World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Ukraine and the pro-imperialist intellectuals

உக்ரேனும், ஏகாதிபத்திய-சார்பு புத்திஜீவிகளும்

Alex Lantier
5 February 2014

Back to screen version

மேற்கத்திய கல்வியாளர்கள் மற்றும் வெளியுறவு கொள்கை நடைமுறைப்படுத்துபவர்களின் ஒரு குழுவால் வெளியிடப்பட்ட "உக்ரேனின் எதிர்காலம் குறித்த பகிரங்க கடிதம்", உக்ரேனில் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) ஆதரிக்கப்பட்டு நடந்துவரும் தீவிர-வலதுசாரி போராட்டங்களுக்கான ஓர் இழிந்த பாதுகாப்பாகும். அது 1991இல் சோவியத் ஒன்றிய சிதைவிற்கு பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் தலையீடு செய்வதற்கும் மற்றும் ஒரு கால்-நூற்றாண்டு நெருக்கமாக நடத்தபட்ட ஏகாதிபத்திய யுத்தங்கள் மீதும் மீண்டும் மீண்டும் கூறப்பட்ட, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மீதான பாரபட்சமற்ற அன்பால் மட்டுமே உந்தப்பட்டுள்ளது என்ற ஒரு பழைய பொய்யை பரப்புகிறது.

அது குறிப்பிடுகிறது, “உக்ரேனியர்களின் எதிர்காலம், அனைத்திற்கும் மேலாக உக்ரேனியர்களையே சார்ந்துள்ளது. அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னர், ஆரெஞ்ச் புரட்சியின் போது, ஜனநாயகம் மற்றும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்தார்கள். அவர்கள் அதே போன்ற மதிப்புகளுக்காக இன்றும் நிமிர்ந்து நிற்கிறார்கள். ஒரு பொதுவான ஐரோப்பா என்ற யோசனையின் மீது ஐரோப்பியர்களின் விரக்தி அதிகரித்திருந்த நிலையில், உக்ரேனில் மக்கள் அந்த யோசனைக்காக மற்றும் ஐரோப்பாவில் அவர்கள் நாடு இடம்பெறுவதற்காக போராடி வந்தார்கள். ஊழல்மிகுந்த உக்ரேனிய தலைவர்களின் சர்வாதிபத்திய சபலங்களிலிருந்து உக்ரேனை பாதுகாப்பதென்பது ஜனநாயக உலகின் நலன்களாக உள்ளது."

ஏகாதிபத்திய சக்திகளின் உள்நாட்டு பினாமிகளின் அடையாளங்கள், ஏகாதிபத்திய சக்திகள் ஜனநாயகத்திற்காக போராடி வருகின்றன என்ற பகிரங்க கடிதத்தின் பாசாங்குத்தனத்தை தகர்க்கிறது. பல தொடர்ச்சியான வீதி போராட்டங்களில் உக்ரேனிய ஆட்சியைக் கவிழ்த்து, அதை மாஸ்கோவிற்கு விரோதமான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவிலான அரசைக் கொண்டு மாற்றீடு செய்ய மற்றும் கொடுமையான சிக்கன முறைமைகளை திணிக்க, வலது பிரிவு அமைப்பு மற்றும் ஸ்வோபோடா கட்சியின் ஒருசில ஆயிர பாசிச குண்டர்களின் ஒரு கூட்டத்தை அவை சார்ந்துள்ளன. வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஜனநாயகத்திற்காக போராடவில்லை, மாறாக அவை ஒரு சமூக எதிர்புரட்சியை ஏற்பாடு செய்து வருகின்றன.

நவம்பரில், உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகொவிச் உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒருங்கிணைக்கும் திட்டங்களில் இருந்து பின்வாங்கியதோடு, பிரதான வங்கிகளுக்கான உக்ரேனின் கடன்களைத் திருப்பி செலுத்த தொழிலாளர்களுக்கு எதிராக பில்லியன் கணக்கான டாலர் சமூக வெட்டுக்களைத் திணித்தார். பாரிய போராட்டங்கள் வெடிக்குமென்ற அச்சத்தில், அதற்கு பதிலாக ரஷ்யாவிடமிருந்து ஒரு பிணையெடுப்பிற்கு ஒப்புக் கொண்டார். அந்நாட்டின் உக்ரேன் பேசும் பகுதியில் மற்றும் ரஷ்யன் பேசும் பகுதியில் முறையே அரசு-எதிர்ப்பு போராட்டங்களும், எதிர்ப்பு-விரோத போராட்டங்களும் என இரண்டு விதமான போராட்டங்கள் பரவியதும், தீவிர-வலது எதிர்ப்பு அவற்றின் முயற்சிகளை இரட்டிப்பாக்கின.

