சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The launch of the Obamacare counterrevolution

ஒபாமாகேர் எதிர்புரட்சி தொடங்கியது

Kate Randall
3 January 2014

Use this version to printSend feedback

நோயாளிகள் பாதுகாப்பு மற்றும் கட்டுபடியாகக்கூடிய மருத்துவ-காப்பீட்டு சட்டத்தின் கீழ் (Affordable Care Act - ACA) தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் விற்கப்படும் திட்டங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசின் இணைய தளம் HealthCare.gov பிரச்சனைக்குள்ளாகியிருந்த காலத்தையும் சேர்த்து, அக்டோபர் 1இல் இருந்து காப்பீட்டு பரிவர்த்தனை மையங்களில் 2 மில்லியனுக்கும் மேலான மக்கள் காப்பீட்டைப் பதிவு செய்திருப்பதாக அரசு மதிப்பிடுகிறது. ஒபாமகேர் திட்டத்தின் கீழ் புதிதாக காப்பீடு செய்திருப்பவர்கள் இப்போது அவர்களின் புதிய காப்பீட்டைப் பயன்படுத்தி மருத்துவர்களைச் சந்திக்கவும், அவசரகால முதலுதவிஅறைகளைப் பயன்படுத்தவும் மற்றும் மருந்து பரிந்துரைகளை பூர்த்திசெய்யவும் தொடங்கி உள்ளனர்.    

உலக சோசலிச வலைத் தளம் 2009, ஜூலை 28இல் பராக் ஒபாமா குறித்து பின்வருமாறு எழுதியது: மருத்துவ காப்பீட்டு முறையைச் செப்பனிடுவதற்கான அவரது உந்துதலானது, அனைவருக்கும் காப்பீடு வழங்குவது மற்றும் இன்னும் தரமான கவனிப்பைப் பெற வழிவகுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சீர்திருத்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து விலகி நிற்கிறது. அது உழைக்கும் மக்களுக்கான மருத்துவக் காப்பீடு மீது முன்னொருபோதும் இல்லாத ஒரு தாக்குதலைக் குறிக்கிறது.... அது மருத்துவ காப்பீடு துறையில் செய்யப்பட்ட ஓர் எதிர்புரட்சியாகும், பிரமாண்டமான மருந்து நிறுவனங்களின், பெரிய காப்பீட்டு நிறுவனங்களின் மற்றும் சங்கிலி போன்று இயங்கும் மருத்துவமனைகளின், அத்தோடு பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்காக அது செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தின் கட்டணம் மற்றும் தரம் குறித்து இதுவரையில் தெரிய வந்துள்ள ஒவ்வொரு விடயமும், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் என்ன எழுதினோமோ அதை உறுதிப்படுத்துகின்றன:

·         ஒபாமாகேர் பரிவர்த்தனை மையங்களில் தனியார் காப்பீடு நிறுவனங்கள் தற்போதைய தனிநபர் சந்தையில் இருப்பதை விடவும் சுமார் 30 சதவீதம் அதிகமாக உயர்ந்த காப்பீட்டு கட்டணங்களை வசூலிக்கின்றன.

·         குறைந்தபட்ச கட்டணத்தைக் கொண்ட "வெண்கல பிரிவு" திட்டங்கள் (bronze plans) கழிப்பதற்குரிய தொகையாக அதிகபட்சமாக தனிநபர்களுக்கு 6,350 டாலர்களையும் மற்றும் குடும்பங்களுக்கு 12,700 டாலர்களையும் கொண்டுள்ளன, அதுவும் பெரும்பாலான காப்பீடுகளில் காப்பீட்டு காலம் தொடங்குவதற்கு முன்னரே முழுத்தொகையையும் செலுத்தி ஆக வேண்டும்.

·         காய்ச்சல், குழந்தைகளின் நோய்கள் அல்லது காயங்களுக்கான சிகிச்சை உட்பட இவை போன்றவற்றிற்கு மருத்துவர்களை சந்திக்கும் மருத்துவ செலவில் தமக்குரிய பங்கை முழுவதுமாக செலுத்த வேண்டுமென பெரும்பாலான வெண்கல பிரிவு திட்டங்கள் கோருகின்றன.

