தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா Canada: Religious accommodation request sparks political furor கனடா: மதரீதியான இயைந்துபோகும் வேண்டுகோள் அரசியல் கூச்சலை தூண்டுகிறது
By Dylan
Lubao and Keith Jones Use this version to print| Send feedback டோரொன்டோ யோர்க் பல்கலைக்கழகத்தில் தனி ஒரு மாணவர் ஜனநாயக விரோத “மதரீதியான இயைந்துபோகும் வேண்டுகோளை” – அதாவது பெண் மாணவிகளுடன் உள்ள இடைத்தொடர்பை தவிர்க்கும் “உரிமை”— ஒரு பேராசிரியர் அக்கோரிக்கையை நிராகரித்ததால் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கண்டிக்கப்பட்டதை அடுத்து ஒரு முழு அளவிலான அரசியல் கூச்சலாக எழுந்துள்ளது. கனடாவில் அரசியல் ஆளும்தட்டின் பிரதிநிதிகள் இந்த முரண்பாட்டை தத்தம் வலதுசாரி நிகழ்ச்சிநிரலை முன்வைக்கவும் மற்றும் பாசாங்குத்தனமாக ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பவர்கள் எனக் காட்டிக் கொள்ளவும் பயன்படுத்தியுள்ளனர். மத்திய கன்சர்வேட்டிவ் நீதிமந்திரி பீட்டர் மக்காய் நிகழ்வைப் பயன்படுத்தி கனேடிய உயரடுக்கின் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைகளை நியாயப்படுத்த முற்பட்டார். யோர்க் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்ப்பான, மாணவரின் ஜனநாயக விரோத வேண்டுகோள் “ஏற்கப்பட்டிருக்க வேண்டும்” என்பதை எதிர்க்கையில், மக்காய் “இதைத்தான் நாம் ஆப்கானிஸ்தானத்தில் எதிர்த்துப் போரிட முயன்றோம்” என்றார். இதற்கிடையில் கியூபெக்கின் ஜனநாயக அமைப்புகளின் மந்திரி பேர்னார்ட் ட்ரான்வில் (Bernard Drainville) யோர்க் மோதலை Parti Quebecos மாநில அரசாங்கத்தின் சட்டவரைவு 60 நேர்மையானதும் தேவையானதும் என்பதற்கு நிரூபணம் என்று தம்பட்டம் அடித்துள்ளார். இந்த ஜனநாயக விரோதச் சட்டம் பதவிவிலக்கும் அச்சுறுத்தலின்கீழ் முஸ்லிம் ஹிஜப், சீக்கிய டர்பன் மற்றும் யூதர்களின் கிப்பா உட்பட “வெளிப்படையாக தெரியும்” மத அடையாளங்களை அணியும் உரிமையை 600,000 பொதுத்துறை தொழிலாளர்களுக்கு மறுப்பதுடன் மற்றும் நெருக்கடி நேரங்களைத் தவிர சுகாதார சேவை உட்பட பொதுப்பணிகளில் முஸ்லிம் மகளிர் முழு ஆடைமறைப்பை அணியும் உரிமையையும் மறுக்கும். யோர்க் நிகழ்வு, கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. அப்பொழுது ஒரு ஆண் மாணவர் வலைத் தள சமூகவியல் பாடத்திட்டத்தில் ஒரு குழுத்திட்டத்தின் போது தான் பெண் வகுப்புத் தோழிகளை நேரில் காண்பதில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்றார். ஏனெனில் அவருடைய மதம் அவர் அவ்வாறு செய்வதைத் தடுக்கிறது என்றார். அக்டோபர் நடுவில் அந்த திட்டத்தை மேற்பார்வை செய்யும் தாராளவாத கலைப் படிப்புக்களின் துறைத்தலைவர், மாணவரின் பேராசிரியர் ஜோன் போல் கிரேசன்னிடம் இந்த வேண்டுகோளை ஏற்குமாறு ஆணையிட்டார். இதில் அவர் பல்கலைக்கழக மனித உரிமைகள் மையத்தின் அதேபோன்ற தீர்மானத்தாலும் நெருக்கடிக்குள்ளானார். துறையின் தலைவரைப் பொறுத்தவரை, மாணவருடைய