World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Appearance of Robert Service in Berlin ends in fiasco

பேர்லினில் ரோபர்ட் சேர்விஸின் கூட்டம் படுதோல்வியில் முடிவடைந்தது

By Peter Schwarz
14 February 2014

Back to screen version

லியோன் ட்ரொட்ஸ்கி குறித்த வாழ்க்கைச் சரிதத்தினால் பரவலான அவமதிப்பை சம்பாதித்து விட்டிருந்த ரோபர்ட் சேர்விஸ் புதனன்று மாலை பேர்லினில் உரையாற்றவிருந்ததாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருந்த திட்டநிரல், புத்திஜீவித திவால்நிலையை ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததைப் போல் கருதக் கூடிய அளவுக்கு, எந்த வித விளக்கமும் இல்லாமல் கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டது. உரை நடக்கவிருந்த இடத்துக்கு வந்த மாணவர்களும் மக்களும்ரோபர்ட் சேர்விஸ் உடனான 2014 பிப்ரவரி 12 அன்றான சந்திப்பு துரதிர்ஷ்டவசமாக இரத்து செய்யப்பட்டிருக்கிறதுஎன்று கூட்ட அறையின் கதவில் ஒட்டப்பட்டிருந்த ஒரேயொரு காகித அறிவிப்பைத் தவிர வேறொன்றையும் காண முடியவில்லை.

இந்த பொதுக்கூட்ட உரை இரத்து செய்யப்பட்டதானது எதிர்பாராத துரதிர்ஷ்டத்தினால் விளைந்ததல்ல. மாறாக சேர்விஸ் அவர் எழுதிய வாழ்க்கைசரிதத்தின் மீதான விமர்சனங்களுக்கு பொதுவில் பதிலளிக்கும் நிர்ப்பந்தம் பெற்றுவிடா வண்ணம் பாதுகாக்க, ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத் துறையின் வலது-சாரித் தலைவரான பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியின் உத்தரவினால் விளைந்ததாக இது இருந்தது.

பார்பெரோவ்ஸ்கியின் துறை வலைத் தளத்தில் பதிவிட்டிருந்த உரை குறித்த ஆரம்ப அறிவிப்பில், ஆர்வமுள்ள அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள்என்று தான் கூறப்பட்டிருந்தது.

ஆனால் பொதுமக்களுக்கு அலட்சியத்தையும் ஜனநாயக உரைகளுக்கான குரோதத்தையும் காட்டுகின்ற விதமாக, பார்பெரோவ்ஸ்கி சேர்விஸ் சந்திப்பை ஒரு இரகசியமான இடத்திற்கு மாற்றி விட்டார். துறைக்கு உள்ளாக பாபெரோவ்ஸ்கிக்கு விசுவாசமாய் இருக்கக் கூடிய ஒரு சிறு குழுவினருக்கு மட்டுமே புதிய இடம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பார்பெரோவ்ஸ்கியின் அமைப்பில் இருந்த ஓட்டையின் காரணமாக, இரகசிய கூட்டத்தின் இடமும் தெரிந்து போனது. ஆயினும் ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருந்த அந்த புதிய இடத்திற்கு ஆர்வமான பலர் சென்று சேர்ந்தபோது அவர்களை பாதுகாவலர்கள் புடைசூழ பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி எதிர்கொண்டார். பார்வையாளர்கள் தங்களை அடையாளம் காட்டி இந்த உரையில் கலந்து கொள்ளக் காரணம் என்ன என்பதைக் கூறிய பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

நிலவறையை ஒத்த ஒரு சந்திப்பு அறையில் நடத்தப்பட்ட இந்த உரையில் சேர்விஸிடம் ஏதேனும் கேட்கக் கூடாத கேள்வியை கேட்டுவிடுவாரோ என்று பார்பெரோவ்ஸ்கி அஞ்சிய எவரொருவரும் உரையில் கலந்து கொள்வதில் இருந்து தடுக்கப்பட்டு விட்டனர்.

