World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி Humboldt University seeks to ban criticism of right-wing professor Statement of the Socialist Equality Party and IYSSE of Germany ஹம்போல்ட் பல்கலைக்கழகம் வலதுசாரி பேராசிரியர் மீதான விமர்சனத்தை தடுக்க முனைகிறதுஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பின் அறிக்கை27 November 2014 பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை, கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத் துறையின் தலைவர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்ததற்காக, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit—PSG) மற்றும் அதன் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பைத் (IYSSE ) தாக்கி, அதன் வலைத் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் அப்பல்கலைக்கழக தலைவர் பேராசிரியர் யேன்-ஹென்றிக் ஓல்பெர்ட்ஸிற்கு எழுதிய பகிரங்க கடிதம் ஒன்றை கீழே பிரசுரிக்கிறோம், அதில் சோசலிச சமத்துவக் கட்சியும், IYSSEயும் அத்தாக்குதலுக்கு பதிலளிக்கிறது. அன்புடன் பேராசிரியர் டாக்டர் ஓல்பெர்ட்ஸ் அவர்களுக்கு, ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் வலைத் தளத்தில் வரலாற்றுத் துறையால் வெளியிடப்பட்டிருக்கும், "பேராசிரியர் டாக்டர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி மீதான தாக்குதல்" எனும் அறிக்கையை உடனடியாக நாங்கள் நீக்க கோருகிறோம். அவ்வறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியும், அதன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான IYSSE மீதும் ஒருதலைபட்சமான அரசியல் தாக்குதலை உள்ளடக்கி உள்ளதுடன், IYSSEக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றுதிரட்டும் முயற்சியையும் சேர்த்துக் கொண்டுள்ளது. இவையெல்லாம் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பெயரில் செய்யப்பட்டு வருகிறது. இது ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீறுகின்றன. இது கிளைச்ஸைட்டோங்கின் (Gleichschaltung) —அதாவது ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் அரசியல் மற்றும் புத்திஜீவித எதிர்ப்பை ஒடுக்குவதற்காக, நாஜி ஆட்சியால் பின்பற்றப்பட்ட கொள்கையின்— ஒரு நவீன வடிவத்திற்கு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் ஓர் உத்தியோகபூர்வ அறிவிப்பின் குணாம்சத்தை அந்த “அறிக்கை” கொண்டுள்ளது. அதில் பல்கலைக்கழக முத்திரையும், வரலாற்றுத்துறை நிர்வாக இயக்குனர் பேராசிரியர். பீட்டர் பர்ஷேல்லின் கையொப்பமும் காணப்படுகிறது, அவர் “அத்துறையின் சார்பாக” கையொப்பமிட்டுள்ளார். குறிப்பாக பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வலதுசாரி அரசியல் நிகழ்ச்சிநிரலைக் குறித்தும், பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கியின் செயல்பாடுகளைக் குறித்தும் எவ்விதத்திலும் விமர்சிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவித்து, பல்கலைக்கழகத்தின் பெயரில் அவ்வறிக்கை, ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான சோசலிச சமத்துவக் கட்சியையும், அத்துடன் அதன் மாணவர் அமைப்பு, IYSSEஇன், உறுப்பினர்களையும் தாக்குகிறது. அந்த அறிக்கை எவ்வாறு வெளியானது என்பது குறித்து நாங்கள் ஒரு விசாரணையைக் கோருகிறோம். அதை யார் பரிந்துரைத்தது, எந்த கமிட்டிகளில் அது விவாதிக்கப்பட்டது, யார் அதை வெளியிட முடிவு செய்தது என்பதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம். குற்றஞ்சாட்டியவவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க ஏதுவாக, அவ்வறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக, சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஏன் ஒரு வாய்ப்பளிக்கப்படவில்லை? வரலாற்றுத் துறையின் அவ்வறிக்கை பகிரங்கமாக அரசியல் தணிக்கையை வலியுறுத்துகிறது. "ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் விரிவுரை கூடங்களில்” பார்பெரோவ்ஸ்கியின் பொதுக்கருத்துக்களை விமர்சிப்பதை இனியும் சகித்துக் கொள்ள முடியாதென்று அது குறிப்பிடுவதுடன், "பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கிக்கு எதிரான பிரச்சாரத்தை எதிர்க்க, அது ஹம்போல்ட் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அழைப்பும் விடுக்கிறது”. அதற்கு என்ன அர்த்தம்? மிகத் துல்லியமாக என்ன செய்ய வேண்டுமென்பதற்காக மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள்? இது வெளிப்படையாக சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSEக்கு எதிராக, பார்பெரோவ்ஸ்கியின் நிலைப்பாடுகளை பாதுகாப்பதற்காக, அரசியல்ரீதியாக மாணவர்களை ஒன்று சேர்க்கும் ஒரு முயற்சியாகும். அத்தகைய ஒரு பரிந்துரையின் ஒட்டுமொத்த பொருத்தமற்ற குணாம்சத்தை, அரசியல்ரீதியாக மட்டுமல்ல, மாறாக தொழில்ரீதியிலும் கூட சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் அரிதாகவே உள்ளது. பார்பெரோவ்ஸ்கி தன் வசம் ஒரு பெரும் அமைப்பு எந்திரத்தையும், கணிசமான வளங்களையும், அத்துடன் மாணவர்கள் மீது கணிசமான அளவில் அதிகாரமும் கொண்டுள்ளார். மாணவர்களது எதிர்காலத்தை முன்னுக்கு செலுத்தும் அல்லது தடுக்கும் அதிகாரத்தை அவர் கொண்டிருக்கின்ற நிலையில், அவரது அரசியல் பாதுகாப்புக்கு வருமாறு இப்போது மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். IYSSEஇன் ஓர் அரசியல் பிரச்சாரத்தால் பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், இப்பிரச்சாரம் "அரசியலமைப்பு ரீதியில் பாதுகாக்கப்பட்ட கல்வித்துறைசார் சுதந்திரத்தை" மீறுவதாகவும் வலியுறுத்துவது, அர்த்தமற்றதாக உள்ளது. அது யதார்த்தத்தைத் தலைகீழாக திருப்புகிறது. பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி, பல்கலைக்கழகத்தின் ஐவரி உயர்கட்டிடத்தில் நடுநிலையான விஞ்ஞான ஆய்வுகளை நடத்தி வருகின்ற ஒரு முனைப்பற்ற ஆய்வாளர் அல்ல. அவர் பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் திருத்தல்வாத மற்றும் இராணுவமய கண்ணோட்டங்களை