தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan plantation workers denounce government over landslide tragedy இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் நிலச்சரிவு பெருந்துயரம் தொடர்பாக அரசாங்கத்தை கண்டனம் செய்கின்றனர்
By our
correspondents Use this version to print| Send feedback இலங்கையின் மத்திய மலைகள் நிறைந்த மேட்டுப் பகுதியான நுவரேலியா மாவட்டத்தில் பல தேயிலை தோட்டங்களிலுள்ள ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் அக்டோர் 29ல், 200 தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கொன்ற கோஸ்லான்டா நிலச் சரிவு தொடர்பாக வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். பாதுகாப்பான இடத்தில் வீட்டு வசதிக் கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் போகவன்தலவா, மஸ்கலியா, ஹட்டன் உட்பட பல நகரங்களில் ஊர்வலம் நடத்தினர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தோட்டத்தொழில் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள், பலவருடங்களாக நிலச்சரிவு அழிவுகளின் பாதிப்புக்குள்ளாகும்படியாக தம்மை விட்டு வைத்ததை கண்டித்து சுலோகங்களை எழுப்பினர். இந்த நிலச்சரிவு, 2004 சுனாமிக்கு பிறகு இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரும் அழிவாகும். அது ஒரு கிலோமீட்டர் விசாலமான நிலப்பரப்பை அழித்தது. அங்கே மேரியாபேடா தோட்டத்தில் 150 தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். ஏழு ’’லைன்களில்’’ — 20 சிறிய வாழும் அறைகள் அல்லது ‘’லைன் அறைகளாக’’ பிரிக்கப்பட்ட நீண்ட கட்டிடங்கள் தரைமட்டமாகியது. டசின் கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டன, மேலும் அதிகமான உடல்கள் காணாமல் போய் விட்டன,சேற்றுக்குள்ளும் பூமிக்குள்ளும் புதைந்து போய் உள்ளன. நிலச்சரிவுக்கு சில வாரங்களுக்கு முன்பு அங்கு மழை பெய்தது, ஆனால் தோட்ட தொழில் நிர்வாகம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மக்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்களின் அதிகமான கோபம் ராஜபக்ச அரசாங்க அமைச்சர் மற்றும் முக்கிய தோட்டத்துறை தொழிற்சங்க அமைப்பான சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகம் தொண்டமானுக்கு எதிராக திருப்பப்பட்டது. நிலச்சரிவு பற்றி எச்சரிக்கை விடுத்தபொழுதிலும் அந்த பகுதியில் குடும்பங்கள் வாழ்ந்து வருவது பற்றி தனக்கு தெரியாது என்று பிபிசி நேர்காணலின் போது தொண்டமான் குறிப்பிட்டார். உண்மையில் தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு, (என்பிஆர்ஓ) புவிப்படம் எடுத்தல் மற்றும் கொசலான்டா பகுதி மிகவும் ஆபத்தானவை என்று அடையாளப்படுத்தியதுடன் அதன் நிபுணர்கள் 2005 இலிருந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். பதுளை, நுவரேலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குள் இருக்கும் குழந்தைகள், குடியிருப்போர், உள்கட்டமைப்பு மற்றும் தோட்டங்களுக்கான அபாயங்களை குறைப்பதற்காக, 2012ல், என்பிஆர்ஓ கண்டுபிடித்தது 47 ஆபத்தான நிலச்சரிவு பகுதி மற்றும் 30 நிலச்சரிவினால் பாதிக்கப்படக்கூடிய பள்ளிகள் ஆபத்தை குறைக்க தணிக்கை பண்ணுவது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தது. 