சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Hollande’s state visit to Washington: France embraces global neo-colonialist war

ஹாலண்ட் வாஷிங்டனுக்கு அரச விஜயம்: பிரான்ஸ் பூகோள நவ காலனித்துவ போரை தழுவுகிறது

By Alex Lantier 
13 February 2014

Use this version to printSend feedback

நேற்றய தினம், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்டின் வாஷிங்டன் டி.சி.க்கான மூன்று நாள் அரச விஜயம் முடிவடைந்ததைக் குறிக்கிறது. இது அமெரிக்காவிற்கும் பிரான்சிற்கும் ஒரு தசாப்தத்திற்கு முன்பு, வலதுசாரி ஜனாதிபதி ஜாக் சிராக் புஷ் நிர்வாகத்தின் கீழ் 2003 ஈராக் படையெடுப்பை எதிர்த்தபோது வெடித்த இராஜதந்திர மோதல்களை உறுதியாக அடக்கம்பண்ணுவதற்கான எத்தனிப்பு என்று கூறப்பட்டது.

வாஷிங்டன் போஸ்ட் மற்றும் லு மொன்ட்ல், விஜயம் ஆரம்பமானபோது வந்த ஒரு கூட்டு தலையங்கத்தில் ஒபாமாவும் ஹாலண்டும் புதிய பிரெஞ்சு-அமெரிக்க கூட்டைச்சரித்தனர்.

அவர்கள் எழுதியது: “ஒரு தசாப்தத்திற்கு முன்பு நம் இரு நாடுகளும் பல விதங்களில் இவ்வளவு நெருக்கமாக உழைக்கின்றன என அதிகம் பேர் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் நம் உடன்பாடு மாறிவிட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்ஸ் நேட்டோவின் இராணுவக் கட்டளை மையத்திற்கு திரும்பியதில் இருந்து, மற்றும் நேட்டோ-ஐரோப்பிய ஒன்றிய பங்காளித்தனத்தை நாம் தொடர்ந்து வலுப்படுத்துவது என்ற கருத்துடன் இயைந்த வகையில், எங்கள் ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது. நாம் முழு உரிமை பெற்ற, சுதந்திர நாடுகள், நம் முடிவை நம் நாட்டு நலன்களின் அடிப்படையில் எடுக்கிறோம். ஆயினும் கூட, நாம் எமது கூட்டணியை ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிகிறது; ஏனெனில் நம் நலன்களும் மதிப்புக்களும் மிகவும் நெருக்கமாகப் பிணைந்தவை.”

இந்த அறிவிப்புடன் ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS), புஷ்ஷால் தொடக்கப்பெற்று, ஜனவரி 2009ல் புஷ்ஷிடம் இருந்து ஒபாமா தொடர்ந்த அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான  செயற்பட்டியலில் ஒரு இளைய பங்காளியாக கையெழுத்திடுகிறது. இருநாட்டு மக்களின் கருத்தையும் மீறி, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் அதன் சொந்த ஏகாதிபத்திய இராஜதந்திர மரபுகளையும் மீறி, பாரிஸ் வாஷிங்டனில் இருந்து சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது என்ற போலித்தனத்தையும் கூட கைவிட்டுள்ளது.

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க ஆக்கிரோஷத்தை நியாயப்படுத்தும் வகையில், 2002 அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம், “தனிச்சிறப்பு வாய்ந்த அமெரிக்க சர்வதேசியத்தின் மீது அடித்தளம் கொண்ட கொள்கை தேவை, அது நம் மதிப்புக்கள், நம் தேசிய நலன்களைப் பிரதிபலிக்க வேண்டும்.” என அழைப்பு விடுத்தது.