ஊக்குவிக்க, துறைத்தலைவர் என்ற முறையில், அவரது அதிகாரத்தை பிரயோகிக்கிறார். அவர் வானொலி, தொலைக்காட்சிகளிலும் மற்றும் செய்தித்தாள் கட்டுரைகள், பேட்டிகள் மற்றும் பொது விவாதங்களிலும் அதை தொடர்ச்சியாக செய்து வருகிறார். அவர் பிரபல பத்திரிகையாளர்கள், உயர்மட்ட அரசியல்வாதிகள், ஜேர்மனி இராணுவம், மற்றும் அமெரிக்காவில் உள்ள நவ-பழமைவாதிகளின் கல்வித்துறை மையமான கலிபோர்னியாவில் உள்ள ஹூவர் பயிலகம் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்புகளையும் பேணி வருகிறார். பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி குறித்து நாங்கள் கூறியுள்ள விமர்சனங்கள் துல்லியமானவை என்பதுடன் அவற்றை சுலபமாக சரிபார்த்துக் கொள்ளவும் முடியும். அவை பொது அறிக்கைகள் மற்றும் பகிரங்கமாக கிடைக்கக்கூடிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், அவை அவதூறு ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டதல்ல. ஏர்ன்ஸ்ட் நோல்டவிற்கு புனர்வாழ்வளிக்க பார்பெரோவ்ஸ்கி அழைப்புவிடுத்ததை, ஜேர்மனியின் மிகப் பிரபலமான செய்தி இதழ் Der Spiegel பெப்ரவரியில் மேற்கோளிட்டிருந்தது. இந்த வரலாற்றாளர் தான் 1986இல் ஜேர்மன் தேசிய சோசலிசத்தின் குற்றங்களைக் குறைத்துக்காட்டி வரலாற்றாளர்களுக்கு இடையேயான போராட்டத்தை (Historikerstreit) தூண்டியவர். இன்று நோல்ட வெளிப்படையாக அடோல்ப் ஹிட்லரை ஆதரித்து வருகிறார். “நோல்டவுக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டது. வரலாற்றுரீதியில் பேசுகையில், அவர் சரியாகவே இருந்தார்", என்று பார்பெரோவ்ஸ்கி கூறியதாக Der Spiegel மேற்கோளிடுகிறது. போலந்து மீதான ஹிட்லரின் படையெடுப்புக்கு போலந்தும் இங்கிலாந்தும் பொறுப்பாகின்றன, குலாக்களுக்கு (Gulag) யூதர்கள் பொறுப்பாகிறார்கள் என, Spiegelஇன் அதே கட்டுரையில், நோல்ட அறிவிக்கிறார் —இந்த கண்ணோட்டங்கள் வழக்கமாக நவ-நாஜி வட்டாரங்களுடன் சம்பந்தப்பட்டவை ஆகும். பார்பெரோவ்ஸ்கியே கூட ஹிட்லரை நோக்கி மிகவும் அனுதாபமான மனோபாவத்தை வலியுறுத்துகிறார். அவர் Der Spiegelக்கு தெரிவிக்கையில், “ஹிட்லர் மனநோயால் பாதிக்கப்பட்டவரோ அல்லது வக்கிரமானவரோ இல்லை. அவருக்கு முன்னால் யூதர்களை நிர்மூலமாக்குவது குறித்து யாரும் பேசுவதை அவர் விரும்பவில்லை," என்று தெரிவித்தார். இதுவா ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தற்போதைய பார்வை? பார்பெரோவ்ஸ்கி மீதான விமர்சனத்தை சட்டத்துக்கு புறம்பானதாக அறிவிப்பதன் மூலம், அது இத்தகைய கண்ணோட்டங்களுக்கு பொறுப்பேற்கிறது. ஹிட்லரை நியாயப்படுத்துவதையும் மற்றும் நாஜி செயல்பாட்டின் கொடூரத்தைக் குறைத்துக் காட்டுவதையும் நோக்கமாக கொண்ட ஒரு வரலாற்று திருத்தல்வாத பிரச்சாரத்தை அது ஆதரித்து வருகிறது. ஜேர்மனி தலையீடு செய்யும் ஒரு படையா? (Interventions macht Deutschland?) என்று தலைப்பின் கீழ், ஜேர்மன் வரலாற்று அருங்காட்சியகத்தில் அக்டோபர் 1 அன்று நடத்தப்பட்ட ஒரு குழு விவாதத்தில், ஜிகாதிஸ்ட் குழுக்களுக்கு எதிராக அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் மற்றும் சட்ட சாசனங்களையும் மீறும் வகைமுறைகளைப் பயன்படுத்துவதற்கு பார்பெரோவ்ஸ்கி வாதிட்டார். அவர் கூறுகையில், "உங்களுக்கு பணயக் கைதிகளை எடுக்க விருப்பமில்லையென்றால், கிராமங்களை எரித்து, மக்களைத் தூக்கிலிட்டு, தீவிரவாதிகள் செய்வதைப் போல பயத்தையும் கொடூரத்தையும் பரப்புங்கள், நீங்கள் அதற்கு தயாரில்லை என்றால், உங்களால் வெற்றி பெற முடியாது. பினர் நீங்கள் அதை விட்டுவிடவேண்டும்,” என்றார். இதுவா ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைப்பாடு? கல்விதுறைச்சார் சுதந்திரம் மீதான தாக்குதலை உள்ளடக்கிய அத்தகைய பாசிச கண்ணோட்டங்களை விமர்சிப்பதை அது தீவிரமாக பேணுகிறதா? இரண்டாம் உலகப் போரின் போது, 1946இல் நூரெம்பேர்க்கில் அவர்களது குற்றங்களுக்காக நாஜி தலைவர்களால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட பாரிய படுகொலைகள் மற்றும் போர் அட்டூழியங்களை நியாயப்படுத்தும் அளவுக்கு இந்த சுதந்திரம் இப்போது நீள்கிறதா? ஜேர்மன் அரசியலமைப்பு சாசனம் 5.3 உறுதியளிப்பதைப் போல, இத்தகைய பிற்போக்குத்தனமான கண்ணோட்டங்களுக்கு எதிரான விமர்சனத்தை பல்கலைக்கழகத்திற்கு உள்ளே வரலாற்றுத்துறை தடுக்க முயற்சிப்பதே, கல்வித்துறைசார் சுதந்திரம் மீதான ஒரு தாக்குதலாகும். இதில் கற்பிப்பதற்கான சுதந்திரம் மட்டும் அல்ல —அதாவது ஆசிரியர்கள் அவர்களது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை (இதை நாம் இதுவரை கேள்விக்கு உட்படுத்தவில்லை)— மாறாக கற்பதற்கான உரிமையும் உள்ளடங்கும். மாணவர்கள் அவர்கள் என்ன படிக்க வேண்டுமென முடிவெடுக்கும் உரிமையை, அரசியல் அழுத்தமின்றி அவர்களது சொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கும் உரிமையை, அவர்களது விரிவுரையாளர்களின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் உரிமையை கொண்டுள்ளனர். அந்த "அறிக்கை" துல்லியமாக இத்தகைய உரிமைகளுக்கு எதிராக அமைந்துள்ளது. பார்பெரோவ்ஸ்கி கல்வித்துறைசார் சுதந்திரம் மீதான கொள்கைகளின் பின்னால் ஒளிந்து கொண்டு விமர்சனத்திலிருந்து தப்ப விரும்புகின்ற அதேவேளையில், அதே உரிமையை அவர் மற்றவர்களுக்கு மறுக்கிறார். அவர் ஒரு பேராசிரியராக தனது பதவியையும் மற்றும் அவரது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஆதாரவளங்களையும், அவரது சொந்த அரசியல் கண்ணோட்டங்களை பரப்புவதற்காக மட்டுமல்லாமல், அவரை விமர்சிப்பவர்களை வாய்மூட செய்யவும் அவற்றை பயன்படுத்தி உள்ளார். பெப்ரவரி 12இல், பிரிட்டனைச் சேர்ந்த அவரது சமதரப்பினரான ரொபேர்ட் சேர்விஸை ட்ரொட்ஸ்கி குறித்த அவரது மதிப்பிழந்த சுயசரிதத்தை குறித்து விவரிப்பதற்காக, ஒரு பொது கருத்தரங்கிற்கு பார்பெரோவ்ஸ்கி அழைத்திருந்த போது, சேர்விஸ் மீதான விமர்சனங்களை ஒடுக்க அவர் பாதுகாப்பு அதிகாரிகளை திரட்டி இருந்தார். அந்த சுயசரிதை மிக அடிப்படை வரலாற்று தரங்களுக்குக் கூட ஒத்துபோகாமல், அதன் எண்ணற்ற பிழைகள் மற்றும் தவறான சித்தரிப்புகளின் காரணமாக, பெருமைமிக்க American