தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
ஒபாமாவின் மலிவுக்கூலி "மீட்சி"
31 January 2014 Use this version to print| Send feedback ஜனாதிபதி ஒபாமாவின் இந்த வார காங்கிரஸ் உரை ஆண்டு இறுதி இலாப அறிக்கைகளின் பல வெளியீடுகளோடு பொருந்தி இருந்தது. எஸ்&பி 500 பங்குச்சந்தை குறியீட்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இலாபங்கள் 2013இல் 11 சதவீதம் உயர்ந்திருந்தன, பெரும்பாலானவற்றிற்கு அது வீழ்ச்சி அடைந்துவரும் கூலி மற்றும் அதிகரித்த அமெரிக்க தொழிலாளர்கள் மீதான சுரண்டல் ஆகியவற்றால் நடந்திருந்தது. செவ்வாயன்று இரவு அவரது தேசிய உரையில், “மேல்மட்டத்தில் இருப்பவர்கள் ஒருபோதும் சிறப்பாக செயல்படவில்லை என்றபோதினும், பெருநிறுவன இலாபங்களும் பங்கு விலைகளும் அபூர்வமாக உயர்ந்துள்ளன. ஆனால் சராசரி கூலிகளில் வெளிப்படையாக முன்னேற்றம் இல்லை. சமத்துவமின்மை ஆழமடைந்துள்ளது,” என்பதை ஒபாமா ஒப்புக்கொண்டார். அவர் மேலும் கூறினார், “மீட்சிக்கு இடையிலும் கூட, பல அமெரிக்கர்கள், முன்னேறுவதற்காக இல்லை, வெறுமனே வாழ்க்கை நடத்துவதற்கே முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வேலை செய்து வருகின்றனர் என்பதே மிக கடினமான உண்மையாகும்,” என்றார். மக்களில் சில பிரிவினர் துரதிருஷ்டவசமாக "நான்கு ஆண்டுகால பொருளாதார வளர்ச்சியை" தவறவிட்டுள்ளனர் என்று கூறி, வழக்கம் போலவே, அருகில் நின்று வேடிக்கை பார்க்கும் ஓர் அப்பாவி பார்வையாளரைப் போல ஜனாதிபதி காட்டிக் கொண்டார். உண்மையில், ஜனாதிபதி உதட்டளில் பாவனை காட்டிய அந்த சமூக சமத்துவமின்மையின் வெடிப்பு முற்றிலும் அவரது நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட கொள்கைகளின் விளைபொருளாகும். அமெரிக்க வரலாற்றில் செல்வ வளத்தை தொழிலாள வர்க்கத்திடமிருந்து பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டிற்கு பெரியளவில் கைமாற்றியதை தொடங்கியதே ஒபாமா பதவிக்கு வந்ததன் பிரதான பணியாக இருந்தது. இது நிதியியல் அமைப்புமுறையின் பிணையெடுப்போடு தொடங்கியது. அது GM மற்றும் கிறிஸ்லெரின் 2009 மறுசீரமைப்பு மூலமாக தொடர்ந்தது. அந்த மறுசீரமைப்பு புதிய நியமனங்களின் கூலிகளைப் பாதியாக குறைப்பது மற்றும் மருத்துவ காப்பீட்டு சுமையை தொழில்வழங்குனர்களிடம் இருந்து தொழிலாளர்களுக்கு மாற்றுவது ஆகியவற்றிற்கு அச்சாரமாக இருந்தது. நீண்டகால வேலைவாய்ப்பின்மை உதவிகளில் வெட்டுக்கள் மற்றும் உணவு மானிய கூப்பன்களில் வெட்டுக்கள் உட்பட சமூகநல திட்டங்களில் இருந்து பல பில்லியன்கள் வெட்டப்பட்டன, மற்றும் டெட்ராய்ட் திவால்நிலையை நிர்வாகம் ஆதரித்தது, இது ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் ஏனைய முறைமைகளை திணிக்க ஒரு தேசிய முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது. பெருநிறுவன இலாபங்களின் உயர்வு இத்தகைய கொள்கைகளின் ஒரு விளைவாகும். புளூம்பேர்க் செய்தியின்படி, அமெரிக்க பெருநிறுவனங்களின் வரிக்குப் பிந்தைய