World Socialist Web Site www.wsws.org |
Oxyana highlights prescription drug epidemic in Appalachia அப்பாலஷியாவில் பரிந்துரைக்கப்படும் மருந்து தொற்றினை Oxyana சித்தரிக்கிறது
By Clement Daly Trust for America’s Health (TFAH) இன் கடந்த மாத அறிக்கை, 1 லட்சம் குடும்பங்களுக்கு 28.9 சதவீதம் என்ற விகிதத்தில், மிகை மருந்து பாவனையால் உயிரிழப்பு ஏற்படுவதில் மேற்கு வெர்ஜினியா, நாட்டில் முன்னணியில் இருப்பதை கண்டுகொண்டது. 1999 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலத்தில், இம்மாநிலத்தின் அபாயகரமான மிகை-போதைமருந்து பாவனை விகிதம் 605 சதவீதமாக அதிகரித்து, 1979 லிருந்து தற்போதைய 1056 சதவீதத்தை எட்டியது. இந்த இறப்புகளுள் பெரும்பான்மையானவை அடிமையாக்கும் வலி நிவாரண மருந்துகளின் துஷ்பிரயோகமே காரணம். திரைப்படைப்பாளியான சீன் டன்னி (1981ல் பிறந்தவர்) தனது ஆவணப்படமான Oxyanaஇல் இந்த மருந்து தொற்றுகளை சிறப்பாக சித்தரித்துள்ளார். இதன் கதை, தென்மேற்கு வெர்ஜினியாவின், வியோமிங் என்னும் மாவட்டத்தில் சிறிய நிலக்கரி சுரங்க நகரமான ஓக்சினாவை மையமாகக் கொண்டது. வலி நிவாரணியான OxyContin இன் அதீத துஷ்பிரயோகமே அந்த நகரத்திற்கு ”Oxyana” என்று புனைப்பெயர் ஏற்பட காரணம். இத்திரைப்படத்தில் அப்பாலஷியாவின் இயற்கை அழகினை அந்த சிறுநகரின் பொருளாதார சீரழிவின் முன்வைத்து துருவப்படுத்தி எடுத்துக்காட்டுகின்றது. மரம் சூழ்ந்த மலைகள் மற்றும் ஓடைகளின் காட்சிகள் பாழடைந்த சிறு குடும்பங்கள் மற்றும் அவர்களது குப்பை-பரவிய சுற்றுப்பகுதி, சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வெறுமையான மற்றும் மூடப்பட்ட கட்டிடங்கள் ஆகியவற்றினால் குழப்பப்பட்டுள்ளமையால் காட்டப்படுகிறது. சில 20 குடும்பங்களின் கதைகளை இத்திரைப்படம் சொல்கிறது. அவர்களுள் பெரும்பாலானோர் மருந்துகளுக்கு அடிமையாகி போராடிக் கொண்டிருப்பவர்கள். நேர்காணல்கள் மிகவும் பாதிப்பேற்படுத்துபவையாக உள்ளன. பிளவுபட்ட குடும்பங்கள், குழந்தைகளை இழந்த நிலையில் தங்களது மருந்து அடிமைத்தனத்திற்காக விபச்சாரிகளாக மாறிய தாய்மார்கள், அடிமைத்தனத்தால் மேம்பாலத்தின் அடியில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு முன்னாள் நிலக்கரி சுரங்க தொழிலாளி, மூளை புற்றுநோயால் கஷ்டப்படுபவரும் தனது மனைவியுடன் வலி மருந்துகளை அதிகம் பயன்படுத்திவரும் ஒருவர் மற்றும் தன் தந்தை தற்கொலை செய்து கொள்வதற்கு முன், மருந்து பற்றிய பிரச்சனையால் எவ்வாறு தாய் மற்றும் இளம் சகோதரனை கொலை செய்தார் என்பதை விவரிக்கும் ஒரு இளைஞர் ஆகியோரை நாம் எதிர்கொள்கிறோம். தனது பட்டப்படிப்பு வகுப்புகளில் பாதி மருந்துகளால் வீணாயிற்று என்று 23 வயதாகும் ஒரு குடியிருப்புவாசி சொல்கிறார். ”நான் பட்டம் பெற்ற இரண்டு வருடங்கள் கழித்து, பரிந்துரைக்கப்படும் மருந்துகளால் எனது நண்பர்களில் 6 பேர் இறந்து போனார்கள் என்று நினைக்கிறேன். மேலும், கடந்த வருடம் மருந்துகளால் இறந்த எனது சிறந்த நண்பர்கள் மூன்று பேரை