சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spanish authorities lie about African migrant drownings

ஸ்பானிய அதிகாரிகள் ஆபிரிக்க புலம் பெயர்ந்தோர் திடீர்ச்சோதனைகள் பற்றி பொய்யுரைக்கின்றனர்

By Alejandro López 
22 February 2014

Use this version to printSend feedback

இந்த மாத தொடக்கத்தில் துணை சகாரா ஆபிரிக்காவில் இருந்து பதினான்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வட ஆபிரிக்காவின் ஸ்பானிய நிலப்பகுதி மற்றும் சீடா துறைமுக நகரம் சுற்றியுள்ள பாதுகாப்பு வேலியை சுற்றி நீந்த முற்படுகையில் இறந்து போயினர்.

ஸ்பானிய அதிகாரிகள் பலமுறையும் சோகத்தைச் சூழ்ந்துள்ள நிலைமை குறித்து பொய் கூறியுள்ளனர்; இது 400 குடியேறுவோர் மொரோக்கோ மலைகளில் இருந்து இறங்கி எல் டரஜல் எல்லைக்குள் பெப்ருவரி 6 அன்று அதிகாலை நுழைந்தபோது ஏற்பட்டது. ஸ்பெயின் பகுதியில் இருக்கும் கலக எதிர்ப்பு பிரிவு சிவில் படையினரிடம் இருந்தும் மற்றும் மொரோக்கோ பகுதியிலிருக்கும் காவல் துறையினர் மற்றும் இராணுவப் பிரிவினர் இடமிருந்தும் தப்பும் அவநம்பிக்கையான முயற்சியில், ஒரு குழுவினர் மூன்று வரிசைகள் இருந்த 6 மீட்டர் உயர முள் கம்பி வேலியில் ஏற முற்பட்டனர்; மற்றவர்கள் அப்பகுதியைச் சூழ்ந்திருந்த கடலை சுற்றி நீந்த முயற்சித்தனர்.

அரசுசாரா அமைப்புக்களால் (NGO) பேட்டி காணப்பட்ட தப்பிப் பிழைத்தவர்கள் கருத்துப்படி, சிவில் படையினர் கண்ணீர்ப்புகை, ரப்பர் தோட்டாக்களை நீந்தியவர்கள்மீது இயக்கியபோது பீதி ஏற்பட்டது. இறந்தவர்கள் மீது மனித உரிமைகளுக்கான வடக்கு நிலையம் (Northern Observatory for Human Rights) செய்த ஆய்வுகளின்படி, அவர்களில் சிலர் ரப்பர் தோட்டாக்களால் சுடப்பட்டனர் என்பது உறுதியாகியுள்ளது. ஆய்வுமையம், சிவில் பாதுகாப்பு படையினர் குடியேறுவோருக்கு உதவவும் இல்லை, மீட்புக்கு கடலோரக் காவலருக்கு எச்சரிக்கை கொடுக்கவுமில்லை என்றது.

சோகம் ஏற்பட்டதில் இருந்து, சிவில் படையின் இயக்குனரும் அதிகாரிகளும் பலமுறை குடியேறுவோரின் “வன்முறை” மனப்பாங்கை கண்டித்துள்ளனர். குடியேறுவோரின் ஒரே “வன்முறை” தங்கள் நண்பர்கள் இறப்பை அறிந்த விரக்தி கொண்ட தப்பிப்பிழைத்தவர்கள் சில கற்களை விட்டு எறிந்ததுதான்; சியூடாவை அடைந்த சட்டவிரோதமான குடியேறுவோர் மீண்டும் மொரோக்கோ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஜெனிவா அகதிகள் மரபும் (ஸ்பெயின் இதில் கையெழுத்திட்டுள்ளது) மற்றும் 2011 அரசு ஆணை 557 என்று வெளிநாட்டோர் சட்டத்தை செயல்படுத்துவதும், ஸ்பெயினில் “முறையற்று” நுழைபவர்களுக்கு  நாட்டை விட்டு கடத்த முயற்சி மேற்கொள்ளப்படுமுன், சட்ட ஆலோசனை உரிமையும் வழங்கி, மொழிபெயர்ப்பாளர் உதவியையும் கொடுக்கின்றன.

