சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US regime-change operation in Ukraine exposed in leaked diplomatic phone call

உக்ரேனில் அமெரிக்காவின் ஆட்சி மாற்ற திட்டம் இராஜதந்திரிகளுக்கு இடையிலான தொலைபேசி அழைப்பு கசிந்ததால் அம்பலமாகிறது

By Patrick O’Connor 
7 February 2014

Use this version to printSend feedback

ஐரோப்பிய, யூரேசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளரான விக்டோரியா நியூலாந்த் இற்கும் உக்ரேனில் அமெரிக்கத் தூதர் ஜெஃப்ரி ப்யாட்டிற்கும் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடலின் கசிவு, ஒபாமா நிர்வாகம் முன்னாள் சோவியத் குடியரசியல் தலையிட்டுள்ளதின் ஜனநாயக-விரோத, காலனித்துவ தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

இரு அதிகாரிகளுக்கும் இடையேயான கலந்துரையாடலில் வாஷிங்டன் எந்த வலதுசாரி எதிர்தரப்பு நபர்களை பதவியில் இருத்த முனைகின்றது மற்றும் எப்படி அது ஐக்கிய நாடுகள் சபையை அதன் செயற்பாட்டிற்கு முத்திரை குத்த பயன்படுத்துகிறது என்பது பற்றிய விபரமான பரிசீலனை அடங்கியுள்ளது. ஜேர்மனியும் மற்ற ஐரோப்பிய சக்திகளும் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சிற்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஒபாமா நிர்வாகத்துடன் நெருக்கமாக உழைக்கையில், கசியவிடப்பட்ட தொலைபேசி அழைப்பு ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே உள்ள அழுத்தங்களை வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் நியூலாந்த் ப்யாட்டிடம், ஐரோப்பிய ஒன்றியத்தை மிகவும் இழிந்த வார்த்தைகளால் F--k the EU. என திட்டியுள்ளார்.... .

YouTube இல் அநாமதேயமாக வெளியிடப்பட்டுள்ள இந்த விவாதம் வாஷிங்டனின் பொது இராஜதந்திர முறையின் இழிந்த தன்மையை முற்றிலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒபாமா நிர்வாகத்தின் ஜனநாயகம் மற்றும் உக்ரேனிய மக்கள் தங்களின் எதிர்காலத்தை பற்றி முடிவெடுக்கும் உரிமை குறித்த வார்த்தைஜாலங்கள் போலித்தனமானவையும், பொதுமக்களுக்கு போலிவேடம் காட்ட தயாரிக்கப்பட்டவையாகும். திரைகளுக்குப் பின்னால், அரசாங்க அதிகாரிகள் ஒருவருடன் ஒருவர் உண்மையான நிகழ்ச்சிநிரல் என்னவென்பதை வெளிப்படையாக பேசுகின்றனர். அதாவது கிழக்கு ஐரோப்பாவில் வாஷிங்டனின் பூகோள மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுக்க எப்படி அமெரிக்க சார்புடைய, ரஷ்ய விரோத கைப்பாவை நபர்களை உக்ரேனிய தலைநகரில் இருத்துவது என்பது பற்றியதாகும்.

உதவி வெளிவிவகாரச் செயலாளர் நியூலாந்திற்கும், தூதுவர் ப்யாட்டிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடல், ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பிரதம மந்திரி பதவி மற்றும் துணைப் பிரதமர் பதவியை எதிர்க்கட்சித் தலைவர்களான ஆர்செனி யாட்சென்யுக் மற்றும் விட்டாலி கிளிட்ஷ்கோவிற்கு முறையே கொடுக்க முன்வந்தபின் கடந்த மாதக் கடைசியில் நடைபெற்றதாகும்.  

