World Socialist Web Site www.wsws.org |
:Tamil : செய்திகள்
ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்
Japanese government promotes militarism in media and schools ஜப்பானிய அரசாங்கம் செய்தி ஊடகங்களிலும் பள்ளிகளிலும் இராணுவ வாதத்தை ஊக்குவிக்கிறது
By John Watanabe ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் இராணுவம் மற்றும் சீனா மீது ஆக்கிரோஷ நிலைப்பாடு பற்றிப் பெருமை அடித்துக் கொள்ளவதை ஒட்டி, அவருடைய அரசாங்கம் செய்தி ஊடகங்கள் மற்றும் பள்ளிப் பாடத்திட்டம் இரண்டையும் மறுசீரமைத்து ஜப்பானிய தேசியவாதம், இராணுவ வாதம் இரண்டையும் வளர்க்க முற்படுகிறது. அபே இன் செயற்பட்டியல், ஜப்பானின் பொது ஒலிபரப்பு NHK யின் தலைவராக டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட காட்சுடோமோமி உடைய கருத்துக்களில் வெளிப்படையாக உள்ளது. அரசாங்கம், NHK யின் 12 உறுப்பினர் நிர்வாகக் குழுவைக் கலைத்து நான்கு வலதுசாரியினரை நியமித்து நிறுவனத்தின் அரசியல் நோக்குநிலை மற்றும் திட்டங்களில் மாற்றத்தை செயல்படுத்த விரும்புகிறது. அபேக்கு விருப்பமான தலைவர் பதவி வேட்பாளராக கருதப்பட்ட மோமி முன்னாள் முக்கிய ஜப்பானிய அறக்கட்டளையான மிட்சுயின் வணிகப் பிரிவின் துணைத் தலைவர் ஆவார். அரசாங்கத்தின் வழி நிற்பதற்கு மோமி உடனடியாகத் தன் தயார்நிலையை அடையாளம் காட்டினார். தன் தலைமைப் பொறுப்பை தொடங்கும் செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில் அவர், NHK யின் திட்டம் “ஜப்பானிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து தொலைவில் இருக்கக் கூடாது” என்றார். அவர் கூறியது: “அரசாங்கம் ‘வலது’ என்னும்போது நாம் ‘இடது’ எனக் கூறக்கூடாது. சர்வதேச ஒலிபரப்பு அத்தகைய பிரச்சார நுட்பத்தையும் கொண்டுள்ளது.” ஜனவரி 25 அன்று, ஏகாதிபத்திய இராணுவம் 1930 களில் 1940களில் முறையாக நூறாயிரக்கணக்கான, கிழக்கு தென்கிழக்கு ஆசிய மகளிரை பாலியல் அடிமைகள் போல் தவறாக நடத்தியதை நியாயப்படுத்திய மோமியின் கருத்துக்கள் பெரும் பரபரப்பை தூண்டிவிட்டன. இத்தகைய இராணுவ விபச்சாரக்கூடங்களை “போர்க்காலத்தில் எந்தநாட்டிலும் சாதாரணம்தான்” என்று உதறித்தள்ளிய அவர், “ஜேர்மனியிலோ, பிரான்சிலோ அத்தகையவை இல்லை என்று நாம் கூறமுடியுமா? ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும் அவை இருந்தன.... தற்போதைய தார்மீக சூழலில் ஆறுதலுக்காக மகளிரை பயன்படுத்துவது தவறு. ஆனால் அது அக்காலங்களில் உண்மை என இருந்தது.” இக்கருத்துக்கள் சீனா மற்றும் தென் கொரியாவில் விமர்சனங்களை தூண்டியது மட்டும் இன்றி, அமெரிக்காவிலும் தூண்டியுள்ளது. பாராளுமன்றக் குழு முன் கூப்பிடப்பட்ட மோமி தவறு என அவர் அழைத்தது குறித்து மன்னிப்புக் கோரி, “என் விருப்பம் சுதந்திரப் பேச்சுரிமை நடுநிலையில் இருக்க வேண்டும், அது காப்பாற்றப்பட வேண்டும் என்பதாகும்” என்றார். ஆனால் அவர் “ஆறுதலுக்கான மகளிர்” என்னும் தன் கருத்துக்களை பின்வாங்கவில்லை. அவர் “தனிப்பட்ட கருத்துக்களை” NHK தலைவர் என்னும் முறையில் பேசியதற்குத்தான் வருந்தினார். “நான் முதல் தடவையாக அவ்வாறு பேசினேன்; அத்தகைய நிகழ்வில், எனக்கு விதிகள் பற்றித் தெரியாது” என்றார் அவர். மோமி இன் கருத்துக்கள் விதிவிலக்கு அல்ல, மாறாக, ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சி மற்றும் ஜப்பானிய அரசியல் நடைமுறையின் பரந்த பகுதிகள் முழுவதன் நோக்கமாகும். இக்கருத்துக்கள் ஆளும் வட்டங்களில் ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் அதன் தோல்வியைத் தொடர்ந்து, விமர்சனங்களுக்கு நியாயமற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது என்னும் ஆளும் வட்டங்களின் பரந்த உணர்வுகளைத்தான் பிரதிபலிக்கின்றன. அபே பலமுறை “ஆறுதலுக்கான மகளிர்” பிரச்சினையை பற்றி அதிகம் பேசவில்லை (அவ்வாறு அவர்கள் இடக்கரடக்கலாகக் குறிப்பிடப்படுகின்றனர்), துணைப் பிரதம மந்திரி டாரோ அசோவும் அப்படித்தான். அபேயின் NHK குழுவிற்கு மற்றொரு நியமனம் பெற்ற நாவோகி ஹ்யாடுகா, பகிரங்கமாக முன்னாள் விமானப் படைத் தலைவர் டோஷியோ டமோகமிக்கு, டோக்கியோ கவர்னர் பதவிக்கு பிரச்சாரம் செய்கிறார். அவர் தீவிர வலதுசாரி ஜப்பானிய மறுசீரமைப்பு கட்சியின் ஆதரவைக் கொண்டுள்ளார். டமோகமி 2008ம் ஆண்டு ஜப்பானிய இராணுவ வாதத்தை பாதுகாத்து ஒரு கட்டுரையை எழுதியதற்காக பதவியில் இருந்து அகற்றப்பட்டார். ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் ஆக்கிரமிப்பு நாடு அல்ல என்றும், போரில் சீனாவால் இழுக்கப்பட்டது என்றும் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட ஆசிய நாடுகளுக்கு செழிப்பைக் கொண்டுவந்தது என்றும் தெரிவித்திருந்தார். திங்களன்று டமோகமிக்கு பிரச்சாரம் செய்த ஹ்யடுகா நான்கிங், படுகொலை, அதன் சொந்த போர்க்குற்றங்களை நியாயப்படுத்த அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது என்று அறிவித்தார். அமெரிக்கா டோக்கியோவை குண்டுத்தாக்குதலுக்கு உட்படுத்தியது மற்றும் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணு குண்டுகளைப்போட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதம் வலதுசாரி, ஜப்பான் இராணுவ வட்டங்களில் சாதாரணமதான்—அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களைப் பயன்படுத்தி ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை நியாயப்படுத்துவது. ஜப்பானிய இராணுவம் நான்கிங்கில் 1937ல் நுழைந்தபின் அது 300,000 சீனக் குடிமக்களையும் வீரர்களையும் கொன்று, கற்பழிப்பு, அழித்தல் வெறியாட்ட வேலைகளில் பலவாரங்கள் ஈடுபட்டது. ஹ்யடுகா, டமோகமிக்கு பிரச்சாரம் செய்யும் தன் முடிவைக் காக்கும் வகையில், NHK ஆளுனர்கள் ஒலிபரப்பில் “முற்றிலும் நடுநிலையில்” இருக்க வேண்டும் என்றாலும், ஒலிபரப்புச் சட்டம் அவருடைய “தனியார் நடவடிக்கைகளை” தடை செய்யவில்லை என்றார். ஆனால் டமோகமிக்கு அவர் கொடுக்கும் ஆதரவு, எப்படி ஹ்யடுகா NHK ஒலிபரப்பை மறுநோக்குநிலை கொள்ள முயல்வார் என்பதற்கு தெளிவான நிரூபணம் ஆகும். அரசாங்கத்தின் NHK நியமனதாதரர்களின் கருத்துக்கள், கடந்த வாரம் அது இளநிலை, மூத்த நிலை உயர்நிலைப்பள்ளிகளில் திருத்தப்பட்டு கற்பிக்கப்படும் வழிகாட்டு நெறிகள்பற்றிய அறிவிப்புடன் சமாந்திரமாக உள்ளன; அவை பாடப் புத்தகங்களும் ஆசிரியர்களும், பிராந்தியத்தில் இருக்கும் பூசலுக்கு உட்பட்ட தீவுகள் குறித்த அரசாங்கத்தின் கூற்றுக்களை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் என்கிகிறது. புதிய வழிகாட்டி, மூன்று வகை தீவுக்கூட்டங்களை —சீனா, தென் கொரியா, ரஷ்யாவுடன் சர்ச்சையில் உள்ளவை— "ஜப்பானின் எல்லைக்குள் ஒருங்கிணைந்த பகுதிகளாக" விவரிக்க வெளியீட்டாளர்கள் தேவை எனக் கோரியுள்ளது. இவற்றில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் தென் குரைல்ஸ், வடக்குப்பகுதிகள் என ஜப்பானில் அறியப்படுவது, தென் கொரியாவால் நிர்வகிக்கப்படும் டேகேஷிமாத் தீவு, டோக்டோ என அழைக்கப்படுவது ஆகியவை அடங்கும். புதிய