Historical Review இதழாலும் மற்றும் 14 ஜேர்மன்-பேசும் வரலாற்றாளர்களாலும் "கூலிக்கு மாரடிக்கும் ஒரு வேலை" என்றும், “அவதூறு பரப்புவதற்காக செய்யப்பட்டது" என்றும் விமர்சிக்கப்பட்டது. IYSSE அந்த பொது விவாதத்தில் கலந்து கொள்ள விரும்புவதைக் குறித்து முன்கூட்டியே அது பார்பெரோவ்ஸ்கிக்கு தகவலளித்தது, சேர்விஸிற்கு எழுத்துபூர்வமான கேள்விகளை வழங்கியபோது, பார்பெரோவ்ஸ்கி அந்த பொது விவாதம் இரத்து செய்யப்படுவதாக அறிவித்து விடையிறுத்தார். ஆனால் உண்மையில், அவர் அந்த பொது விவாதத்தை வேறு இடத்திற்கு மாற்றியதுடன், அதில் விமர்சனரீதியிலான கேள்விகளை எழுப்பக்கூடிய எவரையும் அனுமதிக்க மறுத்தார். அந்த கூட்டத்திற்கு தடுக்கப்பட்டவர்களில் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வரலாற்று மாணவர்களும், போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மரியோ கெஸ்லர் போன்ற பிரபல வரலாற்றாளர்களும், மற்றும் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் டேவிட் நோர்த்தும் கூட உள்ளடங்குவர். சேர்விஸின் நூலினது ஜேர்மன் பதிப்பை வெளியிடக் கூடாது என்று பரிந்துரைத்து, சுஹ்ர்காம்ப் வெர்லாக் பதிப்பகத்திற்கு கடிதம் எழுதி கையெழுத்திட்ட 14 வரலாற்றாளர்களில் கெஸ்லரும் கையெழுத்திட்டிருந்தார் என்பதால் அவர் தடுக்கப்பட்டார். லியோன் ட்ரொட்ஸ்கியை பாதுகாப்பதில் பெரிதும் பாராட்டப்பட்ட ஒரு நூலை நோர்த் எழுதி இருந்ததற்காக அவர் தடுக்கப்பட்டார். அவரது கண்ணோட்டங்களை ஆதரித்தவர்கள் மட்டுமே பார்பெரோவ்ஸ்கியிடமிருந்து விதிவிலக்கு பெறுவதற்குரிய அடித்தளத்தைக் கொண்டிருந்தனர். அதற்குப் பின்னர், "ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் அடிப்படை ஜனநாயக உரிமைகளும் கல்வித்துறைசார் சுதந்திரங்களும் கேள்விக்குறியாகி உள்ளன" என்பதை அறிவித்து, பேராசிரியர் ஓல்பெர்ட்ஸ்! அந்த நடவடிக்கை குறித்து IYSSE ஒரு பகிரங்க கடிதத்தில் உங்களுக்கு புகார் அளித்திருந்தது. எங்களுக்கு அதற்கான ஒரு பதிலும் வரவில்லை. "ஜேர்மன் மேல்தட்டினர் போரை விரும்புவது ஏன்?” என்ற தலைப்பில் IYSSE அக்டோபர் மாத தொடக்கத்தில், ஹம்போல்ட் பல்கலைத்தில் ஒரு கூட்டம் நடத்த திட்டமிட்ட போது, பல்கலைக்கழகத்தின் எந்தவொரு உறுப்பினரையும் போர்வெறியர்களாக குறிப்பிடக் கூடாதென்ற நிபந்தனையின் கீழ் மட்டுமே நீங்கள் அறையை அளிக்க உத்தரவிட்டீர்கள். அந்த தணிக்கை வடிவத்தை நாங்கள் நிராகரித்த பின்னர் தான், இறுதியாக நீங்கள் அனுமதி அளித்தீர்கள். பின்னர் நாங்கள் அறிந்து கொண்டது போல், பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி கூட்டத்தில் பங்குபெறுபவர்களை தடுக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எடுத்துரைந்திருந்தார், அந்த கூட்டம் நடந்தது, 200 பார்வையாளர்களை ஈர்த்து அது நல்ல வரவேற்பும் பெற்றது. அது மாணவர்கள் மத்தியில் பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி கருத்துக்களுக்கு பரந்த எதிர்ப்பு இருப்பதை எடுத்துக்காட்டியது. வரலாற்றுத்துறையின் அறிக்கை, அத்தகைய