ஜேர்மனியின் ஆளும் பழைமைவாத கட்சியுடன் நெருக்க நிதிய உறவுகளைக் கொண்டுள்ள UDAR (Strike) கட்சியின் தலைவர் கிளிட்ஷ்கோவைப் பற்றிக் குறிப்பிடுகையில் நியூலாந்த் தூதரிடம் பின்வருமாறு கூறுகிறார்: கிளிட்ஷ் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. அது தேவை என்றும் நினைக்கவில்லை. அது ஒரு நல்ல கருத்தும் அல்ல. ப்யாட் அதற்கு உடன்பட்டு: அவர் வெளியே இருந்து அவருடைய சொந்த அரசியல் வீட்டுவேலையை செய்யட்டும். என்றார்.

நியூலாந்த் தொடர்கிறார்: யாட்ஸ் [யாட்சென்யுக்] பொருளாதார அனுபவம், ஆளும் அனுபவம் உடைய நபர். பியாட் பின்னர் நியூலாந்திடம் எதிர்த்தரப்பிற்குள் கிளிட்ஷ்கோ உயர்மட்ட தலைவராக இருக்கின்றார். எதிர்த்தரப்பினரின் ஆளுமை நிர்வாகத்தின் ஒரு பகுதியாக UDAR தலைவருடன் பேசி நியூலாந்த் விரைவில் இதைச் செய்து முடிக்க வேண்டும் என எச்சரிக்கிறார்.

ஒரு அடிபணியும் ஆட்சியை கீயேவில் இருத்த முயலும் வாஷிங்டனின் முழுக் குற்றத்தன்மையான உந்துதல், நியூலாந்தையும் ப்யாட்டையும் நவ-பாசிச அனைத்து உக்ரேனிய ஒன்றியமான ஸ்வோபோடா கட்சியின் தலைவர் ஓலே தியானிபோக்கை பற்றி விவாதிக்க வைக்கிறது. நியூலாந்த் தியானிபோக்கை எதிர்த்தரப்பு தலைமையினுள் இருக்கும் பெரிய மூவரில் ஒருவர் என விவரிக்கிறார். வெளிவிவகாரத்துறை நடவடிக்கையாளர், பியாட்டிடம் அதிகாரத்திற்கு வந்தபின் யாட்சென்யுக்கிற்கு தேவைப்படுவது கிளிட்ஷ் மற்றும் தியானிபோக் வெளியே இருக்க வேண்டும் என்பாகும் அவர் அவர்களுடன் வாரத்திற்கு நான்கு முறை பேச வேண்டும். என்றார்.

இக்கருத்துக்கள், உக்ரேனில் பாசிய இயக்கங்களுடன் கூட்டாக ஒத்துழைப்பதில் ஒபாமா நிர்வாகத்திற்குள் குழப்பம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

தியானிபோக் ஸ்வோபோடா கட்சித் தலைவராவர். இது ஆரம்பத்தில் உக்ரேன் சமூக தேசியக் கட்சி என அழைக்கப்பட்டு ஒரு நவ நாஜி சின்னத்தையும் கொண்டிருந்தது. தியானிபோக், இரண்டாம் உலகப் போரில் இருந்த வலதுசாரி உக்ரேனிய கிளர்ச்சியாளர்களை பாராட்டி பின்வருமாறு அறிவித்தார்: அவர்கள் அஞ்சவில்லை, தானியங்கி துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டனர். மாஸ்கோவாதிகள், ஜேர்மனியர்கள், யூதர்கள் இன்னும் மற்ற இழிந்தவர்களுடன் போராடுவதற்கு காடுகளுக்கு சென்றனர்.

உக்ரேன் இன்னமும் மாஸ்கோ-யூத மாபியாவிடம் இருந்து சுதந்திரம் அடைய வேண்டும் என்றும் அவர் கூறினார். 2005ல் தியானிபோக் உக்ரேனிய தலைவர்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டு ஒழுங்கமைக்கப்பட்ட யூதர்களின் குற்றம் சார்ந்த செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி தேவை என்று கோரினார். அது உக்ரேனிய மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ய முயல்கிறது என்றும் அறிவித்தார்.