மத நம்பிக்கைகளுக்கு இணங்குவது மற்ற பிற மாணவர்களின் “உரிமைகளில்” “கணிசமான பாதிப்பை” ஏற்படுத்தாது, குறிப்பாக பெண் மாணவிகள் “இந்த வேண்டுகோளைப் பற்றி அறியாவிட்டால்” என்று காரணப்படுத்தினார். நாட்டிற்கு வெளியே இருக்கும் இப் பாடத்திட்டத்திலுள்ள பிற மாணவர்களும் நேரடியாக சந்திப்பதில் இருந்து விலக்களிக்கப்பட்டிருப்பதால் துறையின் தலைவர் சிங்கர் இந்த மாணவருக்கும் அதே வாய்ப்பு கொடுக்கப்படலாம் என வாதிட்டார். இந்த முடிவில் சீற்றம் அடைந்த கிரேசன் துறைக்குழு ஒன்றைக்கூட்டி வேண்டுகோளை பரிசீலிக்குமாறு கோரினார். அது இந்த பாகுபாட்டை பால் அடிப்படையில் இருக்கிறது என நிராகரித்தது. ஒரு தீர்மானத்தை மதரீதியாக இயைந்துபோதல் தடுக்கப்பட வேண்டும் என்பதைப் பின்னர் இயற்றியது. இது “மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லது கற்பிக்கும் உதவியாளர்களை ஒதுக்க” பங்களித்தது. மாணவருடைய அடையாளமும் மதமும் கூறப்படாத இந்த மாணவர் அமைதியாக குழுவின் முடிவை ஏற்று குழுப்பணியை உத்தரவிட்டபடி செய்தார். அவரின் வேண்டுகோளை அவர் கையாண்டதற்கு நன்றி தெரிவித்து, கிரேசனுக்கு ஒரு கடிதம் கூட எழுதினார். நிகழ்வு முடிந்து விட்டது போல் தோன்றியது. ஆனால் யோர்க் நிர்வாகம் தன் முதல் முடிவை மீண்டும் உறுதிப்படுத்தி, கிரேசனை அதைச் செயல்படுத்தாதற்காக அவரைச் சாடியது. நிர்வாகத்தின் தீர்ப்பிற்கு எதிரானவர் இவ்விடயத்தை பகிரங்கப்படுத்தினர். இந்நிகழ்வு நாடளவிலான முக்கியத்துவத்திற்கு உள்ளனாதுடன், பொது நிதியில் நடக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பெரும் சங்கடத்திற்கான ஒரு மூலாதாரமாயிற்று. துறையின் தலைவரின் முடிவை பாதுகாக்கையில், பள்ளியின் உயர்மட்டத்தினர் இது கனேடிய மனித உரிமைகள் சட்டத்தில் பொதிந்துள்ள மனித உரிமைகளை மதிக்கிறது என்றும், இந்நிகழ்வைச் சூழ்ந்துள்ள “விஷேட” சூழ்நிலையில் கவனத்தை செலுத்தியது. குறிப்பாக இது ஒரு வலைத்தள பாடத்திட்டம், மற்ற மாணவர்கள், வேறு காரணங்களுக்காக என்றாலும், குழுப் பணியில் கலந்துகொள்ளாமலிருக்க அனுமதிக்கப்படுவர். யோர்க்கின் “இயைந்துபோதல்” ஒரு முக்கியமான ஜனநாயகப் பிரச்சினையை எழுப்புகிறது. மாணவனின் “இயைந்துபோதல்” வேண்டுகோளை ஏற்க வேண்டும் என்னும் கோரிக்கை ஒரு ஜனநாயக உரிமையின் உறுதிப்பாடு அல்ல, சிறப்புச்சலுகைகளுக்கான கோரிக்கை ஆகும். அதாவது மக்களின் பெரும் பிரிவிற்கு பாகுபாடு காட்டும் “உரிமைக்கு” இயைந்துபோதலாகும். இந்த வேண்டுகோளை அனுமதிப்பது அனைத்துவகை பிற்போக்குத்தனமான ஒதுக்கிவைக்கும் வேண்டுகோள்களையும் மத நம்பிக்கை என்ற பெயரில் விடுப்பதற்கு கதவைத் திறக்கும். யோர்க் நிர்வாகம் இப்பொழுது, மதத்தை காரணமாகக் கூறி ஒரு மாணவர் கறுப்பினத்தவர், முஸ்லிம்கள், யூதர்கள், “கீழ்ச்சாதி” தெற்கு ஆசியர்களுக்கு பக்கத்தில் உட்காரவோ அல்லது குழுப்பணியில் ஈடுபட விரும்பவில்லை என்பதை