ஜனநாயக விரோத வழிமுறைகளை மேற்கொண்டும் வளர்த்தெடுக்கிறது. அது பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியரின் அரசியல் கண்ணோட்டங்களை விமர்சிப்பதைத் தடுக்கவும், மற்றும் அந்த நிலைப்பாடுகளை எதிர்க்கின்ற ஓர் அரசியல் கட்சிக்கெதிராக ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒன்று திரட்டவும் முயற்சிக்கிறது. பல்கலைக்கழகத்தில் இந்த மனோபாவம் மேலோங்கினால், நடைமுறையில் பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி மற்றும் இராணுவவாத கண்ணோட்டங்கள் கேள்விக்கிடமற்றதாக ஆகிவிடும். இது பல்கலைக்கழக்கத்தின் இருண்ட நாட்களை நினைவூட்டுகிறது, 1930களில் அது, ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் கிளைஷ்ஸைட்டுங்கை நடைமுறைப்படுத்துவதிலும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதிலும் முன்னணி பாத்திரம் வகித்தது. 1926இல், முன்னாள் பெட்ரிக்-வில்ஹெம்ஸ் பல்கலைக்கழகத்தில் தேசிய சோசலிஸ்ட் ஜேர்மன் மாணவர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது, 1933 மே 10 அன்று அங்கே நாஜிகளின் இழிவார்ந்த நூல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கிளைஷ்ஸைட்டுங்குடன் சேர்ந்து, ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் தலைமை கோட்பாடு (Führerprinzip) அறிமுகம் செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தின் இந்த "தலைவருக்கு" அடிபணிய மறுத்தவர்கள், வெளியேற வேண்டியிருந்ததுடன், தொந்தரவுகளையும் முகங்கொடுத்தார்கள். ஹம்போல்ட் பல்கலைக்கழக வலைத் தளத்தில் வரலாற்றுத்துறையால் வெளியிட்டுள்ள அறிக்கை, எந்தளவுக்கு பல்கலைக்கழகத்தின் நேர்மை ஏற்கனவே சமரசப்பட்டு போயுள்ளது என்பதற்கு ஓர் அபாயகரமான அறிகுறியாகும். பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கியும் அவரது சக கூட்டாளிகளும் கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத் துறையை வரலாற்று திரித்தல்வாதம் மற்றும் கம்யூனிச-எதிப்புக்கான ஒரு சித்தாந்த மையமாக மாற்றியுள்ளனர். இப்போதோ அவர்கள் ஜனநாயக விரோத வழிவகைகளைப் பிரயோகித்து, பல்கலைக்கழகம் முழுவதிலும் அவர்களின் அரசியல் நிகழ்ச்சிநிரலை திணிக்க முனைந்து வருகின்றனர். அவ்வறிக்கையை உடனடியாக அதன் வலைத் தளத்திலிருந்து நீக்குமாறு நாம் கோருகிறோம். அது எவ்வாறு வெளியானது என்பது பற்றிய ஒரு விசாரணைக்கான கோரிக்கையையும் நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். ”துறையின் சார்பாக” பேராசிரியர் பர்ஸ்ஷெல் கையொப்பமிட்டுள்ளார். ஆனால் துறையென்பது வெறுமனே அவரும் அவரது நீண்டகால சக பல்கலைக்கழக கூட்டாளி பார்பெரோவ்ஸ்கியும் மட்டுமே அல்லவே, மாறாக அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் அதில் உள்ளடங்குவர். அந்த அறிக்கை எங்கு எப்போது விவாதிக்கப்பட்டது? யாருக்கு தெரிவிக்கப்பட்டது? அதை அங்கீகரித்தது யார்? இதை அறிந்து கொள்ளும் உரிமை பல்கலைக்கழக மாணவர்களுக்கு உண்டு. With best regards, Ulrich
Rippert Christoph
Dreier |
|