WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The social chasm in America’s
cities
அமெரிக்க நகரங்களில் சமூக பிளவு
Andre
Damon
22 February 2014
Back to screen version
அமெரிக்கா
எங்கிலும் பிரதான மகாநகர பகுதிகளில் சமூக சமத்துவமின்மையின் கூர்மையான அதிகரிப்பை
ஆவணப்படுத்திய ஓர் அறிக்கையை வியாழனன்று புரூக்கிங்ஸ் பயிலகம் பிரசுரித்தது.
அந்த அறிக்கையின்
வெளியீடுகள் மூன்று விதங்களில் பரந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
முதலாவதாக
அந்த அறிக்கை,
பொருளாதாரரீதியில் வெற்றிகரமான விடயங்களைக் கொண்டிருக்கும் நகரங்கள் என்று
கூறப்படுபவைகளில் கூட,
சமூக
சமத்துவமின்மையின் பரந்த அளவை மற்றும் அது அதிகரித்து வரும் வேகத்தை
ஆவணப்படுத்துகிறது.
இரண்டாவதாக,
அது அத்தகைய
நகரங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வறுமையின் அதிகரிப்பை மற்றும் பொருளாதார துயரங்களை
எடுத்துக்காட்டுகிறது.
மூன்றாவதாக,
அத்தகைய
நிலைமைகள் கடந்து போகக்கூடிய பொருளாதார மந்தநிலைமையின் விளைவினால் அல்ல,
மாறாக
பொருளாதார அமைப்புமுறைக்கு உள்ளேயே பொருந்தி உள்ளதோடு வாழ்வின் நிரந்தர உண்மைகளாக
மாறி உள்ளன என்பதை அது உள்ளடக்கி உள்ளது.
அந்த ஆய்வின்படி,
அமெரிக்காவெங்கிலும்,
வருமானம்
ஈட்டுவோரின்
95வது
சதமானத்தில் இருக்கும் ஒரு குடும்பம்,
அதாவது மேலே
உள்ள ஐந்து சதவீதத்தில் அடியில் இருக்கும் ஒரு குடும்பம்,
2012இல்,
20வது
சதமானத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தை விட,
அதாவது
வருமானம் ஈட்டுவோரில் அடியில் உள்ள ஐந்து பேரில் முதலாவதாக உள்ள ஒரு குடும்பத்தை
விட ஒன்பது மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுகின்றனர்.
ஆனால்
பிரதான நகரங்கள் வருமான சமத்துவமின்மையின் மிக அதிகபட்ச அளவைக் கொண்டுள்ளன.
அந்த
விகிதம் அட்லாண்டாவில்
18.8,
சான்
பிரான்சிஸ்கோவில்
16.6,
மியாமியில்
15.7,
பாஸ்டனில்
15.3
மற்றும் வாஷிங்டன்
டி.சி.
13.3 என்று
இருந்தது.
அந்த அறிக்கை
2007
மற்றும்
2012க்கு
இடையில் தொழிலாள வர்க்க வருமானங்களில் ஏற்பட்ட பாரியளவிலான சரிவை ஆவணப்படுத்துகிறது.
சான்றாக,
தொழில்துறை
ஆலை மூடல்களின் ஓர் அலையால் பாதிக்கப்பட்ட இந்தியானாபொலிஸில்
20வது
சதமானத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தின் வருமானம்
5,800
டாலர் என்றளவிற்கு,
அல்லது ஒரு
கால் பகுதியை விட கூடுதலாக சரிந்து,
16,883
டாலருக்கு வீழ்ச்சி அடைந்தது.
புளோரிடாவில் உள்ள ஜாக்சன்வெல்லியில் அதே பிரிவில் உள்ள ஒரு குடும்பத்தின் வருமானம்
7,800
டாலர்
என்றளவில் அல்லது
30
சதவீதம் சரிந்து
17,411
டாலருக்கு
வீழ்ச்சி அடைந்தது.
"பணக்காரர்கள்
பெரும் பணக்காரர்கள் ஆகும்,
ஏழைகள்
மிகவும் ஏழைகளாக ஆகும் ஒரு நகரம்,
பல்வேறு
சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்,"
என்று அந்த
அறிக்கை குறிப்பிடுகிறது.
