சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French unions, pseudo-left seek to block opposition to Hollande’s cuts

பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள், போலி இடதுகள் ஹாலண்டின் வெட்டுக்களுக்கு எதிர்ப்பை தடுக்க முயல்கின்றன

By Kumaran Ira 
18 February 2014

Use this version to printSend feedback

பிரான்சின் ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) ஒரு வணிக சார்புடைய, சமூகநலச் செலவுகள் மற்றும் தொழிலாளர் செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்கள் கொண்ட “பொறுப்புணர்வு ஒப்பந்தம்” (pacte de responsabilité) என்பதை அறிவித்தபின், பிரான்சின் தொழிற்சங்கங்களும் போலி இடது அமைப்புக்களும் சோசலிஸ்ட் கட்சிக்கும் அதன் பிற்போக்குத்தன கொள்கைக்கும் எதிர்ப்புக்களை தடுக்க தலையிடுகின்றன.

பெப்ருவரி 14ம் திகதி, ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கத்தின் தலைவர் தியெரி லுப்போன், CGT மற்ற தொழிற்சங்கங்களுடன் மார்ச் 18 அன்று ஊதியங்கள், வேலை குறித்த கூட்டு எதிர்ப்பு பற்றி முடிவெடுக்க ஆலோசிக்கும் என அறிவித்தார். எனினும், அவர்கள் “பொறுப்புணர்வு ஒப்பந்தத்தை” எதிர்க்கவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.

“இது பொறுப்புணர்வு ஒப்பந்தத்திற்கு எதிரான நடவடிக்கைத் தினமாக இருக்காது, ஆனால் ஊதியங்கள், வேலைகள், சமூகப் பாதுகாப்பிற்கு நிதியளித்தல் பற்றியாகும்.” என்றார் தியெரி லுப்போன்.

லுப்போன் உடைய கருத்து, CGT தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு கொடுக்கும் ஆதரவை மறைக்கும் நோக்கம் கொண்ட இழிந்த தவிர்ப்பாகும். PS ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், “பொறுப்புணர்வு ஒப்பந்தத்தை” கடந்த மாதம் அறிவித்தார்; இதில் சுகாதாரப் பாதுகாப்பு, உள்ளூராட்சி, குடும்ப உதவிநிதிகள் என மில்லியன் கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் பெறுபவற்றில் 50 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்கள் உள்ளன. ஊதியங்கள், சமூகப் பாதுகாப்புக்கு ஒரு நாள் நடவடிக்கைக்கு அழைப்பு விடும் அதே நேரத்தில், அவற்றின் மீதான தாக்குதலை அவர் எதிர்க்கவில்லை என வலியுறுத்துகையில் லுப்போன் தான் உண்மையில் “பொறுப்புணர்வு ஒப்பந்தத்தை” ஆதரிப்பதைத்தான் காட்டுகிறார்.

மார்ச் 18 எதிர்ப்பு தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஹாலண்டின் தாக்குதலை எதிர்க்க முற்படும் எவருக்கும் ஒரு முட்டுச்சந்தாகவே இருக்கும். பெப்ருவரி 6 எதிர்ப்பைப் போல், பெருகிய முறையில் தொழிலாளர்கள் புறக்கணிக்கும் தொடர்ச்சியான ஒரு நாள் வேலைநிறுத்தங்கள், இவை தொழிலாளர்களின் சீற்றத்தை திசைதிருப்பவும் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர் எதிர்ப்பு சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுத்து நடத்தும் பேச்சுக்களின் பங்கை மறைக்கவும்தான் உதவுகின்றன. சோசலிஸ்ட் கட்சியின் வெட்டுக்களுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் போலி இடது அமைப்புக்களில் இருந்து சுயாதீனமான வடிவில் நடத்தினால்தான் வெற்றி அடையமுடியும்.

தொழிற்சங்க அதிகாரத்துவம், முதலாளிகள் குழு மற்றும் அரசுடன் இன்னும் வெட்டுக்களுக்கு ஆய்வு செய்து பேச்சுக்களை நடத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஆண்டின் வரவு-செலவு திட்ட செலவுக் குறைப்புக்களில் 15 பில்லியன் யூரோக்கள் உள்ளன; 2015. 2016. 2017 வரவு-செலவு திட்டங்களில் முறையே 18, 18, 17 பில்லியன் யூரோக்கள் இருக்கும்; இதைத்தவிர பெருநிறுவன ஊதிய வரிகளில் 30 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்கள் இருக்கும்.