முதலில் ஸ்பெயினின் அரசாங்க அறிக்கைகள், மொரோக்கோ பொலிஸ் மீது குற்றத்தைச் சாட்ட முற்பட்டன. சிவில் படையினர் ரப்பர் தோட்டாக்களையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியது தெளிவானபோது, அவர்கள் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை, குடியேறுவோர் எல்லை வேலிமீது கற்கள் எறிவதைக்காட்டி, கடல் நிகழ்வுகள் காட்சியை அகற்றினர். ஆனால் ஒரு தொலைக்காட்சி அமைப்பு நிலையமான La Sexta ஒரு வீடியோவைப் பிரசுரித்துள்ளது; அது எட்டு குடியேறுவோர், ஸ்பெயின் நிலப்பகுதியை அடைய முடிந்ததைக் காட்டுகிறது. ஆயுதமேந்திய அதிகாரிகள், ரைபிளை அசைத்து மிரட்டியவண்ணம் கடற்கரையில் நிற்க, குடியேறியவர்கள் நீரில் கரைக்கு நீந்திவரும் வரை தடுமாறுகின்றர், பின்னர் கைது செய்யப்படுகின்றனர்.

கடந்த வாரம் உள்துறை மந்திரி ஜோர்ஜ் பெர்னான்டெஸ் டயஸ், காங்கிரசின் உள்துறைக்குழு முன் தோன்றும் கட்டாயத்திற்கு உட்பட்டார். சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கலக எதிர்ப்பு ஆயுதங்களை பயன்படுத்தினர் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். இது, சிவில் பாதுகாப்பு படை இயக்குனர் ஆர்செனியோ பெர்னான்டஸ் மெசாவால் நிகழ்வுகளைப் பற்றி முன்கூறப்பட்ட கருத்துக்களுக்கு மாறுபட்டதாகும். அவர் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை பாதுகாத்து அவை “விகிதத்திற்கு உட்பட்டு இருந்தன”, “உறுதியாகத் தேவைப்பட்டது”, “குடியேறுவோரின் ஆக்கிரோஷ நடவடிக்கைக்கு” விடையிறுப்புத்தான் என்றார். மேலும் பொலிசார் தங்கள் ஆயுதங்களை “தடைக்குட்பட்ட வகையில்தான்” பயன்படுத்தினர் என்றும் அவர்களுடைய நடவடிக்கையால் எவரும் இறக்கவில்லை என்றும் கூறினார்.

பிரதான எதிர் கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PSOE), டி மேசா தன் பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது. PSOE உடைய நிறுவன உறவுகள் செயலர் அன்டோனியா ஹெர்னான்டோ கூறினார்: “இறந்த மக்கள் வெள்ளையர்களாக, ஸ்பெயின் நாட்டினராக மற்றும் அடையாள அட்டையுடன் இருந்திருந்தால், அவர்கள் இன்று தங்கள் வேலைக்குப் போயிருப்பார்கள்.”

இவை புகலிடம் கோருவோர், குடியேறுவோரை மனிதாபிமானமற்று நடத்துவதில் நேரடிப் பொறுப்பு கொண்ட கட்சியின் உறுப்பினருடைய முதலைக் கண்ணீர் ஆகும். PSOE தான் 2005ல் முதல் எல்லை வேலியை அமைப்பதைத் தொடங்கியது, இதில் இப்பொழுது 11 கி.மீ. (6.8 மைல்கள்) நீள மற்றும் சமாந்திரமாக மூன்று மீட்டர் (10 அடி) உயர வேலிகள், கூர்மையான முள்கம்பிகளை கொண்டவை உள்ளன, வாடிக்கையான கண்காணிப்புத் தளங்கள், CCTV மற்றும் நேரடி வெளிச்சப் பகுதிகள், இயக்கத்தை உணரும் கருவிகள் மற்றும் பொலிஸ் ரோந்திற்கான சாலை ஆகியவை உள்ளன. 2007ல் PSOE அரசாங்கம், ஏராளமான மக்கள் வேலியை தாண்ட முயற்சிக்கும்போது ஏற்பட்ட கொடூரமான காயங்களைத் தடுக்கும் பொருட்டு கூர்மையான முள்கம்பிகளை அகற்றும் கட்டாயத்திற்கு உட்பட்டது.

