World Socialist Web Site www.wsws.org |
இத்தாலியில் அரசாங்க மாற்றம்
By Marianne Arens வியாழன் மாலை இத்தாலியின் பிரதமர் என்னும் பதவியில் இருந்து தன் இராஜிநாமாவை என்ரிக்கோ லெட்டா அறிவித்தார். அவருடைய சொந்த ஜனநாயகக் கட்சி (PD) அதன் பிரதமருக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை திறமையுடன் இயற்றியுள்ளது. டிசம்பர் மாதம் கட்சயின் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாத்தெயோ ரென்சி, தன்னை “Rottamattore” (பழைய அரசியலை அகற்றுபவர், அதை ஆதரிக்கும் அரசியல் வர்க்கத்தையும் அகற்றுபவர்) என்று அழைத்துக் கொள்பவர், லெட்டாவை தூக்கியெறிய அரண்மனை சதி போன்ற ஒன்றை செய்துளார். கட்சித் தலைமையை ரென்சி ஒன்றாகக் கூட்டி, 20 நிமிட உரையாடலில், “Impegno Italia” (இத்தாலியின் ஈடுபாடு) என்று அவரால் கூறப்படும் ஒரு அவசரகால வேலை திட்டத்தை முன்வைத்தது, இது 2018 வரை தேர்தலகள் இல்லாமல் பதவியில் இருக்கும் புதிய அரசாங்கத்தால்தான் அடையப்பட முடியும் என்றார். லெட்டாவும் கூட்டத்திற்கு வரவில்லை மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் அறையை விட்டு நீங்கினர்; அதன் பின் அறிக்கை 136 க்கு 16 என்ற வாக்குக் கணக்கில் ஏற்கப்பட்டது. இவ்வகையில் கட்சி திறமையுடன் தன் சொந்த பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இயற்றியது. லெட்டா தன் இராஜிநாமாவை அறிவித்து, வெள்ளியன்று ஜனாதிபதி Giorgio Napolitano விடம் அதைச் சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறினார். கட்சித் தலைமைக்கு தன் உரையில், ரென்சி புதிய அரசாங்கம் “ஒரு தீவிரமான புதிய ஆரம்பத்தையும் ஆழ்ந்த மாற்றங்களையும்” கொண்டிருக்கும், புதிய தேர்தல்கள் வரை காத்திராது என அறிவித்தார். மற்றொரு ஆறு மாதங்கள் இத்தாலி “புதிய சகதியில்” புதிய தேர்தல் சட்டம் ஏற்கப்படும் வரை காத்திருக்கமுடியாது என்றார். நாடு “எளிமை, தைரியம்” இவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இதற்காக, PD இந்த சவாலை எடுக்க தயாராக இருக்க வேண்டும். ரென் தானே அரசாங்கத்தை எடுத்துக்கொள்ள விரும்பினார். L’Unita கொடுத்துள்ள தகவல்படி, அவர் ஏற்கனவே அரசாங்கக் குழுவின் ஒரு முழுமையான பட்டியலையும் தன் பையில் வைத்திருந்தார். தற்போதைய கூட்டணியை வலதுசாரிக் கட்சிகளான Scelta Civica மற்றும் Nuovo Centro Destra உடன் தொடர விரும்புகிறார். பிந்தையதின் தலைவர் முன்னாள் துணைப் பிரதமர் ஏஞ்சலினோ அல்பனோ இன்னும் தன் ஆதரவை அடையாளம் காட்டவில்லை. மாத்தெயோ ரென்சி உடனடி அரசியலமைப்பு மாற்றங்களை அறிவித்துள்ளார்; இதில் ஒரு புதிய தேர்தல் சட்டம், செனட் (பாராளுமன்றத்தின் மேல்பிரிவு அகற்றப்படல்) அடங்கியுள்ளது. ஏற்கனவே அவர் இரு அறைகள் முறை அகற்றப்பட வேண்டும் எனக் கூறி வருகிறார் மற்றும் மாநில நிர்வாகங்கள், அரச வணிகச் செலவுகளில் 1.5 பில்லியன் யூரோக்களை சேமிப்பாக கொண்டுவரலாம் என்றும் கூறுகிறார். அவரது ஆட்சி சதிக்கு முன்பு, ரென்சிக்கு இத்தாலிய பெரு வணிகத்தின் ஆதரவு உறுதி செய்யப்பட்டது. புதன் அன்று அவர் கான்பைன்டுஸ்ட்ரியா, இத்தாலிய முதலாளிகள் கூட்டமைப்பின் (Confindustria) தலைவர் Giorgio Squinzi உடன் நீண்ட விவாதத்திற்கு சந்தித்திருந்தார், அவர் பகிரங்கமாக ரென்சியின் தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தத் திட்டங்களை பாராட்டியுள்ளார். முந்தைய அரசாங்கங்கள் உயர்நிலையில் உள்ள தேசியக் கடன்களை குறைக்க சிக்கன நடவடிக்கைகள் மீது வலியுறுத்தியிருக்கையில், பொருளாதாரத்தை இன்னும் ஆழ்ந்த மந்தநிலைக்குத் தள்ளியிருக்கையில், ரென்சி தொழிலாளர் சட்டங்கள், சமூக விதிகள் போன்றவற்றில் கவனம் செலுத்த்த விரும்புகிறார். இதுவரை இவை இத்தாலிய தொழிலாளர்களுக்கு சிறிய பாதுகாப்பை கொடுத்திருந்த்து. இது தொடர்பாக அவருக்கு முன்மாதிரியாக இருப்பது, பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயர் (19097-2007), மற்றும் ஜேர்மனியின் சமூக ஜனநாயக சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர் (1998-2005) ஆவர். இவர்கள் பல