தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
US threatens French companies with sanctions over Iran ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை கொண்டு அமெரிக்கா பிரெஞ்சு நிறுவனங்களை அச்சுறுத்துகிறது
By Peter Symonds Use this version to print| Send feedback இந்த வாரம் தெஹ்ரானுக்கு சென்றிருந்த பிரெஞ்சு வணிகத் தூதுகுழு, அமெரிக்கத் தலைமையிலான ஈரான் அட்சிக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் ஏதேனும் மீறப்பட்டால் அபராதங்கள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து ஒரு “முன்னறிவிப்பும்” பெற்றன. இந்த அப்பட்டமான அச்சுறுத்தல், அமெரிக்கப் பொருளாதார, மூலோபாய நலன்கள்தான் ஈரானுடன் அதன் அணுத்திட்டம் குறித்த சர்வதேப் பேச்சுக்களில் சமரசம் எதும் வந்தால் வெளிவரும் என்ற உறுதிப்பாட்டை ஒபாமா நிர்வாகம் உயர்த்திக் காட்டுகிறது. நவம்பர் மாதம் P5+1 குழுவிற்கும் (அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி) ஈரானுக்கும் இடையே அடையப்பட்ட இடைக்கால உடன்பாடு, சிவிலிய அணுசக்தித்திட்டம் முடக்கப்பட்டு பின்வாங்கப்படுவதற்கு பதிலாக “குறைந்தப்பட்ச, இலக்கு கொள்ளப்பட்டுள்ள, பின்வாங்கப்படக்கூடிய” பொருளாதாரத் தடைகள் நிவாரணத்தை கொடுத்துள்ளது. இந்த உடன்பாடு கடந்த மாதம் நடைமுறைக்கு வந்தபோது முடக்கப்பட்ட ஈரானிய நிதியில் வெறும் 550 மில்லியன் டாலர்கள் மட்டுமே முதல் தவணையாக திருப்பிக் கொடுக்கப்பட்டது. திங்களன்று தெஹ்ரான் வந்த பிரெஞ்சு வணிக பிரதிநிதிகள் குழு, ஜூலை மாதம் அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு விரிவான உடன்பாடு வந்தால் பிரெஞ்சு நிறுவனங்களுக்கான நிலைப்பாட்டைக் கோர வந்தது என்பது தெளிவு. பயணத்திற்கு ஏற்பாடு செய்த முதலாளிகள் கூட்டமைப்பு (Medef) செய்தி ஊடகத்திடம் கூறியது: “சமீபத்திய அணுசக்தி உடன்பாடு குறைந்த அளவு தடைகளைத்தான் அகற்றும் என்றாலும், ஒரு புதிய இயக்கமும் உள்ளது. 80 மில்லியன் மக்கள் இருக்கும் சந்தைய அணுகும் வாய்ப்பு ஈர்ப்பு நிறைந்தது.” 116 பெருநிறுவனங்களின் பிரதிநிதிகளை குழு கொண்டிருந்தது; அவற்றுள் எரிசக்தி பெருநிறுவனம் Total மற்றும் கார்த் தயாரிப்பு நிறுவனங்களான Peugeot, Citroën மற்றும் Airbus, Lafarge, GDF Suez, Astrom ஆகிய நிறுவனங்களும் இருந்தன. பிரான்ஸ் தடைகளுக்கு முன்பு ஈரானில் கணிசமான முதலீட்டையும் வணிகத்தையும் கொண்டிருந்தது. ஈரானில் ஆண்டு ஒன்றிற்கு Renault கிட்டத்தட்ட 100,000 கார்களை விற்று வந்தது, ஏற்கனவே அனுப்பத் தொடங்கியுள்ளது. Citroën 458,000 கார்களை 2011ல் ஈரானுக்கு அனுப்பியது, இது கிட்டத்தட்ட சந்தைப் பங்கில் மூன்றில் ஒரு பகுதியாகும், மீண்டும் திரும்புவதற்கு தயாராகிறது. ஒபாமா நிர்வாகம் சிறிதும் மறைக்காத விரோதப் போக்குடன் பிரெஞ்சுக் குழுவின் செயல்களை எதிர்கொண்டுள்ளது. புதன் அன்று CNN இடம் பேசிய அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி அறிவித்தார்: “ஈரான் இன்னும் வணிகத்திற்கு திறக்கப்படவில்லை; அது இன்னமும் வணிகத்திற்குத் திறக்கப்படவில்லை என்பது ஈரானுக்கு தெரியும்.... மற்ற ஒவ்வொரு