நிதியச் சந்தைகள், PS இதுவரை அறிவித்துள்ள வெட்டுக்களுக்கு அப்பால் ஆழப்படுத்த வேண்டுமெனக் கோரியுள்ளன. கடந்த வாரம், பிரான்சின் தேசிய தணிக்கையாளர் நிறுவனம் (Cour des comptes) PS க்கு பொதுக்கடன் எழுச்சியை திரும்ப பெறுமாறும், இந்த ஆண்டு தேசிய வருமானத்தில் உயர்மட்ட 95 வீதத்தில் நிர்ணயிக்குமாறும் கோரியுள்ளது.

Cour des comptes  இன் தலைவர் Didier Migaud கூறினார்: “பொது நிதிகள் ஒருங்கிணைப்பில் எந்த தாமதமும், எங்கள் ஐரோப்பிய அண்டை நாடுகளுடன் வருந்ததக்க வேறுபாடாக மாறும்; புதிய கடனில் பெரும்பகுதி, பிரான்சின் நிதிய நம்பகத்தன்மைக்கு தீவிர அடியாக இருக்கும். பிரான்சின் கடன் “ஆபத்தான பகுதியில்”  (danger zone) உள்ளது என்றும், வட்டிவிகிதங்களில் 1% கூடினாலும், கிரேக்கத்தில் கோரியது போல் பிரான்சிலும் வங்கிகள் கோரினால்—ஆண்டிற்கு பிரான்சின் கடனுக்கான வட்டிப் பணம் 52 பில்லியன் யூரோக்களில் இருந்து 54 பில்லியன் யூரோக்களாக அதிகரிக்கும்.

தொழிற்சங்கங்களும் மத்தியதர வகுப்பு போலி இடது கட்சிகளும் ஹாலண்டின் வலது மாற்றத்திற்கு விடையிறுத்து, தொழிலாள வர்க்கத்தின் வரவிருக்கும் தாக்குதல் அலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் ஒன்றாகச் சேர்ந்துள்ளன; ஒரு சில வாடிக்கையான புகார்களைக் கூறி, PS க்குத் தங்கள் அரசியல் விசுவாசத்தை வலியுறுத்துகின்றன.

CGT தன்னுடைய விசுவாசத்தை “பொறுப்புணர்வு ஒப்பந்தத்திற்கு” உறுதியளித்துள்ளது போல், போலி இடது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA), PS சுற்றியுள்ள அனைத்து "இடது" களுக்கு இடையேயும் ஒற்றுமை வேண்டும் என அழைப்பு விடுத்து பகிரங்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் தலைப்பு : "புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் பகிரங்கக் கடிதம்: இடது எழுச்சியின் ஒரு வார இறுதி.”

அது அறிவித்தது: “அரசியல் மற்றும் தொழிற்சங்க இடது என்று அரசாங்கக் கூட்டணியில் பங்கு பெறாத அனைத்து அமைப்புக்களும், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைக் காக்கப் போராடும் அரசு சாரா அமைப்புக்களும் ஒன்றாகச் சேர்ந்து பொதுப்போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுகிறோம்.”

NPA  “பொதுவாக செயல்படுவோம்” என்று கூறும் சக்திகளில் ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF) அடங்கும், இது சட்டநுணுக்க முறைப்படி PS பாராளுமன்ற கூட்டணி அரசாங்கத்தில் பங்கு கொள்ளாதபோதும், PS இன் நீண்டகால நட்பு அமைப்பும் வரலாற்று ரீதியாக CGT யின் மீது ஆதிக்கம் கொண்டதுமாகும். இவ்வகையில் CGT பொறுப்புணர்வு ஒப்பந்தத்திற்கு அதன் ஆதரவைத் தருகையில் NPA,  CGT உடைய கொள்கைகளுடன் இணைவதற்கு உறுதியளிக்கிறது.