47 நிலச்சரிவு பகுதிகளில் 16 உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பிஆர்ஒ முதன்மை கொடுத்தது. எவ்வாறாயினும், குறைந்தளவில் தான் தணிக்கை திட்டம் அமுல்படுத்தப்பட்டது. மிகவும் ஆபத்தான சூழலில் வாழ்ந்து வரும் மக்களை பாதுகாக்க தவறிய அரசாங்கம் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பற்றி வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பேசினர். அப்காட்டில் கிலனுகி தோட்டத்துறையிலிருந்து வந்த பெண் தொழிலாளியான வி. சகுந்தலா, கருத்து தெரிவித்தார்; ’’அரசாங்கமும் தோட்டத்துறை நிர்வாகமும் பாதுகாப்பான இடத்தில் முறையான வீடு கட்டியிருந்தால், இந்த இறப்பை தடுத்திருக்கலாம். யாரும் எங்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை, .தொழிற்சங்கம் உண்மை நிலைமையை மூடிமறைக்கின்றன தோட்டத்துறை நிர்வாகத்துடன் நெருக்கமாக வேலை செய்கின்றன. எங்களது தோட்டத்துறையில் பல வீடுகளுக்கு நிலச்சரிவு ஆபத்துகள் பற்றி எச்சரிக்கை விடப்பட்டது. நானும் முறையான வீட்டில் வசிக்கவில்லை. எனது கணவர் இறந்துவிட்டார். நானும் எனது குழந்தைகளும் தற்காலிகமாக குடிசை வீட்டில் வசிக்கிறோம் நான் நிர்வாகத்திடமும் இதொகா விடமும் பல முறை என் வீட்டு பிரச்சனை தொடர்பாக முறையிட்டுள்ளேன், எவரும் அக்கறை எடுத்தப்பாடில்லை’’ ஒரு இதொகா உறுப்பினரான கந்தசாமி சிவப்பிரகாசம் விளக்கியதாவது; ’’ஒரு நெருக்கமான வீட்டில் என்னுடைய குடும்பமும், என்னுடைய சகோதரர் உட்பட ஒன்பது பேர் வசிக்கிறோம், அந்த இடம் நிலச்சரிவு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் அறையில் எந்த வித அடிப்படை வசதியும் இல்லை. நாங்கள் சமைக்கும் பொழுது, வீடு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்துவிடும்.
‘’எங்களது தோட்டத்திலுள்ள இதோகா தொழிற்சங்க தலைவர் எங்களுடைய நிலமைகள் பற்றி வெளிப்படையாகவோ அல்லது ஊடகங்களுடனோ பேசுவதை தடுக்க முயற்சிக்கிறார் ஆனால் நான், எங்கள் அடிமை போன்ற நிலமை பற்றி வெளிப்படையாக பேசத்தயார். தொழிற்சங்கங்கள் உபயோகமற்றவை மழைக்காலத்தில் எங்கள் கூரையை மூடுவதற்கு ஒரு ரப்பர் சீட்டை வாங்குவதற்கு நான், 50 முறைக்கு மேலாக நிர்வாக அலுவலகத்திற்கு சென்றிருக்கிறேன் சிவப்பிரகாசம் இறுதியாக குறிப்பிடும்பொழுது; ’’அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் தாம் அரசாங்கத்தோடு இணைந்ததாக குறிப்பிடுகின்றனர். அதற்கு மாறாக நமது இறந்த உடல்களுக்கு மேலாக அவர்கள் வசதியான அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டனர்.’’ கிளனுகியில் இருந்து வந்த ஒரு ஓய்வுபெற்ற தொழிலாளி குறிப்பிடும்பொழுது ’’பல தொழிலாளர்கள் எங்கள் தோட்டத்தில் தற்காலிக குடிசையில் வசிக்கின்றனர். சில தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு நான்கு பெர்சஸ் (400 சதுர மீட்டர்) நிலம் வழங்கப்பட்டது அனைத்து நிலத்துண்டுகளும் சரிவான இறக்கத்தில் தான் உள்ளன, ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டை பிரிக்கும் பகுதி எதுவும் கிடையாது. எனவே ஒரு நிலச்சரிவு ஏற்பட்டால் வரிசையாக கட்டிடங்களை போன்று எல்லா வீடுகளும் வீழ்ந்து விடும். ‘’நாங்கள் இங்கு வந்து ஆர்ப்பாட்டம் பண்ணுவது, எங்களுடைய அனுதாபத்தை கொசலன்டாவில் புதைந்துபோன அல்லது ஒரு பெருந்துயரமான சம்பவத்தில் உயிர் பிழைத்த எங்களுடைய சக தொழிலாளர்களுக்கு தெரிவிப்பதற்காக மட்டுமல்லாமல் அதே அபாயத்தை எதிர்கொண்டுள்ள இதர தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு அக்கறை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கும் தான். அரசாங்கம் நெடுஞ்சாலை கட்டுவதற்கு மில்லியன் கணக்கில் ரூபாயை செலவிடுகிறது அதே நேரத்தில் தோட்டத்துறை தொழிலாளர்கள் கடந்த 150 வருடங்களாக பாதுகாப்பற்ற லைன் அறைகளில் வாழும்படியான இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.’’ 