இன்று ஒபாமாவும் ஹாலண்டும் பகிர்ந்து கொள்ளப்படும் "நலன்களையும், விழுமியங்களையும்" மேற்கோளிட்டு, ஒரு நாட்டின் மீது வெற்றிக்கு என்று இல்லாமல், உலகம் முழுவதிலுமான ஏகாதிபத்தியத்தின் ஒரு நவ காலனித்துவ வகை மறு பங்கீட்டுக்கு புறப்பட்டுள்ளன. வாஷிங்டன், பாரிசுக்கு அதன் மாலி, மத்திய ஆபிரிக்க குடியரசுப் போர்களில் உதவுகிறது, பாரிஸ் ஒபாமாவின் “ஆசியாவில் முன்னிலை” என்று சீனாவை இலக்கு கொண்டுள்ள கொள்கைக்கு ஆதரவை முடுக்கிவிட உறுதியளித்துள்ளது. இரண்டுமே, உக்ரேனில் ஆட்சி மாற்றத்திற்கா தீவிர வலதுசாரி தெரு ஆர்ப்பாட்டங்களில் தொடங்கி,ஷ்யாவை தனிமைப்படுத்தி துண்டாடும் ஜேர்மனிய-தலைமையிலான பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் பிரான்ஸ், அமெரிக்க தலைமையிலான சிரியாவிற்கு எதிரான மோதலுக்கு ஊக்கம் கொடுக்கும் ஒரே நாடாக வெளிப்பட்டது; இது சிரியாவின் ஆதரவாளர்களான ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் போர் விரிவாக்கம் அடைந்திருக்கும். பிரித்தானிய பாராளுமன்றம் எதிராக வாக்களித்தும், பிரான்சில் பாரிய மக்கள் எதிர்ப்பு இருந்த போதிலும்கூட,ந் நடவடிக்கை ஹாலண்டிற்கு, முன்னாள் பிரித்தானிய பிரதம மந்திரி டோனி பிளேயருடன் ஒப்புமைகளைக் கொடுத்தது, அவர்தான் புஷ்ஷின் “நாய்க்குட்டி” என்று அடிமைத்தனமாக ஈராக் போருக்கு ஆதவு கொடுத்ததற்கு கேலி செய்யப்பட்டார்.

செவ்வாயன்று வாஷிங்டனில் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா ஹாலண்டை புகழ்ந்து கூறியது: “மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசில் இருந்து சிரியா, ஈரான் வரை, நீங்கள் தைரியம் மற்றும் உறுதியைக் காட்டியுள்ளீர்கள். உங்கள் தலைமைக்கும் அமெரிக்காவிற்கு வலுவான பங்காளியாக இருப்பதற்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.” அவர் சிரியாவில் அல் குவேடா தொடர்புடைய சிரிய இஸ்லாமியவாத எதிர்ப்பிற்கு கூடுதல் உதவியையும் அறிவித்தார்.

ஹாலண்ட் தற்பொழுது அறிவித்த 50 பில்லியன் யூரோக்கள் பெருநிறுவன வரிச் சலுகைக்கு ஒபாமா பாராட்டினார்; இதில் சமூகநலச் செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்கள், புதிய தடையற்ற சுதந்திர வணிகப் பேச்சுக்கள் சம்பந்தப்பட்டுள்ளன. அவர்கள் "ஒரு லட்சிய மற்றும் விரிவான அட்லாண்டி வர்த்தக மற்றும் முதலீட்டு பங்குதாரராக செயல்பட்டு தொடர இருப்பதையும்" அவர் ஒப்புக் கொண்டார்.  “ஜனாதிபதி ஹாலண்ட் இந்தப் பேச்சுக்களில் கொண்டுள்ள அவரது அர்ப்பணிப்புக்கு நான் நன்றி செலுத்த விரும்புகிறேன்” என்றார்.

போர் மற்றும் சிக்கனம் என்று ஒபாமாவால் கோடிட்டுக் காட்டப்பட்ட செயற்பட்டியலுக்கு ஹாலண்ட் தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளார். ஒபாமாவின் தேர்தலை அவர் “அமெரிக்கா மீண்டும் முன்னேறுகிறது என்பதற்கு நிரூபணம்” என்றார். “முன்னேற்றத்தைக் கொண்டுவர அமெரிக்காவால் சாதிக்க முடிந்தது.”

சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் என்ற இக்கூட்டுச் செயற்பட்டியலை, “முன்னேற்றத்தை” பிரதிபலிக்கிறது என்னும் ஹாலண்டின் கூற்று அபத்தமான பொய் ஆகும். பாரிஸ் நெருக்கடிக்கு, கடிகாரத்தை பின்னோக்கி திருப்பி வைத்து, கொள்ளை என்னும் உலக கொள்கையைத் தொடங்கி, அதன் உலக நிலையை ஒட்டி விடையிறுக்கிறது —ஜேர்மனியுடனான அதன் போட்டித்தன்மை, அதன் முன்னாள் ஆபிரிக்க காலனிகளில் பொருளாதாரச் செல்வாக்கின் சரிவு, கடுமையான சமூகநல வெட்டுக்களால் குறைமதிப்புற்று சரியும் பொருளாதாரம் என—. ஏகாதிபத்திய உலக ஒழுங்கின் நெருக்கடி, தவிர்க்கப்பட முடியாமல் பிரான்ஸில் போருக்குப்பிந்தைய காலத்தில் இருந்த வர்க்கச் சமநிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது.