உக்ரேனில் தனக்கு சார்பான ஒரு ஆட்சியில் ஒபாமா நிர்வாகம் இருத்துவதற்கு முயலும் மூன்று பெரிய நபர்களில் இவரும் ஒருவர். நேற்று நியூலாந்த் பல எதிர்த்தரப்பு நபர்களைச் சந்தித்தார். அவர்களுள் ஓலே தியானிபோக்கும் இருந்தார். விவாதம் குறித்த விவரங்கள் பகிரங்கமாக்கப்படவில்லை. ஆனால் தூதர் ப்யாட், ட்விட்டர் மூலம் நாஜி சார்புத் தலைவர் மற்றும் அவருடைய சகபாடிகளுக்கு அருகே நியூலாந்த் சிரித்தபடியுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நியூலாந்த் மற்றும் தியானிபோக் இடையே நேற்று நடைபெற்ற பேச்சுக்கள் முதல் தடவையாக நடப்பது அல்ல. அவர் முன்பு உக்ரேனுக்கு கடந்த டிசம்பர் வந்திருந்தபோதும் இருவரும் மூடிய கதவுகளுக்குப் பின்னே பேசினர். அக்கூட்டத்திற்குப்பின் நியூலாந்த் கீயேவின் மத்திய சதுக்கத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தினார். அச்சதுக்கம், அரசாங்க எதிர்ப்புக்கள் என வலதுசாரி எதிர்க்கட்சிகளால் செய்யப்படுவதின் தலைமையகமாக உள்ளதுடன் அமெரிக்காவின் ஆதரவிற்கு அடையாளமாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ரொட்டி வழங்குகிறது.

ப்யாட்டுடன் நியூலாந்த் நடத்திய தொலைபேசி உரையாடலில், .நா. தலைமைச் செயலர் பான் கி-மூன் தனது சிறப்புத்தூதர் ரோபர்ட் செர்ரியை உக்ரேனுக்கு அனுப்பியதற்கு பாராட்டியுள்ளார். இது புதிய அரசாங்கத்தை இணைக்கப் பெரிதும் உதவும் என நான் நினைக்கிறேன். என்றார். இக்கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் சபை ஏகாதிபத்தியக் கருவியாக அமெரிக்காவினதும் அதன் நட்பு நாடுகளுடனும் உலகெங்கிலும் அவற்றின் கொள்ளைச் செயல்களை மறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உடனடியாக ஐ.நா. வை பாராட்டிய பின்னர், நியூலாந்த் F--k the EU, என ஐரோப்பிய ஒன்றியத்தை இழிவாக திட்டியமை இது ஐரோப்பிய சக்திகள் ஆட்சிமாற்ற செயலுக்கு இன்னும் அதிகம் செய்யவில்லை என்னும் விரக்தியை வெளிப்படுத்துகிறது. கீவ் போஸ்ட் பத்திரிகையின் கருத்துபடி, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஹெல்கா ஸ்மித்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரேன் தூதர் ஜான் ரொம்பின்ஸ்கிக்கும் இடையே நடந்த ஜேர்மன் மொழியிலான மற்றொரு கசியவிடப்பட்ட தொலைபேசி உரையாடலில், இருவருக்கும் இடையே எப்படி ஐரோப்பிய ஒன்றியம், உக்ரேன் தொடர்பாக மிருதுவாக நடக்கிறது என்ற அமெரிக்காவின் கருத்து பற்றிய கலந்துரையாடல் இருந்தது.

நியூலாந்த்-ப்யாட் விவாதத்தில், அமெரிக்கத் தூதர் ஐ.நா. ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவை பற்றிய தன் உடன்பாட்டை வெளியிட்டுக் கூறுகிறார்: நாம் ஏதேனும் செய்து இது இணைந்திருக்கச் செய்ய வேண்டும், ஏனெனில் இது நடைமுறைக்கு வரும் வாய்ப்பு இருந்தால் ரஷ்யர்கள் திரைக்குப்பின் இதைத் தகர்க்க முற்படுவர் என்று நீங்கள் நம்பமுடியும். அவர் மேலும் : ஒரு சர்வதேச ஆளுமை உடையவர் இங்கு வந்து ஆட்சிமாற்றத்திற்கு தேவையானதை செய்ய நாம் முயல விரும்புகிறோம் எனக்கூறினார்.

