தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
US secretary of state’s new round of bullying in Beijing பெய்ஜிங்கில் அமெரிக்க வெளிவிவகார செயலரின் புதிய சுற்று அச்சுறுத்தல்
By Peter Symonds Use this version to print| Send feedback தன்னுடைய ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி நேற்று பெய்ஜிங்கில் சீனத் தலைவர்களை சந்தித்து ஆசியாவில் அமெரிக்காவின் வழியை சீனா பின்பற்ற ஒரு புதிய சுற்று அச்சுறுத்தலை விடுத்தார். தெற்கு, கிழக்கு சீனக்கடல்களில் பிராந்திய மோதல்களையும் மற்றும் கொரிய தீபகற்பத்திலும் வேண்டுமென்றே ஆபத்தான, வெடிப்பான நிலையை தூண்டிவிட்டபின் ஆசியாவில் “முன்னுரிமை கொடுத்தல்”, அல்லது “மறுசமநிலை” என்பதின் ஒரு பகுதியாக வாஷிங்டன் பெய்ஜிங் மீது புதிய ஆத்திரமூட்டும் கோரிக்கைகளை முன்வைக்கின்றது. பட்டியலின் முதலிடத்தில் வட கொரியா உள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் பேசியபின், கெர்ரி “சீன அதனிடம் இருக்கும் ஒவ்வொரு கருவியையும், ஒவ்வொரு வழிவகையையும் வட கொரிய அணுவாயுதங்களை களைய பயன்படுத்த வேண்டும்” என்றார். இவ்வகையில் சீனா ஒரு பிணைப்பில் உள்ளது என்பதை நன்கு அறிந்த நிலையில், வட கொரியாவின் அணுத்திட்டங்களை பயன்படுத்தி அமெரிக்கா, பெய்ஜிங் மீது அழுத்தம் கொடுக்கிறது. சீனா அதன் அண்டை நட்புநாட்டின் வீழ்ச்சியை விரும்பாதது மட்டுமல்லாது, அதே நேரத்தில் அதன் எல்லையில் ஒரு மோதலையோ அல்லது பிராந்தியத்தில் ஜப்பானை தொடர்புபடுத்தும் அணுவாயுதப்போட்டியையும் விரும்பவில்லை. சீனத் தலைவர்களுக்கு கெர்ரியின் தகவல், அவர்கள் பியோங்யாங்கிற்கு எதிரான இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும். சியோலில் வியாழன் அன்று பேசிய அவர் அறிவித்தார்: “சீனாவை விட வடகொரியாவின் நடத்தையை செல்வாக்கிற்கு உட்படுத்தும் திறனை வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை.... வட கொரியாவிற்கான ஒவ்வொரு மோட்டார் வாகனத்தையும் விமானத்தையும் நகரச்செய்யும் எரிபொருளும் சீனாவிடம் இருந்து செல்லுகிறது. உலகத்துடன் வடகொரியா வைத்திருக்கும் அடிப்படை சாதாரண வங்கி முறை கூட சீனா மூலம் தான் கடந்து செல்கின்றது.” சீனா பொருளாதாரத் தடைகளை சுமத்த வேண்டும், அது வடகொரிய ஆட்சியை சரித்துவிடும் என்று கெர்ரி தெரிவிக்கிறார். இது பிராந்தியம் முழுவதும் நீண்டதூரவிளைவுகளை ஏற்படுத்தும். சீனா, பியாங்யாங்கை வழிக்குக் கொண்டுவரத் தயாராக இல்லை என்றால், அமெரிக்கா ஏற்கனவே பலதடவை தான் கொரியத் தீபகற்பத்தை போரின் விளிம்பில் தள்ளத்தயார் என்பதை நிரூபித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒபாமா நிர்வாகம், வடகொரியாவின் வெற்று அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்க தென்கொரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளால் விடையிறுத்ததுடன், ஆத்திரமூட்டும்வகையில் அணுவாயுதத்திறன் கொண்ட