·         மருத்துவர் சந்திப்பிற்கான துணை-கட்டணங்கள், தற்போதைய தனிநபர் சந்தையில் உள்ள 28 டாலரோடு ஒப்பிடுகையில், வெண்கலப் பிரிவு திட்டங்களில் 41 டாலராக உள்ளன.

·         வெண்கலப் பிரிவின் பல திட்டங்கள், பரிந்துரைக்கப்பட்ட சில குறிப்பிட்ட மருந்துகளின் விலைகளில் ஏறக்குறைய 40 சதவீதத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கோருகின்றன. பல விலையுயர்ந்த மருந்துகள், திட்டங்களின் மருந்துப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதால் அவை காப்பீட்டின் கீழ் வராது.

·         காப்பீட்டு நிறுவனங்கள் அவற்றின் திட்டங்களில் தேர்ந்தெடுப்பதற்குரிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை கணிசமான அளவிற்கு மட்டுப்படுத்தி வைத்துள்ளன; பல மாநிலங்களில், ஒன்று அல்லது இரண்டு மருத்துவமனைகள் மட்டுமே ஒபாமாகேர் வலையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

இத்தகைய காரணிகள் அனைத்துமே காப்பீட்டை விரிவாக்குவன அல்ல, அதை அணுகுவதைத் தடுக்கும் விளைவுகளை கொண்டிருக்கும். தொடக்கத்தில் இருந்தே மருத்துவ காப்பீட்டு "சீர்திருத்தம்" அரசு மற்றும் பெருநிறுவனங்களுக்கு செலவுகளை வெட்டும், குறைந்த மருத்துவ கவனிப்பை ஏற்படுத்தும் மற்றும் பரந்தளவில் பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு பங்கீடு செய்யும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஜனாதிபதியின் மருத்துவ காப்பீடு துறையைச் செப்பனிடும் நடவடிக்கையானது, "ஏறத்தாழ அனைவருக்கும்" தரமான மற்றும் கட்டுபடியாகின்ற மருத்துவ காப்பீட்டை ஏதோவொரு விதத்தில் வழங்குவதோடு சம்பந்தப்பட்டுள்ளது என்ற ஒபாமா நிர்வாகத்தின் வாதங்கள் ஒரு சிடுமூஞ்சித்தனமான பொய் என்றரீதியில் அம்பலப்பட்டுள்ளது.

ஒபாமாகேர் திட்டத்தின் மைய உட்கூறான "தனிநபர் விருப்பு" (individual mandate) என்பதற்கு மருத்துவ பராமரிப்பு திட்டம் (Medicare) அல்லது மருத்துவ உதவித்திட்டம் (Medicaid) போன்ற அரசு திட்டத்தை பெறாதவர்களாகவோ அல்லது அவரவர்களின் தொழில் வழங்குனர் மூலமாக காப்பீடு பெறாதவர்களாகவோ இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு தகுதி உடையவர்களுக்கு மட்டும் பரிவர்த்தனை மையங்களில் இருந்து தனியார் காப்பீடு நிறுவனங்கள் மூலமாக காப்பீடைப் பெற குறைந்த மானியங்கள் கிடைக்கும். காப்பீடுகளைப் பெற சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் பெறுகின்ற காப்பீட்டு திட்டங்களில் எவ்வளவு வசூலிக்க வேண்டுமென்பதை உண்மையில் அரசு மேற்பார்வையிடுவது எதுவுமில்லை.

புதிதாக பதிவு செய்பவர்கள் ஒபாமாகேர் திட்டத்தால் கடுமையான அதிர்ச்சியை எதிர்கொண்டிருக்கின்ற வேளையில், தனியார் காப்பீட்டு நிறுவனங்களோ இலாப கொழிப்பைக் கொண்டாடி கொண்டிருக்கின்றன. ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் குறியீடு மதிப்பு 2013இன் மூன்றாம் காலாண்டில் 43 சதவீதம் உயர்ந்தது. மார்ச் 2010இல் ACA நிறைவேற்றப்பட்டதில் இருந்து, காப்பீட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த பங்கு மதிப்பு 200இல் இருந்து 300 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது பெரும்பாலும் ஏனென்றால் தொழில் வழங்குனரால் வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டு சந்தையில் காப்பீட்டு நிறுவனங்கள் தவணைத் தொகைகளை உயர்த்தி வருவதால் ஆகும், இந்த ரீதியில் தான் பெரும்பாலான அமெரிக்க தொழிலாளர்களும், அவர்களும் குடும்பங்களும் காப்பீடு செய்துள்ளனர்.