இது, போலி இடதின் அரசியல் திவால்தன்மைக்கு நிரூபணம் ஆகும்; தொழிலாளர்களுக்கும் முழு அரசியல் உயரடுக்கிற்கும் இடையே வர்க்கப் போராட்டங்களின் வெடிப்பு வர இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது. ஹாலண்ட் தொடரும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள், ஒரு பொருளாதார, சமூகப் பேரழிவு வரும் என்ற அச்சுறுத்தலை கொடுக்கின்றன என்பதுடன் வேலையின்மையும் கடுமையாக உயரும். கிரேக்கம், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் 2008 பொருளாதார நெருக்கடி வெடித்தபின் சமூக ஜனநாயக மற்றும் கன்சர்வேட்டிவ் அரசாங்கங்கள் தொடர்ந்திருந்த சிக்கன கொள்கைகள் வரிசையிலேயே இது உள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் பெருகும் சீற்றம், எதிர்ப்பு இவற்றை முகங்கொடுக்கையில், போலி இடது குழுக்கள் ஐரோப்பா முழுவதும் ஆளும் வர்க்கம் தொடுத்துள்ள சமூக எதிர்ப்புரட்சிக்குத்தான் ஆதரவு கொடுத்துள்ளன. ஆளும் வர்க்கம் வங்கிகளுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்களைக் கொடுத்து, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை நசுக்கிய போதும், தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அணிதிரள்வுகளைத்தான் தடுத்துள்ளன.

பிரான்சில் ஸ்ராலனிஸ்ட்டுக்களும் NPA வும் 2012 ஜனாதிபதித் தேர்தலில் ஹாலண்டின் வெற்றியைப் புகழ்ந்தன. அப்பொழுது முதல் இவை பெயரளவு எதிர்ப்புக்களை வெளியிட்டு, அதே நேரத்தில் ஹாலண்டுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வணிக-சார்பு பொதுநலச்செலவு வெட்டுக்களை மேற்பார்வையிட்டு, PSA Aulnay, குட்இயர் அமியானில் ஆலைகள் மூடப்படுவதையும் மேற்பார்வையிட்டுள்ளது.

ஹாலண்டின் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களில் இருந்து NPA தன்னை சற்று ஒதுக்கி வைத்துக் கொள்ளும் முயற்சிகள் இழிந்த தன்மை மற்றும் கெட்ட நோக்கத்தை புலப்படுத்துகின்றன. அதன் பகிரங்கக் கடிதம் “ஹாலண்ட் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, அவருடைய முழுக் கொள்கையும் நிதியச் சந்தைகள், முதலாளிகள் மற்றும் வலதை நோக்கி திரும்பி வருகிறது” என வலியுறுத்துகிறது.

இது NPA  உடைய பிற்போக்குத்தன வர்க்க பங்கைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது 2012 ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன் வாக்காளர்களை, பதவியில் இருக்கும் வலதுசாரி நிக்கோலோ சார்க்கோசிக்கு எதிராக ஹாலண்டிற்கு நிபந்தனையின்றி வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டது; அதே நேரத்தில் PS ”சமூக தடையற்ற-சந்தை” அமைப்பு என்று முத்திரையிட்டு, ஹாலண்ட் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளை தொடர்வார் என்ற தன் விழிப்புணர்வையும் பிரதிபலித்தது.

ஹாலண்டின் தேர்தல் வெற்றிக்குப்பின், NPA உடைய ஜனாதிபதி வேட்பாளர் Philippe Poutou ஹாலண்டை பாராட்டி: “ ‘செல்வந்தர்களின் ஜனாதிபதியான’ நிக்கோலோ சார்க்கோசி நன்கு தோற்கடிக்கப்பட்டார், நமக்கு மகிழ்ச்சிதான்... மிக பிற்போக்குத்தன திருப்பத்தைக் கொண்ட பிரச்சாரத்திற்குப்பின், “மக்கள் வேட்பாளர்” என்று கூறிக்கொண்ட வேட்பாளர் அகற்றப்பட்டார், இது நல்லதுதான்” அறிவித்தார்.

ஹாலண்ட் வெற்றி, ஒரு "நல்ல விஷயம்" மற்றும் செல்வந்தர்களுக்கு ஒரு தோல்வி என்ற இக்கூற்றுக்கள், பொய்கள் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.