“அது
வெவ்வேறு வருமானம் பெறுவோரைக் கொண்ட பாடசாலை சூழல்களை நடத்த சிரமத்திற்கு
உள்ளாக்கும்.
அத்தகைய
சூழ்நிலைகள் தான் தற்போது குறைந்த வருமானம் பெறுவோரின் குழந்தைகளிடையே சிறந்த
விளைவுகளை உண்டாக்கி வருகிறது.
மேலும் அது
அத்தியாவசிய நகர சேவைகளுக்கு அவசியமான வருவாயை எதிலிருந்து பெற்று தந்ததோ அந்த வரி
வசூலை மிகவும் குறைந்தளவிற்கு குறைக்கக்கூடும்.
அது மத்திய
வர்க்க தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு வீட்டுவசதி மற்றும் அண்டைவீட்டு
வசதிகளை அணுக முடியாதபடிக்கு செய்துவிடக்கூடும்..."
இது
பெரும்பான்மையான அமெரிக்க நகரங்களின் நிலைமையை வர்ணிப்பதோடு,
தற்போதைய சமூக அமைப்புமுறை பெரும்பான்மை நகரவாசிகளுக்கு கண்ணியமான வீட்டுவசதி,
மருத்துவ காப்பீடு அல்லது கல்வி ஆகியவற்றிற்கு எந்தவொரு சாத்தியக்கூறையும்
விட்டுவைக்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
சான் பிரான்சிஸ்கோ,
பாஸ்டன்,
நியூ யோர்க்,
சிகாகோ
மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட
நகரங்கள் கூட பெரியளவில் வருமான சமத்துவமின்மையின் அதிகரிப்பைக் கண்டன என்பதை அந்த
அறிக்கை காட்டுகிறது.
இது,
“வணிகத்திற்கு
நேசமான"
பொருளாதார
மற்றும் அரசியல் சூழ்நிலையை அதிகளவில் உருவாக்குவதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியை
அதிகரிக்கலாம் என்பதே சமத்துவமின்மை மற்றும் வறுமைக்கான ஒரே பதிலாக உள்ளதென ஒரே
மாதிரியாக கூறும் ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் மற்றும்
ஊடகங்களில் இருந்து வரும் பெருநிறுவன சார்பு பிரச்சாரத்தைத் தகர்க்கிறது.
"அங்கே
பொருளாதார வெற்றி மற்றும் சமத்துவமின்மைக்கு இடையில் ஏதோவொரு தொடர்பு உள்ளது,"
என்று அந்த
ஆய்வின் ஆசிரியர் ஆலன் பெரூப் அசோசியேடெட் பிரஸிற்கு தெரிவித்தார்.
பே ஏரியாவில்
ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக உயர்-வருவாய்
ஈட்டுவோரின் ஓர் உள்வரவைக் கண்டுள்ள சான் பிரான்ஸிஸ்கோ குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக
உள்ளது.
புரூக்கிங்ஸ் பயிலகத்தால் நடத்தப்பட்ட ஒரு பிரத்யேக ஆய்வின்படி,
சான்
பிரான்ஸிஸ்கோ பொருளாதாரரீதியில் அமெரிக்காவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும்
நகரமாகும்.
அது
சமீபத்தில் நிறைய வேலைகளை உருவாக்கி உள்ளதோடு,
தேசிய
சராசரியை விடவும் வேகமாக அதன் பொருளாதார வெளியீட்டை அதிகரித்தது.
இருந்த போதினும்
சான் பிரான்ஸிஸ்கோவில்,
20வது
சதமானத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தின் வருமானம்,
2007
மற்றும்
2012க்கு
இடையே
4,309 டாலர்
அளவிற்கு அல்லது
17
சதவீதத்திற்கு
சரிந்து
21,313
டாலருக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதேவேளையில்
95வது
சதமானத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் வருமானம்
27,815
டாலர் என்றளவில்
இருந்து
353,576
டாலருக்கு உயர்ந்தது.
இத்தகைய
புள்ளிவிபரங்கள்,
பல்வேறு
ஊக்கப்பொதிகள் மூலமாக வியாபார நடவடிக்கையை விரிவாக்குவதன் மூலமாக சமத்துவமின்மையைத்
தீர்க்க முடியுமென்ற ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தால் திரும்ப திரும்ப கூறப்படும்
உத்தியோகப்பூர்வ சொல்லாடல்களை மறுத்தளிக்கின்றன.
