தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR Russian ruble collapses amidst mounting social and political tensions அதிகரித்துவரும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்களுக்கு இடையே ரஷ்ய ரூபிள் சரிகிறது
By Andrea Peters Use this version to print| Send feedback டாலர் மற்றும் யூரோவுடன் ஒப்பிடுகையில் ரஷ்ய செலாவணி ரூபிள் இந்த வாரம் வரலாறுகாணாத அளவில் வீழ்ச்சி அடைந்தது. 2008-2009க்குப் பின்னர் அல்லது 1998இல் ரஷ்யாவில் ஏற்பட்ட கடன்செலுத்தவியலா நிலைமைக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான நெருக்கடியாக ஆய்வாளர்களும், அரசாங்க பிரதிநிதிகளும் சித்தரித்து வருகின்ற அந்நெருக்கடியால், அந்நாட்டு நாணயம் செவ்வாயன்று வெறும் ஒரே நாளில் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்து, ஒரு டாலர் 80 ரூபிளுக்கும் மற்றும் ஒரு யூரோ 100 ரூபிளுக்கும் நெருக்கமாக பரிவர்த்தனை ஆனது. பொறிவைத் தடுப்பதற்கு நேற்று மத்திய வங்கி எடுத்த முயற்சிகளும் தோல்வி அடைந்தன. அது வட்டிவிகிதங்களை 10.5 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக உயர்த்திய பின்னர், ரூபிள் அதன் மதிப்பில் ஏதோ சற்று மீண்டு, பின்னர் மீண்டும் அதன் கீழ்நோக்கிய சுழற்சிக்கு திரும்பியது. மத்திய வங்கியின் கடுமையான நகர்வுகளே, பதட்டமான சூழலை உருவாக்கி நிலைமையை மோசமடைய செய்ததாக சில வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மாஸ்கோ மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கவும், உக்ரேனுக்கு உயிர்பறிக்கும் இராணுவ தளவாடங்களை அனுப்பவும் அங்கீகாரம் அளிக்கும் ஒரு சட்ட மசோதாவில் ஜனாதிபதி ஒபாமா இந்த வாரயிறுதியில் கையெழுத்திடுவார் என்ற வெள்ளை மாளிகையிலிருந்து வந்த அறிவிப்புடன், செவ்வாயன்று ரூபிள் நெருக்கடியை அமெரிக்கா ஆழப்படுத்த நகர்ந்தது. ரூபிளை சர்வதேச செலாவணி சந்தைகளில் சுதந்திரமாக மிதக்கவிடுவது, நிலைமையை ஸ்திரப்படுத்தக்கூடுமென்ற நம்பிக்கையில் கடந்த மாதம் தான் ரஷ்ய மத்திய வங்கி அவ்வாறு செய்தது. உக்ரேன் மோதலின் விளைவாக மேற்கு விதித்த தடைகளாலும், அந்நாட்டு பொருளாதாரத்திற்கு நங்கூரமாக விளங்கும் எண்ணெயினது உலகளாவிய விலை வீழ்ச்சியாலும் ஒரேநேரத்தில் ஏற்பட்ட தாக்குதலால் ரஷ்ய பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. ரஷ்ய அரசாங்கம் ஒரு பேரலுக்கு $90க்கு குறையாத எண்ணெய் விலையின் அடிப்படையில் அதன் வரவு-செலவு திட்டக்கணக்கை தயாரித்துள்ளது, கச்சா எண்ணெய் விலையோ தற்போது பேரலுக்கு $60க்கு குறைவாக வியாபாரமாகி வருகிறது. முதலீட்டாளர்கள் ரஷ்யாவிலிருந்து வேகமாக வெளியேறி வருகிறார்கள். மத்திய வங்கியின் செய்திப்படி, இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் மூலதன வெளியேற்றம் $49 பில்லியனை தொட்டது. அது ஒட்டுமொத்தமாக 2014இல், கடந்த ஆண்டின் தொகையை விட இருமடங்கினும் அதிகமாக, மொத்தம் $134 பில்லியனை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. "நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக," செவ்வாயன்று மாஸ்கோவில் நிதியியல் சந்தைகள் குறித்த வட்டமேஜையில் பேங்க் ஆஃப் ரஷ்யாவின் முதல் துணை ஆளுநர் செர்ஜி ஷெவெட்ஸவ் தெவித்தார். “என்னை நம்புங்கள், மத்திய வங்கியின் இயக்குனர்கள், மிகவும் மோசமானதற்கும், மிக மிக மோசமானதற்கும் இடையே ஒன்றை தேர்ந்தெடுத்திருந்தார்கள்." அந்நாட்டின் செலாவணி நிலைமையை ஸ்திரப்படுத்த மேற்படி நடவடிக்கைகள் கொண்டு வரப்படுமென அவர் தெரிவித்தார். ரூபிளின் வீழ்ச்சி கூர்மையான பணவீக்க அதிகரிப்புடன் சேர்ந்து வருகிறது, அரசு புள்ளிவிபர அமைப்பு ரோஸ்டாட் கருத்துப்படி, விலைகள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 