவில் 2011 யுத்தம் மற்றும் அதை தொடர்ந்து சிரியாவில் அசாத் ஆட்சியைக் கவிழ்க்க செய்யப்பட்ட முயற்சிகள் இவை அனைத்தும் ஈரான் மற்றும் ஈராக்கை பிராந்திய சக்திகளாக வளரவிடாமல் செய்ய மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு தொந்தரவில்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த நோக்கம் கொண்டவையாக இருந்தன. ஒவ்வொரு விஷயத்திலும், அமெரிக்கா அதன் விருப்பப்படி மத்திய கிழக்கை மாற்றியமைக்க பிராந்திய சக்திகளின் முன்னணிகளைப் பகடைக்காய்களாக கட்டியெழுப்பும் ஒரு கொள்கை மூலமாக "மதக்குழு மற்றும் குறுங்குழுவின் பரம விசுவாசிகளை" ஊக்கப்படுத்துவதிலும் மற்றும் பேணி வளர்த்தெடுப்பதிலும் முன்னிலையில் இருந்துள்ளது.

"தீவிரவாத ஷியா வட்டம்" என்று கூறி, ஈரானுக்கு எதிராக நடவடிக்கைக்கு ஒரு முன்னோடி நடவடிக்கையைப் போல சிரியாவில் உள்ள பாதிஸ்ட் ஆட்சிக்கு எதிரான நகர்விற்காக, லிபியாவில் மௌம்மர் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்ததன் மூலமாக, எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ ஆட்சிக்கு ஆதரவளித்தும், பின்னர் துருக்கி, சவூதி அரேபியா மற்றும் கடார் தலைமையிலான சுன்னி சக்திகளின் ஒரு கூட்டணியை ஏற்பாடு செய்ததன் மூலமாக, துனிசியா மற்றும் எகிப்தில் இருந்த அதன் துணை அரசுகளை 2011'இல் தூக்கியெறிய அமெரிக்கா விடையிறுப்பு காட்டியது. சிரியாவில் அவர்கள் கட்டியெழுப்பிய எதிர்ப்பு சக்திகள், அல் கொய்தாவுடன் இணைப்பு பெற்ற இஸ்லாமியவாதிகளை அடித்தளமாக கொண்டிருந்தன.

அந்த கொள்கை ஒரு படுமோசமான தோல்வியை நிரூபித்ததோடு, அதிலிருந்து இப்போது அமெரிக்கா பாரியளவில் பின்வாங்க தள்ளப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் தான் நியூ யோர்க் டைம்ஸை குரல் கொடுக்க செய்திருக்கிறது. யுத்தத்திற்கு உள்நாட்டில் இருந்த பெருமளவிலான எதிர்ப்பு மற்றும் ரஷ்யாவுடனான ஒரு நேரடி மோதலுக்கான அச்சுறுத்தலை முகங்கொடுத்திருந்த நிலையில், அமெரிக்கா சிரியாவின் இரசாயன ஆயுத அழிப்புக்கான ரஷ்ய-மத்தியஸ்த உடன்பாட்டை மற்றும் அதை தொடர்ந்து அதன் நலன்களை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு மாற்று கருவியாக ஈரானுடனான ஒரு சமரச வாய்ப்பை கைப்பற்றியது.

இந்த இரண்டுமே அதன் முன்னாள் பிராந்திய கூட்டாளிகளுடன் அதை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியதோடு, அவற்றிடமிருந்து அன்னியப்படுத்தி உள்ளது.

சான்றாக, துருக்கியின் பிரதம மந்திரி ரிசெப் எர்டோகனின் நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (Justice and Development Party) ஏனைய மேற்கத்திய அரசுகள் சார்பிலான ஓர் இஸ்லாமிய மாதிரியை முன்னெடுத்ததோடு, அதனைஅதுவே பிராந்திய சக்தி களமாக ஸ்தாபிக்க விரும்பியது. ஆனால் எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு அமெரிக்கா ஆதரவை கைவிட்டதோடு, பின்னர் சிரியாவிற்கு எதிரான யுத்தத்தில் இருந்து அது பின்வாங்கியமை எர்டோகனை நிலைகுலைத்துள்ளது. பென்சில்வேனியாவைச் சேர்ந்த முஸ்லீம் மதகுரு பெத்துல்லாஹ் குலென் தலைமையில் அவருக்கு எதிராக வாஷிங்டன் ஒரு ஆட்சிகவிழ்ப்பை நடத்த முயல்வதாக அவர் வாஷிங்டனைக் குற்றஞ்சாட்டுகிறார்.

