World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egyptian junta launches deadliest crackdown in months

எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு மாதங்களில் மிக வன்மையான அடக்குமுறையை தொடங்குகிறது

By Johannes Stern 
6 January 2014

Back to screen version

ஜனவரி 25 எகிப்திய புரட்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவை அடைகையில் மற்றும் எகிப்தின் புதிய அரசியலமைப்பிற்கு ஜனவரி நடுவில் வாக்கெடுப்பு  இருக்கையில், எகிப்தின் இராணுவ ஆட்சிக்குழு அதன் ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் வன்முறையில் அடக்குவதற்கு தீவிரமாகிவிட்டது.

வெள்ளியன்று பாதுகாப்பு படைகள், முஸ்லிம் பிரதர்ஹுட் (MB) தலைமையிலான, ஆட்சி சதிக்கு எதிராக எதிர்ப்பை தெரிவிக்க எதிர்ப்புக் கூட்டணி விடுத்த ஆர்ப்பாட்டங்களை வன்முறை கொண்டு தாக்கினர், இதல் குறைந்த பட்சம் 14 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர், 62 பேர் காயமுற்றனர். சுகாதார அமைச்சரக அறிக்கையின்படி, ஐந்து பேர் கெய்ரோவில் கொல்லப்பட்டனர், சூயஸ் கால்வாய் நகர இஸ்மைலியாவில் 2 பேர், அலெக்சாந்திரியாவில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர், எஞ்சிய இறப்புக்கள் பெயோம் மற்றும் மின்யாவில் நிகழ்ந்தன.

பாதுகாப்புப் படையினர் பலமுறையும் உண்மைத் தோட்டாக்களை எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது. பேயோம் மாநிலத்தின் உள்ளூர் சுகாதார அமைச்சரக அதிகாரி, மேட்ஹட் சுக்ரி ராய்ட்டர்ஸ் இடம் ஒரு மாணவர் உட்பட மூன்று எதிர்ப்பாளர்கள் தோட்டாக் காயங்களினால் இறந்துபோனார்கள் என்றார். மற்றும் ஒரு பல்கலைக்கழக மாணவர் தெற்கு மின்யா சிறு நகரில் நடந்த மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மிகக் கடுமையான மோதல்கள் கெய்ரோவிலும், நைல் மேற்குக்கரையில் உள்ள அண்டை கிசாவிலும் நடைபெற்றன. கெய்ரோ மாவட்ட நாசர் நகரத்தில் அதிக ஆயுதங்கள் கொண்ட கலகப்பிரிவு பொலிசார் எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டை வீசினர்; பிந்தையவர்கள் தங்களை வெடிகள், கற்களால் காத்துக் கொண்டனர். மாடி, அல் ஹரம், அல்ப் மஸ்கன் அண்டைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான மோதல்கள் இரவு வெகுநேரம் வரை நீடித்தன.

மோதலின்போது, நூற்றுக்கணக்கான MB உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். 258 பேருக்கும் மேலானவர்களைக் காவலில் வைத்துள்ளதாக பொலிசார் கூறினர்உள்துறை அமைச்சரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு 122 பேர் ஆயுதங்கள் வைத்திருந்ததற்கு கைது செய்யப்பட்டனர் எனக் கூறியுள்ளது.

வெள்ளி வன்முறை, அக்டோபர் 6 க்குப்பின் மிகவும் கொடூரமானதாகும்; அப்பொழுது பாதுகாப்புப் படையினர் 60 பேருக்கும் மேலான ஆட்சி விரோத எதிர்ப்பாளர்களை, 1973 அக்டோபர் போர் துவக்க 40ம் ஆண்டு நினைவு தினத்தில் கொன்றனர். இது இராணுவ ஆட்சி கடந்த நவம்பர் கடைசியில் கொண்டுவந்த எதிர்ப்பிற்கு எதிரான சட்டத்தின் கீழ் வந்துள்ளது; ஒரு புதிய அரசியலமைப்பு இராணுவ ஆட்சியைத் திறனுடன் இயற்றியுள்ளது. டிசம்பர் 25ம் திகதி இராணுவ ஆதரவுடைய இடைக்கால அரசாங்கம் MB ஐ ஒரு”பயங்கரவாத அமைப்பு” என அறிவித்தது.

ஜனாதிபதி மகம்மது முர்சியை அகற்றிய  ஜூலை 3 இராணுவ ஆட்சி மாற்றத்திற்குப் பின், ஆட்சிக்குழு “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று கூறப்படுவதை மறைப்பாக பயன்படுத்தி இஸ்லாமியவாத போட்டியாளர்களை நசுக்கவும், இராணுவ, பொலிஸ் கருவிகளின் அதிகாரங்களை, நீண்டகால சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை அகற்றவதற்கு முன் இருந்த நிலைக்குக் கொண்டுவரவும் முயன்றுள்ளது.