புதைப்பதற்கும் நான் உதவினேன்” என்கிறார். “அது துயரகரமானது... அவர்களுள் சிலருக்கு குழந்தைகள் இருந்தன, தங்களது அப்பா மிகை மருந்தால் இறந்தார் என்ற உண்மையை அவர்களால் மறக்க முடியாது... மேலும் அது என் நெஞ்சை உலுக்குகிறது” என்று அவர் மேலும் விவரிக்கிறார். அந்த கிராமப்புற பகுதியில் கிடைக்கக்கூடியதாய் உள்ள பொருளாதார அல்லது பொழுதுபோக்கிற்கான வாய்ப்பு மிகவும் குறைவு அல்லது இல்லை என்று இளம் குடியிருப்போர்கள் விளக்குகின்றனர். The Opportunity Nation இன் சமீபத்திய ஆய்வின்படி, மேற்கு வெர்ஜினியாவில், 16 முதல் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு இளைஞர் வேலை செய்வதோ அல்லது பள்ளிக்கு செல்வதோ இல்லை. இது தேசிய சராசரி விகிதத்தை விட கிட்டத்தட்ட 5 சதவீதம் அதிகம். “நீங்கள் சுரங்கத்தில் வேலை செய்யவில்லையென்றால், சுரங்கங்களுக்கு அருகில் ஏதாவதொரு இடத்தில் போதை மருந்துகள் விற்பது மட்டுமே, உங்களுக்கு இருக்கும் ஒரே மாற்று வழி” என்கிறார் ஒருவர். ”பரிந்துரைக்கப்படும் மருந்துகள் ஒரு முறையான பொருளாதாரத்திற்கு மிகவும் மேம்பட்டதாக இருக்கின்ற ஒரு மறைமுகமான பொருளாதாரத்தை எவ்வாறு ஏற்படுத்துகிறது... அதாவது, நல்ல ஊதியம் வழங்காத சேவை பிரிவு வேலைகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். மேலும் அவர்களால் (மருந்துகள் விற்பனையில்) அதிக பணம் சம்பாதிக்க முடியும், பெரும்பாலான சிறுவர்கள் அதைப் பயன்படுத்துகின்றனர்” என்று, ஒரு மருந்திற்கு அடிமையான மகனின் தாயார் விவரிக்கிறார். ஒரு இளைஞரது தந்தையே அவரது குடும்பத்தாரை கொலை செய்திருக்கிறார். அந்த இளைஞர் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என பின்வருமாறு கூறுகின்றார். வாஷிங்டன் டி.சி. மருத்துவருக்கு 1000 டாலர் பணமாக கொடுத்துவிட்டு, அவர்: ஒரு மாதத்திற்கு தேவையான – ஒரு நாளைக்கு 15 என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டிய OxyContin 30-மில்லிகிராம் மாத்திரைகள் 450 மற்றும் 10 மில்லிகிராம் methadone மாத்திரைகள் 200, மற்றும் Adderall மாத்திரைகள் 150 ஆகியவை உள்ளடங்கிய, ஒரு பை நிறைய மாத்திரைகளுடன் வெளியில் வருகிறார். மறு-விற்பனை செய்யப்படும்பொழுது, 100 OxyContin மாத்திரைகள் மட்டும் 4 ஆயிரம் டாலர்கள் விலை மதிப்புடையவை. எவ்வளவு பணம் சம்பாதிக்கப்படுகிறது என்பதை மட்டும் அவர் விளக்குகிறார். அந்த சிறிய கிராமப்புற ஊரில், சில 15 வருடங்களுக்கு முன்பு OxyContin நுழைந்து, பாதுகாப்பாக மற்றும் அமைதியாக இருந்த அவ்வூரை அவநம்பிக்கை சூழ்ந்த பகுதியாக, அதாவது கொலைகள், மிகை மருந்தால் இறப்புகள், திருட்டு, வழிப்பறிகள், வீட்டு வன்முறைகள் மற்றும் குழந்தை புறக்கணிப்பு ஆகியவை அதிக எண்ணிக்கையில் நடக்குமளவுக்கு ஆகியது எப்படி என்பதை அப்பகுதியின் குடியிருப்போர்கள் விவரிக்கிறார்கள். அதிகரித்துவரும், மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடுவதற்காக oxy-cuted என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. மருந்து துஸ்பிரயோகம் என்பது ஒரு சிக்கலான