அவ்வாறு தடுக்கப்பட்டவர்களில், சேர்விஸின் கூலிக்கு மாரடிக்கும் வேலையை அம்பலப்படுத்துவதில் ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றியலியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்துஎன்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட் நோர்த்தும் ஒருவர். நோர்த் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதும் பார்பெரோவ்ஸ்கி தனிநபர் அவமதிப்புகளில் இறங்கியதோடு போலிசை அழைப்பதாகவும் அச்சுறுத்தினார்.

சர்வதேச அளவில் மதிப்புமிகுந்த வரலாற்றாசிரியரும் சேர்விஸ் எழுதிய வாழ்க்கைச்சரிதத்தின் ஜேர்மன் பதிப்பை வெளியிடுவதற்கு எதிராக Suhrkamp வெளியீட்டகத்திற்கு எழுதப்பட்ட பகிரங்க கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவருமான போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மரியோ கெஸ்லருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

முடிவில், 40 பேருக்கும் குறைவானவர்களே - அவர்களிலும் அநேகம் பேர் சேர்விஸ் மீதான விமர்சனத்தை எழுப்ப துணியமாட்டாத பார்பெரோவ்ஸ்கி விசுவாசிகள் - சந்திப்பு அறைக்குள் நுழைய முடிந்தது. கதவுகள் உள்புறமாகத் தாழிடப்பட்டு வெளிப்புறமாக காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

சந்திப்பு அறைக்குள்ளாக, ஒடுக்குமுறை மற்றும் அச்சுறுத்தலின் ஒரு சூழலே நிலவியது. அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாண்டி சேர்விஸின் யூதவிரோத கருத்தெண்ணெங்கள் குறித்து, குறிப்பாக ட்ரொட்ஸ்கியின் இளம்பிராயப் பெயரை அவர் பொய்மைப்படுத்தியிருந்தது குறித்து சவால் செய்யப்பட்டபோது, கேள்வி கேட்டவரை பேசுவதை நிறுத்தும்படி பாபரோவ்ஸ்கி கோரினார்.

கூட்டத்தில் இரண்டேமோசமான கேள்விகள்மட்டுமே கேட்கப்பட்டதாக கூட்டம் முடிந்ததும் பாதுகாவலர் ஒருவர் திருப்தியை வெளிப்படுத்தினார்.

சேர்விஸே கூட, அவரது திக்கு திசைதெரியாத ஒருமணி நேர உரையில் ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit) அவருக்கு எழுத்துபூர்வமாக வைத்த ஒன்பது கேள்விகளில்(காணவும்: ரோபர்ட் சேர்விஸிடம் ஒன்பது கேள்விகள்)ஒன்றுக்கும் கூட பதில்கூற முனையவில்லை. அவருடைய கருத்துகள் எல்லாம் புத்திஜீவித்தன வழிமுறை அற்றதாகவும் அவரது படைப்பு மீதான முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை விமர்சனங்களையும் வெறுமனே உதறித்தள்ளியதாகவும் இருந்தது. American Historical Review ஜேர்னலில் வெளியான அவரது படைப்பு பற்றிய கடுமையான விமர்சனங்கள் குறித்தோ அல்லது Suhrkampக்கு 14 ஐரோப்பிய  வரலாற்றாசிரியர்கள் எழுதிய பகிரங்கக் கடிதம் குறித்தோ அவர் குறிப்பிடவேயில்லை. அவருடைய பேச்சு பொருத்தமற்றதுக்கும் (ட்ரொட்ஸ்கியின்திரைப்பட-நட்சத்திரதோற்றங்களைக் குறித்து சேர்விஸ் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தார்) அபத்தத்திற்கும் (ட்ரொட்ஸ்கிக்கும் ஸ்ராலினிக்கும் இடையில்  கருத்துவேறுபாடுகள் ஒருசில இருந்ததாக அவர் கூறினார்) இடையில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஸ்ராலினிசத்துக்கு மாற்று எதுவும் இருக்கவில்லை என்று சேர்விஸ் வலியுறுத்தினார். ட்ரொட்ஸ்கியை முரட்டு போல்ஷிவிக்காக சித்தரித்த அவர், லெனின் இறந்த பின்னர் ட்ரொட்ஸ்கி வெற்றி பெற்றிருந்தால் அவரும் ஸ்ராலின் போல் தான் நடந்திருப்பார் என்றார். ட்ரொட்ஸ்கிதவறாக வழிநடத்தப்பட்ட, ஆபத்தான அரசியல்வாதிஎன்றும்ஸ்ராலினின் இரத்த சகோதரர்என்றும் கூறி அவர் நிறைவுசெய்தார்.