B-2, B52 விமானங்களை தென் கொரியாவிற்கு மேலாக பறக்கவிட்டது. சீனா மீது அதன் தென்சீனக்கடல், கிழக்கு சீனக்கடலில் அமெரிக்க நட்பு நாடுகளான பிலிப்பைன்ஸ், ஜப்பான் உட்பட அண்டை நாடுகளுடனான நீர்நிலைப் பிரச்சினைகளில் அழுத்தம் கொடுத்துள்ளது. நேற்று பெய்ஜிங்கில் தன் கருத்துக்களில் கெர்ரி, அவர்களின் பாசாங்குத்தனத்தில் நிலைகெட்டு சீனா இம்முரண்பாடுகளை தீர்க்க “ஒரு அமைதியான, அதிகமான சட்ட ஒழுங்கை அடித்தளமாக கொண்ட, மோதல் குறைவான ஆட்சியை நிறுவுமாறு” கேட்டுக் கொண்டார். கருத்து வேறுபாடுகள் அமெரிக்கா கையெழுத்திட மறுத்துவிட்ட சர்வதேச கடல் சட்டத்தின்படி தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். கெர்ரியின் குறிப்பு தற்செயலான நிகழ்வு அல்ல. முன்பு அமெரிக்கா பல கடல்பகுதி மோதல்களில் தன்னை “நடுநிலை” என்று அறிவித்து, தனது நோக்கம் “தடையற்று கடலில் செல்லும் சுதந்திரத்தை” உறுதிசெய்வதே என்று வலியுறுத்தி வந்தது. ஆனால், கடந்த வாரம் உதவி வெளிவிவகார செயலாளர் டானியல் ரஸ்ஸல் குறிப்பாக தென்சீனக் கடலில் சீனாவின் உரிமைகளை கேள்விக்குட்படுத்தினார். இவை “சர்வதேச சட்டத்தின்கீழ் எந்த வெளிப்படையான அடித்தளத்தையும் கொண்டிருக்கவில்லை”, “அடிப்படையில் பிழையானவை” என்றார். அமெரிக்கா பிலிப்பைன்ஸின் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்து சீனாவுடன் மோதல் போக்கில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டுள்ளது. எந்த புதிய விமானப்பாதுகாப்பு அடையாள பிராந்தியத்தையும் (ADIZ) அறிவிப்பது குறித்து கெர்ரி பெய்ஜிங்கிற்கு சட்டம் ஒன்றைக் கொடுத்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் சீனா, கிழக்குச் சீனக்கடலில் தனது ADIZ பகுதியை அறிவித்ததைத் தொடர்ந்து, பென்டகன் B-52 விமானத்தை அப்பகுதியில் சீன அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் பறக்கச் செய்தது. கடந்தவாரம் அமெரிக்க வெவிவகாரத்துறை ஜப்பானிய செய்தித்தாளில் திட்டமிட்டு வெளிவிடப்பட்ட செய்திபோல் தோன்றியதை எடுத்துக்கொண்டு தென் சீனக்கடலில் புதிய ADIZ இற்கான எவ்விதமான சீனாவின் திட்டங்களையும் “ஆத்திரமூட்டும், ஒருதலைப்பட்ச நடவடிக்கை” எனக் கண்டித்தது. நேற்று இக்கருத்தை பெய்ஜிங்கில் வலியுறுத்தும் வகையில் கெர்ரி, “ஒருதலைப்பட்ச, அறிவிக்கப்படாத, முறையான வழிவகை இல்லாத ஆரம்ப முயற்சி, பிராந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும்” என்று எச்சரித்தார். சீனா “குறைந்த மோதல் அணுகுமுறையை” கொள்ள வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையைப்போல், ஒபாமா நிர்வாகத்தின் “முன்னுரிமை கொடுத்தல்” வேண்டுமென்றே இராஜதந்திர, பொருளாதார, இராணுவம் என ஒவ்வொரு துறையிலும் சீனாவுடன் மோதலுக்கு செல்லும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒபாமா முறையாக நவம்பர் 2011இல் “மறுசமநிலையை” அறிவிக்கும் முன்னரே, முன்னாள் வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் தென்சீனக்கடலில் முன்பு