குறைந்தபட்சம் 1980'களின் இறுதியில் இருந்தே தொழில் வழங்குனர்கள் அவர்களின் மருத்துவ காப்பீட்டு செலவுகளை தொழிலாளர் மீது மாற்றி வருகின்றன. தற்போது, கட்டுபடியாகக்கூடிய மருத்துவ காப்பீட்டு சட்டம் இன்னும் அதிரடியான மாற்றங்களைச் செய்வதற்கான கட்டமைப்பையும் மற்றும் உந்துதலையும் வழங்கி உள்ளது.

காப்பீட்டு தவணைத் தொகையில் பணியாளர்களின் பங்கை தொழில் வழங்குனர்கள் உயர்த்தி வருவதோடு, காப்பீட்டில் கழிப்பதற்குரிய தொகைகளையும் மற்றும் ஏனைய செலவை-பகிர்ந்து கொள்ளும் இயங்குமுறைகளையும் அதிகரித்து வருகின்றனர். ஒபாமாகேர் சந்தையைப்போல், சில தொழில் வழங்குனர்கள் தங்களின் பணியாளர்களை தனியார் பரிவர்த்தனை மையங்களில் காப்பீடுசெய்ய மாற்றி வருகின்றனர், அதேவேளையில் இன்னும் சிலர் அவர்களின் காப்பீட்டு சலுகையையே ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டு, தொழிலாளர்களை அவர்களைஅவர்களே தனியார் சந்தையையோ அல்லது ACA திட்டத்தையோ சார்ந்திருக்க விட்டுவிடுகின்றனர்.

ஜனாதிபதியின் முன்மாதிரியான உள்நாட்டு திட்டம் 2014இல் தொடங்கி இருப்பதானது, அவரது நிர்வாக தலைமையின் கீழ் செய்யப்பட்ட கண்மூடித்தனமான சமூக வெட்டுக்களின் ஓர் ஆண்டைப் பின்தொடர்ந்து வந்துள்ளது. கடந்த மார்ச்சில் தொடங்கிய "ஒதுக்கீடு வெட்டுக்கள்" மூலமாக வறுமை-ஒழிப்பு திட்டங்கள் மற்றும் கல்வி மற்றும் ஏனைய சமூக சேவைகளில் இருந்து பத்து பில்லியன் கணக்கான டாலர்களின் வெட்டுக்கள்; அக்டோபரில் நடந்த அமெரிக்க அரசு முடக்கம்; நவம்பர் 1இல் தொடங்கிய SNAP எனும் உணவுப்பொருள் மானிய கூப்பன் திட்டத்தில் வெட்டுக்கள் ஆகியவை அதில் உள்ளடங்கும்; பெரும்பாலான ஒதுக்கீடு வெட்டுக்களை நடைமுறையில் விட்டுவைத்த அதேவேளையில் பெடரல் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய தேட்டங்களை வெட்டிய வரவு-செலவு திட்டம் மீதான டிசம்பர் 11 இருகட்சி உடன்படிக்கையும் அதில் உள்ளடங்கும். தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்த வக்கிரமான தாக்குதல், நீண்டகால வேலையின்மையில் இருக்கும் 1.3 மில்லியன் தொழிலாளர்களுக்கான வேலையின்மை தேட்டங்களின் கிறிஸ்துமஸ்-கால வெட்டுடனும் சேர்ந்து நிற்கிறது.

ACA சட்டம் நிறைவேற்றப்பட்ட அந்த சமயத்திலேயே உலக சோசலிச வலைத் தளம் எழுதியதைப் போல: மருத்துவ காப்பீட்டை செப்பனிடுதல் என்பது சமூக பிற்போக்கு என்னும் இந்த பாலைவனத்தில் பாலைவனச் சோலையை நோக்கிய முன்னேற்றமாகும் என்ற வாதம் வெறுமனே ஒரு பொய்யாகும்.

