தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
As 2014 begins Geo-political tensions raise spectre of 1914 Great War 2014 தொடங்குகின்ற நிலையில், புவி-அரசியல் பதட்டங்கள் மாபெரும் 1914 இன் யுத்த பேயுருவை எழுப்புகிறது
Nick
Beams Use this version to print| Send feedback உலகின் முன்னணி செய்தியிதழ்களில் ஒன்றான பைனான்சியல் டைம்ஸ், இன்றைய சூழ்நிலைக்கும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பேரழிவுக்கு இட்டு சென்ற சூழ்நிலைக்கும் இடையிலான சமாந்தரங்களை எடுத்துக்காட்டி, "மாபெரும் யுத்தத்தின் பிரதிபலிப்புகள்" என்ற தலைப்பிலான ஒரு தலையங்கத்தோடு புத்தாண்டை தொடங்க முடிவெடுத்தமையானது, நிச்சயமாக ஆழமடைந்துவரும் உலகளாவிய பூகோளஅரசியல் பதட்டங்களின் ஓர் அறிகுறியாகும். அந்த தலையங்கம் குறிப்பிட்டதைப் போல, அதற்கடுத்த நான்கு ஆண்டுகளில் மில்லியன் கணக்கானவர்களின் உயிரைப் பறித்த மற்றும் மில்லியன் கணக்கானவர்களை பாதிப்பிற்குட்படுத்திய ஒரு பிரளயத்திற்குள் "இன்னும் ஏழு மாதங்களுக்குள்ளேயே தங்களின் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் உலகை மூழ்கடிக்க போகிறார்கள்" என்பதை, ஜனவரி 1914இல் வெகுசில ஐரோப்பியர்களே ஊகித்திருப்பார்கள். “அதுபோன்றவொரு சகாப்தகால பேரழிவின் விளிம்பில் உலகம் இருப்பதை எண்ணி அஞ்சுவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை" என்று —ஜனவரி 1914இல் இவ்வாறான கேள்வி எழுப்ப்பபட்டிருந்தாலும் இதேபோன்ற ஏதாவது காரணங்கள் சொல்லப்பட்டிருக்கலாம்— மறுஉத்தரவாதங்களை வழங்கியிருக்கும் அதேவேளை, அந்த தலையங்கமானது "அன்றைய நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் இடையே சில கலக்கம் உண்டாக்கின்ற ஒற்றுமைகள் உள்ளன" என்பதையும் குறிப்பிட்டுள்ளது. 2014 புவி-அரசியல் உறவுகளுக்கும் மற்றும் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இருந்த புவி-அரசியல் உறவுகளுக்கும் இடையிலான ஒரு சமாந்தரத்தை பைனான்சியல் டைம்ஸ் மட்டும் வரைந்திருக்கவில்லை. ஜனவரி 2இல் பிரசுரமான ஒரு கருத்துரையில் பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் இதழின் பொருளியல் கட்டுரையாளர் ஆம்புரோஸ் எவான்ஸ்-ப்ரிச்சார்ட்,“1914 பேயுரு" திரும்பி வருவதைக் குறிப்பிட்டார். அவர் எழுதுகையில்,“பல்வேறு அரசியல் வெடிகுண்டுகள் எந்தவொரு தருணத்திலும் வெடிக்கக்கூடும் என்பதோடு, ஓர் உலகளாவிய ஆட்சி மாற்றத்திற்கு இடையில் புதிய ஆண்டைக் குறித்து அவ்வளவு சுலபமாக கணிப்பது சாத்தியமில்லை," என்றார். கிழக்கு சீன கடலில் சர்ச்சைக்குரிய சென்காயு/தியாவு தீவுகளின் மீது ஜப்பானின் உரிமைகோரல்களுக்கு சவாலாக சீனாவின் ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் அறிவிப்பை, "முதலாம் உலக யுத்தத்திற்கு முன்னர் பிரிட்டனின் பிரதிபலிப்போடு பரிசோதித்து