சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Delhi’s AAP government teeters after month in office

ஒரு மாதம் பதவியில் இருந்த பின்னர் டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் தள்ளாடுகிறது

By Kranti Kumara
7 February 2014

Use this version to printSend feedback

பதவியேற்று வெறும் ஒரு மாதத்திற்குப் பின்னர், டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி (AAP) அரசாங்கம் பல்வேறு அரசியல் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது மற்றும் வெளிப்படையாக தள்ளாடி வருகிறது. டெல்லி சட்டமன்றத்தில் அதன் பெரும்பான்மைக்காக காங்கிரஸ் கட்சியின் ஆதரவைச் சார்ந்துள்ள AAP அரசாங்கம், தேசிய நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட உள்ள மே மாதம் வரையிலாவது பிழைத்திருப்பதென்பது மிகவும் ஐயத்திற்கிடமாக உள்ளது.

ஆம் ஆத்மி கட்சி (சாமானிய மனிதரின் கட்சி) ஒரு முதலாளித்துவ கட்சியாகும், அது 2011-12இல் டெல்லி ஊழல் எதிர்ப்பு போராட்டங்களின் தலைவர்களால் ஓராண்டிற்கு சற்று கூடுதலான காலத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய தலைநகர் பிரதேசமும், மிகப் பெரிய நகர்புற திரட்சியோடு 22 மில்லயன் மக்கள்தொகையைக் கொண்டதுமான டெல்லியின் 70 சட்டமன்ற தொகுதிகளில் 28 தொகுதிகளை வென்று, அக்கட்சி கடந்த டிசம்பரில் இந்திய அரசியல் ஸ்தாபகத்திற்கு அதிர்ச்சியூட்டியது.

உயர்ந்த வேலைவாய்ப்பின்மை மற்றும் விலையுயர்வோடு பொருளாதார தேக்கநிலைக்குள் (stagflation) இந்தியா சரிந்ததால் உண்டான கவலை மற்றும் மத்திய தட்டு வர்க்கத்திற்குள் அதிகரித்துவரும் விரக்தி ஆகியவற்றால் AAPஇன் வளர்ச்சி எரியூட்டப்பட்டு இருந்தது. பல்வேறு ஜனரஞ்சக வாக்குறுதிகளை அளித்து, இந்திய மேற்தட்டின் பிரதான கட்சிகளின் (காங்கிரஸ் மற்றும் இந்து மேலாதிக்க பிஜேபி) மீது ஆழமாக-வேரூன்றி இருந்த தொழிலாள வர்க்கத்தின் மற்றும் நகர்புற ஏழைகளின் கோபத்தை டெல்லி நியமன தேர்தல்களில் அக்கட்சியால் கைப்பற்ற முடிந்திருந்தது.

பதவி ஏற்றதும் அதன் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, நகரசபை தண்ணீர் வினியோக குழாய்களில் இணைக்கப்பட்ட தண்ணீர் வினியோக மீட்டர் மூலமாக வீடுகளுக்கு மாதத்திற்கு 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்று AAP அறிவித்தது. அதோடு முதல் 400 kwh (ஒரு மணிநேர கிலோவாட்) மின்சார நுகர்வின் கட்டணங்களைப் பாதியாகவும் அது குறைத்தது. இருந்த போதினும், இந்த முறைமைகள் தற்போது 2013-14 நிதியாண்டு முடிவடையும் மார்ச் 31 வரை மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக, தண்ணீர் கட்டணங்களில் செய்யப்பட்ட குறைப்புகள் 50 சதவீதத்திற்கு மேலான டெல்லி வாழ்மக்களுக்கு ஒன்றும் பயன்படப் போவதில்லை. அவர்களுக்கு நகரசபை தண்ணீர் வினியோக முறையைப் பெறும் வசதி இல்லை என்பதால், அவர்கள் தங்களின் அன்றாட தண்ணீர் தேவைக்காக தனியார் தண்ணீர் லாரிகளைச் சார்ந்திருக்க வேண்டும்.

பெருநிறுவன பத்திரிகைகளால் அதன் மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சத்தில் குளிர்காய்ந்து, ஊழல் அரசியல்வாதிகளில் தொடங்கி விபச்சாரம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் வரையில் ஒழுக்கக்கேடுகளின் எதிர்ப்பாளராக காட்ட AAP அரசாங்கம் முயன்றுள்ளது. அறநெறியின் ஒரு பாதுகாவலனாக தன்னைத்தானே நியமித்துக் கொண்டு, AAP அரசாங்கம் டெல்லியின் குற்றம் மற்றும் ஊழலை "சுத்தபடுத்தும்" பெயரில் ஆக்ரோஷமான மற்றும் இழிந்த உத்திகளைப் பயன்படுத்தி உள்ளது.