இலாபங்கள், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் வேறெந்த ஜனாதிபதியையும் விட ஒபாமாவின் கீழ் 170 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. அவற்றை, 1947'இல் புள்ளிவிபரங்களை அரசு சேகரிக்கத் தொடங்கியதில் இருந்து, பொருளாதார அளவோடு ஒப்பிடுகையில் அவற்றின் அதிகபட்ச அளவை எட்டி உள்ளன. தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு வர்க்கப் போரை தொடங்கி வைத்த 1981 பட்கோ விமான போக்குவரத்து கட்டுபாடு பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை உடைத்ததிலிருந்து தொடங்கியதான, ரீகன் நிர்வாகத்தின் போது இருந்த அதிகபட்ச இலாபங்களை விட இப்போதைய இலாபங்கள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. தொழிலாள வர்க்கத்தின் எவ்வித பாதுகாப்பையும் கைவிட்ட தொழிற்சங்கங்களின் சேவைகளை உபயோகித்து, ரீகன் காலத்திலிருந்து, அமெரிக்க ஆளும் வர்க்கம் ஓர் இரக்கமற்ற பிரச்சாரத்தை நடத்தி உள்ளது. மில்லியன் கணக்கான வேலைகள் அழிப்பு மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறைகளின் சிதைவு ஆகியவற்றோடு தொழிற்சாலைகளை மூடுதல் (Deindustrialization) மற்றும் நிதிமயமாக்கல் (financialization) ஆகியவையும் சேர்ந்துள்ளன. வறிய கூலி அளவுகளின் அடித்தளத்தில், எந்தவொரு வேலையும் உருவாக்கப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிலாளர்களின் பங்கு தற்போது 57 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது 1950க்குப் பின்னர் நாட்டின் உற்பத்தியில் மிகக் குறைந்த பாகமாகும். ஜனவரி 2009இல் உத்தியோகபூர்வமாக மந்தநிலை முடிவுக்கு வந்த பின்னரில் இருந்து, வாகனத்துறை தொழிலாளர்களின் கூலிகள் நிஜவான வரையறைகளில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது மற்றும் உற்பத்திதுறையில் ஒட்டுமொத்தமாக அவை 2.4 சதவீதம் வீழ்ந்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஐரோப்பா, சீனா மற்றும் வளர்ந்துவரும் சந்தைகள் என்றழைக்கப்படுபவைகளில் இலாபங்களின் இழப்பை அல்லது இலாப வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள போதினும், அமெரிக்காவில் பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள் பெரும் இலாபங்களைச் சம்பாதித்துள்ளன. விமான உற்பத்தி நிறுவனமான போயிங் கடந்த ஆண்டு 18 சதவீத உயர்வோடு 4.6 பில்லியன் இலாபத்தைக் கண்டது, அதேவேளையில் போர்ட் நிறுவனத்தின் இலாபங்கள் 26 சதவீதம் உயர்ந்து 7.2 பில்லியன் டாலரை எட்டியது. முக்கியமாக "தீவிர செலவு-வெட்டுக்களால்", அதாவது பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் கூலி வெட்டுக்களால், கட்டர்பில்லர் நிறுவனம் வல்லுனர்களின் கணிப்பையும் விஞ்சி நான்காவது காலாண்டில் 44 சதவீத இலாபத்திற்கு தாவியது, அதன் தலைமை செயலதிகாரி 2014இல் அந்நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இருப்பதாக உறுதிப்பட தெரிவித்துள்ளார். Moody கடன் மதிப்பீட்டு முகமையின் தகவல்படி, அமெரிக்க