ஆட்சிக்குழு இப்பொழுது MB ஐ அழித்து, எகிப்திய சமூகத்தில் அதன் செல்வாக்குக் கோட்டைகளையும் தகர்க்க முற்பட்டுள்ளது. MB குழுவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் பொறுப்பு ஒரு குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது MB இன் மிக்குயர் வழிகாட்டி Mohamed Badie மற்றும் அவருடைய உதவியாளர்கள் Kheirat Al-Shater, Rashad Bayoumi, Mahmoud Ezzat, Gomaa Amin இன்னும் அதன் வழிகாட்டுப் பிரிவில் பல உறுப்பினர்கள் உட்பட 700 முக்கிய உறுப்பினர்களின்  சொத்துக்களையும் முடக்கிவிட்டது.

இக்குழு, MB யுடன் இணைந்துள்ள 87 பள்ளிகளையும் கல்வி அமைச்சரகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது; அவ்காப் அமைச்சு (சமய அறநிலைய) முன்பு இஸ்லாமிய அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பல மசூதிகளையும் எடுத்துக் கொண்டுள்ளது.

கடந்த நாட்களில் நீதிபதிகள் சிறையில் இருந்த MB தலைவர்களுக்கு விசாரணைத் தேதிகளை நிர்ணயித்தனர். புதன் அன்று முர்சிக்கு எதிரான விசாரணை மீண்டும் தொடங்க உள்ளது, இரண்டாவது ஜனவரி 28ல் தொடங்கும். அவரும் பிற MB உறுப்பினர்களும், அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கு எதிராக டிசம்பர் 2012ல் வன்முறையை தூண்டியது, 2011 எழுச்சியின் போது சிறையில் இருந்து தப்பியது, மற்றும் எகிப்திற்கு எதிராக “பயங்கரவாத சதித்திட்டத்தை” கொண்டது ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர். இக்குற்றச்சாட்டுக்கள் மரண தண்டனையை அளிக்கக்கூடும்.

எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டியது என்று முர்சியையும் பிற முக்கிய MB தலைவர்களையும் விசாரணை நடத்தும் இராணுவ ஆட்சிக்குழுவே குறைந்த பட்சம் 1,500 ஆட்சிக்குழு எதிர்ப்பாளர்களைக் கொன்றுள்ளது, ஆயிரக்கணக்கானவர்களை காயப்படுத்தியுள்ளது. ஆட்சிக்குழுத் தலைவர் ஜெனரல் Abdel Fattah al-Sisi பாதுகாப்பு மந்திரி, உள்துறை மந்திரி மகம்மது இப்ராஹிம் இருவரும் முர்சியின் கீழ் பணியாற்றினர்: அவ்வகையில் முர்சியின் ஜனாதிபதிக் காலத்தில் எதிர்ப்பாளர்களை நேரடியாக அடக்கியதில் தொடர்பு கொண்டவர்கள்.

இராணுவ ஆட்சிக்குழு, புரட்சிக்கான முக்கிய சமூக சக்தியாக இருந்த தொழிலாள வர்க்கத்தின் புதிய வெடிப்பை தடுக்க ஒரு பயங்கரவாத சூழலை தோற்றுவிக்க முயன்று வருகிறது. ECESR எனப்படும் எகிப்திய சமூக, பொருளாதார உரிமைகள் மையம் சமீபத்தில் புள்ளி விவரங்களை வெளியிட்டு 2013ல் 2,486 தொழிலாளர்கள் காவலில் வைக்கப்பட்டனர் என்பதைக் காட்டியுள்ளது. முர்சியின் கீழ் 2243 பேர் கைது செய்யப்பட்டனர், இராணுவ ஆட்சிக்குழுவின் கீழ் 243.

ஆட்சிமாற்றத்திற்குப் பின், எதிர்ப்புக்கள் குறைந்தன, ஆனால் சமீபத்திய மாதங்கள் பல முக்கிய தொழிலாள வர்க்க எதிர்ப்புக்களைக் கண்டுள்ளது. முக்கியமாக அக்டோபர் மாதம் மகல்லா ஜவுளித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், கடந்த மாதம் சுகரி தங்க சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்; தற்பொழுது எகிப்திய இரும்பு, எஃகு நிறுவனத்தின் 5000 எஃகுத் தொழிலாளர்கள் ஹெல்வில அதிக ஊதியங்கள் மற்றும் உற்பத்திக்கான மேலதிக கொடுப்பனவுகளுக்காக உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்கின்றனர் கடந்த புதன் அன்று எகிப்திய டாக்டர்களும் பகுதி வேலைநிறுத்தம் அறிவித்தனர்; அதிகப்பட்ச குறைந்த ஊதியம், தேசிய சுகாதார வரவு-செலவுத் திட்டத்தில் 3.5%ல் இருந்து 15% அதிகரிப்பு ஆகியவற்றைக் கோரி.