தசாப்தங்களாக இருந்த பழைய தொழிலாளர் உரிமைகளை அகற்றி மிகப் பெரிய குறைவூதியத் துறையை ஏற்படுத்தினர். ஒரு புதிய தொழிலாளர் சட்டத்திற்கு ரென்சி முன்வைத்த திட்டம், அவர் வேலைகள் சட்டம் என அழைப்பது, முதலாளிகளுக்கு ஒவ்வொரு வகையிலும் நிவாரணம் கொடுக்கும், மற்றும் ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாளர் ஒப்பந்தம் மூலம் தொழிலாளர் சந்தையை இன்னும் “வளைந்து கொடுக்கும்” தன்மை உடையதாக ஆக்கும். வெள்ளை மற்றும் நீலத் தொழிலாளர்கள் முழு ஊதியம், வேலை உரிமைகள் மற்றும் பணிநீக்கத்திற்கு எதிரான உரிமைகளை மூன்றாண்டுகள் பணித்தகுதிக்காலத்திற்கு பின்னர்தான் பெறுவர். இந்நடவடிக்கைகள் ஒப்பந்த நிறுவன வகை வேலைகளை இத்தாலியில் முன்னை விட விரைவாகப் பரவ வழி செய்யும்; இத்தாலிய தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் கூலிகள் வியத்தகு முறையில் சரிய வழிவகுக்கும். CASSA Integrazione, வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அற்ப தொகையை வழங்கும் அரசாங்கம் ஆதரவு திட்டம் அகற்றப்பட்டு; அடையாள வேலையின்மை நலன் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும். ஃபியட் போன்ற நிறுவனங்களில் இருக்கும் தொழிலாளர்கள் எளிதில் பணிநீக்கம் செய்யப்படலாம், குறைவான வேலையின்மை நலன்களால் குறைவூதிய வேலையை ஏற்கும் கட்டாயத்திற்கு உட்படலாம். பாரிய அரசாங்க பற்றாக்குறை இருந்தாலும், ரென்சி பெருநிறுவன வரிகளை இன்னும் 10% குறைக்க விரும்புகிறார். ரென்சியின் சதி வெற்றி அடைந்தால், அவர் நான்கு ஆண்டுகளில் நான்காம் பிரதம மந்திரியாக இருப்பார். என்ரிக்கோ லெட்டா பதவியில் 10 மாதங்கள்தான் இருந்தார். அவர் இப்பொழுது சுவிஸ் வணிக செய்தித்தாள் NZZ இனால் “அப்படியே நிறுத்திவிடும் மேலாளர்”, “இடைக்கால”, “வேறுவழியின்றி கடைசி நபர்” எனப்படுகிறார். அரசாங்கத்தில் இல்லாத Forza Italia கட்சியின், சில்வியோ பெர்லுஸ்கோனி பாராளுமன்றத்தில் ஆட்சி மாற்றம் குறித்து வெளிப்படையான விவாதம் வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பெர்லுஸ்கோனி ஏற்கனவே பல மணி நேரம் ரென்சியுடன் PD தலைமையகத்தில் ஜனவரி மாதம் பேசியுள்ளார். முன்பு அவர் “extra-grand” கூட்டணிக் கருத்தை முன்வைத்தார்; அதில் ஐந்து நட்சத்திர இயக்கத்தின் தலைவரான பெப்பே கிரில்லோ மற்றும் தானும் ரென்சியையும் இருப்பர். ரென்சி அவரது உள் சதியை மேற்கொள்ள முக்கிய தொழிற்சங்கங்களின் அணுகுமுறை மூலம் ஊக்கம் பெற்றார். CGIL தலைவர் Susanna Camusso, அவருடை அணுகுமுறையை “சரியானது" என வரவேற்றுள்ளார்; ஏனெனில் இளம் தொழிலாளர்கள் இதையொட்டி எளிதில் வேலை கிடைக்கப் பெறுவர் என்றார். இடது என அழைக்கப்படும் உலோகத் தொழிலாளர்கள் சங்கத்தின் Maurizio Landini, மற்றும் SEL (Sinistra Ecologia Libertà) உடைய Nichi Vendola ஆகியோரும் ரென்சி மீது பாராட்டை பொழிந்துள்ளனர். சமீபத்திய அரசாங்க மாற்றம், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தோன்றிய PD இன்று இத்தாலிய, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மற்றும் வங்கி உலகிற்கு நேரடி நிர்வாகக் கருவியாகிவிட்டது. மாத்தெயோ ரென்சி மற்றும் என்ரிக்கோ லெட்டாவை அடக்கிய ஒரு சிறிய கிறிஸ்துவ ஜனநாயகப் பிரிவு கட்டுப்பாட்டை கொண்டுவிட்டது, கம்யூனிஸ்ட் கட்சியின் பழைய செயலர்கள், Massimo D’Alema, Pierluigi Bersani, Guglielmo Epifani ஆகியோரின் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த நிகழ்வுகளின் பின்னணியில் இத்தாலியின் பொருளாதார நெருக்கடி உள்ளது. கடந்த தசாப்தத்தில் தேசியக்கடன், ஓராண்டிற்கு முன்னர் 2 டிரில்லியன் யூரோக்கள் என இருந்ததில் இருந்து 500 பில்லியன் யூரோக்களுக்கு மேல் உயர்ந்துவிட்டது. பல கடுமையான சிக்கன நடவடிக்கைகள் பெர்லுஸ்கோனி, மோன்டி, லெட்டா ஆகியோரால் செயல்படுத்தப்பட்டதின் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக சரிந்துள்ளது. இந்த பொருளாதாரச் சரிவின் அடையாளத்தை சில நாட்களுக்கு முன் இத்தாலியில் இருந்து ஃபியட் தலைமையகம் அகன்றதில் காணலாம். |
|