சிரியா விவகாரத்தில் அமெரிக்கா எடுத்த திருப்பம் மற்றும் ஈரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை அது தொடங்கி இருப்பது ஆகியவற்றிற்கு எதிரான எதிர்ப்பில் சவூதி அரேபியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இடம்பெறுவதை மறுத்து, சிரியா விவகாரத்திலும் மற்றும் சர்வதேச விஷயங்களிலும் இனி வாஷிங்டனிடம் இருந்து விலகி சுயாதீனமான ஒரு வழியைப் பின்பற்ற போவதாக அறிவித்துள்ளது. சவூதியின் இலண்டன் தூதர், இளவரசர் மொஹம்மத் பின் நவ்வாஃப், டிசம்பர் 7இல் நியூ யோர்க் டைம்ஸில் பின்வருமாறு எழுதினார்: “சர்வதேச விவகாரங்களில் இன்னும் தீர்க்கமாக இருப்பதைத் தவிர சவூதி அரேபிய பேரரசிற்கு வேறு வாய்ப்பில்லை என்பதையே இது அர்த்தப்படுத்துகிறதுமேற்கத்திய பங்காளிகளின் ஆதரவுடனோ அல்லது ஆதரவு இல்லாமலோ, இத்தகைய பொறுப்புகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் செயல்படுவோம்.”

அதன் சுயாதீனத்திற்கு சான்றாக, சிரிய எதிர்ப்பாளர்களுக்கு சவூதி தொடர்ந்து ஆயுத உதவி செய்து வருவதை அந்த இளவரசர் குறிப்பிட்டு காட்டினார். ஈராக்கிய சண்டையில் அது சம்பந்தப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டு காட்டி இருக்கலாம். அமெரிக்க கொள்கை மாற்றத்திற்கு அந்த இடம்தான் சிறந்த உதாரணமாக விளங்குகிறது, அங்கே வாஷிங்டன், எதை சமீபத்திய காலம் வரை, அண்டை நாடான சிரியாவில் அதன் பகடைகாயாக பயன்படுத்தியதோ, அதே சுன்னி அல் கொய்தா படைகளை எதிர்க்க இப்போது 36 Lockheed Martin F-16IQ Block 52 விமானங்களோடு, நௌர் அல்-மலிகியின் ஈரானிய ஆட்சி சார்பிலான ஷியாவிற்கு ஆயுத உதவிகளை வழங்கி கொண்டிருக்கிறது.

ஒரு புதிய ஏகாதிபத்திய பங்காளியின் கூட்டணியோடு, ஈரான் மற்றும் சிரியாவின் ஒரு கூட்டாளியான ஹெஜ்பொல்லாவை இலக்கில் வைக்க, லெபனிய இராணுவத்திற்கு பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்தின் அரசாங்கத்தின் மூலமாக ஆயுதங்களை வினியோகிக்க 3 பில்லியன் டாலர் பெருந்தொகையை வழங்க சவூதி அரேபியா வாக்குறுதி அளித்துள்ளது.

இத்தகைய கீழ்தரமான சூழ்ச்சிகள், ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியும் பாமெர்ஸ்டன் பிரபுவின் அதிகார ஆணையில் தங்கியுள்ளன என்பதை மட்டுமே நிரூபிக்கின்றன: அதுவாவது, “நமக்கு நிலைபேறுடைய கூட்டாளிகளும் கிடையாது, நமக்கு நிரந்தரமான எதிரிகளும் கிடையாது. நம்முடைய நலன்கள்தான் நிரந்தரமானவை, நிலைபேறுடையவை, மேலும் அத்தகைய நலன்களைப் பின்தொடர்வதே நம்முடைய கடமையாகும்,” என்றார்.