ஐரோப்பிய ஒன்றிய தலையீடு, சமூக பொறிவு மற்றும் உள்நாட்டு யுத்தத்தோடு உக்ரேனை அச்சுறுத்துகின்ற நிலையில், அந்த பகிரங்க கடிதம் உக்ரேனில் ஏற்பட்டுவரும் அபிவிருத்திகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக காட்டி, எதார்த்தத்தை தலைகீழாக நிறுத்துகிறது: “விடயங்களை சிறப்பாக மாற்றுவதற்கும் மற்றும் உக்ரேன் ஒரு சர்வாதிகாரமாக மாறுவதில் இருந்து தடுப்பதற்கும் நமக்கு இன்னும் காலங்கடந்து விடவில்லை. உக்ரேனில் ஏதேச்சதிகார திருப்பத்தை முகங்கொடுத்திருக்கையில் முடங்கி இருப்பதும், புதிதாக விரிவடைந்துவரும் ரஷ்ய ஏகாதிபத்திய நலன்களின் எல்லைக்குள் அந்நாட்டை மறுஒருங்கிணைப்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது."

உண்மையில், உக்ரேனோ அல்லது ரஷ்யாவோ ஐரோப்பிய ஒன்றியத்தை தாக்க அச்சுறுத்தல் விடுக்கவில்லை. அப்பிராந்தியத்தை சூறையாட மற்றும் ரஷ்யாவை இலக்கில் வைக்க, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் வலிந்துதாக்கும் தாகத்திற்கு ஒரு முக்கிய பரிசு என்றரீதியில் உக்ரேன்—அதன் எரிசக்தி குழாய் அமைப்பு, மூலோபாய இராணுவ தளங்கள் மற்றும் கனரக தொழில்துறை ஆகியவற்றோடுஎழுச்சி அடைந்து வருகிறது. மாஸ்கோவின் முக்கிய மத்திய கிழக்கு கூட்டாளிகளான சிரியா மற்றும் ஈரானைத் தாக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அச்சுறுத்துகின்ற அதேவேளையில், அவை ரஷ்யாவின் முக்கிய கிழக்கு ஐரோப்பிய கூட்டாளியான உக்ரேனில் ஆட்சி மாற்றம் அல்லது பிரிவினை என்பதோடு அச்சுறுத்தி வருகின்றன.

1990'களில் யூகோஸ்லாவிய யுத்தங்கள் மற்றும் நேட்டோ தலையீடுகளைத் தீவிரப்படுத்தியதோடு ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சிக்குப் பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் தடையற்ற ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு தொடங்கிய உந்துதல், மிக வளர்ந்த நிலைக்கு வந்துள்ளது. அது ஆட்சி மாற்றம் மற்றும் ரஷ்யாவில் இனவாத பிரிவினைக்கான அடுத்தகட்ட பிரச்சார இயக்கத்திற்குள் இறங்கி வருகிறது, அங்கே செச்சினியர்களில் இருந்து தடார்கள் அல்லது சிர்காஸ்சியன்கள் வரையில் பல்வேறு இன குழுக்களின் குறைகளை மாஸ்கோவிற்கு எதிராக ஒன்றுதிரட்ட முடியும் என்பதால் அவற்றை வாஷிங்டன் ஆய்வு செய்து வருகிறது.

இது வெளிப்படையாகவே மேற்கத்திய பத்திரிகைகளின் முன்னனி பிரிவுகளில் எழுப்பப்பட்டுள்ளது. இலண்டனின் பைனான்சியல் டைம்ஸ் ஞாயிறன்று எழுதியது, “திரு. யானுகோவிச் மற்றும் திரு. புட்டின் இருவரும் ஒத்த ஆளும் மாதிரியோடு, ஒரேவிதமான தலைவர்களாக உள்ளனர். உக்ரேனியர்கள் அந்த மனிதரை கீவ்வின் அதிகாரத்திலிருந்து கீழே இறக்கினால், கிரெம்ளினில் அந்த மனிதரை அவ்வாறே ஏன் செய்யக்கூடாதென ரஷ்யர்கள் யோசிக்கக்கூடும்."