அனுமதிக்குமா? மாணவர்களும் பிறரும் தங்கள் மதத்தை அவமதிப்பிற்குள்ளாகமலோ அல்லது அரசாங்கத் தலையீடோ இன்றி பின்பற்றும் “எதிர்மறை” உரிமைகளை பெறவேண்டும். ஆனால் எத்தகைய மத நம்பிக்கைகளுக்கும் ஆதரவு, எவ்வித நேர்மறையான (சாதகமான) ஆதரவு அளித்தல் என்பது ஜனநாயக கொள்கைகளை மீறுவதாகும். அதுவும் அரசாங்க நிதி, மதப் பள்ளிகளுக்கு அல்லது சிறப்பு பாடத்திட்ட, பாடத்திட்ட தேவைகளை நிர்ணயிக்க வழங்கப்படுகையில். யோர்க் இயைந்துபோதலுக்கு கொடுத்த தீர்ப்பில் பிரச்சினை முற்றிலும் கியூபெக் சட்டவரைவு 60ல் இருப்பதில் இருந்து மாறுபட்டதாகும். மதத் தலைமறைப்புக்கள் மற்ற அடையாளங்களை சட்டவிரோதமாக்குவதில் Parti Quebecois அரசாங்கம், கியூபெக்கில் வசிப்போரின் தங்கள் மதத்தை பின்பற்றும் ஜனநாயக உரிமையை தாக்குவதுடன் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாதத்தை தூண்டுகிறது. Parti Quebecois இன் கூற்றான மதசார்பற்ற தன்மையை நிலைநிறுத்துவதாக கூறுவதும் மற்றும் மகளிர் உரிமைகளை தாக்குவது என்பவை முற்றிலும் பாசாங்குத்தனமானவையும் இழிந்தவையுமாகும். தங்கள் வேலைகளை இழக்கும் அச்சுறுத்தலைக் கொண்டவர்கள் பெரும்பாலும் முஸ்லிம் மகளிர் ஆவர். மேலும் சட்டம் கியூபெக்கின் “மரபை” பாதுகாத்தல் என்னும் பெயரில் “முன்விழிப்புடைய” சிலுவைச் சின்னங்களுக்கு விலக்கு அளிக்கிறது. மற்றும் ரோமன் கத்தோலிக்க அடையாளங்கள், உருவச்சின்னங்கள் பொது அரங்கில் பெரிதாகத்தான் இருக்கும். ஒன்டாரியோ மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ராஜ் ஆனந்த் உட்பட, பன்முகக்கலாச்சாரத்திற்கு ஆதரவான பலரும் மற்றும் ஒரு சில “முஸ்லிம் பெண்நிலைவாத ஆர்வலர்கள்”, இன்னும் ஏனைய உயர்கல்விக்கூடத்தினரும் யோர்க் நிர்வாகத்தின் தீர்ப்பை ஆதரித்துள்ளனர். “கனேடிய சட்டம் மதச் சுதந்திரம் நேர்மையாக உள்ள மத நம்பிக்கைகளை பாதுகாப்பதில் தெளிவு” என்று ரொரொன்டோ ஸ்டார் பத்திரிகையின் உபதலையங்கத்தில் ஒரு குழுவின் பிரதிநிதி எழுதினார். பெரும்பாலான கனேடியர்கள் பன்முகக்கலாச்சார தன்மையை இனவெறிக்கு எதிர்ப்பாகவும், குடியேறுவோர்க்கும் சிறுபான்மையினருக்கும் ஆதரவு என்பதுடன் அடையாளம் காண்பதுடன் -உண்மையில் இது கனேடிய முதலாளித்துவ உயரடுக்கின் கொள்கை- அரசியலமைப்பிலும் ஏனைய சட்டங்களிலும் பொதிந்துள்ளது என்றும் காண்கின்றனர். இது கனேடிய நாட்டிற்கு தமது பணிவை கோரவும் கனேடிய தேசியவாத சித்தாந்தத்தை பலப்படுத்தவும், இதன்மூலம் கனேடிய ஆளும்வர்க்கம் தனது வர்க்க ஆட்சிக்கு ஒரு மக்கள்சார்பான மூடியணிந்துகொள்ள பயன்படுத்தவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தான் நடைமுறைப்படுத்தும் கொள்ளைக்கார நலன்களை நடைமுறைப்படுத்த மக்களை பயன்படுத்திக்கொள்ளவும் நோக்கம் கொண்டுள்ளது. குறிப்பாக பன்முகக்கலாச்சாரம் இனவெறி, அடையாள அரசியலை ஆளும் வர்க்கம் குட்டி முதலாளித்துவ தட்டுக்கள் சிறுபான்மையில் இருப்பவர்கள் மற்றும் “புதிய கனேடியர்கள் இடையே” வளர்த்து, அவர்களை