ஒபாமாகேர் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் என்பது ஒபாமா நிர்வாகத்தால் தாக்குமுகப்பாக எடுக்கப்பட்ட மற்றும் இரண்டு பெரு-வர்த்தக கட்சிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு சமூக எதிர்புரட்சியின் ஓர் உள்ளார்ந்த பாகமாகும். ஒபாமாகேர் திட்டத்தில் அங்கே ஏதோசில "முற்போக்கான" சாரம் இருக்க வேண்டும் எனவாதிட்ட நியூயோர்க் டைம்ஸ் மற்றும் போலி-இடதுகள் மற்றும் பல்வேறு நிறங்களைக் கொண்ட "தாராளவாதிகள்" போன்ற அனைவருமே முற்றிலும் பிற்போக்குத்தனமானவையாக அம்பலப்பட்டு உள்ள ஒரு சமூக நிகழ்ச்சிநிரலுக்கான அரசியல் பொறுப்பை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இதன் தாக்கங்கள் நீண்டகாலம் நீடிக்க கூடியவை ஆகும். ஒபாமாகேரின் தனிநபர் விருப்பம் எனும் உட்கூறு முக்கியமாக ஒரு கூப்பன் முறையை உருவாக்குகிறது. அதன்படி தனியார் நிறுவனங்களிடம் இருந்து காப்பீடு பெற துணையாக தனிநபர்களுக்கு குறைந்தபட்ச அரசு மானியங்கள் வழங்கப்படுகிறது. கடுமையான தொழிலாள வர்க்க போராட்டங்கள் மூலமாக ஆளும் வர்க்கத்திடமிருந்து பறித்தெடுத்த முக்கிய அரசு திட்டங்களான மருத்துவ பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை தனியார்மயமாக்க, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் அரசியல்வாதிகள் ஒன்றுபோல இந்த மாதிரியை வீணாக்காமல் கைப்பற்றுவார்கள்.

அத்தகைய அனைவருக்கான அரசு திட்டங்கள் காலங்கடந்து நிற்பதாகவும், திவால்நிலைமைக்கு இட்டு செல்வதாகவும் மற்றும்  "வாடிக்கையாளர்களுக்கு" நிறைய வாய்ப்புகளை வழங்குவதாக கருதப்படும் அதிகளவிலான "நவீன" சந்தை-சார்பு இயங்குமுறைகளைக் கொண்டுஅதாவது ஒபாமாகேர் திட்டத்தைக் கொண்டு!—அவற்றை மாற்றி அமைக்க வேண்டுமென்றும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வாதிடக்கூடும். மருத்துவ பராமரிப்பு மற்றும் முதியோர்களுக்கான ஓய்வூதியங்கள் அகற்றப்படுவதைக் குறித்தோ, அல்லது அதன் விளைவாக, மருத்துவ காப்பீடு தொழில்துறை மற்றும் பெருநிறுவனங்களுக்கு கிடைக்கும் பெரும் இலாபத்தின் அதிருஷ்டம் குறித்தோ அங்கே மிக குறைவாகவே பேசப்படும்.    

மருத்துவ காப்பீட்டு எதிர்சீர்திருத்தத்தின் நிஜமான தாக்கங்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு தெளிவாகத் தெரிகின்ற நிலையில், தவிர்க்கவியலாமல் பாரிய கோப உணர்வையும் மற்றும் காட்டுக்கொடுக்கப்பட்டுவிட்டோம் என்பதையும் எதார்த்தம் தூண்டிவிடும். இருந்த போதினும், மக்கள் எதிர்ப்பானது தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளுக்கான சளைக்காத போராட்டத்தைக் கொண்ட ஒரு வேலைதிட்டத்தில் அதன் வெளிப்பாட்டைக் காண வேண்டும்.

தற்போது மருத்துவக் காப்பீடு தொழில்துறையின் மற்றும் வாஷிங்டனில் உள்ள அதன் அரசியல் அடிவருடிகளின் இலாப உந்துதல்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க மருத்துவ காப்பீடு அமைப்புமுறையின் உண்மையான சீர்திருத்தத்திற்கு, அது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அந்த வேலைத்திட்டம் ஓர் ஒட்டுண்ணித்தனமான மேற்தட்டை கொழிக்க வைப்பதில் இருந்து அல்லாமல், மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இருந்து தொடங்குகிறது.