ஜனவரி 15இல் நள்ளிரவுக்கு அண்மை நேரத்தில், AAP சட்ட மந்திரி சோம்நாத் பார்தி தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் வாழும் பல ஆபிரிக்க பெண்களின் வீடுகளில் ஒரு நள்ளிரவு சோதனை நடவடிக்கை மேற்கொள்ள ஒரு கும்பலுக்கு தலைமை வகித்தார். பார்தி, "போதைப்பொருள் மற்றும் விபச்சார வளையம்" குறித்த ஒரு "செய்தி" தமக்கு கிடைத்திருப்பதாக கூறி, வன்முறை வெடிக்கக்கூடிய அளவிற்கு மோசமான இழிந்த வார்த்தைகளோடு, அந்த சோதனை நடவடிக்கையை ஏற்பாடு செய்தோடு, அதற்கு அவரே முன்னிருந்து தலைமை தாங்கி இருந்தார்.

பார்தி மற்றும் அவரது கும்பலும் அந்த பெண்களின் வீடுகளைச் சுற்றி வளைத்தனர், நிலவரத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் திகைத்து போயினர். ஒரு விருந்திற்குப் போய் திரும்பி வந்து கொண்டிருந்த மூன்று பெண்கள் அந்த கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு, பிடிக்கப்பட்டனர். அந்த கும்பல் அவர்களை இனரீதியில் அவமானப்படுத்தியது.

அப்பெண்கள் பின்னர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், தாங்கள் உடல்ரீதியாக இழிவுபடுத்தப்பட்டதாகவும், சட்ட மந்திரியோடு சேர்ந்து AAP கட்சி உறுப்பினர்களால் சோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். பொலிஸ் வந்த போது பல வீடுகளில் சோதனை நடத்த பார்தி அவர்களுக்கு உத்தரவிட்டார், ஆனால் தங்களிடம் ஒரு உத்தரவாணையோ அல்லது அவ்வாறு செய்வதற்கான எவ்வித சட்ட காரணங்களோ இல்லை என்பதால் அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்தனர். வெறிபிடித்த பார்தி, அவர்கள் ஒவ்வொருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு "மக்களால்" செம்மையாக புடைக்கப்படுவார்கள் என்று எச்சரித்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

உகாண்டாவைச் சேர்ந்த இருவர் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த இருவர் என குற்றஞ்சாட்டப்பட்ட பெண்களில் நால்வர், அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான பயிலகத்தில் (AIIMS) சட்டவிரோத போதைப்பொருள் குறித்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட பார்தியால் நிர்பந்திக்கப்பட்டனர். அந்த பெண்களில் எவரும் போதை பொருட்கள் உட்கொண்டிருக்கவில்லை என்பதை ஆச்சரியத்திற்கிடமின்றி அந்த பரிசோதனைகள் நிரூபித்தன. இரண்டு பெண்கள் சிறுநீர் மாதிரிகளை அளிக்க பொதுவிடத்திலேயே நிர்பந்திக்கப்பட்டனர்.

பெண்களில் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் அவருடைய கோபத்தை வெளிப்படுத்தினார்: நான் நிறைய குற்றஞ்சாட்டு கூற வேண்டி உள்ளது. நாங்கள் அமைதியாக இருந்துவிட போவதில்லை. அவர்கள் ஏன் இந்த சித்திரவதைக்கு எங்களை ஆளாக்குகிறார்கள் என்று நான் அவர்களில் ஒருவரைக் கேட்ட போது, அவர்கள் என் முகத்தில் குத்தியதோடு, 'உனக்கு விரைவில் தெரியவரும்' என்று பதில் கூறினார்கள். நான் மறுத்த போதும் கூட, அந்த கஷ்டமான பரிசோதனைக்கு உள்ளாக நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம். நாங்கள் போதைப்பொருள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தோம் என்பதை அவர்கள் எவ்வாறு கூற முடியும்? நாங்கள் கருப்பர்கள் என்பதாலேயா?

