சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

US threatens international probe into Sri Lankan war crimes

அமெரிக்கா இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை கோருவதாக அச்சுறுத்துகின்றது

By Deepal Jayasekera
20 January 2014

Use this version to printSend feedback

இலங்கைக்கு இந்த மாதம் ஐந்து நாள் பயணம் ஒன்றை மேற்கொண்ட, போர்க் குற்ற விவகாரங்கள் தொடர்பான பிரதான அமெரிக்கத் தூதர் ஸ்டீபன் ரப், 2009ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் இறுதி கட்டங்களில், ஆயுதப் படைகளால் இழைக்கப்பட்ட போர் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஆதரவு கொடுக்க வாஷிங்டனின் தயார் நிலையை சமிக்ஞை செய்தார்.

ஜனவரி 7 அன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.. சுமந்திரனை சந்தித்த ரப், அமெரிக்கா ஜெனீவாவில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள .நா. மனித உரிமைகள் பேரவை (UNHRC) கூட்டத்தில் ஒரு பலமான தீர்மானத்தைக் கொண்டுவரும் என்று குறிப்பிட்டார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி, இலங்கை அரசாங்கம் யுத்த குற்றங்கள் பற்றி எதையும் செய்யவில்லை என்றும், "எனவே, அமெரிக்க அடுத்த கட்டமாக சர்வதேச விசாரணை நடத்த கோரவுள்ளது" என்றும் ரப் தன்னிடம் கூறியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தகைய ஒரு நடவடிக்கை, இதுவரை இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூடி மறைப்புக்களுடன் இணைந்து செல்லும் அமெரிக்காவின் நகர்வுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது.  ஒரு சர்வதேச விசாரணை, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் பிற சிரேஷ்ட அரசாங்க மற்றும் இராணுவ தலைவர்களின் பொறுப்பில் உள்ள இலங்கை ஆயுத படைகள் நடத்திய அட்டூழியங்களின் அளவை அம்பலப்படுத்த அச்சுறுத்தும்.

முந்தைய ஆண்டுகளில் யுஎன்எச்ஆர்சி கூட்டத்தொடரில் இலங்கை மீது இரண்டு தீர்மானங்களை கொண்டுவர அனுசரணையளித்த அமெரிக்கா, போர் குற்றங்கள் பிரச்சினையை சுரண்டிக்கொண்டு கொழும்பு மீது அழுத்தத்தைத் திணிக்கின்றது. கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க ஆதரவிலான தீர்மானம், இராஜபக்ஷ அரசாங்கத்தின் சொந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளை அமல்படுத்துமாறு அதற்கு அழைப்பு விடுத்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவானது அமெரிக்க உட்பட, விமர்சனங்களை திசை திருப்பும் முயற்சியாக 2010ல் இராஜபக்ஷவால் நிறுவப்பட்ட ஒரு அரச திரைமறைப்பாகும். அது துணை இராணுவக் குழுக்களை நிராயுதபாணிகளாக்கவும் காணாமல் போனவர்கள் மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் பற்றி விசாரிக்கவும் மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுடன் ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ளவும் வரையறுக்கப்பட்ட பரிந்துரைகளை செய்தது. ஆயினும், இராஜபக்ஷ அரசாங்கம் அந்த திட்டங்களை கூட கிடப்பில் போட்டுவிட்டது.

போரின் இறுதி மாதங்களில் இலங்கை இராணுவத்தால் குறைந்தபட்சம் 40,000 மக்கள் கொல்லப்பட்டதாக .நா. மதிப்பிட்டுள்ளது. எந்தவொரு யுத்தக் குற்றமும் நடக்கவில்லை என முற்றாக மறுத்த இராஜபக்ஷ, துருப்புக்கள்பயங்கரவாதிகளிடம்இருந்து மக்களை பாதுகாக்க "மனிதாபிமான நடவடிக்கைகளில்" ஈடுபட்டிருந்ததாக வஞ்சத்தனமாக கூறிக்கொள்கின்றார்.

வாஷிங்டன் தமிழர்களுக்கு எதிரான இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தத்தை முழுமையாக ஆதரித்தது. எனினும், 2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சீனாவில் இருந்து ஒதுங்கி அமெரிக்கவுடன் நெருக்கமாய் அணிசேர கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒபாமா நிர்வாகம் சிடுமூஞ்சித்தனமாக யுத்தக் குற்றங்கள் பிரச்சினையை பயன்படுத்தி வருகிறது.

ரப்பின் பயணத்தை பற்றிய அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கை, ஒரு சர்வதேச விசாரணை பற்றி குறிப்பிடாவிட்டாலும், "யுத்தத்தின் முடிவின் போது நடந்தவை உட்பட, கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்ட மீறல்கள் பற்றிய நேரடி சாட்சிகளுக்கு செவிமடுத்தார்," என அது குறிப்பிட்டிருந்தது. "அந்த பின்னணியில் அமெரிக்க அரசாங்கம் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் மூலம் உண்மையை கண்டறியவும் மற்றும் பொறுப்பாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை நெருக்குகின்றது," என அது மேலும் தெரிவித்தது.