பார்ப்பதில்" பிரான்ஸுடனான ஜேர்மன் மன்னருடனான சர்ச்சைகளோடு அவர் ஒப்பிட்டார், அவர் தொடர்ந்து எழுதுகையில், “ஆசியாவின் இரண்டு வல்லரசுகள் கிட்டத்தட்ட ஒரு யுத்தத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளன, தொடர்ச்சியான சம்பவங்களில் இருந்து தவறான ஒரு மதிப்பீடு எழுந்தாலும், அது மொத்த பொருளாதார கணிப்புகளையும் தகர்த்துவிடும்,” என்றார். “துணிச்சலான புதிய 2014 உலகம்" என்ற கட்டுரையில், எவான்ஸ்-ப்ரிச்சார்ட், "பிரான்சிஸ் புகூயாமாவின் 'வரலாற்றின் முடிவு' என்பது இனி இல்லை, மாறாக வரலாறு அதன் கோர பற்களோடு திரும்பி வந்துள்ளது,”என்று எழுதுகிறார். முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்புக்கு இட்டு சென்ற ஜேர்மனுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பதட்டங்களை அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் ஆழமடைந்துவரும் மோதல்களோடு ஒப்பிட்ட இதுபோன்ற எத்தனையோ கருத்துரைகளில் இந்த இரண்டு பத்திரிகை கட்டுரைகளும் உள்ளடங்கும். போட்டித் தேசியவாதங்களுக்கு இடையிலான முரண்பாடும் மற்றும் வரலாற்று துன்பங்கரமான நிலைமைகளும் "ஒரு யுத்தத்தை தோற்றுவிப்பதில் 1914இல் இருந்ததை விட இன்று ஒன்றும் குறைந்த சக்தியுடன் இல்லை" என்ற எச்சரிக்கையோடு பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது, “புதிய வல்லரசுகளின் எழுச்சியால் மற்றும் ஒப்பீட்டுரீதியில் பழையவைகளின் வீழ்ச்சியால் உலக அமைப்புமுறை மறுஒழுங்கமைப்பு செய்யப்பட்டால், அபாயங்கள் துல்லியமாக வெளிப்படையாக உள்ளன.” ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை விலையாக கொடுத்து ஜேர்மன் "இந்த கிரகத்தில் அதற்குரிய இடத்தை" கோரி வந்தது. இப்போது, கிழக்கு சீன கடலில் பெய்ஜிங்கிற்கும் அமெரிக்க ஆதரவின் மீது தங்கியுள்ள அதன் அண்டைநாடுகளுக்கும் இடையில் அதிகரித்துவரும் பதட்டங்கள், “1914க்கு முன்னர் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுடன் பதட்டத்திலிருந்த ஜேர்மனியின் உறவுகளை நினைவுபடுத்துகிறது.” வெற்றியாளர்களால் வரலாறு எழுதப்படுகிறது என்ற பழைய பழமொழியை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த யுத்தத்திற்கான "பழியை" அப்போது நிலவிய "உலக ஒழுங்கமைப்பை" தகர்க்க முயன்ற ஜேர்மனியின் முயற்சிகள் மீது சுமத்த விரும்பும் இதுபோன்ற கருத்துரைகளும், மற்றும் அவை இன்று சீனாவின் அதேபோன்ற நடவடிக்கைகளை ஜேர்மனியின் பொறுப் எனக்கூறப்படுவதுடன் ஒப்பிடுவதும், வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் ஆகட்டும் அல்லது தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் ஆகட்டும் இரண்டு விதத்திலும் ஒரு பிழைப்படுத்துலாகும். லியோன் ட்ரொட்ஸ்கி யுத்தமும் அகிலமும் என்ற அவரது அற்புதமான பிரசுரத்தில், 1915இல் எழுதியதைப் போல, முதலாம் உலக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஏகாதிபத்திய