World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Large neo-fascist vote expected in French municipal elections

பிரெஞ்சு நகரசபை தேர்தல்களில் மிக அதிக வாக்குகள் நவ-பாசிசவாதிகளுக்கு எதிர்பார்க்கப்படுகின்றது

By Anthony Torres 
10 February 2014

Back to screen version

எதிர்வரும் மார்ச் நகரசபை தேர்தல்கள், ஜனாதிதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சி (PS) 2012 ல் ஆட்சிக்கு வந்தபின் நடைபெறும் நாடு தழுவிய முதல் தேர்தல்கள் ஆகும். செய்தி ஊடகங்கள், இது நவ-பாசிச தேசிய முன்னணி (FN) க்கு ஆதாயத்தை கொடுக்கும், வலதுகளின் கைகளில் சோசலிஸ்ட் கட்சிக்கு ஒரு தோல்வி ஏற்படும் என்று கணித்துள்ளன – இது, குட்டி முதலாளித்துவ, போலி இடது கட்சிகளின் ஆதரவுடன் ஹாலண்ட் நடத்திய செல்வாக்கற்ற கொள்கைகளான சிக்கன நடவடிக்கைகள், போர் இவற்றின் பேரழிவால் விளைந்ததாகும்.

Les Ecohs க்கு ஜனவரி நடுப்பகுதியில் BVA நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு, இடது பட்டியலுக்கு 31%, தேசிய முன்னணிக்கு 14% என்பதுடன் ஒப்பிடுகையில், 32% வாக்காளர்கள் ஒரு வலது அல்லது மைய-வலது பட்டியலில் நகரசபை தேர்தல்களில் தங்கள் தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என விரும்புவதைக் காட்டுகிறது.

நவம்பர் மாதம் இதே BVA கருத்துக் கணிப்பு நிறுவனம், சம Large neo-fascist vote expected in French municipal elections எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வலதிற்கும் முதலாளித்துவ “இடதிற்கும்” வெற்றி கிடைக்கும் என நம்பியதாகக் காட்டியது 29% ஒவ்வொன்றிற்கும்— அதே நேரத்தில் FN க்கு17% ஆதரவு இருந்தது.

இத் தேர்தல்கள் ஒரு பதட்டம் நிறைந்த சமூகப், பொருளாதார உள்ளடக்கத்தில் நடக்கவுள்ளது. பொறுப்புணர்வு ஒப்பந்தம் என அழைக்கப்படுவதை அரசாங்கம் நிறுவி, பில்லியன் கணக்கான யூரோக்களை முதலாளிகளுக்கு அளிக்கவுள்ளது. அரசாங்கத்திற்கு இதனால் ஏற்படும் இழப்பை,இடது” கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உடைய உதவியுடன், பணிநீக்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் மீதான நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் ஈடு செய்யும்.

தேர்தலில் வாக்களிக்காமை 55% இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது; இது பிரெஞ்சு அரசியல் நடைமுறையையும், அதன் சிக்கனக் கொள்கைகளையும் தொழிலாளர்கள் நிராகரிப்பதையும் வெளிப்படுத்துகிறது; இது FN இல் இருந்து போலி இடது NPA (புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி) வரை செல்கிறது. “இடது” அமைப்புக்களின் ஊழல் மிக்க தன்மை, தொழிலாளர்களின் பார்வையில் அவமதிப்பிற்கு உட்பட்டவை, தொழிலாளர்கள் சரியாக இவற்றை PS உடன் பிணைந்தவை எனக் காண்கின்றனர் FN ஐ அரசியல் உயரடுக்கிற்கு எதிர்ப்பு என்ற வெளிப்பாட்டில் ஏகபோக உரிமை கொள்ள வைத்துள்ளது.

FN க்கு வாக்களிப்போர் விருப்பம் 14% உள்ளது, நவம்பர் கருத்துக் கணிப்பில் இருந்து இது 3% குறைவாகும், தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் பல நேரமும் FN  ஆதரவை குறைத்து மதிப்பிடும். ஆயினும்கூட 14% என்பது FN உடைய 2008 நகரசபை தேர்தல்களைவிட அதிகம் ஆகும்; அப்பொழுது கட்சி நிதிப் பிரச்சினைகளை எதிர்கொண்டது.