பெருநிறுவனங்கள் ரொக்க கையிருப்பாக சாதனை அளவிற்கு 1.5 ட்ரில்லியன் டாலர் வைத்துள்ளன. பெருநிறுவனங்கள் இந்த பணத்தை, கூலிகள் மற்றும் சலுகைகள் உயர்த்துவதை விட்டுவிட்டாலும் கூட, புதிய ஆலைகள் மற்றும் புதிய நியமனங்களில் முதலீடு செய்வதற்கு மாறாக, முதன்மையாக இந்த ரொக்க சேமிப்பை, கட்டர்பில்லரின் 10 பில்லியன் டாலர் திட்டத்தைப் போல பங்குகளின் மதிப்பை உயர்த்த அவற்றின் முதலீட்டாளர்களுக்கும் மற்றும் பங்கு விற்பதற்கும்-வாங்குவதற்கும் டிவிடெண்ட் அன்பளிப்புகளாக செலவிடுகின்றன. உற்பத்தித்துறை "மறுமலர்ச்சி" மீதான பேச்சுக்கள் பெரிதும் ஒரு மோசடியாகும். கடந்த வாரம் ஒபாமாவின் முன்னாள் "வாகனத்துறை சக்கரவர்த்தி" (car czar) ஸ்டீவன் ராத்னெரால் வெளியிடப்பட்ட நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையின்படி, ஜனவரி 2010இல் இருந்து உற்பத்தித்துறையில் வெறும் 568,000 தொழிலாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர், இது 2000 மற்றும் 2009க்கு இடையில் வேலையிழந்த சுமார் ஆறு மில்லியன் தொழிலாளர்களில் ஒரு சிறிய பகுதியாகும். டென்னெசி சட்டானூகாவில் உள்ள வோல்ஸ்வாகன் ஆலைக்கு வழங்கப்பட்ட 280,000 டாலர் வேலைசார் கடனுதவி போன்ற பாரிய வரி வெட்டுக்கள் மற்றும் கூலிக் குறைப்புகள் மூலமாக, தொழில்வழங்குனர்கள் அமெரிக்காவிற்குள் உற்பத்தியை இடம்பெயர்த்த ஈர்க்கப்பட்டுள்ளனர். ஜேர்மன் வாகனத்துறை நிறுவனத்தைக் குறிப்பிட்டுக் காட்டி ராத்னெர் கூறினார், அது “அதிககூலி வழங்கும் நாட்டிலிருந்து (ஜேர்மனி) ஒரு மலிவுகூலி நாட்டிற்கு (அமெரிக்காவிற்கு) உற்பத்தியை இடம்பெயர்த்துள்ளது,” என்றார். “ஒரு தசாப்தத்தில் முதல்முறையாக, உலகெங்கும் உள்ள வியாபார தலைவர்கள் உலகில் முதலீட்டிற்கு ஏற்ற முதலிடம் சீனா அல்ல, அமெரிக்காவாகும் என்று அறிவித்துள்ளனர்,” என்பதை அவரது உரையில் எடுத்துக்காட்டிய ஒபாமா, அதனோடு இதையும் சேர்த்துக் கொண்டார், “பெரிய உற்பத்தியாளர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து வேலைளை உள்நாட்டிற்கு மாற்ற யோசித்து வருவதாக கூறுகின்றனர்,” என்றார். டெட்ராய்ட் உற்பத்தி முறைகளை வெற்றியின் ஒரு முன்மாதிரியாக ஜனாதிபதி குறிப்பிட்டுக் காட்டினார். அந்த வணிக முறை, சமூகநல உதவி பெறுநர்கள் மற்றும் நீண்டகால வேலைவாய்ப்பின்மையில் உள்ளவர்களை போர்டுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்க வேலைக்கு நியமிக்கிறது. ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் (UAW) அங்கத்தவர்களில் "பலர் அவர்களின் முந்தைய வேலைகளில் சம்பாதித்ததை விட மிக குறைந்த கூலிகளில் நியமிக்கப்படுகின்றனர்" என்று ஒரு வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை குறிப்பிட்டது. “உள்நாட்டு நியமனம்" (in-sourcing) என்பதை ஒரு வளர்ச்சி மூலோபாயமாக பார்க்கும் UAW, சர்வதேச மெஷினிஸ்ட் அமைப்பு (IAM) மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அவற்றின் நிதியியல் ஆலோசகர்களை ஒபாமா