“வேலை
உருவாக்கம்"
என்பது
பெருநிறுவனங்களுக்கு பாரிய வரிச்சலுகைகள் மற்றும் ரொக்க பணங்களை வழங்குவதற்கு
பெயரளவிற்கு பயன்படுகின்றன,
அந்த
பெருநிறுவனங்களோ பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வரிகளை அல்லது எதிர்மறை வரிகளைச்
செலுத்துவதே இல்லை.
"வளர்ச்சி"
மற்றும்
"வேலை
உருவாக்கம்"
என்ற
பெயரில்,
உழைக்கும்
மற்றும் ஏழை மக்களுக்கு நலனளிக்கும் சமூக திட்டங்களில் மற்றும் சேவைகளில் இருந்து
பாரிய ஆதாரவளங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன,
அத்தோடு
பெருநிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் மற்றும் ஏனைய கூடுதல் சிறப்பு வரி வெட்டுக்களை
வழங்க பொதுத்துறை தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் ஓய்வூதியங்களும்
பறிக்கப்படுகின்றன.
இதுபோன்ற
பொருளாதார
"வளர்ச்சி"
ஏன்
அதிகளவிலான பொருளாதார சமத்துவமின்மையோடு கை கோர்த்து செல்கிறது என்பதன் மீது அங்கே
உண்மையிலேயே எந்தவொரு புரியாத புதிரும் இல்லை.
நாட்டில் ஆறாவது
மிக மோசமான சமத்துவமற்ற நகரமாக விளங்கும் பிரதான மகாநகரம் நியூ யோர்க் மாநிலத்தில்,
ஜனநாயக
கட்சியின் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ,
அம்மாநிலத்தில் தொடங்கப்படும் எந்தவொரு வர்த்தகத்திற்கும் பத்து ஆண்டுகளுக்கு
வரிவிலக்கு அந்தஸ்து வழங்கும் ஒரு தேசிய விளம்பர பிரச்சாரத்தை நடத்திக்
கொண்டிருக்கிறார்.
பெப்ரவரி
15இல்
நடத்தப்பட்ட டெட்ராய்ட் தொழிலாளர்கள் விசாரணை வெளிப்படுத்தியதைப் போல,
ஆளும்
வர்க்கத்தின் செல்வசெழிப்பு,
படிப்படியாக
முற்றுமுதலான திருட்டு வடிவத்தை எடுத்துள்ளது.
தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை வெட்ட மற்றும் டெட்ராய்ட் கலைக்கூடத்தின்
கலைப்படைப்புகள் உட்பட நகர சொத்துக்களைக் கைப்பற்ற டெட்ராய்டை திவால்நிலைமைக்குள்
ஓட்டி சென்ற குற்றஞ்சார்ந்த சூழ்ச்சிகளை அந்த தொழிலாளர்கள் விசாரணை
அம்பலப்படுத்தியது.
புரூக்கிங்ஸ்
பயிலகத்தின் ஆய்வில் உள்ள புள்ளிவிபரங்கள் கடந்த ஆண்டு பங்குச்சந்தை மீதான பாரிய
ஆரவாரங்களின் தாக்கத்தை உட்கொண்டிருக்கவில்லை என்பதால்,
அது கதையின்
ஒரு பகுதியை மட்டுமே கூறுகிறது.
அப்போது
தொழில்நுட்பம் நிறைந்த நாஸ்டாக்
38.3
சதவீத உயர்வை பதிவு
செய்திருந்தது.
இந்த
பங்குச்சந்தை உயர்வு காரணமாக,
பேஸ்புக்கின் மார்க் ஜக்கெர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு இரண்டு மடங்கை விட
அதிகமாக
23
பில்லியன் டாலருக்கு உயர்ந்தது.
அதேவேளையில்
அவரது சக பில்லியனர் ஓராக்கல் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி லேரி எலிசன்
7
பில்லியன் டாலர்
அளவிற்கு உயர்வோடு,
அவரது
செல்வத்தில்
43
பில்லியன் டாலர்
உயர்வைக் கண்டார்.
கடந்த ஆண்டு
எலிசனின் ஈட்டுத்தொகை மொத்தமாக
78.4
மில்லியனாக
இருந்தது.