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்கு சேர்விஸ் வருவது ஒரு கல்விஆய்வுத்துறை மற்றும் புத்திஜீவித நிகழ்வாக இருப்பதைக் காட்டிலும் அரசியல் நிகழ்வாகவே உருவாக்கப்பட்டிருந்தது. 20 ஆம் நூற்றாண்டு வரலாற்றை ஒரு புதிய கம்யூனிச-விரோதக் கோணத்தில் விவரிப்பதை ஊக்குவிக்கின்ற தனது முயற்சிகளின் பகுதியாகவே பார்பெரோவ்ஸ்கி சேர்விஸை பேர்லினுக்கு அழைத்துவந்தார். பல தசாப்த கால ஜேர்மன் இராணுவத்தின் ஒதுங்கல் முடிவுக்கு வந்து விட்டிருப்பதாக ஜேர்மன் அரசாங்கத்தின்  சமீபத்திய பிரகடனங்களுடன்(ஊடகங்கள் ஆரவாரமாக இதனை வரவேற்றன)இந்தப் பிரச்சாரம் நெருங்கிய தொடர்புபட்டிருக்கிறது.

இவ்வாறாக ஜேர்மன் இராணுவவாதம் புதுப்பிக்கப்படுவதை ஊக்குவிக்க, நாஜி சகாப்த போர்க்குற்றங்களைபோல்ஷிவிக் வன்முறைக்கான ஒரு நியாயமான எதிர்வினையாகக் காட்டுகின்ற ஒரு புதிய வரலாற்றுச் சித்தரிப்பு அவசியமாக இருக்கிறது. இந்த வரலாற்றுத் திருத்தல்வாதத்தில், பார்பெரோவ்ஸ்கி ஒரு பெரும் பாத்திரம் ஆற்றிக் கொண்டிருக்கிறார், இது ஹிட்லரை ஒரு சாதகமான வெளிச்சத்தில் காண்பிப்பது வரை இப்போது முன்னேறியிருக்கிறது.

ஜேர்மனியின் முன்னணி செய்தியிதழான Der Spiegel இன் தற்போதைய பதிப்பில், ஹிட்லர் குறித்த பின்வரும் பரிவுணர்வான மதிப்பீட்டை பார்பெரோவ்ஸ்கி வழங்குகிறார்.

ஹிட்லர் மனநிலை திரிந்தவரும் அல்ல, கொடுமைக்காரரும் அல்ல. யூதர்கள் ஒழிக்கப்படுவது குறித்து தன்னைச் சுற்றி பேசப்படுவதை அவர் விரும்பியதுமில்லை.

வரலாற்றை மாற்றி எழுதுவதற்கான இந்தப் பிரச்சாரத்தின் பகுதியாகவே ஹம்போல்ட்  பல்கலைக்கழகத்தில் பேசுவதற்கு ரோபர்ட் சேர்விஸ் அழைக்கப்பட்டார். வரலாற்றைத் திருத்தி எழுதும் பார்பெரோவ்ஸ்கியின் திட்டத்திற்கு அவருக்குப் பொய்களும், புரட்டுகளும், அச்சுறுத்தலும் மற்றும் ஒடுக்குமுறையும் அவசியமாக இருக்கிறது என்பதை புதனன்று மாலையின் போதான அவரது நடவடிக்கைகள் அம்பலப்படுத்தி விட்டன. இதுதான் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் புதனன்று நடந்த நிகழ்வுகளின் முக்கியத்துவமாகும். ஆனால் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீட்டின்  பலனால், இந்த குறிப்பிட்ட அத்தியாயம் பார்பெரோவ்ஸ்கிக்கும் சேர்விஸுக்கும் ஒரு அவமானகரமான தோல்வியில் முடிவடைந்திருக்கிறது.