தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Social inequality and the war against the working class சமூக சமத்துவமின்மையும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான யுத்தமும்
Andre Damon Use this version to print| Send feedback துணை ஊட்டச்சத்து உதவித்திட்டம் (Supplemental Nutrition Assistance Program - SNAP) அல்லது உணவு மானிய முத்திரைத் திட்டம் என்று அறியப்படுவதில் இருந்து 8.7 பில்லியன் டாலர்களை வெட்டும் ஒரு மசோதாவில் ஜனாதிபதி ஒபாமா இன்று கையெழுத்திடுவார். இது சுமார் ஒரு மில்லியன் வீடுகளுக்கான உதவிகளில் மாதந்தோறும் ஏறக்குறைய 100 டாலரைக் குறைக்கும். இந்த ஆண்டின் இடைக்கால தேர்தல்களுக்கான ஓட்டத்தில் ஒபாமாவும் ஜனநாயக கட்சியினரும் தங்களைத் தாங்களே சமூக சமத்துவமின்மையின் எதிர்ப்பாளர்களாக, ஏழைகள் மற்றும் வேலையற்றோரின் பாதுகாவலர்களாக காட்டிக் கொள்கின்ற அதேவேளையில், உணவு மானிய முத்திரைகள் மீதான இந்த தாக்குதல் வருகிறது. ஜனநாயகக் கட்சியினர் என்ன சொல்கிறார்கள் மற்றும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கு இடையில் உள்ள வெளிப்படையான முரண்பாடு ஊடக ஸ்தாபகங்கள் எதிலுமே விவாதத்திற்கு கூட வரவில்லை. ஒபாமாவின் உணவு மானிய கூப்பன்கள் மீதான நடவடிக்கை, அமெரிக்காவில் அரசியலின் நிலை மற்றும் சமூக வாழ்வின் எதார்த்தத்திற்கு அறிகுறியாக உள்ளது. இது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு குறைந்தபட்ச உதவி வழங்கும் ஒரு திட்டத்தில் மூன்று மாதங்களுக்குள் செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது வெட்டாகும். நிதியியல் மேற்தட்டின் செல்வசெழிப்பில் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு உயர்வு இருப்பதை புதிய செய்திகள் ஆவணப்படுத்துகின்ற போதும் கூட, அடிப்படை சமூக திட்டங்களுக்கு அங்கே பணமில்லை என்ற பொய் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சமூகத்தின் ஒரு சிறிய அடுக்கால் திரட்டப்பட்ட செல்வவளத்தின் அளவு ஏறத்தாழ ஆழங்காண முடியாதளவிற்கு உள்ளது. உலகின் 300 பணக்காரர்கள் (உலக மக்கள்தொகையில் 0.000004 சதவீதத்தினர்), ஒரே ஆண்டில் 524 பில்லியன் டாலர் (13 சதவீதம்) உயர்வுடன், 2013 இல் $3.7 ட்ரில்லியன் நிகர செல்வத்தைக் கொண்டிருந்ததாக புளூம்பேர்க்கின் ஒரு அறிக்கை கடந்த மாதம் கண்டறிந்தது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் செல்வம் கடந்த ஆண்டு $15.8 பில்லியனில் இருந்து $78.5 பில்லியனாக உயர்ந்தது. 2011இல் ஜனாதிபதி ஒபாமாவால் ஜனாதிபதியின் சுதந்திர விருது பெற்ற வாரன் பஃபெட்டின் செல்வம், 2012இல் 12.7 பில்லியன் டாலரில் இருந்து $60 பில்லியனாக உயர்ந்தது. பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் ஜூகெர்பேர்க்கின் செல்வம் இரண்டு மடங்கிற்கு நெருக்கமாக $11.3 பில்லியனில் இருந்து $23 பில்லியனாக உயர்ந்தது. இந்த பெரும் பணக்காரர்களின் செல்வச்செழிப்பின் திகிலூட்டும் வளர்ச்சியானது, நேரடியான மற்றும் திட்டமிட்ட அரசாங்க கொள்கையின் விளைவால் ஏற்பட்ட ஒரு சாதனையளவிலான பங்கு சந்தை உயர்வோடு பிணைந்துள்ளது. அமெரிக்காவில், பெடரல் ரிசர்வ் பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான வட்டிவிகிதங்களைக் கொண்டிருப்பதோடு, ஒவ்வொரு மாதமும் நிதியியல் அமைப்பிற்குள் பில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சுகிறது. இதே கொள்கையை ஐரோப்பா மற்றும் ஜப்பான் மத்திய வங்கிகளும் நகலெடுத்தாற் போல் செய்கின்றன. செல்வவளத்தின் பாரிய மறுபங்கீட்டை நடத்த பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டு அரசியல் அமைப்புமுறையின் மீதிருக்கும் அதன் கட்டுப்பாட்டை