சமூகப் பிரச்சனை. அதில் வறுமையும் மனநல நோயும் ஒன்றுக்கு ஒன்று வலுவூட்டிக் கொள்கிறன. அப்பலாஷியன் நிலக்கரி சுரங்கங்களின் சமூகங்களை குறிப்பாக, அதனை எளிதில் பாதிப்பு ஏற்படும்படி செய்வதற்கு பல காரணிகள் உள்ளன. தென்மேற்கு வெர்ஜினியா மற்றும் கிழக்கு கென்டக்கி போன்ற ஏழ்மையான நிலக்கரி சுரங்க பகுதிகளில், அதிக அளவு கல்வியறிவின்மை, தீவிர வறுமை, மோசமான வாழ்வியல் நிலைமைகள் மற்றும் சில பகுதிகளில் குறைந்த கல்வியறிவு விகிதங்கள் ஆகியவற்றோடு இணைந்து மன அழுத்தம், உடல்பருமன், இதய நோய்கள், நீரிழிவுநோய், புற்றுநோய் மற்றும் மாற்றமுடியாத உடல்வலி ஆகியவையும் காணப்படுகின்றன. உள்ளூர் நிலக்கரி நிறுவன மருத்துவர்களால், நிலக்கரி தொழிலாளிகளை முடிந்தவரையில் நீண்டகாலம் முதுகுமுறியவைக்கும் நிலைமையில் வேலைசெய்யவைக்க பரிந்துரைக்கப்படும் வலி மருந்துகள் பயன்படுத்தப்படுவதின் வரலாறும் இருக்கிறது. நாட்டிலேயே அதிகமாக, ஒரு சராசரி மேற்கு வெர்ஜினியர் வருடத்திற்கு கிட்டத்தட்ட 18 மருந்து பரிந்துரைகள் பெறுகிறார் என்று நோய் கட்டுப்பாடு மையங்களின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகிறது. மருந்து மோசடியின் தனிப்பட்ட அழிவுகள் குறித்து, டன்னி தன் திரைப்படத்தில் கவனம் செலுத்துகிறார், அது உணர்ச்சிகரமான வகையில் வலுவாய் இருந்தாலும், அதன் மூல காரணங்கள் பற்றிய எந்த புறநிலை விளக்கங்களையும் வழங்க தவறுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் எந்த உண்மையான விவரங்களும் இல்லை. ஆயினும், அந்த பகுதியின் ரேலீ சென்ட்ரல் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவர் ஒருவருடனான ஒரு பேட்டியை வெளிப்படுத்தும் காட்சி உட்பட, ஆழமான நெருக்கடியின் ஒரு சில அம்சங்கள் இதில் உள்ளன. “இங்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 150 நபர்களை நாங்கள் பார்க்கிறோம். அநேகமாக தினசரி மரணம் வரை இட்டுச் செல்கின்ற ஒரு மிகைமருந்து பாவிப்பவராவது வருவார்” என்கிறார் மருத்துவர். ஆயினும், அவசர சிகிச்சைப் பிரிவு பணியாளர் வரும்போது ஏற்கெனவே இறந்தவர்கள், அந்த எண்ணிக்கையில் காட்டப்படுவதில்லை. அந்த பகுதியின் பல சுற்று மாவட்டங்களுக்கும் சேவை செய்யும் அந்த மருத்துவமனையின் மழைலைகள் பிறக்கும் அறையில், ”தாயின் மருந்து துஷ்பிரயோகத்தின் காரணமாக, குழந்தைகள் காப்பகத்திலுள்ள பாதி குழந்தைகள், எந்த நேரத்திலும் பக்கவிளைவுகளை தவிர்ப்பதற்காக மெத்தடோனை உள்ளெடுக்கவேண்டி உள்ளன” என்று மேலும் அவர் தெரிவிக்கிறார். “வறுமை, சட்டபூர்வமற்றதன்மை மற்றும் அவநம்பிக்கை ஆகியவற்றுக்கு இட்டுச்சென்றிருக்கும் அடிமை நிலைக்கு கொண்டு செல்கின்ற, மருந்து நிறுவனங்களின் பேராசைதான் அதிகம் பரிந்துரை செய்வதற்கு இட்டுச்செல்கின்றது” என்ற வகையில், Oceana இன் நிலைமையை டன்னி ஒரு “பழக்கப்பட்ட கதையாக” பார்க்கிறார். இந்த அணுகுமுறை யதார்த்தத்தை தலைகீழாக்குவதுடன் அப்பலாஷியாவில் தீவிரமாகிவரும் சமுதாய நெருக்கடிகளுக்கான நிலைமைக்கு அதன் குடியிருப்பாளர்களே காரணம் என கூற முனைவதுபோல் தெரிகிறது. “அமெரிக்க