தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The revival of Japanese militarism ஜப்பானிய இராணுவவாதத்தின் மீள்எழுச்சி
Peter Symonds Use this version to print| Send feedback இரண்டாம் உலக யுத்தம் முடிந்து சுமார் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர், ஜப்பானின் ஆயுத படைகளை எவ்வித சட்ட அல்லது அரசியலமைப்பு தடைகளில் இருந்தும் சுதந்திரமடைய செய்தும், கடந்தகால குற்றங்கள் மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்திய அட்டூழியங்களை மூடிமறைக்க வரலாற்றைத் திருத்தியமைத்தும், பிரதம மந்திரி ஷிஜோ அபேயின் வலதுசாரி அரசாங்கம் ஜப்பானை துரிதமாக மீள்இராணுவமயப்படுத்தி வருகிறது. அபே ஒரு சித்தாந்தரீதியிலான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார், அது தண்டிக்கப்பட்ட 14 முதல் பிரிவு குற்றவாளிகள் உட்பட ஜப்பானின் யுத்தத்தில் இறந்தவர்களுக்கான, இழிபெயர்பெற்ற யாசூகூனி நினைவிடத்திற்கு அவர் டிசம்பர் 26இல் விஜயம் செய்ததன் மூலமாக குறிக்கப்பட்டது. அதே மாதம், ஜப்பானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் NHKஇன் அரசியல் நிலைநோக்கை மாற்றுவதற்காக அவர் அதன் நிர்வாகிகளின் பொதுக்குழுவில் (Board of Governors) நான்கு வலதுசாரி பிரபலங்களை நியமித்தார். அந்த நியமனங்களின் நோக்கம் விரைவிலேயே வெளிப்படையாக வெளிப்பட்டது. ஏகாதிபத்திய இராணுவம் 1930கள் மற்றும் 1940களில் முறையாக நூறாயிரக்கணக்கான பெண்களைப் பாலியல் அடிமைகள் போல் தவறாக நடத்தியதை நியாயப்படுத்திய, புதிய NHK தலைவர் கட்சுடோ மோமியின் கருத்துக்கள் பெரும் பரபரப்பை தூண்டிவிட்டன. மோமி அவரது தனிப்பட்ட கருத்துக்களை தலைவராக அவரது பாத்திரத்தில் இருந்து வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார், ஆனால் அந்த கருத்துக்களைத் திரும்ப பெறவில்லை. இந்த வாரம், அபேயின் மற்றொரு நியமனமான நியோகி ஹயாகுடா, இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான அட்டூழியங்களில் ஒன்றான நான்கிங் நகர கற்பழிப்புகள், "ஒருபோதும் நடக்கவில்லை" என்று அறிவித்தார். 1937இல், ஜப்பானிய துருப்புகள் அந்நகருக்குள் நுழைந்து, பல வாரங்கள் கற்பழிப்பு, படுகொலை மற்றும் நாசப்படுத்துதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டன, அவற்றில் 300,000 சீன மக்களும் சிப்பாய்களும் கொல்லப்பட்டனர். இருந்தபோதினும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு குண்டுகள் வீசியதில் அமெரிக்காவின் குற்றங்களை மூடிமறைக்க, நான்கிங் நகர படுகொலைகள் ஜோடிக்கப்பட்டதாக ஹயாகுடா தெரிவித்தார். இந்த வாதம் இதுவரையில் தீவிர வலதுசாரி விளிம்பில் உள்ள குழுக்களுக்குள் அடங்கி இருந்ததாகும். அவர்கள் 1930கள் மற்றும் 1940களில் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் கொடூரமான குற்றங்களை, இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களாக குறிப்பிட்டுக் காட்டி நியாயப்படுத்தினர். நான்கிங் நரக கற்பழிப்புகளில் இருந்த குற்றங்களின் அளவை மறுப்பதென்பது ஒரேயொரு அர்த்தத்தை மட்டுரே கொண்டுள்ளது, அதாவது, புதிய யுத்தங்கள் மற்றும் புதிய அட்டூழியங்களுக்கு அது சித்தாந்தரீதியிலான தயாரிப்பு என்பதாகும். இதில் ஜப்பானிய அரசாங்கம் தனியாக இல்லை. 