8.9 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளன. உலகின் மிகவும் செலவுமிகுந்த நகரங்களில் ஒன்றான மாஸ்கோவில், அத்தியாவசிய நுகர்வு பண்டங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்ததாக மாஸ்கோவின் வணிக மற்றும் சேவைகள்துறை தலைவர், Interfax செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார். குறிப்பாக உணவு பண்டங்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன, அவை 2014இன் தொடக்கத்தில் இருந்த 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளன. புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பின்னர் கூடுதலாக 15 சதவீதம் உயருமென செய்தி நிறுவனங்கள் அனுமானிக்கின்றன. ரஷ்ய உற்பத்தியாளர்கள் அவர்களது தயாரிப்புகளின் உற்பத்திக்கு பெரும்பாலும் டாலர்கள் மற்றும் யூரோக்களைக் கொண்டு வெளிநாடுகளிலிருந்து மூலப்பொருட்களை வாங்கி வருகின்ற நிலையில், உள்நாட்டு உணவுப்பண்டங்களும் சரி வெளிநாட்டு உணவுப் பண்டங்கள் ஆனாலும் சரி, அவற்றின் விலைகள் உயர்ந்து வருகின்றன. சிறு மற்றும் மத்திய நிறுவனங்களுக்கான ரஷ்யா தழுவிய பொது அமைப்பு (OPORA), கடைகளிலும் அரசு ஒப்பந்தங்களிலும் யூரோ-அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வதை சட்டபூர்வமாக்குமாறு பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளது, அதுபோன்றவொரு மாற்றம் இல்லையென்றால் வணிகங்கள் பெரும் இழப்புகளால் பாதிக்கப்படுமென அது வலியுறுத்துகிறது. நிஜ ஊதியங்கள் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், வறுமை அதிகரித்துள்ளதாகவும் அரசாங்க துணை-தலைவர் ஓல்கா கோலோடெட்ஸ் ITAR-TASSக்கு அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்தார். “நாம் 15.7 மில்லியன் ஏழைகளுடன் இந்த ஆண்டை நிறைவு செய்து வருகிறோம். ஆனால் பணவீக்க நிலைமைகளின் கீழ், இந்த எண்ணிக்கைகள், குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில், தவிர்க்கவியலாமல் அதிகரிக்கும்," என தெரிவித்த கோலோடெட்ஸ், ஒன்றரை வயதிலிருந்து 3 வயது வரை குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் பெரும் அபாயத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். "ரூபிள் மதிப்பு வீழ்ச்சி மக்களைப் பாதித்து வருகிறது என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் கடும் கோபத்தில் உள்ளனர், ஒரு சமூக வெடிப்பு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது," என Forbesக்கு அளித்த ஒரு நேர்காணலில் ஒரு அரசு அதிகாரி தெரிவித்தார். அடுத்த ஆண்டில் ரஷ்ய பொருளாதார நிலைமை குறித்த முன்மதிப்பீடுகள் தொடர்ந்து மோசமடைய உள்ளது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வெறும் 0.7 சதவீத வளர்ச்சியைக் எட்டிய பின்னர், 2015இன் முதல் காலாண்டில் 0.8 சதவீத சுருக்கத்தை அரசாங்கம் அனுமானித்து வருகிறது. ரஷ்ய பத்திரிகை நிறுவனம் RBK குறிப்பிடுகையில், பேங்க் ஆஃப் ரஷ்யாவின் கருத்துப்படி, 2015இன் போக்கில் எண்ணெய் விலைகள் பேரலுக்கு $60 என்றிருந்தால், ரஷ்ய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடையும் என்றது. எண்ணெய் விலைகள் பேரலுக்கு $40க்கு கீழ் வீழ்ச்சி அடையக்கூடுமென ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எரிசக்தித்துறை மந்திரி டிசம்பர் 15இல் தெரிவித்தார். செவ்வாயன்று, ரஷ்ய பிரதம மந்திரி டிமிட்ரி பெஸ்கோவ் பல தொடர்ச்சியான "நெருக்கடி-தடுப்பு நடவடிக்கைகளை" தயாரிக்க பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி மந்திரிகளையும், அத்துடன் மத்திய வங்கியையும் கொண்ட ஒரு கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார். அரசாங்கம் என்ன