தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
அமெரிக்காவில் பாரியளவிலான வேலைவாய்ப்பின்மை
Andre Damon Use this version to print| Send feedback உணவு மானிய கூப்பன் திட்டத்திலிருந்து 8.7 பில்லியன் டாலர் வெட்டும் ஒரு சட்டமசோதாவில் கையெழுத்திடுவதற்கு முன்னதாக வெள்ளியன்று பேசுகையில் ஜனாதிபதி பராக் ஒபாமா அன்றைய நாள் காலையில் வெளியான சலிப்பூட்டும் ஜனவரி மாத வேலைகள் அறிக்கையைப் புகழ்ந்துரைத்தார். டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியை 160 புள்ளிகள் அளவிற்கு உயர்த்தி, வோல் ஸ்ட்ரீட்டும் உற்சாகத்தோடு எதிர்வினை காட்டியது. வெள்ளிக்கிழமை அறிக்கையின்படி, ஜனவரியில் அமெரிக்க பொருளாதாரம், பொருளியல் வல்லுனர்கள் அனுமானித்திருந்த 189,000 வேலைகளை விட வெகு குறைவாக 113,000 வேலைகளையே உருவாக்கியது. இது வேலைகளின் மந்தமான உயர்வைக் கொண்ட தொடர்ச்சியான இரண்டாவது மாதமாக இருந்தது, முன்னதாக டிசம்பரில் 75,000 வேலைகள் உயர்ந்திருந்தன. நீண்டகால பொருளாதார மந்தநிலை மற்றும் காலவரையற்ற வேலைவாய்ப்பின்மை உயர்வை அமெரிக்கா எதிர்கொண்டிருப்பதாக அங்கே பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கைகள் இருந்து வருகின்றன. “அமெரிக்க பொருளாதாரம் நீண்டகால ஓட்டத்தில் மெதுவாக ஓடக்கூடும்" என்ற தலைப்பில் அசோசியேடெட் பிரஸ் ஞாயிறன்று ஒரு செய்தி வெளியிட்டது. கடந்த மாதம் முன்னாள் கருவூல செயலர் லாரென்ஸ் சம்மர்ஸ் "நீடித்த மந்தநிலையைக்" குறித்து எச்சரித்தார். பாரிய வேலைவாய்ப்பின்மையானது அமெரிக்காவிலும் மற்றும் உலகின் ஏனைய பெரும்பாலான இடங்களிலும் வாழ்வின் நிரந்தர உண்மையாக மாறி உள்ளன.
*
உத்தியோகபூர்வமாக,
அமெரிக்காவில் அங்கே பத்து மில்லியன் வேலைவாய்ப்பற்றோர்
உள்ளனர்,
2007இன்
6.8
மில்லியனில் இருந்து * உத்தியோகபூர்வ வேலையின்மை புள்ளிவிபரங்களின்படி, மொத்தமாக 3.6 மில்லியன் மக்கள் 27 வாரங்களுக்கு அல்லது அதற்கு மேற்கொண்டும் வேலைவாய்ப்பற்று இருந்துள்ளனர். இது 2006இல் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாகும், அப்போது அங்கே 1.1 மில்லியன் நீண்டகால வேலையின்மை இருந்தது. * சுமார் 36 சதவீத வேலையற்றோர் 27 வாரங்களுக்கு அதிகமாக வேலையிலிருந்து வெளியே இருந்துள்ளனர். இது 1948 மற்றும் 2008க்கு இடையிலான சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும். வேலைவாய்ப்பின்மையின் கால அளவு தற்போது 35.4 வாரங்களாக உள்ளது, இது 2006இல் இருந்த 16.9 வாரங்கள் என்பதில் இருந்து உயர்ந்துள்ளது. செயலூக்கத்தோடு வேலை தேடுவோரை மட்டுமே இந்த புள்ளிவிபரங்கள் கணக்கில் எடுத்திருப்பதால், இவை விடயத்தின் வெறும் ஒரு பகுதியை மட்டுமே கூறுகின்றன. பொருளியல் கொள்கை பயிலகத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, மேலதிகமாக "காணாமல் போயுள்ள 5.73 மில்லியன் தொழிலாளர்கள்" (missing workers) கடந்த ஐந்து ஆண்டுகளில் புள்ளிவிவரம் சார்ந்ததல்லாத காரணங்களுக்காக தொழிலாளர் சக்தியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காணாமல் போயுள்ள தொழிலாளர்களையும் வேலையில் இல்லாதோர் என கணக்கிட்டிருந்தால், வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.9 சதவீதமாக இருந்திருக்கும். வேலை செய்யும் வயதுடைய மக்கள் 10 மில்லியனாக உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க பொருளாதாரம் ஜனவரி 2008இல் இருந்ததைவிட கடந்த மாதம் வெகு குறைவாக 866,000 வேலைகளையே கொண்டிருந்தது என்ற உண்மையால் வேலை பற்றாக்குறையின் உண்மையான அளவு எடுத்துக்காட்டப்படுகிறது. இந்த சூழலில் தான் ஒபாமா, உணவு மானிய தேவையைச் சார்ந்துள்ள