பின்னர் பெண்களில் இருவர் பார்திக்கு எதிராக சட்டப்பூர்வ குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தனர், அதில் ஒருவர் அந்த மந்திரியை முக்கிய குற்றவாளியாக தெளிவாக அடையாளம் காண்கிறார். பெண்களில் ஒருவர் கூறினார், அன்றிரவு பார்தி ஒரு கும்பலுக்கு தலைமை வகித்திருந்தார். அந்த ஆண்கள் எங்களின் கடவுச்சீட்டை கேட்டனர். பொலிஸ் பின்னர் தான் வந்தது. பொலிஸ் எங்களுக்கு உதவியது, அவர்கள் தான் அன்றிரவு எங்களைக் காப்பாற்றினார்கள்.

அவருடைய அதிர்ச்சிகரமான மற்றும் அச்சுறுத்தும் உத்திகள், ஊடகங்கள் மற்றும் சில பெண்கள் அமைப்புகளிடமிருந்து பரந்த விமர்சனத்திற்கு உள்ளான பின்னர், பார்தி வெட்கமின்றி அறியாமையை ஒப்புக்கொண்டு அவரது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோர முயன்றார்: நான் இந்த அமைப்புமுறைக்கு புதியவன், ஆகவே நான் தவறுகள் செய்திருக்கலாம். யாராவது முன்வந்து எனக்கு வழிகாட்ட வேண்டும், என்றார்.

சட்டத்தை தம் கைகளில் எடுத்திருந்த AAP தலைமையிலான சோதனை நடவடிக்கைக்கு பல்வேறு ஆபிரிக்க அரசுகள் பலமாக எதிர்ப்பு தெரிவித்ததால், இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் பல ஆபிரிக்க நாடுகளின் தூதர்களை அழைத்து அவர்கள் நாட்டினருக்கு உரிய பாதுகாப்பும், இடர்காப்பும் வழங்க அனைத்துவிதமான நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்குமென உறுதியளிப்பதற்காக, விரைவாக ஒரு கூட்டத்தைக் கூட்ட நிர்பந்திக்கப்பட்டது.

ஜனவரி 16 சம்பவத்தை ஒட்டி, பார்தியை பதவியிலிருந்து நீக்க கோரி டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அங்கே பரந்த அழைப்புகள் விடுக்கப்பட்டன. ஆனால் கெஜ்ரிவால் அவரது பிற்போக்குத்தனமான மந்திரியைப் பாதுகாத்ததோடு, பொலிஸ் பெண்களைப் பாதுகாக்கும்" விடயத்தில் நல்லமுறையில் வேலை செய்யவில்லையென குற்றஞ்சாட்டியதன் மூலமாக (காட்டுமிராண்டித்தனமான பல கற்பழிப்பு சம்பவங்களைச் சுட்டிகாட்டி) விமர்சனங்களை தலைகீழாக திருப்ப முயன்றார்.

சட்டத்தைக் கையில் எடுத்திருந்த ஒரு கும்பலின் ஒரு ஏதேச்சதிகார தலைவரின் தொனியோடு, பார்தியின் சோதனை நடவடிக்கைக்கு பின்னர் உடனடியாக கெஜ்ரிவால் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்: நாங்கள் டெல்லி பொலிஸை எச்சரிக்கிறோம். என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை பொதுமக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள், என்றார். ஆபிரிக்க பெண்களைக் குறிப்பிடும் விதத்தில், பொலிஸ் "வெளிநாட்டினருக்கு" இணக்கமாக இருந்து வருவதை கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.

