World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

After failed Geneva talks, US steps up threats against Syria

ஜெனிவா பேச்சுக்கள் தோல்விக்குப்பின், சிரியாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை அமெரிக்கா அதிகப்படுத்தியுள்ளது

By Bill Van Auken 
3 February 2014

Back to screen version

கடந்த வாரம் ஜெனிவாவில் பேச்சுக்கள் தோல்வியுற்றதை அடுத்து, வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் சிரியா மீது இரசாயன ஆயுதங்கள் பற்றிய அழுத்தங்களை அதிகரித்து, “மனிதாபிமான” கவலைகளையும் கூறுகின்றன.

ஜனாதிபதி பஷர் அல்- அசாத்தின் சிரிய அரசாங்கத்திற்கு எதிராக கூடுதல் ஆக்கிரோஷ நிலைப்பாடு என்பது, .நா. மூலமோ அல்லது நேரடி இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமோ மேற்கத்திய சக்திகள் ஆட்சிமாற்ற நிகழ்ச்சி நிரலில் உறுதியாக உள்ளன என்ற உண்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

அமெரிக்காவின் சிரியாவிற்கான தூதர் லாக்டர் ப்ராஹிமி கடந்த வெள்ளியன்று இறுதிச் சுற்றுப் பேச்சுக்களுக்குப்பின் “கூறக்கூடிய அளவிற்கு முன்னேற்றத்தை நாங்கள் காணவில்லை” என்று ஒப்புக்கொள்ளும் கட்டாயத்தில் இருந்தார்.

பேச்சுவார்த்தைகளின் சரிவிற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. பேச்சுவார்த்தை ஒரு சடங்கு ரீதியான அமர்வாக அமெரிக்க வெளியுறவுச் செயலர், சிரிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஜனாதிபதி பஷர் அல்-அசாத் வெளியேற்றப்பட வேண்டும், வாஷிங்டனுடைய பொம்மை ஆட்சி பதவியில் இருத்தப்பட வேண்டும் என்று கொடுத்த இறுதி எச்சரிக்கையுடன் அமர்வு தொடங்கியது. மற்றபடி பேச்சுக்கள் முழுவதும் மேற்கத்திய ஆதரவு சிரிய தேசியக் கூட்டணி (SNC) எழுச்சியாளர்கள்” வாஷிங்டன் கருத்தை பின்பற்றி, அசாத் அகற்றப்படுவது எந்த உடன்பாட்டிற்கும் முன்னிபந்தனை என்று வலியுறுத்தினர்; சிரிய ஆட்சியின் சார்பில் பேசியவர்கள் வன்முறை, பயங்கரவாதம் இவை முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற பொது அறிக்கை தேவை என வலியுறுத்தினர்.

SNC, நாட்டைவிட்டு வெளியேறிய அரசியல்வாதிகளையும், அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பல மேற்கத்தைய உளவுத்துறை அமைப்புக்களை தவிர எவரையும் பிரதிபலிக்கவில்லை என்பதைத்தான் பேச்சுக்கள் அடிக்கோடிட்டுக் காட்டின. கைதிகள் பறிமாற்றம் பற்றிய விவாதங்களில், அது இஸ்லாமியவாத ஆதிக்கம் கொண்ட போராளிகள், பொதுமக்களை கடத்தியவர்களுக்காக பேச இயலாது என வலியுறுத்தியது; ஹோம்ஸுக்கு மனிதாபிமான உதவிப் பிரச்சினையில் அது அங்கு அரசாங்கப் படைகளுக்கு எதிராகப் போரிடும் ஆயுதப் பிரிவுகள் மீது செல்வாக்கு இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டது.

சிரியத் தளத்தில் முக்கிய "கிளர்ச்சி" சக்திகள், அல்குவேடா பிணைப்புடைய இஸ்லாமிய ஈராக்கிய நாடு, லெவன்ட் மற்றும் இஸ்லாமியவாத போராளிகளான அல்நுஸ்ரா முன்னணி, அல்குவேடாவுடன் பிணைந்துள்ளது ஆகியவற்றிடையே பிரிந்துள்ளன. இவை அனைத்தும் ஜெனிவா பேச்சுக்களை எதிர்த்து எவர் பங்கு பெற்றாலும் அவர்களுக்கு எதிராகப் பெரும் தாக்குதல் இருக்கும் என்றும் அச்சுறுத்தின.

பேச்சுக்களின் இறுதி நாட்களில், வாஷிங்டன் தான் “கிளர்ச்சியாளர்களுக்கு” மீண்டும் ஆயுதங்களைக் கொடுக்கிறது என்பதை ஒரு திட்டமிட்ட ஆத்திரமூட்டலாக வெளியிட்டது; அமெரிக்க காங்கிரஸ் சமீபத்தில் செப்டம்பர் வரை ஆட்சி எதிர்ப்பு சக்திகளுக்கு உதவி, நிதி இவற்றை அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் கூறியது இந்த உதவி, சௌதி அரேபியா, கட்டார், துருக்கி ஆகியவை CIA ஒத்துழைப்புடன் இஸ்லாமிய போராளிகளுக்கு அளித்துள்ள பில்லியன் டாலர்கள் கணக்கான மதிப்புடைய ஆயுதங்களைத் தவிர ஆகும்.