அரசியல் நடைமுறையுடன் ஒருங்கிணைக்க பயன்படுத்தப்படுகின்றது. இதனால் அது தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்திப் பிரிக்கலாம். யோர்க் தீர்ப்பு விளக்குவது போல், “பன்முகக்கலாச்சாரம்” என்ற பெயரில் பல ஜனநாயக விரோத கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. யோர்க்கின் “இயைந்துபோகும்” தீர்ப்பிற்கு உயரடுக்கின் பிரதிபலிப்பு அநேகமாக, ஏன் பெரும்பாலும் விரோதத் தன்மையுடன்தான் உள்ளது. பெருநிறுவனச் செய்தி ஊடகங்களில் மாற்றுக் கருத்துக்கள் ஏராளமாக வந்துள்ளன, பெருவணிக அரசியல்வாதிகள் யோர்க் நிர்வாகத்தைக் கண்டிக்க வரிசையில் நிற்கின்றனர். இந்தப் பரபரப்பு, நிறைய ஜனநாயகம் என உயரடுக்கின் பிரதிநிதிகள் காட்டிக் கொள்வதை கொண்டுள்ளது. அவர்களே மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் ஆழ்ந்துபோகும் சமூக சமத்துவமின்மைக்கும் தலைமைதாங்குவதுடன் கனேடியர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நடத்துகின்றனர், அல்லது அதற்கும் தலைமை தாங்குகின்றனர். மேலே கூறப்பட்ட மக்காய், ட்ரான்வில் கருத்துக்களில் நிரூபணம் ஆகியுள்ளபடி, இது அரசியல் உயரடுக்குப் பிரிவுகள் மூலம் நேரடியாக பிற்போக்குத்தன கோரிக்கைகள் வர வழிவகுக்கும். அதைத்தவிர செய்தி ஊடகத்தின் எரிச்சலூட்டும் வர்ணணைகள் ஏராளமாக வரும். இவற்றுள் பல, குடியேற்ற எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளை கொண்டிருக்கும். தொழிற்சங்க ஆதரவு கொண்ட NDP யின் தலைவரான தோமஸ் முல்கேயர் இந்த அரசியல் ஆளும்தட்டின் தேர்ந்தெடுக்கப்படும், அரசியல் உந்துதல் கொண்ட ஜனநாயக உரிமைகள் “பாதுகாப்பிற்கு” உதாரணம் ஆவார். 2012ல் அப்போதைய கியூபெக் தாராளவாத அரசாங்கம் கியூபெக் மாணவர் பகிஸ்கரிப்பை சட்டவிரோதமாக்கி, மாகாணத்தில் எந்தப் பிரச்சினைக்கும் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமைகளில் பெரும் தடைகளை கொண்டுவந்தபோது, முல்கேயரும் அவருடைய NDP உம் சட்டவரைவு 78 ஐ எதிர்க்க மறுத்து, அதை ஒரு “மாநிலப் பிரச்சினை” என்றனர். ஆனால் முல்கேயருக்கு இத்தீர்ப்பு குறித்து எந்தவித உளைச்சலும் இல்லை. இதை உரக்க எதிர்க்கிறார். ஜனநாயக விரோதம் என ஒப்புக் கொள்ளப்பட வேண்டியது, ஆனால் இக்கட்டத்தில் மிகவும் ஒரு சூழ்நிலைக்குட்டப்பட்ட அளவுடன், அதுவும் ஒற்றை மாநில நிர்வாகப் பல்கலைக்கழகத்தால் கொடுக்கப்பட்டதாகும். முல்கேயரும் அவருடைய NDP யும் அமெரிக்காவின் தேசியப்பாதுகாப்பு நிறுவனத்தின் கனேடிய பங்காளியான CSEC தொலைதொடர்பு பாதுகாப்பு நிறுவனம் சட்டவிரோத ஒற்று நடத்துவதை ஹார்ப்பர் கன்சர்வேட்டிவ் அரசாங்கம் மூடிமறைப்பதற்கு உதவியுள்ளது என்பது கட்டாயம் கூறப்படவேண்டிய ஒன்றாகும். கடந்த ஜூன் மாதம் CSEC முறையாக கனேடிய மக்களின் மின்னஞ்சல் தொடர்புகளை ஒற்றாடல் செய்கிறது என்று தெரிந்தாலும், NDP கடந்த வாரம் வரை இதைப்பற்றி கிட்டத்தட்ட ஏதும் கூறவில்லை. NSA தகவல் வெளியிட்டவரான எட்வார்ட் ஸ்னோவ்டென் கசிய