தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French government applauds coup in Ukraine உக்ரேனில் ஆட்சி சதியை பிரெஞ்சு அரசாங்கம் பாராட்டுகிறது
By Kumaran Ira Use this version to print| Send feedback பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம், சனிக்கிழமையன்று மேற்கத்தைய ஆதரவு பெற்ற எதிர்த்தரப்பான நாஜிக்களின் குற்றங்களை பெருமைப்படுத்துபவர்கள் தலைமையிலுள்ள பாசிசவாதக் குழுக்கள், உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை ஆட்சி சதியின் மூலம் அகற்றியதை பாராட்டி புகழ்ந்துள்ளது. நேற்று, பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரோன்ட் ஃபாபியுஸ், பில்லியனரும், எதிர்த்தரப்பு தலைவரும் தண்டனை பெற்ற மோசடிக்காரருமான தந்தை நாட்டுக் கட்சியின் (Fatherland Party) யூலியா திமோஷெங்கோ விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றார். கடந்த வாரம் கிவில் மேற்கத்தைய ஆதரவு பெற்ற பாசிசக் கலகங்கள், குருதி சிந்தியதை காணப்பெற்றபின், யானுகோவிச்சை சட்டவிரோதமாக கவிழ்த்த எதிர்த்தரப்புடன் நெருக்கமாக உழைத்த ஃபாபியுஸ் பாசாங்குத்தனமாக அறிவித்தார்: “நாம் எவ்வளவு விரைவிலோ அவ்வளவு விரைவில், அரசியலமைப்பிற்கு மரியாதை, ஒரு புதிய அரசாங்கம் அமைப்பது மற்றும் தேர்தல்கள் நடத்துவதை காண விரும்புகிறோம்.” உக்ரேனின் பாசிச சக்திகளை அணைத்துக் கொண்டமையானது, பிரான்சின் ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் முழு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் அரசியல் குற்றத்தன்மையையும் அம்பலப்படுத்துகிறது. பேர்லின் மற்றும் வாஷிங்டனுடன் பாரிஸ், நவ நாசிச வலது பிரிவு (Right Sector) போன்ற தீவிர வலது சக்திகள் மற்றும் ஒலே தியானிபோக் இன் பாசிச ஸ்வோபோடா கட்சிகளையும் ஆதரித்தது. பிரான்சின் நவ பாசிச தேசிய முன்னணி (FN) உடன் இணைந்துள்ள ஸ்வோபோடா, இரண்டாம் உலக யுத்த காலத்தில் மேற்கு உக்ரேனிய காலிசியா பகுதியிலுள்ள யூதர்களைப் படுகொலை செய்த நாஜி எஸ்.எஸ் பிரிவுகளை பாராட்டுகிறது. பேர்லினுடன் பாரிஸ் ஒத்துழைத்து, எதிர்த்தரப்புக் கோரிக்கைகளை யானுகோவிச் ஏற்கவேண்டும் என அழுத்தம் கொடுத்தது. புதனன்று ஜேர்மனிய, பிரெஞ்சு காபினெட் மந்திரிகள் பாரிஸில் எலிசே ஜனாதிபதி மாளிகையில் 16வது பிரெஞ்சு-ஜேர்மனிய மந்திரிகள் குழுவில் சந்தித்தபோது அவர்கள் உக்ரேன் மீது சுமத்த வேண்டிய பொருளாதார தடைகளை விவாதித்தனர். “வன்முறை மற்றும் எதிர்ப்புச் செயல்கள் என அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்து வருவதை நாங்கள் கண்டிக்கிறோம், எங்கள் முதல் அழைப்பு, அவை நிறுத்தப்பட வேண்டும். இத்தகைய செயல்களை நடத்துவோர், மீண்டும் செய்யத் தயாரிப்பு கொண்டுள்ளோர் அதற்குத் தண்டனை கிடைக்கும் என்பதை அறியவேண்டும்” என்று ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் கூறினார். வெள்ளியன்று ஹாலண்ட், வன்முறைக்கான அனைத்திற்கும் யானுகோவிச் மீது குற்றம் சாட்டினார். “நாம் வன்முறையை நிறுத்த வேண்டும், அவற்றிற்கு அரசாங்கங்கள்தான் பொறுப்பு, உக்ரேனிய மக்களுடைய குரலுக்கு உரிமை கொடுக்கவேண்டும்” என்றார் அவர். பிரான்சின் தேசிய முன்னணி (FN) உடன் பிணைந்த உக்ரேனிய பாசிசக் குழுக்களுடன் சோசலிஸ்ட் கட்சியின் ஒத்துழைப்பு, பிரான்சிற்குள் FN இன் எழுச்சிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்னும் அதன் கூற்றுக்களிலுள்ள பாசாங்குத்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உண்மையில் சோசலிஸ்ட் கட்சி எளிதாக பாசிக் குழுக்களுடன் உழைக்கிறது; ஏனெனில் அதன் பிற்போக்குத்தன அரசியல் செயற்பட்டியலின் முக்கிய கருத்துக்கள், ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகள், போர்கள் விரிவாக்கப்படுதல், ஏகாதிபத்தியத் தலையீடுகள் ஆகியவை வலதுசாரி