நிர்வாகமும் ஆளும் வர்க்கமும் கணக்கில் எடுத்துள்ளனர். பெரும் இலாபங்களை ஈட்டும் சில உற்பத்தியாளர்கள், சம்பள-வெட்டு ஒப்பந்தங்களை திணிக்க மற்றும் போராட்டங்கள் வெடிக்கும் போது அவற்றை ஒடுக்க தொழிற்சங்கங்களின் துரோகத்தை சார்ந்துள்ளனர். இது வாகனத்துறை மறுசீரமைப்பில் UAW'இன் ஒத்துழைப்பு சேர்ந்ததில் இருந்து தொடங்கியது. அந்த சீரமைப்பு நடவடிக்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கூலிகள் குறைக்கப்பட்டன, எந்தளவிற்கு என்றால், 1914இல் ஹென்ரி போர்ட் முதன்முதலில் நாளொன்றுக்கு 5 டாலர் என்று உருவாக்கிய போது தொழிலாளர்கள் என்ன சம்பாதித்தார்களோ, நிஜமான வரையறையில், அதற்கு சமமாக, புதிய நியமன தொழிலாளர்களுக்கு கூலிகள் குறைக்கப்பட்டன. UAW'க்கு பெருநிறுவன பங்குகளும், புதிய நியமன தொழிலாளர்களிடம் இருந்து வந்த மில்லியன் கணக்கான சந்தா பணமும் அன்பளிப்புகளாக கிடைத்தன. வறிய கூலிகளின் மீதான கொதிப்போடு சேர்ந்து, அந்த தொழிலாளர்கள் விரைவிலேயே 25 சதவீத சந்தா உயர்வையும் அனுபவிக்க உள்ளார்கள். 1947இல் வென்றெடுக்கப்பட்ட நிறுவனம் வழங்கும் ஓய்வூதியத்தை முடிவுக்கு கொண்டு வர ஜெட் உற்பத்தியாளர்களை அனுமதிக்கும் மற்றும் அடுத்த தசாப்தத்தில் வேலைநிறுத்தங்களுக்கு தடைவிதிக்கும் ஒரு ஒப்பந்தமொன்றை விரிவாக்க, மிக சமீபத்தில் போயிங் மற்றும் IAM முண்டி அடித்து வந்தன. உண்மையில் பின்னர் அது சாமானிய தொழிலாளர்களால் தோற்கடிக்கப்பட்டது. ஒபாமா அவருக்கு முன்னர் இருந்த குடியரசு கட்சி ஜனாதிபதியின் யுத்தம் நாடும் கொள்கைகளை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ள அதேவேளையில், அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய சமூக சமத்துவமின்மையின் வெடிப்பை மேற்பார்வை செய்துள்ள ஒபாமா நிர்வாகத்தின் அனுபவம், பரந்த அமைதியின்மையை மற்றும் கோபத்தை தூண்டியுள்ளது. “சமத்துவம்" குறித்த ஜனாதிபதியின் தேர்தல் நேர வனப்புரை மற்றும் முன்கூட்டிய "சீர்திருத்தங்களுக்கான" அவரது பரிந்துரைகள் பெரிதும் செவிட்டு காதுகளில் தான் போய் சேர்கிறது. அமெரிக்காவில் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களில் ஏற்பட்டுள்ள வரலாற்றுரீதியிலான திருப்பம், பிரமாண்டமான அளவிற்கு சமூக கோபத்தை உண்டாக்கி வருகிறது, அதை முதலாளித்துவ கட்சிகளோ, தொழிற்சங்கங்களோ அல்லது அவற்றின் அனுதாபிகளோ கட்டுப்படுத்த முடியாது. இந்த பதட்டங்கள் பாரிய போராட்டங்களாக வெடிப்பதென்பது வெறுமனே ஒரு காலம் சார்ந்த பிரச்சினையாகும். எவ்வாறிருந்த போதினும், அவர்கள் செயலில் இறங்கும் போது, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம், பெருநிறுவனம்சார் கட்சிகளிடம் இருந்து அதன் அரசியல் சுயாதீனம், மற்றும் எது உண்மையான சமூக சமத்துவமோ அந்த சோசலிசத்தைக் கொண்டு முதலாளித்துவ இலாப அமைப்புமுறையை மாற்றீடு செய்வதற்கான போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட ஒரு புதிய தலைமை மற்றும் அரசியல் வேலைதிட்டத்தால் அவர்கள் வழிநடத்தப்பட வேண்டும். |
|
|