செய்ய தயாராகி வருகிறது என்பது இதுவரையில் தெளிவாக தெரியவில்லையென நிதி அமைச்சகத்தின் இரண்டு அதிகாரிகள் Forbesக்கு எடுத்துரைத்தனர். நிதி மந்திரி அன்டொன் சிலௌனொவ் கூறுகையில் அவரது அமைச்சகம் செலாவணி கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த பரிசீலித்து வரவில்லையென தெரிவித்தார். கிரெம்ளின் 2008-2009இல் நடைமுறைப்படுத்திய அதேபோன்றவொரு பிணையெடுப்பை செய்ய தயாரிப்பு செய்து வருகிறதென்ற ஊகங்களும் அங்கே உள்ளன, அப்போது அது பாரியளவில் நிதிகளைப் பாய்ச்சி நிதியியல் துறையையும், பெரு வணிகங்களின் ஏனைய பிரிவுகளையும் மீட்டது. Forbes செய்தியின்படி, பொருளாதாரத்திற்குள் அரசு தலையீடு செய்வதற்காகவும், அத்துடன் பல்வேறு அரசுத்துறை நிதி அமைப்புகளிடமிருந்து கடன் வாங்குவதன் மூலமாகவும், 2015 வரவு-செலவு திட்டக்கணக்கில் 160 பில்லியன் ரூபிள்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக ஓர் அதிகாரி தெரிவித்தார். அரசாங்கத்திற்குள் கட்டமைந்துவரும் உராய்வுகளின் ஓர் அறிகுறியாக, பொருளாதார அபிவிருத்தி மந்திரி அலெக்செ உல்யுகேவ் (Aleksei Ulyukaev) கூறுகையில், நடந்து முடிந்தவைகளை கருத்தில் கொண்டு, மத்திய வங்கி உடனடியாக வட்டிவிகிதங்களை உயர்த்தி உள்ளது என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “பேங்க் ஆஃப் ரஷ்யாவுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒற்றுமையான நடவடிக்கையை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமாகும்," என்றார். கிரெம்ளினுக்கு உள்ளே ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு மிக நெருக்கமாக உள்ள ஐகோர் செசினின் ரஷ்ய எண்ணெய் பெருநிறுவனம் ரோஸ்நெஃப்ட், இந்த நெருக்கடியில் ஒரு பாத்திரம் வகிப்பதாக குறை கூறப்படுகிறது. கடந்த வாரம், அந்நிறுவனம் 625 பில்லியன் ரூபிள் மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டு, சந்தையை மிதக்கவிட்டிருந்தது. ஒரு "ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக" ரஷ்ய பொருளாதாரத்தை ரோஸ்நெஃப்ட் பலவீனப்படுத்தி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை செசின் கண்டித்தார். உடனடி நிலைமையிலிருந்து வெளியே வருவதற்கொரு வழி காண ரஷ்ய ஆளும் மேற்தட்டு பதைபதைப்பில் இருக்கின்ற நிலையிலும் கூட, அந்நாட்டை பிடித்துக் கொண்டிருக்கும் பொருளாதார பேரழிவு மேற்குடன், குறிப்பாக, அமெரிக்காவுடன் தீவிரமடைந்துவரும் புவிசார் அரசியல் மோதலின் விளைவு என்பதைக் குறித்த ஒரு அதிகரித்த புரிதல் அங்கே உள்ளது. நெருக்கடியைத் தடுப்பதற்காக மத்திய வங்கியால் எடுக்கப்படும் வட்டிவிகித உயர்வை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, அடிப்படையில் “வெளிநாட்டில் இருப்பவர்களால்" நடத்தப்படும் செலாவணிக்கு எதிரான ஊக தாக்குதலுடன் ரூபிளின் வீழ்ச்சி பிணைந்துள்ளதாக புலனாய்வு நிறுவனம் REGIONஇன் பகுப்பாய்வு துறையின் இயக்குனர் RIA Novostiக்குத் தெரிவித்தார். அரசாங்கத்திற்குள் இருக்கும் ஒருவர், Forbesக்கு கூறுகையில், அரசாங்கத்தின் நிலைமையை பதட்டத்திற்குரிய நிலைமைக்கு அண்மையில் இருப்பதாக சித்தரித்தார், ரஷ்ய பொருளாதாரத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை திணிக்க மேற்கின் பாகத்திலிருந்து வரும் முயற்சிகளோடு பிணைந்துள்ளது என்றார். “புட்டின் கிரெம்ளினுக்குள் மீண்டும் வந்ததால் எழுந்த அரசியல் நெருக்கடியின் விளைவு தான் தற்போதைய பொருளாதார நெருக்கடி என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆகவே நெருக்கடியைத் தடுக்கும் எந்தவித நிதியியல் திட்டங்களும் சரி, பொருளாதார திட்டங்களும் சரி அடிப்படையில் இந்த சூழலை மாற்றப் போவதில்லை," என்றவர் தெரிவித்தார். |
|
|