2008 நிதியியல் நெருக்கடியின் வெடிப்புக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், முதலாளித்துவமானது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டாபோட்டிகள், நவ-காலனித்துவ தலையீடுகள் மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் இராஜாங்கரீதியிலான சூழ்ச்சிகளை எரியூட்டி, பொருளாதார மந்தநிலைமை மற்றும் நிதியியல் கொந்தளிப்பில் சிக்கி உள்ளது. அபே ஜப்பானிய இராணுவவாதத்தைப் புதுப்பிப்பது தற்செயல் நிகழ்வல்ல, ஜேர்மனியில் இராணுவ தடைகள் மீதிருந்த அதன் முந்தைய கொள்கையை புதிய பெரும் கூட்டணி நீக்கி உள்ளது. ஜப்பானிய அரசாங்கம் மட்டுமே வரலாறை திருப்பி எழுதும் ஒரேயொரு நாடல்ல. ஏனையவைகளில், பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள், காலனி நாடுகள், சந்தைகள் மற்றும் மூலோபாய மேலாதிக்கத்திற்காக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதலில் மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்த இரத்தக்குளியலை பெருமைப்படுத்த, முதலாம் உலக யுத்தத்தின் நினைவுதினத்தைக் கைப்பற்ற முனைந்துள்ளன. உலக அரசியலில் பிரதான நிலைகுலைக்கும் காரணியாக இருப்பது அமெரிக்க இராணுவவாதத்தின் எழுச்சியாகும். அமெரிக்க தலைமையிலான நவ-காலனித்துவ தலையீடுகள் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவை சீரழித்துள்ளன. தற்போது, ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" என்ற பெயரில், சீனாவிற்கு குழிபறிக்க மற்றும் அதனை இராணுவரீதியில் சுற்றி வளைக்க அனைத்துவிதத்திலுமான ஒரு இராஜாங்க தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. கிழக்கு சீன கடலில் (சர்ச்சைக்குரிய சென்காயு/தியாவூ தீவுகள் விவகாரத்தில்) ஒரு அபாயகரமான புதிய வெடிப்பு புள்ளியை உருவாக்கி, சீனாவிற்கு எதிராக இன்னும் மேலதிகமாக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்க ஜப்பானை ஊக்குவிப்பதற்கு ஒபாமா நிர்வாகமே பொறுப்பாகும். நேற்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, அந்த மக்கள் வசிக்காத, பாறை குன்றுகள் மீதான விவகாரத்தில் பெய்ஜிங்குடனான ஒரு யுத்தத்தில் வாஷிங்டன் டோக்கியோவை ஆதரிக்குமென்று மீண்டும் உத்தரவாதமளித்தார். மீண்டும் இராணுவமயமாக்க ஜப்பானுக்கு அழுத்தம் அளித்திருப்பதன் மூலமாக, அமெரிக்கா அதன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு இயக்கத்தில் அரசியல் சக்திகளை இழுத்துவிட்டுள்ளது. அபே அரசாங்கம், அமெரிக்க-ஜப்பான் கூட்டணியை உறுதிப்படுத்துகின்ற அதேவேளையில், ஜப்பானிய ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாப்பதில் தீர்க்கமாக உள்ளது. டிசம்பர் 2012இல் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, அபே இராணுவ வரவு-செலவு திட்டத்தை அதிகரித்திருப்பதோடு, வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கையை அவர் கரங்களில் குவித்து வைக்க ஒரு தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஸ்தாபித்துள்ளார். ஆக்ரோஷமான யுத்தங்களில் ஆயுதப் படைகளை பயன்படுத்துவதன் மீதிருக்கும் அரசியலமைப்பு தடைகளை முடிவுக்குக் கொண்டு வர அவர் அழுத்தம் அளித்து வருகிறார். இராணுவவாதத்தின் இந்த மீள்எழுச்சி, அன்னிய நாடுகள் மீது ஜப்பானிய ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுக்கவும் மற்றும் உள்நாட்டில் அதிகரித்துவரும் சமூக நெருக்கடியால் உருவாகும் பதட்டங்களை ஒரு வெளிநாட்டு "எதிரிக்கு" எதிராக வெளியே திருப்பி காட்டவும் என இரண்டுக்கும் ஆகும். இரண்டு தசாப்தகால விலையிறக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலைமையை முடிவுக்குக் கொண்டு வரும் வாக்குறுதிகளோடு அபே பதவிக்கு வந்தார். ஆனால், அவரது "அபேனோமிக்ஸ்" பங்கு சந்தைகளை உயர்த்தியதே அல்லாமல் நீடித்த வளர்ச்சியை உருவாக்க தவறி, ஒரு கண்துடைப்பு என்பதாக நிரூபணமாகி உள்ளது. அபே கடந்த மாதம் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் அவரது நிகழ்ச்சிநிரலை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டினார். ஜப்பானிய ஏகாதிபத்தியம் ஆசியாவில் ஒரு முன்னணி சக்தியாக அதன் இடத்தைப் புதுப்பிப்பதில் இருந்து பின்வாங்க போவதில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஜப்பானை "சூரியன் அஸ்தமிக்கும் நாடு" என்று வர்ணித்தவர்களை ஓரங்கட்டி, "ஒரு புதிய உதயம்" பிறக்கிறதென்று அபே வலியுறுத்தினார். சீனாவை முதலாம் உலக யுத்தத்திற்கு முந்தைய ஜேர்மனியோடு ஒப்பிட்டு ஒரு ஆக்ரோஷ புதிய சக்தியாக சித்தரித்த அவர், ஜப்பானை "வர்த்தகத்திற்கு நேசமான உலகின் மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாக" மாற்ற ஒரு சந்தை-சார்பு மறுகட்டுமான வடிவமைப்போடு கைகோர்த்திருந்தார். அபே வலது நோக்கி இராணுவவாதத்திற்குள் சாய்ந்திருப்பதற்கு அங்கே ஜப்பானிய அரசியல் ஸ்தாபகத்திற்குள் எந்தவொரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் இல்லை. அரசாங்கத்தின் மீது கோபமான விமர்சன குரல் எழுப்புகின்ற அதேவேளையில் எதிர்கட்சியான ஜப்பான் ஜனநாயக கட்சி, ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து, சீனாவுடன் நிலவி வரும் பதட்டங்களில் மைய பிரச்சினையாக விளங்கும் கிழக்கு சீனக் கடலின் சர்ச்சைக்குரிய தீவுகள் மீது ஜப்பான் உரிமைகோருவதை முழுமையாக ஆதரிக்கின்றது. எவ்வாறிருந்த போதினும், ஜப்பானிய இராணுவவாதத்திற்கு எதிராக எதிர்ப்பைக் காட்டுவதில் தொழிலாள வர்க்கம் ஒரு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. 1930கள் மற்றும் 1940களில் இருந்த ஆட்சியின் யுத்தகால குற்றங்கள், நான்கிங் நகர படுகொலைகள் போன்ற அன்னிய நாட்டில் நடந்த அட்டூழியங்களோடு மட்டுப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. டோக்கோ (Tokkō), அல்லது "சிந்தனை பொலிஸ்" என்பது, குறிப்பாக தொழிலாளர்கள் மத்தியில் இருந்த விமர்சனம் அல்லது எதிர்ப்பின் அனைத்து வடிவங்களையும் நீக்குவதில் ஜேர்மனியில் இருந்த நாஜி கெஸ்டாபோ (Gestapo) அளவிற்கு இரக்கமற்று இருந்தன. அபேயினால் அண்மையில் கொண்டு வரப்பட்ட இரகசிய காப்பு சட்டம் (secrecy law) ஜப்பானில் பரந்த எதிர்ப்பைத் தூண்டியது, முக்கியமாக ஏனென்றால் அது டோக்கோவின் பாத்திரத்தை பெரிதும் விரிவாக்கிய 1925ஆம் ஆண்டு அமைதி பாதுகாப்பு சட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தது. சீனா மீதான அபேயின் ஆத்திரமூட்டும் தாக்குதல்கள், நான்கிங் நகர கற்பழிப்புகளை மறுத்து அவரது புதிய NHK நியமன அதிகாரியால் வழங்கப்பபட்ட கருத்துக்கள், மற்றும் தொடர்புபட்ட அபிவிருத்திகள் ஜப்பானிலும் மற்றும் ஏனைய ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையை அளிக்கின்றன. இந்த யுத்த தயாரிப்புகள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்க யுத்தத்திற்கு கட்டியம் கூறுகின்ற பொய்கள் மற்றும் போர்வெறி கூச்சல்களின் ஒரு பிரச்சாரத்தோடு சேர்ந்துள்ளன. தொழிலாளர்கள் திவாலான இலாப அமைப்புமுறைக்கு முடிவுகட்ட ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் சர்வதேசரீதியில் அவர்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே தங்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை மற்றும் யுத்த உந்துதலை நிறுத்த முடியும். |
|
|