ஹாலண்ட்-ஒபாமா கருத்து 2009ல் ஹாலண்டிற்கு முன்பு இருந்த வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் முடிவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அவர்தான் நேட்டோவின் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து 43 ஆண்டுகள் வெளியே இருந்த பின் பிரான்சை நேட்டோவுடன் மறு ஒருங்கிணைந்தார். இம்முடிவு, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஒருங்கிணைப்பது என்பது, ஹாலண்டால் தக்கவைக்கப்பட்டு, அவருடைய நட்பு அமைப்புக்களால் ஆதரவு கொடுக்கப்படுவது – ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF), போலி இடது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) தொலைதூரவிளைவுகள் உடைய அரசியல் உட்குறிப்புக்களை கொண்டுள்ளது.

அமெரிக்க, பிரெஞ்சு வெளியுவுக் கொள்கைகளுக்கு இடையே உள்ள பாரம்பரிய தூரம், ஜெனரல் சார்ல்ஸ் டு கோல் முறைப்படுத்திக் கூறியவாறு, போருக்குப் பிந்தைய பிரான்சின் புரட்சிகர நெருக்கடியில் இருந்து வெளிப்பட்டது. டு கோல் மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இரண்டும் நாஜி ஒத்துழைப்பு ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் வெடித்த, தொழிலாள வர்க்கத்தின் முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வை பிரான்சில் நசுக்க முற்பட்டனர். எதிர்ப்பு மற்றும் பிரான்சின் மீதமுள்ள காலனித்துவ இராணுவங்களின் மிக வலதுசாரி சக்திகள் பெரும்பாலானவற்றிற்கு தலைமை தாங்கிய டு கோலே புதிய முதலாளித்துவ ஆட்சியை நிறுவ, பிரான்சின் காலனித்துவங்கள் மீது கட்டுப்பாட்டை கொள்ள, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை நாடினார்.

இந்த மூலோபாயமும், டு கோலும் தனிப்பட்ட முறையில் வாஷிங்டனில் உள்ள சக்திவாய்ந்த பிரிவுகளிடம் இருந்து எதிர்ப்பை முகங்கொடுத்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம், PCF ஐ எதிர்த்து, பிரான்சின் காலனிகள்மீது அதன் சொந்த வடிவமைப்புக்களை கொண்டிருந்தது. வாஷிங்டன் தன்னை ஒதுக்கி, ஒரு விஷி அதிகாரியை அரசாங்கத் தலைவராக இருத்தினால் மக்கள் சீற்றம் கட்டுப்படுத்த இயலாமற் போகும் என்று டு கோலே அஞ்சினார்.

வலதுசாரி தீவிரக் கூறுபாடுகளுக்கும் PCF க்கும் இடையே அவருடைய சமன் செய்யும் வெளிச் செயல், நேட்டோவிற்குள்ளிருந்து விலகி ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை தொடர்தல் ஆகும்; அதில் குறைந்தபட்ச ஆர்வம் மாஸ்கோவிற்கு காட்டப்படுவது, வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே உள்ள மோதல்கள் மிக அதிகமாக போகாமல் பார்த்துக் கொள்வது ஆகியவை அடங்கும். 1945ல் டு கோல் “இரண்டு பெரிய சக்திகளை சமன் செய்யும் பிரெஞ்சுக் கொள்கை தேவை, அது நம் நாட்டிற்கு முற்றிலும் தேவை எனக் கருதுகிறேன். அமைதியை விரும்புவோர்க்கும்.” என்றார்.

டு கோலே ஒரு இரக்கமற்ற ஏகாதிபத்தியவாதி ஆவார்; இன்றைய ஏகாதிபத்திய உலக மறு வெடிப்பு காலத்தில் அவருடைய கருத்துக்கள் உலகம் முழுவதும் முன்கூட்டி நிற்கின்றன. அல்ஜீரியப் போரில் தோல்வியை அடுத்து, 1962ல் அல்ஜீரிய சுதந்திரத்திற்கு வழிவகை செய்யும் வாக்கெடுப்பை அனுமதிக்கும் செயல் பற்றியும் அவர் அரசாங்கத்தின் தோல்வியையும் பிரதிபலிக்கும் வகையில் அவர் தன்னுடைய நினைவுக்குறிப்புக்களில் பின்வருமாறு எழுதினார்:  “அனைத்தும் நம்மை, கெய்ரோ, டமாஸ்கஸ், அம்மான், மற்றும் பாக்தாத்தில் உள்ள கார்ட்டும் ஆகியவற்றில் மீண்டும் தோன்ற கட்டாயப்படுத்துகின்றன, பெய்ரூட்டில் நாம் இருப்பது போல.”