தூதரகமானது "ஷெல் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்டன" என்ற பட விளக்கத்துடன், வட இலங்கையில் புதுமாத்தளன் அருகில் புனித அந்தோனியார் மைதானத்தில், ரப் மற்றும் அமெரிக்க தூதர் மைக்கேல் சிசென்னும் நிற்கும் ஒரு புகைப்படத்தை அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இலங்கை இராணுவம் அதன் இறுதி தாக்குதலை நடத்திய இடமே புதுமாத்தளன் ஆகும். கொழும்பு எதிர்ப்பு காட்டிய போதிலும், அமெரிக்க தூதரகம் புகைப்படத்தை நீக்க மறுத்ததுடன், அந்த ட்வீட் செய்திக்கு தூதரகத்தின் உத்தியோகபூர்வ ஒப்புதல் உள்ளது என்றும் வலியுறுத்தியது.

ரப் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்துக்கு சென்று, அங்கு ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.. சந்திரசிறி, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் மற்றும் இரண்டு ரோமன் கத்தோலிக்க ஆயர்களையும் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில், குறிப்பாக அவர், இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படும் அரசாங்க சார்பு குண்டர்களின் அடுத்தடுத்த வன்முறைத் தாக்குதல்களை எதிர்கொண்ட, கூட்டமைப்புக்குச் சார்பான உதயன் நாளிதழின் அலுவலகத்துக்குச் சென்றார்.

ஆயர் இராயப்பு ஜோசப், இராணுவம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் கொத்து குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை உட்பட யுத்த குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க இராஜதந்திரிகளிடம் கேட்டுக்கொண்டதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

கூட்டமைப்பு, ஆயர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் மிச்சங்கள் உட்பட தமிழ் உயர்தட்டினரை பிரதிநிதித்துவம் செய்பவர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மேலும் நிர்வாக செயல்பாடுகளை பரிமாறும் ஒரு அதிகார பகிர்வு உடன்பாட்டுக்காக, இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் பேரில், பெரும் வல்லரசுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வெளிவிவகார உதவிச் செயலர் நிஸா தேசாய் பிஸ்வால், இந்த வாரம் புது தில்லி சென்று பின்னர் இலங்கைக்கு வர இருந்தாலும், அவரது பயணம் தாமதமானது. யூஎன்எச்ஆர்சி மாநாட்டில் அமெரிக்க தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவை பெற முயற்சிப்பது, புது டில்லிக்கான அவரது விஜயத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

அமெரிக்கா போலவே, இந்திய ஆளும் வர்க்கமும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைவது பற்றி கவலை கொண்டுள்ளது. சீனா இலங்கைக்கு அதிக கடன் மற்றும் உதவி வழங்குநராக ஆகியிருப்பதோடு நாட்டுக்கு ஆயுதங்களை வழங்குபவர்கள் மத்தியில் உச்சியில் உள்ளது. இராஜபக்ஷ கடந்த ஜூன் மாதம் சீனாவுடன் ஒரு மூலோபாய கூட்டு ஒப்பந்தந்தில் கையொப்பமிட்டதோடு ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஸ்தாபிப்பதற்கான கலந்துரையாடலும் இடம்பெற்று வருகின்றது.

இராஜபக்ஷ அரசாங்கம் ரப்பின் வருகைக்கு எச்சரிக்கையுடன் பிரதிபலித்தது. யுத்த குற்றங்கள் சம்பந்தமான எந்தவொரு விசாரணையையும் பற்றி அச்சம் கொண்டுள்ள அது, பெய்ஜிங்குடனான அதன் நிதிரீதியில் நன்மை பயக்கும் உறவைப் பேணுகின்ற அதே வேளை, அமெரிக்க மற்றும் ஏனைய மேற்கத்தைய சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதில் ஆர்வமாக உள்ளது.

நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம், "இலங்கை மீதான தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யமாறும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கிய முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறும்வாஷிங்டனை கேட்டுக்கொண்டார். சீனாவின் தினசரி சின்குவா பத்திரிகை, “இலங்கையில் அடையப்பட்டு வரும் நல்லிணக்கத்தை காண்பதன் பேரில், ஒரு உண்மை அறியும் ஆணைக்குழுவுக்கு ஊக்கமளிப்பது போன்ற மாற்று பொறிமுறை பற்றி நோக்குமாறுஹக்கீம் அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை, அரசாங்க ஆதரவாளர்கள் குழுவொன்று ரப்பின் விஜயத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தது. தனது சொந்த மனித உரிமை மீறல்களை அலட்சியம் செய்து, "பயங்கரவாதபுலிகளை தோற்கடித்த இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதன் மூலம் " இரட்டை நிலைப்பாடுஎடுத்துள்ளதாக அமெரிக்காவை அந்தக் குழு குற்றம் சாட்டியது. இந்த பேரினவாத சக்திகள், அமெரிக்கா செய்த போர் குற்றங்களை சுட்டிக் காட்டுவது, இராஜபக்ஷ அரசாங்கத்தின் இதே போன்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு மட்டுமே.