சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The political lessons of the UAW debacle in Tennessee

டென்னெஸ்ஸியில் UAW தோல்வியின் அரசியல் படிப்பினைகள்

Jerry White
27 February 2014

Use this version to printSend feedback

டென்னெஸ்ஸியின் சட்டாநூகாவில் உள்ள வோல்ஸ்வேகன் ஆலையில் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பில் ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் (UAW) தோல்வியானது, தாராளவாத மற்றும் போலி-இடது பிரசுரங்களிடமிருந்து பெருமளவிலான அனுதாபங்களை மற்றும் அவநம்பிக்கைகளைக் கொண்டு வந்துள்ளது.

நியூ யோர்க் டைம்ஸ், தி நேஷன், தி அமெரிக்கன் புரோஸ்பெக்ட், இன் தீஸ் டைம்ஸ், லேபர் நோட்ஸ், சோசலிஸ்ட் வொர்க்கர்ஸ் மற்றும் ஏனைய பிரசுரங்களும், கடந்த இரண்டு வாரங்களில், UAWஐ அங்கீகரிப்பதற்கு எதிராக கிடைத்த 712-626 வாக்குகளை வோல்ஸ்வேகன் தொழிலாளர்களின் மற்றும் பரந்தளவில் அமெரிக்க தொழிலாளர்களின் தோல்வியாக குணாம்சப்படுத்தி உள்ளன.

தொழிற்சங்க தலைமையின் கருத்துக்களையே எதிரொலிக்கின்ற விதத்தில், அவற்றின் சொல்லாடல்களின்படி, UAW ஒரு "முற்போக்கான" அமைப்பாக உள்ளது; அதன் தோல்வி அமெரிக்காவின் தெற்கு பகுதி தொழிலாளர்களின் பின்தங்கிய நிலைமைகளின் மீது தொழிற்சங்க விரோத குடியரசு கட்சியினரால் உண்டாக்கப்பட்ட விளைவாக உள்ளது; மற்றும் அந்த தொழிலாளர்களின் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்க அவர்களிடம் மோசடி செய்யப்பட்டதாக உள்ளது.

இந்த சொல்லாடல் ஒரு பிற்போக்குத்தனமான தந்திரமாகும்.

ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர் சங்கம் வோல்ஸ்வேகனால் ஆதரிக்கப்பட்டதோடு, ஒரு "நடுநிலையான உடன்படிக்கையிலும்" அது கையெழுத்திட்டு இருந்தது. எதிர்காலத்தில் செய்யப்படும் எந்தவொரு தொழிலாளர்சார் உடன்படிக்கையும் அமெரிக்காவில் மற்றும் வட அமெரிக்காவில் வோல்ஸ்வேகனின் போட்டியாளர்களோடு ஒப்பிட்டு சாத்தியமான அளவிற்கு அதற்கு [வோல்ஸ்வேகனுக்கு] செலவு ஆதாயங்களை மற்றும் ஏனைய போட்டித்தன்மைக்கான ஆதாயங்களை வழங்க பொறுப்பேற்கும் என அந்த உடன்படிக்கை உறுதியளித்து இருந்தது. டென்னெஸ்ஸி ஆலையில் வறுமை அளவிற்கான கூலிகள் மற்றும் கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக எழும் எதிர்ப்பை ஒடுக்க அதன் சேவைகளை வழங்க தயாராக இருந்ததோடு, அது வோல்ஸ்வேகன் தொழிலாளர்களின் செலவில் தொழிற்சங்க சந்தா மூலமாக அதன் வருவாய் வரவைப் பெருக்கவும் முனைந்திருந்தது.

வேலைநேர கூட்டங்களில் உரையாற்ற வோல்ஸ்வேகன் UAWக்கு முழு அனுமதி வழங்கியதோடு, அதன் பணியாளர்களின் பட்டியலை அந்நிறுவனம் UAW பிரதிநிதிகளிடம் ஒப்படைத்திருந்தது. மேலும் தொழிற்சங்கத்தோடு ஒத்துழைப்போடு ஜேர்மன் பாணியிலான "தொழிலக கவுன்சிலை" (works council) அமைக்க அந்நிறுவனம் பகிரங்கமாக ஆலோசனை வழங்கியது. வாக்கெடுப்பின் மூலமாக நடைமுறையில் அதை நிறுவன தொழிற்சங்கமாக ஆக்குவதற்கான ஒரு வாய்ப்பையும் கூட தொழிலாளர்களுக்கு வழங்க UAW ஆரம்பத்தில் எதிர்த்தது.