கடந்த ஆண்டு PP அரசாங்கம் மீண்டும் உயரே ஏறுதலைத் தடுக்கும் கருவியை அறிமுகப்படுத்தியபோது, இது துணிகளைப் பற்றி உடல் சதையை கிழிக்கும் வடிவமைப்புக்கொண்டது, PSOE அதற்குப் பதிலாக, எல்லையில் கூடுதல் இராணுவம் தேவை, அதில் டிரோன்கள் அறிமுகப்படுத்தப்படுதல், ராடர் முக்கிய இடங்களில் நிறுவப்படல், இன்னும் நவீனமாக இயங்கும் உணர்தல் கருவிகள், மிக அதிக ஊக்கம் உடைய கேட்டல், ஒளி எச்சரிக்கைகள் முழுச் சுற்றிலும் வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. அவர்கள்  நிலம், கடலில் கூடுதல் ரோந்துகள் வேண்டும் என்றும் கோரினர்; குறிப்பாக சிறப்பு நீர்மூழ்கிப்பிரிவு தேவை, மற்றும் மொரோக்கோ பொலிசுடன் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினர்.

ஐரோப்பிய ஆணையம், ஸ்பெயினில் உள்ள உள்துறை ஆணையர் செசிலியா மாம்ஸ்ட்ராமிடம் இருந்து விளக்கம் கோர இருப்பதாக கூறியுள்ளது. அவர்,ஸ்பெயின் எல்லைப் பொலிசார், சியூடாவினூடாக குடியேற வருவோரை தடுக்க ரப்பர் தோட்டாங்களை இயக்குவது குறித்து மிகவும் கவலை தெரிவித்துள்ளார்” என்றார். ஆனால் ஐரோப்பிய ஆணையம்தான் FRONTEX எல்லை நிறுவனத்தை அதன் ஏராளமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளுடன் நிறுவியது. ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ அரசாங்கம் திறமையானவகையில் மொரோக்கோ, சியுடா இன்னும் பிற ஸ்பெயின் பகுதியான மெலில்லாவில் மக்களை ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு குடியேறாமல் தடுக்கும் எல்லை ரோந்தைக் கொண்டுள்ளன.

இந்த பாசாங்குத்தனம், ஸ்பெயின் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உண்மையான பரிவுணர்விற்கு எதிரானதாகும்;  15 ஸ்பெயின் நகரங்களில் குடியேறுவோர் இறப்புக்களைக் கண்டித்து எதிர்ப்புக்கள் நடைபெற்றன. கோஷ அட்டைகள் கூறுவது: “அவர்கள் மூழ்கவில்லை, கொலை செய்யப்பட்டனர்”, பூர்வீக்குடிகளோ அல்லது வெளிநாட்டினரோ, நாம் அனைவரும் ஒரே தொழிலாள வர்க்கம்தான்”, “எவரும் சட்டவிரோதிகள் அல்ல”, மற்றும் “உயிரைக் காப்பாற்றுபவர்கள் எங்குள்ளனர் இப்பொழுது?”. (கடைசிக் குறிப்பு PP அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய தடைக்குட்பட்ட கருக்கலைப்புச் சட்டத்திற்கு ஆதரவு கொடுப்பவர்களை பற்றியது.)

அகதிகள் அமைப்புக்கள் கொடுத்துள்ள மதிப்பீடுகளின்படி, 1990ல் இருந்து மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கு செல்ல முயல்கையில் 25,000 பேர் நீரில் மூழ்கிவிட்டனர் என்பதாகும். ஐரோப்பாவை அடைந்த அதிருஷ்டசாலிகள், அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு, முகாம்களில் அடைக்கப்பட்டு, அல்லது மிருகத்தனமாக சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

2014 ஐரோப்பிய தேர்தல்களில், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (PSG) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய கோரிக்கை, மிருகத்தன ஐரோப்பிய எல்லை ஆட்சிக்கு முடிவு கட்டுதல், குடியேறுபவர்களுக்கு முழு ஜனநாயக, சமூக உரிமைகள் வழங்குதல், அனைத்து அடக்குமுறை நடவடிக்கைகள், மற்றும் சிறப்புச் சட்டங்கள் என்று அவர்களுக்கு எதிராக அறிமுகப்படுத்தியுள்ளதை ஒழித்தல் ஆகும்.