நவம்பர் ECESR தகவல்படி—அம்மாதம்தான் எதிர்ப்புகளுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது—ஆட்சி மாற்றத்திற்குப்பின் மிக அதிக தொழிலாளர்களின் எதிர்ப்புக்களைக் கண்டுள்ளது.

பெருகும் இந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு இடையே இராணுவ ஆட்சிக்குழு ஜூலை 3 ஆட்சி சதிக்கு ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்த அரசியல் குழுக்களின் செயலர்கள் மீது வன்முறையை அதிகப்படுத்தியுள்ளது. அவை ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம், மற்றும் போலி இடதான புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் ஆகிய அமைப்புக்கள் ஆகும்.

ஞாயிறு அன்று கிசா குற்றவியல் நீதிமன்றம் நிறுத்தி வைக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை, முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரின் ஜனாதிபதி பிரச்சார தலைமையகத்தை தாக்கியதற்கு, (கடைசியாக முபாரக்கின் பிரதமராக இருந்த தளபதி அஹமத் ஷபிக் உடையது), நடவடிக்கையாளர் ஆலா அப்டெல் பட்டா, அவருடைய சகோதரி மோனா சீப்பிற்கு அளித்துள்ளது. பட்டா எதிர்ப்புகளுக்கு எதிரான சட்டத்தை மீறியதற்காக நவம்பர் 28ல் கைது செய்யப்பட்டார்.

கடந்த வியாழன் அன்று ரமல் மிஸ்டெமனர் நீதிமன்றம் அலெக்சாந்திரியாவில் உள்ள ஒன்பது நடவடிக்கையாளர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50,000 எகிப்து பவுண்டுகளை (அமெரிக்க $7184)அபராதமாகவும் தீர்ப்பளித்தது. RS உறுப்பினர் மகினுர் ஈமச்ரி உட்பட நடவடிக்கையாளர்கள் எதிர்ப்புச் சட்டத்தின் 19வது விதியின் கீழ் 10 ஆண்டுகள் சிறை, 50,000 எகிப்திய பவுண்டுகள் ($72,500) என கடுமையான தண்டனைகளை பெற்றனர்.

முந்தைய வாரம் ஒரு நீதிமன்றம், ஏப்ரல் 6 இளைஞர் இயக்க நிறுவனர்கள் அஹ்மத் மகிர், முகம்மத் அடெல் மற்றும் அஹ்மத் டௌமாவிற்கு சட்டத்தை மீறியதற்கு, பொலிஸ் அதிகாரிகளை தாக்கியதற்கு என மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கியது.

ஏப்ரல் 6 மற்றும் RS ஆகியவை தற்பொழுது இஸ்லாமிய வலுவான எகிப்துக் கட்சி, முன்னாள் MB தலைவர் அப்தெல் மோனிம் அபௌல் போடௌ உடன் புரட்சிகர பாதை முன்னணியும் (RPF) சேர்ந்துள்ளனர். RPF, ஆட்சிக்குழுவின் வன்முறை மற்றொரு தொழிலாள வர்க்க வெடிப்பை தூண்டலாம் என்ற கவலையைக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் ஆட்சி சதியை ஆதரித்தாலும், இப்பொழுது அவர்கள் எகிப்திய ஆளும் உயரடுக்கின் பிரிவுகளுடன் சமரசத்தை நாடுகிறனர்; இது தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்த ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

எகிப்தில் உள்ள வசதிபடைத்த மத்தியதர வர்க்கப் பிரிவின் எதிர்ப் புரட்சி பாத்திரம் மிகவும் வெளிப்படையாக புதிதாக நிறுவப்பட்டுள்ள “ஜனநாயகம், சமூக நீதிக்கான சக்திகள்” என்பதில் வெளிப்படுத்தப்படுகிறது. இக்கூட்டணியில் பல நாசரிச, ஸ்ராலினிச, போலி இடது குழுக்கள் RPF ன் செயலர்கள் தமரோட் இயக்கத்துடன் முன்பு தொடர்பு கொண்டவை உள்ளன-- எகிப்திய கம்யூனிஸ்ட் கட்சி, எகிப்திய சோசலிச கட்சி, Kifaya இயக்கம், சோசலிஸ்ட் அலையன்ஸ் கட்சி மற்றும் Tagammu கட்சி.

தவறான பெயருடைய இக்கூட்டணி இழிந்த முறையில், ஆட்சிமுறையின் வன்முறையை “ஜனநாயகம், சமூக நீதி தேசிய சுதந்திரத்தின்” போராட்டத்தின் ஒரு பகுதி எனப் பாராட்டியுள்ளது. கடந்த வியாழன் அன்று அதன் நிறுவன மாநாட்டில் கட்சி அனைத்துச் சக்திகளையும் ஆட்சியின் பிற்போக்குத்தன அரசியலமைப்பிற்கு வாக்களித்து, “மில்லியன் கணக்கான எகிப்தியர்களை முஸ்லிம் பிரதர்ஹுட்டின் பயங்கரவாதத்தை சமாளிக்க” திரட்டுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.