கிழக்கு ஐரோப்பாவில் மேலாதிக்கம் செய்ய US-EU உந்துதலோடு தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம், பகிரங்க கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளவர்கள் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் வரலாற்றுரீதியில் என்னவாக இருந்துள்ளதோ அவற்றை தழுவிக்கொண்டுள்ளனனர். பேர்லின் இரண்டு முறை இருபதாம் நூற்றாண்டில், 1918இல் மற்றும் 1941இல், உக்ரேனை ஆக்கிரமித்திருந்தது. குறிப்பிடத்தக்க விதத்தில், உக்ரேனில் உள்ள ஏகாதிபத்திய பினாமிகள் இன்று, உக்ரேனிய இனப்படுகொலைகளை நடத்த உதவிய நாஜிக்களின் கூட்டாளிகளான உக்ரேனிய பாசிசவாதிகளின் அரசியல் வழிதோன்றல்களாக உள்ளனர்பரந்த அழிப்பு மூலமாக உக்ரேன் மக்கள்தொகையைக் குறைத்து, ஜேர்மனில் இருந்து வந்து குடியேறுபவர்களால் அதை காலனிமயமாக்குவது அதன் கொள்கையாக இருந்தது.

இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததில் இருந்து ஜேர்மன் கடைபிடித்து வந்த இராணுவ படை பயன்பாட்டின் மீதான தடைகளை நீக்கும் ஜேர்மனின் திட்டங்களை, தற்போது, இந்த ஆண்டின் முனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்தனர்.

ஏகாதிபத்திய கருத்துரு மார்க்சிசத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வினோதம் என்று நம்பி, சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்கு நகர்ந்திருந்த மிக்கையில் கோர்பச்சேவின் மேலோட்டமான அணுகுமுறை மற்றும் சோவியத் அதிகாரத்துவத்தின் சுய-அழிப்பு கொள்கைகளின் நாசகரமான விளைவுகள், கண்ணுக்கு முன்னால் முழுவதுமாக விரிந்து வருகின்றன.

சோவியத் ஒன்றியத்தின் சிதைவு முதலாளித்துவத்தை மட்டும் மீட்சிக்கு கொண்டு வராது, மாறாக அது ரஷ்யாவை ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு அரை-காலனித்துவ ஜமீன்தாரியத்திற்குள்ளும் (fiefdom) மாற்றும் என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்: "உலக யுத்த போக்கால் முன்னறுதி செய்யப்பட்டிருந்த ஜாரிச ரஷ்யாவின் மூன்றாம்-தர நிலைமைக்கு கூட ஒரு முதலாளித்துவ ரஷ்யா தற்போது செல்ல முடியாது. ரஷ்ய முதலாளித்துவம் தற்போது எவ்வித சாத்தியக்கூறும் இல்லாமல் சார்ந்திருக்கும், அரை-காலனித்துவ முதலாளித்துவமாக வேண்டுமானால் இருக்கலாம். இரண்டாம் இட ரஷ்யா முதலாம் இட ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏதோவொரு இடத்தில் வேண்டுமானால் இருக்கலாம். சோவியத் அமைப்புமுறை அதன் தேசியமயமாக்கப்பட்ட தொழில்துறை மற்றும் வெளியுறவு வர்த்தக ஏகபோகம் ஆகியவற்றோடு, அதன் அனைத்து முரண்பாடுகள் மற்றும் சிரமங்களுக்கு இடையிலும், நாட்டின் பொருளாதார மற்றும் கலாச்சார சுயாதீனத்திற்கேற்ற ஒரு பாதுகாப்பான அமைப்புமுறையாக உள்ளது."

உள்-தோல்வி, உள்நாட்டு யுத்தம், அல்லது வெளியிலிருந்து இராணுவ தலையீடு ஆகியவற்றின் மூலமாக ரஷ்யாவை மற்றும் உக்ரேனை அரை-காலனித்துவ அஸ்தஸ்திற்கு திருப்புவதே ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பாசிச பினாமிகளால் அமைக்கப்பட்டு வரும் நிகழ்ச்சிநிரலாக உள்ளது. மில்லியன் கணக்கானவர்களின் மரணத்தை அச்சுறுத்தும் நிகழ்ச்சிப்போக்குகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.