நாட்டிற்கும் ஆட்சிக்கு எதிரான தடைகள் இன்னமும் நடைமுறையில் உள்ளன என்பதைத் தெளிவாக்கியுள்ளோம்.” இதன் பின் கெர்ரி வெளிப்படையாக எச்சரித்தார்: “எனவே பிரான்ஸ் சில வணிகர்களை அங்கு அனுப்புகையில், அவர்கள் தடைகளை மீற முடியாது. அவர்கள் மீறினால் அவர்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் வரும், அவர்களுக்கு அது தெரியும். நாங்களும் முன்னறிவிப்பு கொடுத்துள்ளோம்.” பிரித்தானியாவை தளம் கொண்ட டெலிகிராப் கருத்துப்படி, பாரிசிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பிரெஞ்சு வணிகர்களை அவர்கள் தெஹ்ரானுக்குச் செல்லுமுன் “அழைக்கப்பட்டு” தடைகள் மீறப்படுவதின் விளைவுகளை குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தனர். பெயர் குறிப்பிட விரும்பாத மெடப் தலைவர், அமெரிக்கா ஈரானில் தனது சொந்த வணிக குறிக்கோள்களை கொண்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார். “அவர்கள் ஈரானுக்கு மீண்டும் வரும்போது வருங்காலப் போட்டியாளர்களுக்கு எதிராக கடுமையாக தடைகளை செலுத்த அமெரிக்கர்கள் தொடங்கிவிட்டனர்” என்றார் அவர். அமெரிக்க அரசியல் விவகாரங்களின் துணை செயலர் வென்டி ஷேர்மன் கருத்துக்களை தொடர்ந்து, கெர்ரியின் கருத்துக்கள் வந்துள்ளன; முந்தையவர் காங்கிரஸ் குழு ஒன்றிடம் செவ்வாயன்று ஈரான் மீதான பொருளதாரத் தடைகள் நிவாரணம், “முற்றிலும் தற்காலிகமானது, மட்டுப்படுத்தப்பட்டது மற்றும் மிகவும் இலக்கு வைக்கப்பட்டது என்றார். கெர்ரி, பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரோன்ட் ஃபாபியுஸிடம் “வணிக பிரதிநிதிகள் குறித்து... இது எப்படி உதவாது என” பேசியுள்ளார் என அவர் விளக்கினார். ஆனால் பிரெஞ்சு நிதி மந்திரி பியர் மொஸ்கோவிச்சி பதிலடி கொடுக்கும் வகையில், வணிக பிரதிநிதிகள் விஜயம் வருங்காலம் குறித்த ஒரு “ஒரு பந்தயம்”, “வழக்கமான வணிகம் அல்ல” என்றார். அவர் கூறியது: “இந்த விஜயம் கொடுத்த அடையாளம் முற்றிலும் எதிரானது என எனக்குத் தோன்றுகிறது – “உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுங்கள், அதன் விளைவு ஒரு நாள் வந்தால், விஷயங்கள் நன்றாக இருக்கும்.” Medef தனது பயணத்தை பாதுகாத்து, ஆஸ்திரியர்கள், ஜேர்மனியர்கள், போர்த்துக்கீசியர்கள், இத்தாலியர்கள் மற்றும் சீனர்கள் அனைவரும் ஈரானில் வணிக வாய்ப்புக்கள் பற்றிப் பேசியுள்ளனர் என்றது. “நாம் பிழைக்கு இடமின்றி கடந்த நவம்பர் மாத ஜெனீவா மாநாட்டின் தீர்மானங்களை மதிக்கிறோம்.” என்று அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “நாங்கள் இந்த கட்டமைப்பை நன்கு அறிவோம். ஈரானில் மற்ற ஐரோப்பிய நாடுகளுடைய பிரதிநிதிகள் குழுக்களும் இருந்தன.” கடந்த மாத இறுதியில், பிரதம மந்திரி ரகிப் தயாப் எர்டோகன் தலைமையில் ஒரு பெரிய துருக்கிய குழு தெஹ்ரானுக்கு சென்றது; இரு நாடுகளின் அதிகாரிகளும் இருதரப்பு வணிகம் 2013ல் 22 பில்லியன் டாலர்களில் இருந்து 2014ல் 30 பில்லியன் டாலர்களாக உயரலாம் என்று கணித்துள்ளனர். எர்டோகன் ஈரானுக்கு புறப்படுமுன், பயங்கரவாதம் மற்றும் நிதிய உளவுத்துறையின் அமெரிக்க துணைச் செயலர் டேவிட் கோஹன் துருக்கியத் தலைநகர் அங்காராவிற்கு