தொழிலாள வர்க்கத்திற்கு அவர் கொடுத்த சலுகைகள் மற்றும் குறிப்பாக 1960களில்  விரிவான அமெரிக்க-பிரெஞ்சு அழுத்தங்களுக்கு இடையே பிரெஞ்சு, அமெரிக்க நலன்களில் இருந்த மோதல்கள், அவரை வாஷிங்டனில் இருந்து சுதந்திர கொள்கையைத் தொடர வைத்தன. முக்கிய பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் வெளியீடுகள், CIA 1961ல் தோல்வியுற்ற அல்ஜிரிய எதிர்ப்பு சுதந்திர ஆட்சிமாற்றத்தை டு கோலுக்கு எதிரா குற்றச் சாட்டாக பயன்படுத்தினர். இது முன்னாள் நேட்டோ அதிகாரி ஜெனரல் மொரிஸ் சால் இன் தலைமையில் நடைபெற்றது – அல்ஜீரிய பிரெஞ்சு தக்கவைக்கப்பட மற்றும் அதையொட்டி அது சோவியத் செல்வாக்கில் விழாமல் இருக்க.

இதுவும், பிரான்சின் அணுத்திட்டத்திற்கு அமெரிக்க எதிர்ப்பும் இணைந்து, 1966ல் டு கோலையே ஒருங்கிணைந்த நேட்டோ கட்டுப்பாட்டில் இருந்துவிலகவும், அமெரிக்க உளவுத்துறை செயற்பாடுகளையும் பிரான்சில் வரம்பிற்கு உட்படுத்தவும் வழிவகுத்தது.

ஆனால் இக்கொள்கைகள், சோவியத் ஒன்றியம் முறிந்ததை அடுத்தும், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பெருகிய நெருக்கடிக்கு  மத்தியிலும் தவிர்க்க முடியாமல் சரிந்தன. தொழிலாளர்களுக்கு சமூகச் சலுகைகள், PCF உடைய டு கோலுடனான ஒத்துழைப்பிற்கு அடிப்டையை அமைத்தது மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு இராணுவத் தடை என்று சோவியத் ஒன்றியத்தின் இருப்பினால் சுமத்தப்பட்டவை மறைந்துவிட்டன. ஒரு புதிய புரட்சிகர மோதல் தொழிலாள வர்க்கத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது; ஆளும் வர்க்கம் தன் செல்வத்தை உள்நாட்டில் சமூக பிற்போக்குத்தனம், வெளியே கொள்ளைப்போர்கள் மூலம் தக்க வைக்க உறுதி கொண்டுள்ளது.

முதலாளித்துவ “இடது” கட்சிகள் வேகமாக வலதிற்கு மாற்றம் கண்டது மற்றும் பொறுப்பற்ற ஆக்கிரோஷ போர்க் கொள்கைக்கு மாறுவது என்பது வெளிப்படும் புரட்சிகர நெருக்கடி பற்றிய பிழையற்ற அறிகுறி ஆகும், மேலும் தொழிலாள வர்க்கத்திற்கும் அனைத்து முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே பெரிதாகியுள்ள இடைவெளியையும் காட்டுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி இரண்டும் இழிந்த முறையில் தங்களின் சிரிய எதிர்த்தரப்பிற்கு ஆதரவை நியாயப்படுத்த, “மனித உரிமைகள்” நிலைப்பாட்டை பயன்படுத்தி, சோசலிஸ்ட் கட்சியின் பொறுப்பற்ற சிரியா, ஈரான், ஏன் ரஷ்யா, சீனா மீதான போர் இடருக்குப் பின்னே நிற்கின்றன. அவை NSA தகவல் வெளிப்படுத்தியவர் எட்வார்ட் ஸ்னோவ்டெனால் வெளிப்படுத்தப்பட்ட அமெரிக்க, பிரெஞ்சு உளவுத்துறைகளின் பரந்த ஒற்றுச் செயல்கள் அம்பலப்படுத்தப்பட்டதை அலட்சியம் செய்து வருகின்றன. அவை வாஷிங்டன், பாரிஸ் மற்றும் அமெரிக்காவின் பிற ஏகாதிபத்திய நட்பு நாடுகள் தயாரிக்கும் அனைத்துக் குற்றங்களுக்கும் உடந்தையாக உள்ளன.