சுமார் ஒரு மில்லியன் வீடுகளுக்கு ஏறக்குறைய மாதத்திற்கு 100 டாலர் என்றளவிற்கு அதில் வெட்டுக்களைச் சுமத்தும் ஒரு முறைமையில் கையெழுத்திட ஆயத்தமாகி இருந்த நிலையில், அவர் அவரது பொருளாதார கொள்கையின் வெற்றியைக் குறித்து பெருமையடித்தார். ஒபாமா மற்றும் ஜனநாயக கட்சியினர், சமூக உதவிகளைச் சிதைப்பதில் மற்றும் பரந்த மக்கள் அடுக்கை முன்னொருபோதும் இல்லாதளவிற்கு வறுமைக்குள் தள்ளுவதில் குடியரசு கட்சியினரோடு சேர்ந்துள்ள நிலையில், அவர்கள் பொருத்தமற்ற முறையில் சமத்துவமின்மையின் எதிர்ப்பாளர்களாக மற்றும் ஏழைகளின் பாதுகாவலர்களாக காட்டிக் கொள்கின்றனர். நீண்டகால வேலையின்மையில் இருக்கும் 1.4 மில்லியன் தொழிலாளர்களுக்கான வேலையற்றோர் உதவிகள் காலவதியாக்கியது மற்றும் அடுத்த தசாப்தம் முழுவதிலும் அனைத்து துறைகளிலும் "ஒதுக்கீடு" குறைப்புகள் மூலமாக 1 ட்ரில்லியன் டாலர் வெட்டும் இருகட்சி ஒப்புதல் உடனான வரவுசெலவு கணக்கு நிறைவேற்றப்பட்டமை ஆகியவற்றிற்கு கூடுதலாக, இந்த உணவு மானிய உதவிகளில் செய்யப்படவிருக்கின்ற வெட்டுக்கள் வருகின்றன. டெட்ராய்ட் திவால்நிலைமைக்கு அவரது ஆதரவை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டும் விதமாக, வெள்ளியன்று அவரது உரையை அடுத்து, ஒபாமா டெட்ராய்ட் மேயர் மைக் டக்கனைச் சந்தித்தார். அந்த டெட்ராய்ட் திவால்நிலைமையானது, நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை தொழிலாளர்கள் மீது அதேபோன்ற தாக்குதல்களை நடத்துவதற்கு ஒரு முன்மாதிரியை அமைக்கும் விதத்தில், நகர தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ உதவிகளுக்குக் குழிபறிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமூக திட்டங்களில் அதிகளவிலான குறைப்புகள், பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் ஊதிய-வெட்டுக்கள் ஆகியவற்றோடு இணைந்த விதத்தில் பணக்காரர்களுக்கு கட்டுப்பாடில்லாமல் பணத்தை அள்ளிக்கொடுக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கை, சமூக சமத்துவமின்மை உயர காரணமாகி உள்ளது. சராசரி மற்றும் நடுத்தர வருவாய்களின் ஒப்பீட்டின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு மதிப்பீடு தெரிவிப்பதென்னவென்றால், புஷ் ஆட்சியின் கீழ் அதிகரித்ததை விட சமூக சமத்துவமின்மை ஒபாமாவின் கீழ் நான்கு மடங்கு வேகமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளமை கடந்த ஆண்டு 1.2 ட்ரில்லியன் டாலரை எட்டியது. இது 2009இல் இருந்ததை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். அதேவேளையில் தொழிலாளர்களின் ஊதியங்கள் மந்தமடைந்துள்ளன அல்லது வீழ்ச்சி அடைந்துள்ளன. 2007 மற்றும் 2012க்கு இடையில், அமெரிக்காவில் நடுத்தர குடும்பங்களின் வருவாய் 8.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. வேலைகள் அறிக்கைக்கு ஒபாமாவின் விடையிறுப்பானது, அதிகரித்துவரும் சமூக வேதனைகள் மற்றும் அவலங்களுக்கு அவரின் இரக்கமற்ற அலட்சியத்தை மற்றும் ஒட்டுமொத்த அரசியலமைப்பிற்கும் மற்றும் மக்களின் கவலைகள் மற்றும் தேவைகளுக்கும் இடையில் நிலவும் இடைவெளியை பிரதிபலிக்கிறது. அது, வெள்ளியன்று வோல் ஸ்ட்ரீட் பங்கு மதிப்புகளின் உயர்வால் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, அவரது மைய சமூக தொகுதியின்—அதாவது, பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள்—கண்ணோட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. பொருளாதார வல்லுனர் ரோபர்ட் ரீச் ஞாயிறன்று ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டதைப் போல, வேலைவாய்ப்பின்மை அறிக்கை அனுமானிக்கப்பட்டதை விட