பயன்படுத்துகிறது. வங்கிகளுக்கும் மற்றும் பெருநிறுவனங்களுக்கும் கட்டுப்பாடில்லாமல் நிதிகள் கிடைக்க செய்யப்படுகின்றன அதேவேளையில், அரசாங்கங்கள் சமூக திட்டங்களை வெட்டுவதோடு உழைக்கும் மக்களின் வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வளைத்து இறுக்குகின்றன. என்ன நடக்கிறதோ அதுவொரு சமூக எதிர்புரட்சி என்பதை தாக்குதலின் வீச்செல்லை தெளிவாக்குகிறது. பரந்த மக்களின் சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் பாதிக்கப்பட்டுள்ளது: வேலைகள் மற்றும் ஊதியங்கள் நிரந்தர பாரிய வேலைவாய்ப்பின்மையானது பெருநிறுவன மேற்தட்டின் தயவுதாட்சண்யமற்ற குறைத்தல் மற்றும் செலவின-வெட்டு ஆகியவற்றின் விளைவாகும். இந்த தாக்குதல் அமெரிக்காவை விட வேறெங்கும் இந்தளவிற்கு ஈவிரக்கமற்று இருக்கவில்லை. இந்த வாரம் டெல், இன்டர்நேஷனல் பேப்பர், டிஸ்னி, டைம்ஸ் இன்க். மற்றும் யூனெடெட் ஏர்லைன்ஸ், அத்தோடு அமெரிக்காவிற்கு வெளியில் அமைந்திருக்கும் பல பெருநிறுவனங்களிலும் பாரிய வேலைநீக்கங்கள் அறிவிக்கப்பட்டன. 2009இல் இருந்து, ஒபாமா நிர்வாகம் எதை மறுசீரமைப்பிற்காக தாக்குதல்களை மேற்கொண்டாரோ, அந்த வாகனத்துறை ஊதியங்கள் சராசரியாக 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன, அதேவேளையில் உற்பத்தித்துறை ஊதியங்கள் ஒட்டுமொத்தமாக 2.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் பெயரளவிற்கு ஏற்பட்ட குறைவு முக்கியமாக மில்லியன் கணக்கான ஊக்கங்குறைந்த வேலைகோருவோர்கள் தொழிலாளர் சந்தையிலிருந்து விலகுவதால் ஏற்படுவதாகும். பெரும்பான்மையான புதிய வேலைகள் வறிய ஊதியத்திற்கு நெருக்கமான தொகையை வழங்குகின்றன என்பதோடு சலுகைகளை வெகு குறைவாக வழங்குகின்றன அல்லது சலுகைகளே வழங்காமல் விடுகின்றன. வேலைவாய்ப்பின்மை உதவிகள், உணவு மானிய முத்திரைகள், சமூக நல திட்டங்கள் உணவு மானிய முத்திரைகளில் செய்யப்படும் வெட்டுக்கள் சமூக திட்டங்கள் மீதான ஒரு பரந்த தாக்குதலின் பாகமாகும். அவை அமெரிக்காவில் நீண்டகாலம் வேலைவாய்ப்பற்ற 1.3 மில்லியன் தொழிலாளர்களின் வேலையின்மைக்கான கூடுதல் உதவிகள் காலாவதியானதைத் தொடர்கின்றன. நீண்டகால வேலைவாய்ப்பின்மையிற்காக பண உதவி பெற்றுவந்தவர்களின் சதவீதம் 2010இல் மூன்றில் இரண்டு மடங்கு என்பதில் இருந்து இன்று மூன்றில் ஒரு மடங்கு என்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இரண்டு கட்சிகளின் ஒப்புதலோடு கொண்டு வரப்பட்ட புதிய வரவு-செலவுத் திட்டம் அடுத்த தசாப்தத்தில் எல்லா அரசு துறைகளிலும் 1 ட்ரில்லியன் டாலர் "ஒதுக்கீடு" வெட்டுக்களை நிலைநிறுத்தி உள்ளது. ஒபாமா நிர்வாகம் உள்நாட்டு விருப்புடை செலவுகளை (domestic discretionary spending) 1950களுக்குப் பின்னர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் மிகக் குறைந்தபட்ச அளவிற்கு குறைத்துள்ளது. ஓய்வூதியங்கள் 1980களில், அமெரிக்காவில் 25 முதல் 64 வரை வயதுடைய முழுநேர தனியார்துறை தொழிலாளர்களில் 60 சதவீதத்தினர் வரையறுக்கப்பட்ட ஓய்வுகால உதவி திட்டத்தைக் (defined-benefit retirement plan) கொண்டிருந்தனர். தற்போது, அந்த எண்ணிக்கை சுமார் 10 சதவீதமாக வீழ்ந்துள்ளது. கடைசியாக நகரசபை பணியாளர் விடுபட்டிருந்தனர், தற்போது நகரசபை திவால்நிலைமைகளின் ஒரு அலையால் அவர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை முகங்கொடுத்துள்ளனர். ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவோடு, டெட்ராய்டில் உள்ள ஒரு திவால்நிலைமைக்கான நீதிமன்ற நீதிபதி மாநில அரசியலமைப்பு பாதுகாப்புகளை நீக்க மற்றும் நகர தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கி உள்ளார். மருத்துவ காப்பீடு தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் கட்டுபடியாகக்கூடிய மருத்துவ காப்பீட்டு சட்டத்தின் (Affordable Care Act) அறிமுகத்தோடு இணைந்துள்ளது, இந்த "சீர்திருத்தம்" தொழில்வழங்குனர்களால் வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டு முறையை முறித்து, தொழிலாளர்களை தனியார் சந்தையில் தனித்தனியாக மருத்துவ காப்பீட்டைப் பெற தள்ளும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் மருத்துவ காப்பீட்டு செலவுகளைக் குறைத்து, காப்பீட்டு மற்றும் மருத்துவத்துறை நிறுவனங்களின் இலாபங்களை அதிகரிக்கும்; அது காப்பீட்டு திட்டத்தின் பலன்களைக் குறைக்கும் அதேவேளையில் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் கைகளில் இருந்து செலவுகளை அதிகரிக்கின்றது. தொழிலாளர்களின் சமூக நிலைமைகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், பெருநிறுவனங்கள் மீதான நெறிமுறைகளைத் தளர்த்துதல், சிறப்பு வரிச்சலுகைகள் வழங்குதல் மற்றும் பெருவியாபாரங்களுக்கான அரசின் உதவிதொகைகள் ஆகியவை கட்டுப்பாடில்லாமல் தொடர்கின்றன. உழைக்கும் மக்கள் மீதான சமீபத்திய சுற்று தாக்குதல்கள், பல தசாப்தங்களாக நடந்துவந்த அத்துமீறலின் ஒரு தொடர்ச்சியாகும். உலகளாவிய பொருளாதார அந்தஸ்த்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு, ஆளும் வர்க்கம் தொழிற்சாலைகளை மூடுதல், நிதியியல் ஊக வணிகம் மற்றும் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு செல்வத்தை மறுபங்கீடு செய்தல் என்ற ஒரு கொள்கையோடு விடையிறுப்பு காட்டியது. இது சோவியத் ஒன்றிய பொறிவைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. சோவியத் ஒன்றிய பொறிவை, பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டுக்கள் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு மற்றும் வெளிநாட்டில் ஏகாதிபத்திய தாக்குதலுக்குமான ஒரு முக்கிய தடை நீங்குவதாக பார்த்தது. 2008 நிதியியல் பொறிவும் அதையடுத்து வந்த மந்தநிலைமையும் மேலதிகமாக வர்க்க உறவுகளை மறுகட்டமைக்க கைப்பற்றப்பட்டது. அதன் விளைவு: 1930களின் பெருமந்தநிலைமைக்கு பிந்தைய ஆண்டுகளில் இருந்து பார்த்திராத சமூக சமத்துவமின்மையின் அளவுகளாகும். பூமியில் நூறுக்கும் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள், அடியில் உள்ள 3.5 பில்லியன் மக்களைவிட அதிகமான செல்வத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்கள் என்ற அளவிற்கு சமூக சமத்துவமின்மையின் மலைக்க வைக்கும் அதிகரிப்பு, ஜனநாயகத்திற்கான அனைத்துவித சமூக அடித்தளத்தையும் அழித்துவிட்டுள்ளது. அது பாரிய உளவுவேலைகள் குறித்த எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளியீடுகளால் அம்பலப்படுத்தப்பட்டதைப் போல பொலிஸ் அரசு வடிவிலான ஆட்சிக்காக அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் செய்யப்படும் தயாரிப்புகளை அடிக்கோடிடுகிறது. இந்த நெருக்கடி மற்றும் முதலாளித்துவத்தின் சீரழிவிலிருந்து என்ன எழுகிறதென்றால், பிரபுத்துவ சிறப்பந்தஸ்தின் ஒரு புதிய வடிவமும் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனமுமாகும். சோசலிசம் மட்டுமே ஒரே மாற்றீடாக உள்ளது — அதாவது, ஆளும் வர்க்கத்தின் செல்வத்தைப் பறிமுதல் செய்வது, பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை பொதுமக்களுக்கு சொந்தமாக மற்றும் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புகளாக மாற்றுவது, மற்றும் சமூகத்தை தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைகளின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பு செய்வது. |
|
|