ஒப்புமையில் சிறிய மோதல்களாக இருந்ததில் தலையிட்டு சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தினார். அவர் அப்பட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் 2010 உச்சிமாநாட்டில் இந்நீர்நிலையில் “தடையற்றுப் பயணிக்கும் சுதந்திரம்” உறுதிப்படுத்தப்படுவது அமெரிக்காவிற்கு ஒரு “தேசிய நலன் ஆகும்” என அறிவித்தார். வாஷிங்டனின் ஊக்கம் பெற்ற அமெரிக்க நட்பு நாடுகள், சீனாவுடனான அவற்றின் நீர்நிலை முரண்பாடுகளில் இன்னும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டன. தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய நபராக செயற்படும் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி பெனிக்நோ அக்விநோ, இம்மாதம் முன்னதாக தென்சீனக்கடலை ஹிட்லர் 1938 செக்கோசிலாவாக்கியாவின் மீதான படையெடுப்பிற்கு முன்பு இருந்த பிரச்சனைக்குரிய சுடெடன்லாந்துடன் ஒப்பிட்டார். இது சீனா, நாஜி ஜேர்மனி போல் நடந்து கொள்கிறது என்னும் உட்குறிப்பைக் காட்டுகிறது. இந்த வாரம் மணிலாவில் அமெரிக்க கடற்படைத் தலைமைச் செயலர் அட்மைரல் ஜோனதன் க்ரீனெர்ட் அக்வினாவின் கலகமூட்டும் கருத்துக்களில் இருந்து விலக்கிக்கொள்ளவில்லை. மாறாக ஒரு சீனத்தாக்குதல் வந்தால் அமெரிக்கா பிலிப்பைன்சிற்கு உதவியாக போரிடுமா என கேட்கப்பட்டதற்கு “ஆம், உங்களுக்கு உதவுவோம்” என்றார். நேற்று பெய்ஜிங்கில் கெர்ரியின் கடுமையான நிலைப்பாடு, வாஷிங்டனிலும் ஆசியாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளிடையேயும் ஒபாமா நிர்வாகம், குறிப்பாக கெர்ரி “ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுத்தலை” இன்னும் முன்னெடுக்கவில்லை என்ற கவலைகளை தகர்ப்பதற்கு எடுக்கப்பட்டது. நேற்றைய பைனான்சியல் டைம்ஸ் “ ஆசியாவிற்கு நான்கு முறை வந்தபோதிலும் கடந்த வருடம் கெர்ரி தன் ஆற்றைலை மத்திய கிழக்கில் திருப்பியது குறித்த அதிருப்தியை ஆசியாவில் கிட்டத்தட்ட கேட்கலாம்” என்று எழுதியது. கடந்த அக்டோபர் மாதம் வாஷிங்டனில் அரசாங்கம் மூடப்பட்டது நிகழ்ந்தபோது, முக்கிய ஆசிய உச்சிமாநாடுகளில் ஒபாமா கலந்து கொள்ளாதது விமர்சனங்களை உயர்த்தியது. ஆசியாவில் கவனம் செலுத்தப்படவில்லை எனக்கூறப்படுவது உண்மையல்ல, வெறும் மேலோட்டமானதே. வியாழன் அன்று சியோலில் கெர்ரி சுட்டிக்காட்டியபடி, அமெரிக்கா அதிக இராஜதந்திர, பொருளாதார, இராணுவ வளங்களை பிராந்தியத்தில் “ஒவ்வொரு நாளும்” அளிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் கெர்ரியும் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹெகலும் டோக்கியாவின் மந்திரிகளை சந்தித்து அடுத்த சில ஆண்டுகளில் மிக நவீன, ஆபத்தான அமெரிக்க இராணுவத் தளவாடங்களை பரந்தளவில் நிலைப்படுத்தும் திட்டங்களை அறிவித்தனர். 