அவருடைய நடவடிக்கையை உயர்த்திக்காட்டும் விதத்தில், அதை தொடர்ந்து தற்போது தேசிய அரசின் அதிகாரத்தின்கீழ் இருக்கும் டெல்லி பொலிஸை அவரது அரசாங்க அதிகாரத்தின் கீழ் நிறுத்த வேண்டுமென கோரி கெஜ்ரிவால் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அவருடைய பல மந்திரிகள் மற்றும் ஆதரவாளர்களோடு ஓர் ஊர்வலம் நடத்தினார். கெஜ்ரிவால் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சக கட்டிடத்தை நெருங்காமல் இருக்க அவர்களைத் தடுக்குமாறு இந்திய உள்துறை மந்திரி பொலிஸிற்கு ஆணையிட்ட போது, சீற்றங்கொண்ட கெஜ்ரிவால் ஒரு தர்ணா போராட்டத்தில் இறங்க முடிவெடுத்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் உள்துறை மந்திரி ஷிண்டே ஊழல் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டியதோடு, நேர்மையான" டெல்லி பொலிஸார் தங்களின் சீருடைகளைக் கலைந்து "சாமானிய மனிதருடன்" (அதாவது கெஜ்ரிவாலுடன்) சேர வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்த கோமாளித்தனத்திற்காக, பெருநிறுவன ஊடகங்களால் கெஜ்ரிவால் வெறுப்புடன் கண்டிக்கப்பட்டார். பெருநிறுவன ஊடகங்கள் அவர்களை ஒரு அரசியல் வீரனாக மட்டும் பார்க்கவில்லை, மாறாக ஸ்தாபக அதிகாரத்திற்கு ஒரு சவாலாக காண்கின்றன. அது பெருவர்த்தகங்களுக்காக ஆளும் பாரம்பரிய கட்சிகளுக்கு ஒரு மாற்று அரசியல் கருவியாக AAP பொருந்தி நிற்பதன் மீது ஓர் ஆழ்ந்த கேள்விக்குறியை எழுப்பி இருந்தது.

தமது சக்திக்கு மீறி செயல்பட்டதை உணர்ந்து, கெஜ்ரிவால் திடீரென பகுதியான வெற்றியென்ற வாதத்தோடு அவரது போராட்டத்தை விலக்கிக் கொண்டார். வேலையை விட்டு நீக்க வேண்டுமென கெஜ்ரிவால் கோரிய ஐந்து பொலிஸ்காரர்களில் இருவரை முழு சம்பளத்தோடு தற்காலிக விடுப்பில் அனுப்ப டெல்லி லெப்டினென்ட் கவர்னர் வாக்குறுதி அளித்தது தான் அந்த "வெற்றியாக" இருந்தது.

இவையனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், அது தற்போதைக்கு AAP அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெற முடிவெடுக்கவில்லை. அவ்வாறு செய்வது "வாக்காளர்களின் விருப்பத்தை" வெறுப்பூட்டுவதாக அமையும் என்பதோடு, எவ்வாறாயினும், AAP அதுவே அதனை இழிவுபடுத்திக் கொள்கிறதென காங்கிரஸ் கட்சி கணக்கிடுகிறது.

அதேவேளையில், ஆபிரிக்க மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான சட்டமீறிய தாக்குதல்களால் நிரூபிக்கப்பட்ட விதத்தில், ஆம் ஆத்மி கட்சியானது தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு விரோதமான ஒரு குட்டி முதலாளித்துவ கட்சியாகும். அதன் ஜனரஞ்சக வாக்குறுதிகள் மற்றும் கோமாளித்தனங்கள் இந்திய அரசியல் மற்றும் பொருளாதார மேற்தட்டை அதிகளவில் கிலியூட்டி உள்ளது.

ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறைக்கு எதிராக கட்டவிழ்ந்துவரும் மக்கள் கோபத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் உத்திகள் எதிர்பாராவிதமாக ஒரு வினையூக்கியாக செயல்படக்கூடுமென அவை அஞ்சுகின்றன. ஜனவரி 26இல் இந்தியாவின் "குடியரசு தினத்தன்று" நிகழ்த்திய உரையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (முன்னதாக நவ-தாராளவாத "பொருளாதார சீர்திருத்தங்களின்" ஒரு அலையின் போது தேசிய முற்போக்கு கூட்டணியின் நிதி மந்திரியாக தலைமை வகித்தவர்) ஜனரஞ்சக அராஜகவாதம்" என்று எதை அவர் குறிப்பிட்டாரோ அதைக் கொண்டு மக்களுக்கு நலனளிக்கும் எந்தவித அரசியல் பரிந்துரையையும் வழங்குவதற்கு எதிராக மற்றும் திருப்திபடுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார்.

அவர் அறிவித்தார், அரசாங்கம் ஓர் அற நிலையம் அல்ல. ஜனரஞ்சக அராஜகவாதம் அரசாட்சிக்கு ஒரு மாற்றீடாக முடியாது. பொய் வாக்குறுதிகள் ஏமாற்றத்திற்கு இட்டு செல்லும், அவை ஆக்ரோஷத்திற்கு பிறப்பிடமாக மாறும், ஆக்ரோஷத்திற்கு ஒரே சட்டப்பூர்வ இலக்காக இருப்பது, அதிகாரத்தில் உள்ளவர்கள் தான், என்றார்.