2005 இலிருந்து வீடுகளை காலி செய்யும்படி எச்சரிக்கை விடுத்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரசாங்கமோ அல்லது தோட்ட நிர்வாகமோ மாற்று வீடுகளை ஒழுங்கமைத்து தர எதுவுமே செய்யவில்லை என்று .பல தொழிலாளர்கள் கூறினார்கள். இந்த குடும்பங்கள் போவதற்கு இடமே கிடையாது. அவர்கள் அந்த ஆபத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அதேநேரத்தில் இந்த துயரம் நடைபெற அனுமதித்ததற்கு பொறுப்பான அனைவரின் உணர்வற்ற தன்மையையும் அலட்சியத்தையும் அவர்கள் கண்டனம் செய்தனர். உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பூனகல தமிழ் பள்ளிக்கு பயணம் செய்தனர் அங்கே கொசலன்டா நிலச்சரிவினால் இடம் பெயர்க்கப்பட்ட 64 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது, அத்துடன் நிலச்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளான .டியகலா தோட்டத்தை சேர்ந்த 157 குடும்பங்களும் இருந்தன. 40 சதுர மீட்டர் வகுப்பறை ஒன்றை 30 பேர் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. முன்னாள் மீரியபேடா தோட்ட தொழிலாளி மாரிமுத்து ராஜாரீடர் குறிப்பிட்டார்; ‘’;நிர்வாகமும் அரசாங்கமும் பழைய தொழிலாளர்களை முழுமையாக கைவிட்டுவிட்டன. நாங்கள் வாழும் பகுதி நிலச்சரிவில் பாதிப்பிற்குள்ளாகும் என்று எங்களுக்கு தெரியும். என்ன செய்வது? மாற்று இடம் வழங்கப்படாத போது எங்கே போவது? அரசாங்கம் எங்களுக்கு எதையும் செய்யவில்லை. எங்களுடைய வாக்குகள் மட்டும்தான் அதன் அக்கறையாக உள்ளது. ராஜாரீடர் மேலும் கூறினார்; ‘’தொண்டமானோ (இதொகா தலைவர்) அல்லது அரசாங்கமோ அல்லது தோட்டத்துறை நிர்வாகமோ எங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடு வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கவில்லை. தோட்டத்துறை மேற்பார்வையாளர் மற்றும் அதிகாரி இங்கு பயணம் செய்து, தாம் இழப்பை எதிர்கொள்வதால் எங்களை வேலைக்கு வரும்படி கூறினார்கள். அவர்களது முழு அக்கறையுமே பணம் தான். எங்கள் மக்களின் அனைத்து தலைமுறையினருமே அவர்கள் இலாபம் ஈட்டுவதற்கு உழைத்துள்ளனர். அவர்கள் எங்களுக்கு மாற்று இடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த இடத்தில் 60 வருடங்களுக்கு முன்னர் நிலச்சரிவு ஏற்பட்டது. அவர்கள் எங்களை மீண்டும் அழிவுக்குள் தள்ளுகின்றனர். நாங்கள் அவர்களை விரட்டி ஓட்டினோம். நிலச்சரிவு பேரழிவு அளவை (டிஎம்சி) குறைத்துக் காட்டுவதற்காக, ராஜபக்ச அரசாங்கம் கொசலன்டா நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 34 ஆக குறைத்துள்ளது. அரசாங்கத்தின் பேரழிவு நிர்வாக மையம் (டிஎம்சி) அதன் முந்தைய அறிக்கையில் அந்த பாதிக்கப்பட்ட பகுதியில் 330 பேர் வாழ்வதாக குறிப்பிட்டது, பிறகு அதை 100 ஆக குறைத்துவிட்டது. 100 குடியிருப்பவர்களில் 78 பேர் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட டிஎம்சி, 34 பேர் அழிந்து விட்டதாக கூறியது, மீதிப்பேர் வேறு எங்காவது இடம் பெயர்க்கப்பட்டிருக்கலாம் என்றது. பூனகலா தமிழ் பள்ளியில் வசிக்கும் மேரியபேடா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாற்றி கூற முயற்சிப்பதை கண்டனம் செய்தனர். அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் செலவீனங்களை குறைக்க முயற்சிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். |
|
|