அரசியலுடன் முற்றிலும் இயைந்தவையாகும். உண்மையில் FN எழுச்சி பெற்று வருகிறது என்றால், அது PS மற்றும் போலி இடதுகளின் உடைய வலதுசாரிக் கொள்கைகளினால்தான்; இவை சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை அடக்கி, FN ஐ பிரான்சின் அரசியல் நடைமுறைக்கு எதிராக இருக்கும் ஒரே கட்சி எனக் காட்டிக் கொள்ள அனுமதித்துள்ளன. யானுகோவிச் அகற்றப்படுவது, FN (இது ஐரோப்பிய தேசிய இயக்கங்களின் கூட்டுக்குள் உள்ளது -EANM) உடன் இணைந்துள்ள ஸ்வோபோடாவிற்கு குறுகிய கால வெற்றியை பிரதிபலித்தாலும், குறிப்பிடத்தக்க வகையில் FN அதன் உக்ரேனிய நட்பு அமைப்புக்களை பாராட்டவில்லை. வியாழனன்று FN உடைய துணைத் தலைவரும் உள்துறை அமைச்சரக அதிகாரியுமான புளோரியான் பிலிப்போட் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனில் தலையிடக்கூடாது என்று அழைப்பு விடுத்தார். “ஐரோப்பிய ஒன்றியம் தலையிடுவதை நாம் தவிர்க்க வேண்டும்; இதுவரை உக்ரேனுக்கு பொறுப்பற்ற உறுதிமொழிகளால் எரியும் எண்ணெயில் தீ வார்த்தல்தான் நடந்துள்ளது. உக்ரேன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்புடைய கட்சி உறுப்பாக வேண்டும் என்ற கருத்தையோ நாம் முன்மொழியத் தேவை இல்லை." உக்ரேனில் ஐரோப்பிய தலையீட்டை பிலிப்போட் விமர்சித்தார்: “நெருக்கடியிலிருந்து வெளியேற ஐரோப்பிய ஒன்றியம் வழிதேட வேண்டியதில்லை; இது தவறாக கருதப்படும் உறுதிமொழிகளைக் கொடுத்தது, தடைகள் போடுவதாக அச்சுறுத்தியுள்ளது, இது முட்டாள்தனமானது.” “மிக புத்திசாலித்தனமான தீர்வு புதிய தேர்தல்களை நோக்கி விரைவில் செலுத்துவதாகும்” என்றார் அவர். மேலும் “இது உக்ரேனியர்களால் முடிவு செய்யப்பட வேண்டியது” என்று சேர்த்துக்கொண்டார். FN ஒப்பீட்டளவில் குறைந்த தோற்றத்தைக் கொள்ளுதல் மற்றும் உக்ரேனியத் தலையீட்டில் பிரான்ஸ் ஒரு எச்சரிக்கையான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்பதின் முக்கிய காரணி, அதன் ஸ்வோபோடாவுடனான பிணைப்பு தற்போதைய FN தலைவர் மரின் லு பென் கட்சியை “அரக்கத்தனத்திலிருந்து” அகற்றும் முயற்சிகளின் குறுக்கே நிற்பதாகும். FN தலைமையை தன்னுடைய தந்தை Jean-Marie இடமிருந்து எடுத்ததிலிருந்து, மரின் லு பென் FN ஐ அதன் வரலாற்று ரீதியான யூத எதிர்ப்பு, தடையற்ற சந்தை, நாசி சார்பு நிலைப்பாடுகளிலிருந்து விலக்கி வைக்க முயன்றுள்ளார். இதுதான் FN க்கு பரந்த வாக்காளர் களத்தை பிரான்சிற்குள் பெற முக்கியம் என அவர் கருதுகிறார். ஜோன் மரி லு பென் இழிவான முறையில் யூத இன ஒழிப்பை (Holocaust) ஒரு “வரலாற்று விவரக்குறிப்பு” என உதறித்தள்ளி, பிரான்சை நாஜிக்கள் ஆக்கிரமித்தது, “பல அத்துமீறல்கள் இருந்தாலும், குறிப்பாக மனிதாபிமானமற்ற ஒன்றல்ல, அதுவும் 550,000 சதுர கி.மீ. கொண்ட நாட்டில் தவிர்க்க முடியாதவை” என்றார். இதற்கு மாறாக, கடந்த அக்டோபர் மாதம், FN “இது இடதுசாரியுமல்ல, வலதுசாரியுமல்ல”, வலதுசாரி UMP, ஆளும் PS என்னும் முக்கியக் கட்சிகளின் கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவற்றைக் கொண்டுள்ளது” என்றார். மரின் லு பென்னின் FN ஐ “அரக்கத்தனத்திலிருந்து” மீட்கும் பிரச்சாரத்தில் சில வெற்றிகளை பெற்றிருக்கிறது, முழு பிரெஞ்சு அரசியல் உயரடுக்கும் வலதுசாரிக்கு விரைந்து பாயும் தன்மையில் எந்த அரசியல் கட்சியும் FN முயற்சிகளான “அரக்கத்தனத்திலிருந்து” மீளும் தன்மையின் அடித்தளத்திலுள்ள வரலாற்றுப் பொய்களை அம்பலப்படுத்த முற்படவில்லை. தேசிய முன்னணி மற்றும் பிரான்சின் முதலாளித்துவ "இடது" வெளிப்படையான நாசி-ஆதரவு உக்ரேனிய தீவிர-வலதுகளுடன் கொண்டுள்ள உறவுகள், FN அரசியலில் இன்றுள்ள அதன் ஆழ்ந்த பிணைப்புக்களை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமன்றி, முழு பிரெஞ்சு ஆளும் உயரடுக்கும் பாசிச அரசியலை நோக்கி விரைந்து சரியும் நிலையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. |
|
|