SNC மற்றும் அதன் மேற்கத்திய ஆதரவாளர்களுடைய பல சூழ்ச்சிகளும் ரஷ்யாவின் ஆதரவை “மாற்றத்திற்கு” பெறும் நோக்கம் கொண்டது; இதில் அசாத் பதவியில் இருந்து அகற்றப்படுவதும் அடங்கும். மாஸ்கோ, வாஷிங்டன் இரண்டுமே ஆட்சி மாற்றம் அடிப்படை நிறுவனங்களை பராமரிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளன – மிக முக்கியமாக பாதுகாப்புப் படைகளை. ஆனால் ரஷ்யா, அமெரிக்க ஆதரவுடைய டமாஸ்கஸ் ஆட்சி பிராந்தியம் முழுவதும் தன் மூலோபாய நலனகளை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும் என்று அஞ்சுகிறது.

ஜெனீவா பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, வாஷிங்டன் சிரியாவுடன் போருக்கு முந்தைய மிரட்டல்களைப் புதுப்பித்துள்ளது; குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் இரசாயன ஆயுதங்கள் களைதல் குறித்த உடன்பாடு பற்றி. மாஸ்கோ மூலம் வந்த இந்த உடன்பாடு, சிரியா மீது நேரடித் தாக்குதலில் இருந்து பின் வாங்க ஒபாமா நிர்வாகத்திற்கு வழிவகை செய்தது; தலையீட்டிற்கோ காங்கிரஸ் ஆதரவோ அமெரிக்காவின் நெருக்கமான நட்புநாடான பிரித்தானியாவின் ஆதரவோ இல்லை; மிகப்பெருமளவில் அமெரிக்க மக்களும் இதை எதிர்த்தனர்.

சர்வதே இரசாயன ஆயுதங்கள் உடன்பாட்டைச் செயல்படுத்தும் அமைப்பான Organization for the Prohibition of Chemical weapons, சிரியாவில் ஆயுதம் களைதலை மேற்பார்வையிடும் அமைப்பு வெள்ளியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு, சிரியாவில் இருந்து இரு தொகுப்புக்கள் பயங்கர இரசாயன ஆயுதங்கள் அகற்றப்பட்டது வழிவகையின் “தொடக்கத்தை” குறிக்கிறது என்றும், இன்னும் “விரைவாக நடக்க வேண்டும் என்பது வெளிப்படை” என்றும் கூறியது.

OPCW க்கு அமெரிக்கப் பிரதிநிதியான ரோபர்ட் மிகுலக், ஆயுதம் களையும் முயற்சி “தளர்ச்சிக்கு உட்பட்டு தேக்கம் அடைந்துள்ளது” சிரியாவின் மொத்த 530 மெட்ரிக் டன் நச்சு வாயுத் தொகுப்பில் 4%தான் வெளியேற்றப்பட்டுள்ளது என்றார்.

டமாஸ்கஸ் OPCW கால அட்டவணைப்படி தான் செயல்படுவதாகவும், மேற்கத்திய ஆதரவு இஸ்லாமியவாதிகளின் தாக்குதல் என்னும் அச்சுறுத்தலுக்கு எதிராக நச்சு வாயுவை அகற்றுவதில் சவால்களை சந்திப்பதாகவும் கூறுகிறது; இதைத்தவிர மோசமான சீதோஷ்ண நிலைமைகளும் உள்ளன. சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் அகற்றப்படுவதற்கான உடன்பாடு முன்னோடியில்லாத வகையில் குறுகிய அட்டவணை ஆகும், உள்நாட்டுப்போரில் இல்லாத நாடுகளுக்குக்கூட என்றும் அது கூறியுள்ளது.

சிரிய அரசாங்கம், அதனது ஒத்துழைப்பு குறித்து சர்வதேச அமைப்பு திருப்தி அடைந்துள்ளது என வலியுறுத்துகிறது; ஆனால் வாஷிங்டன் காரணங்களை ஆக்கிரமிப்பிற்குப் போலிக்காரணங்களாக கருத முயல்கிறது.

அசாத் ஆட்சி இப்பொழுது அது உறுதிகொடுத்தபடி இரசாயன ஆயுதங்களை அகற்றுவதில் விரைவாகச் செயல்படவில்லை என்பதை நாங்கள் அறிவோம்” என்று வெள்ளியன்று கெர்ரி கூறினார்.