வெளியிலிருந்து தலையீடு" செய்யப்படுவதாக UAW தற்போது கடுமையாக குறைகூறி வருகிறது. UAW ஸ்தாபிக்கப்பட்ட 1930களின் பாரிய போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு எதிராக வாகனத்துறை நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்ட "வெளியிலிருந்து தூண்டிவிடுகிறார்கள்" என்ற பிரச்சாரத்தை இன்று அதுவே எதிரொலிப்பது வரலாற்றில் நேரெதிர்மாறாக உள்ளது. இது UAW ஒரு பெருநிறுவன சார்பிலான, தொழிலாளர் வர்க்க விரோத அமைப்பாக மாறியிருப்பதை எதிரொலிக்கிறது.

முன்னாள் கிளிண்டன் ஆட்சியின் போதிருந்த தொழிலாளர் விவகாரத்துறை செயலர் ரோபர்ட் ரீச் உடன் தொடர்புபட்ட ஒரு பிரசுரமான அமெரிக்கன் புரோஸ்பெக்ட் இதழ், UAWஇன் தோல்விக்கு "குறிப்பாக அப்பாலாச்சியாவின் ஸ்காட்டிஷ்-ஐரிஷ் வம்சாவழியினர் மத்தியில் இருந்த தெற்கு பகுதி வெள்ளை இனத்தவரின்" “தனிப்பட்ட பண்பாட்டை" குறை கூறுகிறது.

அமெரிக்கா மிக துல்லியமாக வர்க்க அடிப்படையில் பிளந்து நின்றிருந்தால், UAW சட்டநூகாவின் எளிதாக வென்றிருக்கும்," என்று அந்த பிரசுரம் குறிப்பிடுகிறது. “ஆனால் பல தொழிற்சங்கங்கள் கண்டறிந்ததைப் போல, பொதுவாக துயரகரமாக, பெரும்பாலும் இன மற்றும் கலாச்சார அரசியல் அமெரிக்காவில் வர்க்கங்களைப் பிடித்து ஆட்டி உள்ளது," என்று அது குறிப்பிட்டது.

என்னவொரு வெட்ககேடான முட்டாள்தனம்! முதலாளிமார்களின் வெளிப்படையான முகவர்களை நிராகரித்ததற்காக தொழிலாளர்களைக் குறை கூறுவதா! UAWஇன் தோல்வி தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு தோல்வி அல்ல. இந்த வலதுசாரி அமைப்பை சட்டநூகா தொழிலாளர்கள் மிகச் சரியாக நிராகரித்துள்ளனர். அது சுமார் நான்கு தசாப்தங்களாக தொழிலாளர் வர்க்கத்திற்கு காட்டிக்கொடுப்புகள் மற்றும் தோல்விகளைத் தவிர வேறொன்றையுமே உருவாக்கவில்லை. அது பாரிய வேலைவாய்ப்பின்மையின் ஒரு மரபை விட்டு வைத்திருப்பதோடு, வாழ்வை நாசப்படுத்தி, டெட்ராய்டு போன்ற நகரங்களைச் சின்னாபின்னமாக்கி உள்ளது.

தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவில்லாமல், UAW மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் அவற்றின் உயிர் வாழ்விற்காக அதிகளவில் பெருநிறுவனங்களை மற்றும் அரசை சார்ந்துள்ளன. இது அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் நிலவும் உண்மையாக உள்ளது.

இது இந்த மாத தொடக்கத்தில் பிரான்ஸில் பொறியியல் பணியாளர்கள் அமைப்பின் (UIMM) முன்னாள் தலைவர் டெனிஸ் கௌடியர்-சவாக்னாக் மீது பிரெஞ்ச் தொழிற்சங்கங்களுக்கு மில்லியன் கணக்கான யூரோக்களை முறைகேடாக வழங்கியமைக்காக அளிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பால் அடிக்கோடிடப்படுகிறது. சில கணக்குவழக்குகள் மூலமாக, பிரான்சில் உள்ள தொழிற்சங்கங்கள் அவற்றின் வரவுசெலவு கணக்கில் 90 சதவீதத்தை, அல்லது ஓராண்டிற்கு 4 பில்லியனுக்கும் அதிகமான யூரோவைத் தொழில் வழங்குனர்கள் மற்றும் அரசிடம் இருந்து பெறுகின்றன.

இத்தகைய ஊழல் உறவுகள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்க தொழிலாளர்களைப் படுகொலை செய்ய ஒத்துழைத்த சுரங்க தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கம் இருக்கும் தென்னாப்ரிகாவில் இருந்து, ஒட்டுமொத்த வாகனத்துறை மூடலை அமுலாக்கி வரும் தொழிற்சங்கங்கள் உள்ள ஆஸ்திரேலியா வரையில், தொழிலாளர் வர்க்கத்தின் மீது சிக்கன முறைமைகள் மற்றும் பட்டினிக்கான நிலைமைகளைத் திணித்து வருவதில் உடந்தையாய் உள்ள தொழிற்சங்கங்கள் அமைந்துள்ள ஐரோப்பா வரையில், ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகின்றன.