யூரேசிய பிராந்தியத்தில் அதன் பூகோள மூலோபாய மேலாதிக்கத்திற்கான உந்துதலுக்கு தடை கொண்டுவரும் மாஸ்கோவின் எவ்விதமான முயற்சியையும் இல்லாதொழிக்கும் ஒரு இரக்கமற்ற போராட்டத்தில் வாஷிங்டன் ஈடுபட்டுள்ளது. இது ஒரு பரந்த நிலப்பகுதி, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து படர்ந்து எரிபொருள் செழுமைமிக்க மத்திய கிழக்கு, மத்திய ஆசியா வரை செல்வதுடன், சீனாவின் மேற்கு எல்லைகள் வரை நீடிக்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம் உக்ரேனில் பாசிச இயக்கங்களை வளர்ப்பதுடன், தன் நலன்களை முன்னெடுக்கவும் ரஷ்ய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை அதிகரிக்கவும் புதிய உள்நாட்டுப் போருக்கு எரியூட்டுகிறது.

நியூலாந்த் ஐரோப்பிய, யூரேசிய விவகாரங்களைக் கவனிக்க கடந்த மே மாதம் உதவி செயலராக நியமிக்கப்பட்டமை ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரோஷ மூலோபாயத்தின் ஒரு பகுதி என்பது தெளிவாகிறது. அவர் முன்பு துணை ஜனாதிபதி டிக் ஷென்னியின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியதுடன், புதிய பழமைவாத வர்ணனையாளரும் வரலாற்றாளருமான ரோபர்ட் காகனைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நேற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய மூத்த உதவியாளர் செர்ஜி கிளேசியேவ், அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது உட்பட, வாரத்திற்கு 20 மில்லியன் டாலர்களை உக்ரேனிய எதிர்த்தரப்புக் குழுக்களுக்கு ஆதரவு தர செலவழிக்கிறது என்றார்.

கசியவிடப்பட்ட தொலைபேசி உரையாடல் பற்றிய வினாக்களுக்கு பதில் கூறுகையில், வெளிவிவகாரத்துறை செய்தித்தொடர்பாளர் ஜென் சாக்கி, இந்நிகழ்வு ரஷ்யாவின் இயலுமையின் ஒரு புதிய தரக்குறைவைக் குறிக்கிறது என அபத்தமாக அறிவிப்பதற்கு முன், அது உண்மையான உரையாடல் என்றும் நியூலாந்த் ஐரோப்பிய ஒன்றிய நபர்களிடம் மன்னிப்புக் கேட்டார், என்றும் கூறினார்.

சாக்கி, ரஷ்ய அரசாங்கம் தான் தொலைக்காட்சி உரையாடலை குறுக்கிட்டு கசிய விட்டதற்குப் பொறுப்பு என்பதற்கான சான்று எதுவும் ஒபாமா நிர்வாகத்திடம் இல்லை என்றார். இதைப்பற்றி எழுதி, ட்வீட் செய்து, இதை அவர்கள் தீவிரமாக பரப்பியுள்ளனர், ஆனால் நிச்சயமாக இது ஒருபுதிய தரக்குறைவு என்றுதான் நாங்கள் உணர்கிறோம்.

தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தகவல் வெளியிட்டவரான எட்வார்ட் ஸ்னோவ்டன் ஒபாமா நிர்வாகம் அரசாங்க, அரச தலைவர்கள் உட்பட உலக மக்களின் தொலைபேசி மற்றும் இணைய தள உரையாடல்களை ஒற்றுக் கேட்க பரந்த முறையில் வலைப்பின்னலை நிறுவியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இது எவரையும் புதிய தரக்குறைவு பற்றி உபதேசம் செய்யவைக்கவில்லை. அதன் பாசாங்குத்தன எதிர்ப்புக்கள் மற்றும் கசியவிடப்பட்ட உரையாடல் மாஸ்கோவிற்கும் யானுகோவிச் அரசாங்கத்திற்கும் எதிரான தனது பிரச்சாரத்திற்கு சேதம் விளைவிக்கலாம் என்ற கவலையையே எடுத்துக்காட்டுகின்றது.