ஏகாதிபத்திய யுத்தம் மற்றும் நவகாலனித்துவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதே கிழக்கு ஐரோப்பாவில் செய்ய வேண்டிய மையப் பணியாக உள்ளது. முன்கூட்டிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டும். அதுபோன்றவொரு போராட்டம் இல்லாமல், அப்பிராந்தியத்தின் செல்வந்த மேற்தட்டுகளின் ஆட்சிகளின் மீதிருக்கும் அதிருப்தி மற்றும் திவால்நிலைமைகளின் கீழ், தீர்க்கமான பாசிச கும்பல்கள் ஏகாதிபத்திய அரசாங்கங்களின் ஆதரவோடு மற்றும் ஏகாதிபத்திய சார்பு கல்வியாளர்கள் மற்றும் இராஜாங்க செயல்பாட்டாளர்களால் வழங்கப்படும் அரசியல் போர்வையில், தற்போதிருக்கும் ஆட்சிகளைக் கவிழ்ப்பதில் வெற்றி அடையக்கூடும் என்று சிந்திப்பதற்கு அங்கே நிறைய காரணங்கள் உள்ளன.

இதுதான் பகிரங்க கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை அடிக்கோடிடுகிறது. ஸ்பெயினின் முன்னாள் வெளியுறவு மந்திரி அனா பலாசியோ மற்றும் பிரான்சின் பேர்னார்ட் குஷ்னர், அமெரிக்க அரசுத்துறையோடு இணைந்த பில்லியனர் ஜோர்ஜ் சோரோஸின் Open Society Institute'இன் அர்யெஹ் நெய்ர் போன்றவர்கள் அதில் கையொப்பமிட்டுள்ள சில மூத்த இராஜாங்க அதிகாரிகள் அல்லது "அரசு சாரா" ஏகாதிபத்திய செயல்பாட்டாளர்கள் ஆவர். எவ்வாறிருந்த போதினும், பெரும்பாலானவர்கள் கல்வியாளர்களும், புத்திஜீவிகளும் ஆவர். அவர்கள், படித்த மடமை மற்றும் வரலாற்று குருட்டுத்தனத்தின் ஒரு வெட்ககேடான கலவை மூலமாக, உக்ரேனில் தீவிர-வலது பிற்போக்குக்கு நம்பகத்தன்மையை வழங்க அவர்களின் பெயர்களை வழங்கி உள்ளனர்.

ஒருசமயத்தில் வரலாற்று பிரச்சினைகள் மீது ஆழமாக எழுதக்கூடியவராக இருந்த ஒரு வரலாற்றாளரான பிரிட்ஜ் ஸ்டெர்ன் போன்ற, கையெழுத்திட்டவர்களின் பட்டியலில் இருக்கும் சில பெயர்கள் வருத்தத்தை தூண்டுகிறது.

ஏனையவர்களில், பின்நவீனத்துவ அதிகப்பிரசங்கி ஸ்லாவொஜ் ஜிஜெக் போன்றவர்கள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. செல்வாக்குபெற்ற மத்தியதட்டு வர்க்க பிரிவுகளை ஏகாதிபத்திய கொள்ளைக்கூட்டத்தின் வரிசையில் கொண்டு வந்து நிறுத்துவதை மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஊதுகுழல்களாக பயிற்றுவிப்பதில் போலி-இடது சிந்தனையின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை மட்டுமே அவர்கள் உறுதிபடுத்துகின்றனர்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் ஊடகங்களில் மார்க்சிசம் மீது பல தசாப்த காலம் புத்திஜீவித யுத்தம் நடத்திய பின்னர், கலாச்சார வாழ்க்கை ஒரு பேரழிவுகரமான நிலையில் உள்ளது. ஏகாதிபத்தியம் மற்றும் ஜடவாத நலன்களை உந்திசெல்லும் அதன் கொள்கைகள் குறித்த மார்க்சிச கருத்துருக்களுக்கு விரோதமாக, இந்த அடுக்குகள் ஏகாதிபத்திய குற்றங்களால் கூட (ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது பல்லூஜாஹ் நகரத்தை சிதைத்தது, அல்லது ஆப்கானிஸ்தானில் டிரோன் படுகொலை பிரச்சாரம்) அசைந்து கொடுக்காத நிலையில் விடப்பட்டுள்ளன. இருந்த போதினும், ஏகாதிபத்திய தலையீட்டிற்காக இலக்கில் வைக்கப்பட்ட ஆட்சிகளைக் குற்றஞ்சாட்டுவதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளின் அறஞ்சார் சுரப்பிகள் உற்சாகமடைகின்ற போது, அவர்களின் பேனாக்கள் சுழன்று செயல்படுகின்றன. மனித உரிமைகள் மீதான ஒருசில வெற்று வழிபாடுகளோடு, அவர்களால் பாசிசவாதிகளின் பின்னால் கூட, இட்டு செல்ல முடிகிறது.