இத்தகைய காட்டிக்கொடுப்புகளை வெறுமனே தொழிற்சங்க தலைவர்களின் ஊழல்களைக் குறிப்பிட்டுக் காட்டுவதோடு மட்டும் விவரித்து விட முடியாது. அனைத்திற்கும் முதலாவதாக காட்டிக்கொடுப்புகள் தொழிற்சங்கங்களின் சுபாவத்திலேயே வேரூன்றி உள்ளன. அவை இலாபகர அமைப்புமுறையின் தொழில் வழங்குனர்-தொழில் பெறுநர் உறவுமுறையை மற்றும் முதலாளித்துவ ஆளும் மேற்தட்டால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள உற்பத்தி கருவிகளின் தனியுடைமையை அடிப்படையாய் கொண்டுள்ளன.

உள்ளார்ந்திருக்கும் இந்த வரம்பு, தொழிற்சங்கங்கள் எதை அடித்தளமாக கொண்டுள்ளனவோ அந்த தேசியவாத வேலைத்திட்டத்தால் சூழப்பட்டுள்ளது. பூகோளமயப்பட்ட உற்பத்தி நிலைமைகளின் கீழ், உலகெங்கிலும் உள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு விட்டுகொடுப்புகளைப் பெறுவதற்காக "அவற்றின்" ஆளும் வர்க்கங்களுக்கு அழுத்தம் அளிப்பதிலிருந்து, சர்வதேச போட்டித்தன்மை என்ற பெயரில் பெருநிறுவனங்களுக்கு முன்பில்லாத பெரும் விட்டுக்கொடுப்புகளை வழங்க தொழிலாளர்களின் மீது அழுத்தங்களை அளிக்கும் நிலைக்கு சென்றுள்ளன.

அமெரிக்காவில், தொழிலாளர் வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு அடிபணிய செய்தமை தொழிற்சங்கங்களுக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையிலான அரசியல் கூட்டணியின் வடிவத்தை எடுத்துள்ளது. அது 1940கள் மற்றும் 1950களின் கம்யூனிச விரோத துப்புரவாக்கலின் போது உறுதியாக இணைக்கப்பட்டது. ஜனநாயக கட்சியுடனான அதன் கூட்டணியின் மூலமாக, தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தியைத் தடுத்தது.

பெருநிறுவனங்கள் மற்றும் அரசுடனான அவற்றின் உறவுகளை ஆழப்படுத்தியதன் மூலமாக தொழிற்சங்கங்கள் 1970கள் மற்றும் 1980களில் ஏற்பட்ட பூகோளமயப்பட்ட உற்பத்தியின் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு விடையிறுப்பு காட்டின. ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர் சங்கமும், ஏனைய தொழிற்சங்கங்களும் தொழில் வழங்குனர்கள் உடனான "விரோத உறவுகளைக்" கைவிட்டதோடு, தொழிலாளர் வர்க்கத்திற்கு விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் பரவாயில்லை நிறுவனங்களின் இலாபங்களைக் காப்பாற்ற அனைத்தையும் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, “தொழிலாளர்கள்-நிர்வாகம் கூட்டணி" (labor-management partnership) என்ற பெருநிறுவனவாத வேலைத்திட்டத்தைத் தழுவின.

சட்டாநூகா தொழிலாளர்கள் செய்ததைப் போல, இத்தகைய வலதுசாரி அமைப்புகளை நிராகரிப்பது அவசியமாகும், அதேவேளையில் அது மட்டுமே போதுமானதல்ல. பன்னாட்டு நிறுவனங்கள், உலகளாவிய வங்கிகள் மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கங்களின் தாக்குதலுக்கு எதிராக போராட தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த அமைப்புகள் வேண்டும். பழைய தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமான, சாமானிய தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றும் அவர்களுக்கு பதிலளிக்கக் கூடிய புதிய அமைப்புகள் கட்டப்பட வேண்டும்.

அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் அடிப்படையில் மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் சோசலிச மறுஒழுங்கமைப்பிற்கான போராட்டத்தின் அடிப்படையில், வரவிருக்கின்ற போராட்டங்கள் முற்றிலும் புதிய ஓர் அரசியல் மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கம் வெறுமனே ஏதோவொரு இந்த அல்லது அந்த தொழில் வழங்குனரை எதிர்த்து நிற்கவில்லை, மாறாக அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டினாலும் பாதுகாக்கப்படும் ஓர் ஒட்டுமொத்த பொருளாதார அமைப்புமுறையை எதிர்த்து நிற்கிறது. தொழிலாளர்களின் அதிகாரத்திற்காக போராட தொழிலாளர்கள் தம்மைத்தாமே ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வழியில் மட்டும் தான் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் பிடியை முறிக்க முடியும் மற்றும் தொழிலாள வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட பரந்த செல்வ வளத்தை தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல் மனிதயின தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்த முடியும்.