பாரிஸ், லியோன், நான்ந், ஸ்ட்ராஸ்பேர்க் மற்றும் லீல் போன்ற 200,000 மக்களுக்கும் மேலான பெரிய நகரங்கள் பலவற்றிலும், PS தேர்தலின் முதல் சுற்றிலேயே வெற்றி பெறும். PS உடைய பாரிஸ் நகர மேயர் வேட்பாளரான Anne Hidalgo, முந்தைய கன்சர்வேட்டிவ் ஜனாதிபதி நிக்கோலோ சார்கோசியின் கீழ் மந்திரியாக இருந்த Nathalie Kosciusko-Morizet க்கு முன்னால் முதல் சுற்றில் 39.5% முன்னிலையில் இருப்பார் என்றும் பிந்தையவருக்கு 36.6% வரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. FN க்கு 8 சதவீதமும், EELV (பசுமைவாதிகள்) பட்டியலுக்கு 5.5 சதவீதமும் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி Jean Marc Ayrault மேயராக இருந்த நான்ந்தில், 2008ல் Ayrault பெற்றதை விடக் குறைந்த எண்ணிக்கை பெற்று PS வேட்பாளர் முதல் சுற்றில் முன்னிலையில் இருப்பார் என கணிக்கப்பட்டுள்ளது, அவர் அப்பொழுது முதல் சுற்றிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இந்த நகரங்களில் ஜனாதிபதியின் செல்வாக்கு குறைந்திருந்தபோதிலும் UMP ஆல் கணிசமான ஆதாயத்தை பெறமுடியவில்லை; மேலும் இது, 1995 க்கும் 2012க்கும் இடையே அதிகாரத்தில் இருந்ததைவிடக் கணிசமான எதிர்ப்பை எதிர்கொள்கிறது. அப்பொழுது ஜாக் சிராக்கும், நிக்கோலோ சார்க்கோசியும் ஜனாதிபதிகளாக இருந்தனர். UMP இந் நகரங்களில் கொண்டுள்ள மற்றொரு பலவீனம், அதன் உள்ளூர் மட்ட போராட்டங்கள் ஆகும்; அது உள்ளூர் மட்ட அதிகாரிகளை பாதிக்கிறது, சோசலிஸ்ட் கட்சி இதை சுரண்டிக்கொள்ள முடிகிறது.

ஆயினும்கூட, UMP ஏற்கனவே நடத்தும் போர்தோ மற்றும் மார்சேயிய் நகரசபையில் முதல் சுற்றிலேயே வெற்றிபெறும்.

UMP மற்றும் FN க்கு ஆதரவாக PS ன் இழப்புக்கள் சிறு, நடுத்தர நகரங்களில் தெளிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் 2013ல் நடைபெற்ற துணைத் தேர்தல்கள், நகரசபை தேர்தல்களில் PS க்கு ஒரு சாத்தியமான தோல்வி வரலாம் என சூசகம் செய்கின்றன.

தென்மேற்கு பிரான்சில் Villeneuve-sur-Lot, மற்றும் பாரிசின் வடக்கே உள்ள Oise தொகுதியில், PS இரண்டாம் சுற்றிற்கு கூட செல்லவில்லை. இத் தேர்தல்கள் UMP, FN க்கு சாதகமாக இருந்தன. தென்கிழக்கு நகரான Brignoles இல் இரண்டாம் சுற்றில், FN UMP க்கு எதிராக வெற்றிபெற்றது.

ஸ்ரானினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை கொண்ட கட்சியாகும். அது தன் நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு, பல நகரங்களில் PS உடன் உடன்பாடுகளைக் கொண்டுள்ளது; குறிப்பாக இது பாரிசில்; PCF க்கும் ஜோன் லூக் மெலன்சோனின் இடது கட்சிக்கும் (Parti de gauche -PG) இடையே இடது முன்னணிக்குள் (Front de Gauche) அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. PCF இன் தேசிய செயலராக பியர் லோரோன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டபின், PCF மற்றும் PS க்கு இடையேயான உடன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, யூரோ எம்.பி.யான மெலென்சோன், ஐரோப்பிய இடதில் இருந்து அடையாள ரீதியாக விலகினார்.

ஆயினும்கூட, இடது கட்சி (PG) சில நகரங்களில் PCF உடன் கூட்டுப்பட்டியல்களை கொண்டுள்ளது; இது மெலென்சோனுடைய நிலைப்பாட்டின் போலித்தோற்றத்தை காட்டுகிறது. முன்னாள் PS மந்திரியாக இருந்து, பின்னர் மே மாதம் ஹாலண்டின் பிரதம மந்திரியாக தனக்கு திறன் உண்டென தானே கூறிக்கொண்ட மெலென்சோன், PS இல் இருந்து எந்தவகையிலும் சுயாதீனமானவரல்ல. அவர் பசுமைவாதிகளுடனும் சமரசம் காண முயல்கிறார்; அவர்கள் அரசாங்கத்தில் பங்கெடுத்து, அதன் சிக்கனக் கொள்கைகளுக்கும் ஆதரவு கொடுக்கின்றனர்.

இடது கட்சி, NPA உடன் பட்டியல்களை அளிக்கும்; NPA, இடது முன்னணி ஊடாக அரசியல் நடைமுறையில் ஒருங்கிணைந்து கொள்வதற்கு ஆழ்ந்த தன்மையை கொடுத்து, PS உடனான அதன் நெருக்கமான தொடர்புகளை வலுப்படுத்தும். NPA, 2012 ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டாம் சுற்றில் ஹாலண்டிற்கு ஆதரவு கொடுத்திருந்தது, இப்பொழுது இழிந்த முறையில் அனைத்து “இடது” அமைப்புக்களுடனும் சேர்ந்து, PS க்கு எதிரான ஒன்றுபட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு குரல் கொடுக்கிறது.

அரசாங்கத்துடன் பிணைந்துள்ள அமைப்புக்களான இடது கட்சி மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) போன்ற கட்சிகளுடன் கூட்டுச்சேருவதன் அர்த்தம், தொழிலாளர்களின் பெருகும் அதிருப்தியை கூட்டணி அமைப்புக்களின் பின்னே திசை திருப்புவதாகும்.