பாதுகாப்பு குழுத் தீர்மானம் 2118, இரசாயன ஆயுதக் களைதல் வழிவகையை தொடக்கியது, “செய்ய முடியாது என்ற பிரச்சினைகள் வந்தால், அவை பாதுகாப்புக் குழு அத்தியாயம் 7 ன் கீழ் செய்யப்பட வேண்டும் என்பதற்காக அனுப்பிவைக்கப்படும்.” என்று அவர் வலியுறுத்தினார்.

.நா. சாசனத்தின் அத்தியாயம் 7 சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக” இராணுவ நடவடிக்கையை அனுமதிக்கிறது. லிபியாவில் ஏழாம் அத்தியாயத்தை ஒட்டித்தான், 2011 அமெரிக்க நேட்டோ ஆக்கிரமிப்பு போர், முயம்மர் கடாபியின் ஆட்சியை அகற்றியதற்கு சட்டபூர்வ அத்தி இலை மறைப்பு கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் அமெரிக்கா, பிரித்தானியா இன்னும் முக்கிய நேட்டோ சக்திகள், மற்றும் வாஷிங்டனின் அரபு முடியாட்சிகளிடையே உள்ள நட்பு நாடுகள் மற்றொரு ஐ.நா. தீர்மானத்திற்கு தயாரிக்கின்றன; அது மனிதாபிமான காரணங்களின் அடிப்படையில் தலையீட்டிற்கு தளம் கொடுக்கும்.

மேற்கும் அதன் சிரிய கைப்பாவைகளும், இஸ்லாமியவாத போராளிகள் வைத்துள்ள பகுதிகளில் பட்டினி போட்டு, சிரிய ஆட்சியை பணிய வைக்க முயல்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளன; இதில் ஹோம்ஸ் நகரத்தின் மேற்குப் பகுதியும் அடங்கும்.

பழைய ஹோம்ஸ் நகரத்தில் முற்றுகைக்குட்பட்ட 800 குடும்பங்களின் கதி, ஜெனிவா பேச்சுக்களில் பிரச்சினை ஆயிற்று; மேற்கும் அதன் SNC யில் உள்ள பினாமிகளும் “மனிதாபிமான தாழ்வாரங்கள்” திறக்கப்பட வேண்டும் எனக் கோரின; இது லிபியாவில் தலையீட்டிற்கு தயாரிக்கும் உத்தியாகும். சிரிய அரசாங்கத்தின் சார்பில் பேசியவர்கள் அனைத்து பெண்கள், குழந்தைகளை அப் பகுதியில் இருந்து வெளியே அனுப்பத்தயார் என்றனர், ஆனால் இது “எழுச்சியாளர்களால்” நிராகரிக்கப்பட்டது.

மேற்கால்மனிதாபிமான” அக்கறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது– ஷியா சிறுநகரங்களான Zahraa மற்றும் Nubl என்று அலெப்போவிற்கு வெளியே முக்கியமான இருப்பவற்றில் 45,000 பேர் பொறியில் அகப்பட்டுள்ளனர் – இது இன்னும் அதிக மக்கட் தொகையாகும் இவர்கள் பட்டினி விளிம்பில் உள்ளனர்; கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இது இஸ்லாமிய சுன்னி “கிளர்ச்சியாளர்களால்” முற்றுகைக்கு உட்பட்டுள்ளது.

மிக மோசமான பட்டினி, டமாஸ்கஸுக்கு தென்புறம் யார்மௌக் பாலஸ்தீன அகதிகள் முகாமில் நடந்துள்ளது. இதை அல்குவேடா தொடர்புடைய இஸ்லாமியவாதிகள் 2012 இறுதியில் கைப்பற்றி சண்டையில்லா பகுதியாக ஆக்கின. பல வசிப்பவர்கள் ஓடிவிட்ட நிலையில் இன்னும் 18,000 பேர் அங்கு பொறியில் அகப்பட்டுக் கொண்டுள்ளனர்; கடுமையான பட்டினி உள்ளது, டஜன் கணக்காவர்கள் பட்டினியால் இறந்துவிட்டனர். மனிதாபிமான உதவி அளிக்கப்பட்டது இருதரப்பினராலும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.இராணுவத்தின் முற்றுகை இடுபவர் மற்றும் அமெரிக்க ஆதரவுடைய ஆயுத எதிர்ப்பாளர்களால். .நா. கடந்த மாதம் இரண்டு கப்பல்கள் பொருட்களை அனுப்ப முடிந்தது.

.நா. மனிதாபிமானப் பிரிவுத் தலைவர் வலெரி அமோஸ், சிரியா பற்றி ரோமில் இன்று ஒரு மாநாட்டைக் கூட்டுகிறார்: இது மேற்கத்திய நாடுகளுக்கு ஆட்சி மாற்றத்திற்கான அவர்களுடைய பிரச்சாரத்தை அதிகப்படுத்தும் வடிவமைப்பு கொண்ட தீர்மானத்திற்கான தளத்தை முன்வைக்கலாம்.