கனவுடன் தவறான அனைத்து விஷயங்களிலும் ஒரு நுண்மாதிரி படிவமாக ஒரு நாடு என்ற முறையில் நமது தோல்விகளை குறிக்கும் ஒரு இடத்தினை இத்திரைப்படம் பிரதிபலிக்கின்றது” என்று டன்னி வலியுறுத்துகிறார். “ஒரு சமயம் திறமையானவர்களாக, கவர்ந்திழுப்பவர்களாக, கடினமாக உழைப்பவர்களாக, கடவுளை நம்புபவர்களாக, சாதாரண மக்களாக இருந்த குடியிருப்புவாசிகள் இந்த மருந்தின் கட்டுப்படுத்த முடியாத வஞ்சக கவர்ச்சியால் ஒன்றுமில்லாதவர்களாகி விட்டார்கள்.” உண்மையில், இந்த மருந்து மோசடி, அமெரிக்காவை சூழ்ந்திருக்கும் சமூக நெருக்கடியின் ஒரு பயங்கர வெளிப்பாடே, மாறாக மக்களின் ஒழுக்க சீர்கேட்டின் வெளிப்பாடல்ல. போதை மருந்து சிகிச்சை வசதிகள் மற்றும் மனநல மருத்துவமனைகளுக்கான வரவு-செலவுத் திட்ட நிதி குறைப்பு செய்யப்படும் வேளையில், இந்த தொற்றினை ஆளும் வர்க்கம் கட்டுப்படுத்த முயற்சித்து வரும் வரையில், அது காவல்துறை மற்றும் சிறைகளுக்கு அதிக பணத்தினை செலவழிக்கிறது. 1 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு மருத்துவ துஸ்பிரயோக சிகிச்சை தேவைப்படுவதாக மத்திய புள்ளிவிவரம் மதிப்பிடும் ஒரு மாநிலமான மேற்கு வெர்ஜினியாவில், 558 மருந்து சிகிச்சை மைய படுக்கைகள் மட்டுமே உள்ளன. அப்பகுதியின் பொருளாதார மேம்மாடுகளை நெருக்குவதில் நிலக்கரி நிறுவனங்களின் பங்களிப்பை அல்லது கடந்த அரை நூற்றாண்டுகளாக, எந்திரமயமாக்கல் மற்றும் பூகோளமயமாக்கலின் பேரழிவுமிக்க தாக்கங்களை டன்னியின் Oxyana திரைப்படம் ஆராயத் தவறிவிடுகின்றது. இத்திரைப்படத்தின் சுறுசுறுப்பான நிலக்கரி சுரங்க காட்சிகள், செழித்துவரும் நிலக்கரி தொழிற்துறை வேலை செய்ய விரும்புபவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான நல்ல- சம்பளம் கொடுக்கப்படும் வேலைகளை கொடுக்கின்றது என்ற வெளிப்பாட்டை கொடுக்கின்றது. பரிந்துரைக்கப்படும் மருந்து மோசடியினால் பெரும் செல்வத்தை குவித்திருக்கும் மருந்து தொழிற்சாலைகளின் பங்களிப்பு குறித்து மட்டுமல்ல, அதுபோன்ற சக்திவாய்ந்த மருந்துகளுக்கு அங்கீகாரம் கொடுத்திருப்பதன் மூலம் இந்த தொற்றுக்கு வசதி செய்து கொடுத்திருக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் டன்னியின் திரைப்படம் மௌனம் சாதிக்கிறது. பல வழிகளில் பரிந்துரைக்கப்படும் மருந்துமோசடி, தொற்றின் மையமாக இருந்தாலும், அதிகரித்துவரும் துஸ்பிரயோக பதிவுகளில் மத்திய அப்பலாஷியா தனித்திருக்கவில்லை. 6 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை தவறாக பயன்படுத்துகின்றனர். அதனால், அமெரிக்காவில் காயம் மற்றும் இறப்புகளுக்கான முக்கிய காரணமான மோசமான வாகன விபத்துகளைக் காட்டிலும், தேசிய அளவில் 1999லிருந்து மிகை-மருந்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காகியுள்ளது என்று TFAH தெரிவிக்கிறது. இவ்வாண்டுக்கான டிரிபெகா திரைப்பட விழாவில் தனது முயற்சிக்காக சிறந்த புதிய ஆவணப்பட இயக்குனருக்கான விருதை டன்னி பெற்றிருக்கிறார். www.oxyana.com. இல் இத்திரைப்படத்தை காணலாம். |
|