மத்திய கிழக்கில் அப்பட்டமான ஏகாதிபத்திய அதிகார அரசியல் நடந்து கொண்டிருக்கிறது, அதில், குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்காவது, நேற்றைய எதிரிகள் இன்றைய கூட்டாளிகளாகவும், நேற்றைய கூட்டாளிகள் இன்றைய எதிரிகளாகவும் மாற முடியும் என்பதற்கு முற்றிலும் சாத்தியக்கூறு உள்ளது.

எவ்வாறிருந்த போதினும், மத்திய கிழக்கு அரசுகள் எப்போதாவது ஒரு சமயத்தில் தங்களைத்தாங்களே "ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக" காட்டி கொள்கிறார்களோ இல்லையோ, ஆனால் அது முற்றிலும் தந்திரோபாயரீதியில் செய்யப்படுகிறது என்பதோடு, அனைத்திற்கும் மேலாக அவர்களின் சொந்த மக்களுக்கு முன்னால் அதுபோன்று அவர்கள் காட்டிக் கொள்ள வேண்டியதிருக்கிறது என்ற நிபந்தனைக்கு அது உட்பட்டுள்ளது. அப்பிராந்தியத்தின் முதலாளித்துவ சக்திகளில் எதுவொன்றும் எந்தளவிற்கு அமெரிக்காவுடன் தங்களைத்தாங்களே மோதலில் காண்கிறதோ, அப்போது அவை விரும்புவது தொழிலாளர் வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளைத் தொடர்ந்து சுரண்டுவதற்கு தலைமை கொடுக்க அனுமதிக்கும் ஒரு பொருத்தமான இடத்தைத் தவிர வேறொன்றையும் அல்ல.

வகுப்புவாதமும் மற்றும் மதக்குழு விரோதங்களும் ஒரு கடந்தபோன சகாப்தத்தில் இருந்து பூர்வீகமாக உயிர்வாழ்ந்து கொண்டிருப்பவை அல்ல. அவை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது பிடியை இறுக்கி வைக்க மற்றும் போட்டிபோடும் முதலாளித்துவ ஆட்சிகளுக்கு ஆதரவை வளர்த்தெடுக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றன. அன்னிய மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கான மற்றும் சமூக முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு உண்மையான மற்றும் நம்பகமான கருவியை வழங்க முடியாதஎகிப்து, ஈராக், சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ளமதசார்பற்ற தேசிய இயக்கங்கள் மற்றும் அரசுகளின் தோல்விகளால் இதில் இன்னும் கூடுதலான சுமை ஏற்றப்பட்டுள்ளது.

உலக மக்களை கொடிய வறுமை, காட்டுமிராண்டித்தனமான சுரண்டல்கள் மற்றும் முன்னொருபோதும் இல்லாத யுத்த அபாயத்தில் தள்ளவிடும் ஏகாதிபத்தியத்தின் கொடூரமான பாத்திரத்திற்குச் சான்றாக, மத்திய கிழக்கே அனைத்திற்கும் முதலாவது நிற்கிறது. இரண்டாவது, ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை எதிர்க்கவியலாத தேசிய முதலாளித்துவத்தின் இயலாமையின் பட்டவர்த்தனமான நிரூபணமாக உள்ளது.

இவ்வுலகில் ஒரே நிலையான ஏகாதிபத்திய-எதிர்ப்பு சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். அனைத்து செயற்கையான தேசிய மற்றும் மதவாத வேறுபாடுகளுக்கு இடையிலும் தனது முறையீட்டை வழங்கும் ஒரு புதிய சோசலிச இயக்கத்தைக் கட்டுவதே மத்திய கிழக்கு தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் அடிப்படைப் பணியாகும். அதேபோல, அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் ஒரு சக்திவாய்ந்த சோசலிச யுத்த-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக உலகின் மூலோபாய சந்தைகளின் மீது அவர்களின் அரசுகளின் சூறையாடும் வடிவமைப்புகளை நியாயப்படுத்த அல்லது மூடிமறைக்க முயலும் நியூ யோர்க் டைம்ஸ் போன்ற பலவற்றின் ஆத்திரமூட்டும் முயற்சிகளை இழிவார்ந்த முறையில் நிராகரிக்க வேண்டும்.