வந்து பொருளாதாரத் தடைகளின் தற்காலிக நிவாரணத்தன்மையை வலியுறுத்தினார். ஒபாமா நிர்வாகத்தின் ஆட்சேபனைகள், ஈரான்மீது பொருளாதாரத் தடைகளை நிரந்தரமாக நீக்கினால் ஐரோப்பிய, ஆசியப் போட்டி நாடுகள் நலன்களை பெறும் என்ற அமெரிக்க ஆளும் வட்டங்களின் கவலையைப் பிரதிபலிக்கிறது. பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைப் போல் அன்றி, ஈரானில் 1979 புரட்சியின்போது அமெரிக்க ஆதரவு பெற்ற மிருகத்தன ஷா மகம்மது ரேஜா பஹ்லவி உடைய சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டதில் இருந்து அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட எவ்வித பொருளாதார உறவுகளும் கிடையாது. ஐரோப்பிய சக்திகள், ஈரானில் ஜனாதிபதி அக்பர் ஹஷேமி ரப்சஞ்சனி மற்றும் மகம்மது கடாமியின் சீர்திருத்த அரசாங்கங்கள் என்று அழைக்கப்பட்டவற்றின் காலத்தில் 1990களில் இருந்து கணிசமான பொருளாதார நிலைப்பாடுகள் நிறுவப்பட்டது. ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு 2003ல் நடந்ததை தொடர்ந்து, புஷ் நிர்வாகம் மீண்டும் உறவுகளை நிறுவும் ஈரானின் “பெரும் பேரத்தை” நிராகரித்தது. மாறாக அது ஆதாரமற்ற அணுவாயுதங்களை கட்டமைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்களை ஒட்டி ஈரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தியது. ஈரானில் தங்கள் நலன்களைக் காப்பதற்கு பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி (EU3) ஈரானுடன் 2004ல் அதன் யுரேனிய செறிவூட்டல் நிலையங்களை மூடி அதற்கு ஈடாக பொருளாதார, இராஜதந்திர சலுகைகளைப் பெறும் உடன்பாட்டை அடைய முற்பட்டன. புஷ் நிர்வாகம் அதைத் திறமையுடன் சேதப்படுத்தியது, பேச்சுக்களில் பங்கு பெறவில்லை, எந்த உடன்பாட்டின் அடிப்படையிலும் இருக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்களையும் அளிக்க முன்வரவில்லை. ஐரோப்பிய ஒன்றியம்-3 இறுதித் தொகுப்பு ஒன்றை அளித்தபின் பேச்சுக்கள் முறிவடைந்தன; அதை ஈரானிய பேச்சுவார்த்தை நடத்தியவர் “இதை ஒரு அளிப்பு என்று கூறுவது கேலிக்கூத்தாகும்” என்றார். 2009 ல் பதவியேற்றபின் ஒபாமா நிர்வாகம் இராணுவ அச்சுறுத்தல்களை அதிகரித்து தடைகள் நிலைப்பாட்டை சுமத்தியது; இது ஈரானிய பொருளாதாரத்தை திறமையுடன் முடக்கி, முக்கிய எண்ணெய் ஏற்றுமதிகளை தடுத்து, உலக நிதிய, வங்கி முறைகளில் இருந்து நாட்டை தனிமைப்படுத்தியது. ஒபாமா P5+1 பேசுக்களை நடத்தியதும் கடந்த ஆண்டு உடன்பாட்டை ஈரானுடன் கொண்டதும், ஈரானில் அமெரிக்காவின் மேலாதிக்க நிலையை பெறுவதற்கான வழிவகையை அடைவதற்கேயன்றி, மற்ற சக்திகள் வாஷிங்னை மீறி சலுகைகளை பெறுவதற்கு அல்ல. கடந்த தசாப்தத்தில் ஈரானுடனான அமெரிக்க மோதல் ஒருபொழுதும் ஈரானின் அணுத் திட்டங்கள் பற்றி முதன்மையாக இருந்ததில்லை. இந்த வாரம் அமெரிக்காவிற்கும் பிரான்சிற்கும் இடையே நடந்த இராஜதந்திர மோதல், ஐரோப்பிய நட்பு நாடுகள் உட்பட பிராந்தியம் முழுவதும் அதன் போட்டியாளர்களின் இழப்பில், எப்பொழுதும் ஈரானில் அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தத்தான் என்பதை வாஷிங்டன் தெஹ்ரானுடன் கொண்டுள்ள நீடித்த மோதல் தெளிவாக்குகிறது. |
|
|