எதிராளிகள், "தந்தைநாட்டின் பாதுகாப்பிற்காக" என்ற பதாகையின் கீழ் தங்களின் மக்களை ஒன்றுதிரட்டுவதற்காக, அவர்களின் எதிராளிகளின் மீது யுத்த பழியை சுமத்த விரும்பிய போதினும், ஒட்டுமொத்தமாக யுத்தத்தின் நிஜமான காரணம் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளில் தங்கி உள்ளது, என்று எழுதினார். முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்பிற்கு முன்னரான நான்கு தசாப்தங்கள் விரைவான பொருளாதார விரிவாக்கத்தையும், ஓர் உலகப் பொருளாதார அமைப்புமுறையின் ஸ்தாபகத்தையும் கண்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்முறையானது, இன்று இதை நாம் பூகோளமயமாக்கல் என்கிறோம், ஒரு நிஜமான முற்போக்கு அபிவிருத்தியான மனிதயினத்தின் உற்பத்தி சக்திகளின் உலகளாவிய வளர்ச்சிக்கும் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை எதில் வேரூன்றி உள்ளதோ அந்த போட்டி தேசிய-அரசு அமைப்புமுறை மற்றும் போட்டி வல்லரசுகள் என்பதற்கும் இடையிலான ஓர் அடிப்படை முரண்பாட்டை பாரியளவில் எடுத்துக்காட்டி இருந்தது. ட்ரொட்ஸ்கி எழுதினார், முதலாளித்துவ அரசுகள் "மனிதயினத்தின் அனைத்து உற்பத்தியாளர்களின் அறிவார்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுழைப்போடு" இந்த முரண்பாட்டைக் கடந்து வர முயலவில்லை, மாறாக வெற்றிபெற்ற நாடுகளின் முதலாளித்துவ வர்க்கம் உலகின் பொருளாதார அமைப்புமுறையை சுரண்டுவதன் மூலமாக கடந்து வர முயன்றன.சாரம்சத்தில், "அதன் சொந்த உள்ளார்ந்த முரண்பாடுகளாலேயே அழிக்கப்பட்ட ஒரு பொருளாதார அமைப்புமுறையின் மிக மோசமான வரலாற்று நிலைமுறிவை " அந்த யுத்தம் பிரதிநிதித்துவப்படுத்தியது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான மோதல், முதலாம் உலக யுத்தத்தை எது எழுப்பி விட்டதோ அதே முரண்பாடுகள் மீண்டும் எழுந்துள்ளன என்ற உண்மையின் மிக முக்கிய வெளிப்பாடாகும். மன்னரின் ஜேர்மனியோடு சீனாவை ஒப்பிடும் ஏகாதிபத்திய பிரச்சாரகர்களின் முயற்சிகள் இருந்தபோதினும், சீனா ஓர் ஏகாதிபத்திய சக்தி அல்ல. அது ஏகாதிபத்திய சக்திகளால், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவால் மேலாதிக்கம் செலுத்தப்படும் ஒரு உலக பொருளாதார மற்றும் நிதியியல் அமைப்புமுறைக்குள் செயல்பட்டு வருகிறது. எவ்வாறிருந்த போதினும், பூகோளமயமாகலின் ஒரு புதிய வளர்ச்சிப்படியின் பாகமாக, அதனுடைய பொருளாதார வளர்ச்சி முன்பைவிட மிக வெடிப்பார்ந்த வடிவத்தில், அதாவது உற்பத்தி சக்திகளின் உலகளாவிய அபிவிருத்திக்கும் பிற்போக்குத்தனமாதுமான காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த படுகோரமான யுத்த நடவடிக்கைகளின் பயங்கரமான இடத்தை அணுஆயுத மோதல் பிடிக்கும் என்ற நிலைமைகளின் கீழ், முதலாம் உலக யுத்தத்திற்கு இட்டு சென்ற நடவடிக்கைகளைப் போல, ஏகாதிபத்திய