2020 அளவில் பென்டகன் அதன் இராணுவ விமானங்கள், கடற்படைக் கப்பல்களில் 60% இனை இந்திய-பசிபிக் பகுதியில் நிறுத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளது. கெர்ரி, சீனாவிற்கும் தென் கொரியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் பயணித்துள்ளது பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்க இராஜதந்திரத் தாக்குதலும் அதிகரித்துள்ளதை அடையாளம் காட்டுகிறது. இந்த வாரம் வெள்ளை மாளிகை ஒபாமா ஏப்ரல் மாதம் ஆசியாவில் செய்யும் பயணக் குறிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஜப்பான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகியவை அடங்கும். கடந்த அக்டோபர் மாதம் இவருடைய பயணம் இரத்து செய்யப்பட்டு இருந்தது. டார்வின் தளத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்களை நிறுத்தும் வாய்ப்பை கொண்ட நவம்பர் 2011ல் ஆஸ்திரேலியாவில் கையெழுத்திட்ட உடன்பாட்டின் வழியில் பிலிப்பைன்ஸில் அவர் புதிய இராணுவத்தளம் பற்றிய உடன்பாட்டை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனத் தலைவர்கள் கெர்ரியின் வருகை குறித்து அதிக கருத்துக்கள் தெரிவிக்கவில்லை என்றாலும் அரசாங்கத்திற்கு சொந்தமான செய்தி ஊடகம் விமர்சன ரீதியாக உள்ளது. குளோபல் டைம்ஸ் அமெரிக்காவின் “மறு சமநிலை” சீனா மீது அழுத்தத்தை “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகம் பொறுத்துக் கொள்ள முடியாமல் செய்துள்ளது” என அறிவித்தது. உத்தியோகபூர்வ ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கெர்ரியை, “பிராந்தியத்தில் உண்மையான மோதலை தோற்றுவிக்கும் தன் மரபார்ந்த நட்புநாடான ஜப்பானை தொடர்ந்து சமாதானப்படுத்துவது குறித்து” எச்சரித்தது. கட்டுரையின் முக்கியத்துவம், சீனத்தலைமை ஜப்பானிய அரசாங்கத்தை அதிகரிக்கும் அழுத்தங்களுக்கு குறைகூறும் வழிவகையைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும் என்றது. உண்மையில் ஒபாமா நிர்வாகம்தான் ஆசியாவிலும் உலகெங்கிலும் முக்கிய மோதலை தோற்றுவிக்கும் நாடாகும். அமெரிக்கா ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை அதிகரித்தபோதும், இராணுவத்தின் மீதுள்ள சட்டபூர்வ, அரசியலமைப்பு தடைகளை அகற்ற முயலும்போதும் முற்றிலும் ஆதரித்துள்ளது. “ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுத்தல்” என்பதின் மூலம் அமெரிக்கா அதன் ஒப்புமையில் பொருளாதார வீழ்ச்சிக்கு ஈடுகட்டும் வகையில் அதன் இராணுவ வலிமையை பயன்படுத்தி இந்திய-பசிபிக் பகுதியில் தொடர்ந்து தன் மேலாதிக்கத்தை உறுதிபடுத்துகிறது. இதுதான் உலகில் மிக விரைவாக வளரும், அதிக இலாபம் தரும் பகுதியாகும். வாஷிங்டன் மீண்டும் மீண்டும் கூறுவதில், பெய்ஜிங் அதன் தற்போதைய “சட்டத்தைத் தளம்” கொண்ட உலக ஒழுங்கிற்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதில் களைப்பு காண்பதில்லை; அதாவது அமெரிக்க ஆதிக்கத்தில் இருக்கும் ஒழுங்கு, இதில் சீனா குறைவூதியத் தொழிலாளர் அரங்காக தொடர வேண்டும் என்பதில். |
|
|