விட்ட ஆவணம் ஒன்று கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தை கனேடிய தொலைபேசி, பொருளுரை, மின்னஞ்சல், இணையத்தளப் பயன்பாடு பற்றி தகவல்களை சேகரித்துப் பகுப்பாயும் கட்டுப்பாடுகளற்ற உரிமை உள்ளது எனக் கூற வைத்தது. யோர்க் தீர்ப்பிற்கு வந்த முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துக்களுக்கு, ரொரொன்டோ ஸ்டாரில் வெளியிடப்பட்ட ரோசி டிமன்னோவின் கட்டுரையில் ஒரு எடுத்துக்காட்டாகும். இது இஸ்லாமை ஒரு வன்முறை அமைப்பு என்றும், மத்திய கிழக்கு மத்திய ஆசியாவில் இருக்கும் முஸ்லிம் பெரும்பான்மை சமூகங்கள் மகளிர் உரிமை இல்லாதது எனச் சித்தரித்து, இஸ்லாமிய எதிர்ப்பு உள்ளது என்பதையும் மறுத்துள்ளது. டிமன்னோவின் கட்டுரை காலனித்துவவாதம், ஏகாதிபத்தியம், மத்திய கிழக்கில் கனேடிய ஏகாதிபத்தியம், அமெரிக்காவின் தசாப்தங்கள் நீண்ட முயற்சியான பிராந்தியத்தில் மதசார்பற்ற தேசியவாத ஆட்சிகளை கவிழ்க்கும் முயற்சிகள், அதன் மத்தியகால சவுதி முடியாட்சியுடன் நட்புறவு, இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளை ஆப்கானிஸ்தானில் 1980களிலும் இன்று சிரியாவிலும் தன் வியாபார நலன்களைத் தொடர பினாமிப் படைகளை பயன்படுத்துவதை குறித்தும் கருத்துக் கூறவில்லை. யோர்க் தீர்ப்பையும் அதேபோன்ற ஜனநாயக விரோத கொள்கைகளையும் எதிர்க்கையில், பன்முகப்பண்பாட்டுத் தன்மை, மத சமரசம் ஆகியவை தொடரப்படுவதாகக் கூறப்படுகிறது. தொழிலாளர்கள் இதுகுறித்து ஆளும் உயரடுக்கு குடியேற்ற ஏதிர்ப்பு, சிறுபான்மை விரோத உணர்வைத் தூண்டிவிடும் முயற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை தொழிலாள வர்க்கத்தை பிரித்து, அதன் சீற்றத்தை உண்மை ஆதாரமான வேலைகள், ஊதியங்கள், சமூக நலன்கள் மீதான பெருகும் தாக்குதல்களில் இருந்து திசை திருப்புகிறது. இதுதான் முதலாளித்துவம். தன்னுடைய பங்கிற்கு கிரேசன், கியூபெக் சட்டவரைவு 60க்கு பன்முகக்கலாச்சாரம் மற்றும் மத சமரசம் இவற்றின் பெயரில் ஆதரவை கூறியுள்ளார். அதில் ஜனநாயக விரோத பொதுத்துறை தொழிலாளர்கள் மத அடையாளங்களை அணிவதும் அடங்கியுள்ளது. யோர்க் இன் “இயைந்துபோதல்” குறித்த குழப்பம் எப்படி பன்முகக்கலாச்சாரம் மற்றும் அடையாள அரசியல், குடியேற்ற எதிர்ப்பு/சிறுபான்மை எதிர்ப்பு பேரினவாதம் ஆகியவை ஒன்றையொன்று இணைத்துள்ளன, ஆதரவாக உள்ளன என்பதை நிரூபிக்கின்றது. இவை இரண்டுமே ஜனநாயக விரோதமானவை. ஆளும் வர்க்கத்தால் பெருகும் வர்க்கப் பிளவில் இருந்து கவனத்தைத் திசை திருப்பவும் தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளை ஒன்றுக்கொன்று எதிரிடையாகச் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு, முதலாளித்துவ இலாப முறை அகற்றப்படவும், சமூக சமத்துவத்திற்கு போராடுவதற்கும் தொழிலாள வர்கத்தை ஒன்றுபடுத்தும் —அனைத்து மொழி, இன, பண்பாட்டு வேறுபாடுகள் இருந்தாலும்— போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். |
|
|