சக்திகள் மற்றொரு பேரழிவுக்குள் மனிதயினத்தை மூழ்கடிக்க தயாரிப்புகளைச் செய்து வருகின்றன. “மதிப்பார்ந்த நினைவார்த்த நடவடிக்கைகளோடு மற்றும் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்பை நினைவுகூர வேண்டியதும், அவ்வாறே 1914-18இன் பேரழிவிலிருந்து பெற்ற பாடங்களை நிதானமாக கவனத்தில் எடுப்பதும் அரசுகள் மற்றும் மக்களின்" கடமையாகும் என்று பைனான்சியல் டைம்ஸ் தலையங்கம் வலியுறுத்தியது. உண்மையில், என்ன திட்டமிடப்படுகிறதென்றால் ஒரு புதிய யுத்தத்திற்கான அத்தியாவசிய கருத்தியல் தயாரிப்புகளில் ஒன்றாக ஏகாதிபத்திய வன்முறையை மேன்மைப்படுத்துவதாகும். பிரிட்டனில், கடந்த ஆண்டு மகாராணியின் வைரவிழாவைக் கொண்டாடியதைப் போல அந்த நினைவாண்டை ஒரு "கொண்டாட்டமாக" மாற்ற பிரதம மந்திரி டேவிட் கேமரூன் அழைப்புவிடுத்துள்ளார், மகாராணியின் வைரவிழா அலங்கரிக்கப்பட்ட ஒன்றிய கொடியசைப்பு (Union Jack flag) மற்றும் வீதியோர கொண்டாட்டங்களால் நிரம்பி இருந்தது. "நமது தேசிய உணர்வை" கைப்பற்ற இருக்கும் "தேசிய ஞாபகார்த்த நிகழ்ச்சிகளுக்காக" சுமார் 50 மில்லியன் பவுண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், ஒரு நான்கு ஆண்டுகால கலைவிழாக்களில் நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட உள்ளன, அது, எதிர்கட்சியான தொழிற்கட்சியால் முற்றிலுமாக ஆதரிக்கப்பட்ட நிலையில், தாராளவாத பிரதம மந்திரி டோனி அபோட்டின் வார்த்தைகளில், “உலகின் மீது ஆஸ்திரேலியா தாக்கம் ஏற்படுத்திய, நம்முடைய அந்த வரலாற்றில் ஒருவேளை எப்போதும் இல்லாத அளவிற்கு அசாதாரண அத்தியாயத்தின்" ஒரு "மக்கள் கொண்டாட்டமாக" இருக்கும். 1914 பேரழிவின் படிப்பினைகளைப் பெறுவதற்கான அவசியம் குறித்து வலியுறுத்தியதற்கு இடையில், பைனான்சியல் டைம்ஸ் ஒரு புதிய உலக யுத்தம் பற்றி நிராகரிக்கவில்லை. “யுத்தம் வெடிக்கிறதென்றால், அதன் முடிவில் ஒரு பாதுகாப்பான அமைதியை ஏற்படுத்துவது இன்றியமையாததாகும்" என்ற ஓர் "இறுதி பாடத்தை" எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது என அது குறிப்பிடுகின்றது. ஒரு மூன்றாம் உலக யுத்தத்தின் முடிவில் (இதற்கான நிலைமைகள் வேகமான முதிர்ச்சி அடைந்து வருகின்றன) ஏற்படக்கூடிய ஒரே "அமைதி", மரணம் மற்றும் ஓர் அணுஆயுத பேரழிவு கால மௌனமாகவே இருக்கும். சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் சொந்த படிப்பினைகளை வரையறுத்து அதன் சுயாதீனமான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். ட்ரொட்ஸ்கி எழுதியதைப் போல, “யுத்தமென்பது அதன் அபிவிருத்தியின் உச்சக்கட்டதில் முதலாளித்துவம் தன்னால் தீர்க்கமுடியாத முரண்பாடுகளைத் தீர்க்க முனையும் ஒரு வழிமுறையாகும். இந்த வழிமுறையை பாட்டாளி வர்க்கம் அதன் சொந்த வழிமுறையை கொண்டு, அதாவது சோசலிச புரட்சி எனும் வழிமுறையால் எதிர்க்கவேண்டும். |
|
|