ஜக்கர்பெர்க்
மற்றும் எலிசன் இருவருமே சான் பிரான்ஸிஸ்கோ பே ஏரியாவில்,
கலிபோர்னியாவின் ஓக்லாந்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைந்த பயண தூரத்தில்
வசிக்கின்றனர்.
அங்கே
ஓக்லாந்தில் அடியிலிருந்து
20வது
சதமானத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பம் ஆண்டுக்கு
17,646
டாலர் வருமானம்
ஈட்டுகிறது.
சில
நகரங்களில் ஏழைகள் ஏதுமற்று இருப்பதால் அந்நகரங்கள் பாரியளவிலான வருவாய்
சமத்துவமின்மையின் அளவுகளைப் பதிவு செய்தன.
சான்றாக,
மியாமியில்,
20வது
வருவாய் சதமானத்தில் இருக்கும் ஒரு குடும்ப உறுப்பினர் ஆண்டுக்கு
10,438
டாலர் மட்டுமே
சம்பாதித்திருந்தார்,
அது
2007இல்
சம்பாதித்த
12,278
டாலரை விட
குறைவாகும்.
இந்த
புள்ளிவிபரங்கள்,
பெரும்
செல்வவளமை ஒரு சிறிய மேற்தட்டின் கரங்களில் குவிந்திருப்பதையும்,
அதேவேளையில்
பெரும்பான்மை மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை போக்கில் எந்தவித மாற்றத்திற்கான
சாத்தியக்கூறும் இல்லாமல் வறுமை,
இழப்பு
மற்றும் வாழ்க்கை தரத்தின் வீழ்ச்சி ஆகியவற்றின் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதையும்
எடுத்துக் காட்டுகின்றன.
வங்கி
பிணையெடுப்பில் இருந்து
2009
வாகனத்துறை
மறுகட்டமைப்பில் குறைவூதியங்களை ஊக்குவித்தது வரையில்,
அமெரிக்க
உற்பத்தியாளர்களுக்கு வரி வெட்டுக்கள் மற்றும் நகரசபை தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள்
மற்றும் மருத்துவ உதவிகளை அழிக்க டெட்ராய்ட் திவால்நிலைமைக்கு ஒத்துழைப்பு
வழங்கியது என ஒபாமா நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு உள்நாட்டு கொள்கையும்,
பொருளாதார
வளர்ச்சிக்காக மற்றும் வேலைகளை உருவாக்குவதற்காக என்ற பெயரில்
நியாயப்படுத்தப்படுகின்றன.
செல்வவளத்தை
மேலிருந்து கீழே எவ்விதத்திலும் மறுபகிர்வு செய்வதற்கு அங்கே அமெரிக்க அரசியல்
ஸ்தாபகங்களில் எந்த சட்டதிட்டங்களும் கிடையாது;
ஆனால்
அதற்கு மாறாக இரண்டு கட்சிகளும் பெரும்பான்மை மக்கள்தொகையின் செல்வ வளத்தை பெரும்
பணக்காரர்களுக்கு கூடுதலாக மறுபகிர்வு செய்வதற்கு பொறுப்பேற்றுள்ளன.
இந்த அரசியல்
மற்றும் பொருளாதார அமைப்புமுறையை சீர்திருத்துவதற்கான அனைத்து பேச்சுக்களும் ஒன்று
பொய்யுரைகளாக உள்ளன அல்லது திட்டமிட்ட சூழ்ச்சியின் விளைபொருளாக உள்ளன.
நவீன
சமூகத்தின் மிக அடிப்படையான சமூக தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாதபடிக்கு
முதலாளித்துவம் பொருத்தமற்று உள்ளது என்பது தான் உண்மையாக உள்ளது.
இந்த இலாபகர
அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் வறுமை,
சமத்துவமின்மை மற்றும் சமூக அவலத்தின் மலைப்பூட்டும் வளர்ச்சியை சரிசெய்ய ஒன்றுமே
செய்ய முடியாது.
என்ன
அவசியப்படுகிறதென்றால் பெருநிறுவன இலாபங்களுக்கு எண்ணெய் ஊற்றாமல் சமூக தேவைகளைப்
பூர்த்தி செய்யும் வகையில் சமூகத்தை மறுஒழுங்கமைக்கும் ஒரு சோசலிச திட்டத்தோடு
ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கம் அவசியமாகும். |