விதிகள் இப்பகுதிகள் “சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிடப்பட வேண்டும் என்கின்றன. முதல் தடவையாக வழிகாட்டி, கிழக்கு சீனக் கடலில் இருக்கும் சென்காகு தீவுக்கூட்டங்கள் குறித்தும் குறிப்பிடுகின்றன; இவை சீனாவில் டயாவோயு என்ற பெயரில் உரிமைக்கோரப்படுகிறது. வாஷிங்டனின் ஆதரவு மற்றும் ஊக்கத்தைக் கொண்டு அபே நிர்வாகம் இராணுவச் செலவை அதிகரிக்கவும், போருக்கான அமைப்பு ரீதியான சட்டபூர்வ தயாரிப்புக்களை செய்யவும், சென்காகுஸை அமெரிக்காவின் “ஆசியாவில் முன்னிலை” என்பதற்கு பின் நிறுத்தியுள்ளது. கல்வி மந்திரி ஹகுபென் ஷிமோமுரா வலியுறுத்தினார்: “எமது வருங்காலத்தை தாங்கிக் கொள்ளும் சிறுவர்கள், எமது பகுதி பற்றி முறையாக அறிந்துகொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.” புதிய பாடப்புத்தகங்கள்—2016-2017ல் வரலாறு, புவியியல், மற்றும் குடிமை பாடத்திட்டங்களில்—அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்குமாறு ஊக்கம் கொடுக்கப்படுகின்றன, அதையொட்டி தீவுகள் குறித்து பூசல்கள் இராது. புதிய கையேடுகளில் சுயப்பாதுகாப்புப் படைகள் —ஜப்பானிய ஆயுதப் படைகள்— “மக்களின் உயிர்களையும் பாதுகாப்பையும் பாதுகாக்க உழைப்பவை” என சாதகமாக காட்டப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஜப்பானிய செய்தி ஊடகம், கற்பிக்கும் வழிகாட்டிகள் கட்டாயமாக இல்லை என்று வலியுறுத்தினாலும், அபே இன் அரசாங்கம் தன் ஆணையை சிறப்பான முறையில் செயல்படுத்த கருவிகளைத் தேர்ந்தெடுக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் கல்வி மந்திரி, Taketomi பள்ளிக் குழுவிற்கு –ஒரு சிறிய நகரம், தைவான், சென்காகு தீவுக்கூட்டங்களுக்கு நடுவே உள்ளது— அது நிராகரித்த ஒரு வலதுசாரி வரலாற்று பாடப் புத்தகத்தை பயன்படுத்த ஆணையிட்டது. நவம்பர் மாதம் அரசாங்கம் நியமித்த குழு, உள்ளூர்ப் பள்ளித் தொகுதிகளுக்குப் பொறுப்பாக மேயர்கள் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளது – இந்நடவடிக்கை உள்ளூர் பள்ளிப் பிரச்சினைகள் பாடப் புத்தக தேர்வு போன்றவற்றில் அரசியல் கட்டுப்பாட்டை வலுப்படுத்த நடவடிக்கைகளை கொண்டுவரும். அவரது முதலாவது பதவி காலத்தில், 2006 கடைசியில் அபே கல்வியின் அடிப்படை சட்டத்தை மாற்றினார். இத்திருத்தம், தேசப்பற்றை வலியுறுத்தியது, நாடு, மரபுகளை வலியுறுத்தியது, இச்சட்டம், 1947ல் அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இது அபேயின், வெளிநாடுகள் சுமத்திய அரசியலமைப்பு சட்டம் உட்பட திருத்தப்பட்ட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும் என்ற போருக்கு பிந்தைய சட்டங்களின் நிராகரிப்பின் ஒரு பாகமாக உள்ளது. மாற்றப்பட்ட கல்விச் சட்டத்திற்கு வலுவான பொது எதிர்ப்பு என்பது, அபே இன் ஆதரவை குறைத்த காரணிகளில் ஒன்றாகி ஓராண்டு பதவியில் இருந்தபின் 2007ல் அவரை இராஜிநாமா செய்ய வகை செய்தது. பள்ளி பாடத்திட்டம் மற்றும் NHK இன் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த அபே அரசாங்கத்தின் செயற்பாடு, ஜப்பானிய தேசியம், இராணுவ வாதம் இவற்றைத் தூண்டும் பிரச்சாரத்தின் ஒரு பாகமாகும். ஜப்பானிய தொழிலாளர்கள், இளைஞர்களின் ஆழ்ந்த எதிர்ப்பிற்கு இடையே, ஜப்பானிய இராணுவத்தின் கடந்தகால போர்க்குற்றங்களை மூடிமறைத்து வெள்ளைப்பூச்சு அடிக்கும் முயற்சி என்பது, அரசாங்கம் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்னெடுக்க புதிய ஆக்கிரமிப்பு போர்களுக்கான தயாரிப்புக்களின் ஒருங்கிணைந்த பாகமாகும். |
|