மோசமாக இருந்தமைக்கு வோல் ஸ்ட்ரீட் நேர்முகமாக எதிர்வினை காட்டியமை நிச்சயமாக பொருள்சார் காரணங்களுக்காகவே ஆகும். வேலைகளின் மந்தமான வளர்ச்சி, காலவரையற்ற காலத்திற்கு பெடரல் வட்டி விகிதங்களை பூஜ்ஜியத்திற்கு அண்மையில் வைத்திருக்கும் சாத்தியக்கூறை அதிகரிக்கிறது மற்றும் மத்திய வங்கி அதன் பத்திரங்கள் வாங்கும் நடவடிக்கையைக் "குறைப்பதை" மந்தப்படுத்தும் வாய்ப்புகளை உயர்த்துகிறது. இந்த நடவடிக்கைகள் தான் பங்கு சந்தையை சாதனையளவிலான உயரங்களுக்கு தள்ளிச் சென்றதோடு, நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியது. இது, பணத்தை மலிவாக வாங்குவதையும் மற்றும் அவற்றின் சொந்த பங்குகளையே வாங்கி வாங்கி விற்பதையும் தொடர அவற்றிற்கு உதவும். இது பங்குகளின் விலையை இன்னும் மேலதிகமாக உயர்த்துவதோடு, ஊகவணிகர்களுக்கு சாதனையளவிலான இலாபங்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கு சாதனையளவிலான சம்பள தொகுப்புகளுக்கும் உத்தரவாதமளிக்கிறது. அனைத்திற்கும் மேலாக தொடரும் பாரிய வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர்களின் ஊதியங்களை மேலும் கூடுதலாக கீழ்நோக்கி தள்ளும். இதற்கிடையில், பணக்குவியலைத் தொடர்ந்து பெருமளவில் பெருவியாபாரங்களால் குவிக்க முடியும் என்பதோடு, இது ஏற்கனவே 1.5 ட்ரில்லியன் டாலராக உள்ள நிலையில், அதை ஊக வணிகத்திற்குள் பயன்படுத்துவதைத் தொடரவும் முடியும். உற்பத்தி மற்றும் தயாரிப்புகளில், நாட்டின் உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில், மற்றும் வேலையற்றோரை வேலையில் நியமிப்பதில் முதலீடு செய்வதற்கு பதிலாக அவை பணத்தை பெரிய பெரிய மாளிகைகள் மற்றும் உல்லாச கப்பல்களை வாங்குவதில் முதலீடு செய்கின்றன. இவை தான் பெருநிறுவன அமெரிக்கா மற்றும் அதன் அரசியல் கருவியான ஒபாமா நிர்வாகம் இரண்டினதும் கொள்கைகளுக்குப் பின்னால் இருக்கும் நிஜமான நோக்கமாகும். வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு ஐந்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர், நீடித்த பாரியளவிலான வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியானது நிதியியல் நிலைகுலைவு ஒரு திட்டமிட்ட நெருக்கடியின் வெளிப்பாடாகும் என்ற உண்மையை அடிக்கோடிடுகிறது. அது முதலாளித்துவ அமைப்புமுறையின் உடைவு மற்றும் தோல்வியைக் குறித்தது. வங்கிகளின் குற்றஞ்சார்ந்த நடைமுறைகளால் தூண்டிவிடப்பட்ட நெருக்கடி, தொழிலாளர்களால் ஒரு நூற்றாண்டு போக்கினூடான போராட்டத்தில் வென்ற ஆதாயங்கள் அனைத்தையும் திருப்பியெடுக்க ஒரு சமூக எதிர்புரட்சியைத் தொடங்க ஆளும் வர்க்கத்தால் கைப்பற்றப்பட்டது. திரும்பி போராடுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு முயற்சியையும் முடக்குவதிலும், அடிபணிய செய்வதிலும் தொழிற்சங்கங்கள் ஓர் இன்றியமையா பாத்திரம் வகித்துள்ளன. தியாகம் மற்றும் விட்டுகொடுப்புகளுக்கான அனைத்து முறையீடுகளையும் உழைக்கும் மக்கள் நிராகரிக்க வேண்டும். அத்தகைய முறையீடுகள் கண்மூடித்தனமான மேலதிக தாக்குதல்களுக்கு மட்டுமே பாதை அமைக்கும். மாறாக, வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு எதிரான பாரிய எதிர்ப்பானது ஒபாமா மற்றும் இரண்டு பெரு வியாபார கட்சிகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் மற்றும் ஒரு பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டின் மேலதிக வெறுப்பூட்டும் செல்வசெழிப்பிற்கு அல்லாமல் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமூகத்தை மறுஒழுங்கமைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் ஒன்றுதிரப்பட வேண்டும். |
|
|