World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா ICFI/WSWS supporters in India hold public meeting on danger of world war இந்தியாவில் நாஅஅகுழு/உலக சோசலிச வலைதளத்தின் ஆதரவாளர்கள் உலக யுத்த அபாயம் தொடர்பாக பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள்
By our correspondents உலக யுத்த அபாயத்திற்கு சோசலிச பதில் பற்றி கலந்துரையாட கடந்த ஞாயிற்றுக்கிழமை நுங்கம்பாக்கம், சென்னையில். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மற்றும் உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் நடத்திய வெற்றிகரமான பொதுக்கூட்டத்தில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்களும் அதேபோல் தொழிலாளர்களும் பங்குபெற்றனர். ஏகாதிபத்திய போர் அபாயம் வளர்ந்து வருவதை இந்திய ஊடகங்கள் முற்றிலும் மூடிமறைப்பதை செய்து வருவதாக ஆரம்ப உரையில் தலைவர் சதிஷ் சைமன் குறிப்பிட்டார். இந்தியாவிலுள்ள நாஅஅகுழு-உலகசோசலிச வலை தள ஆதரவாளர்கள் மட்டும்தான் மிகவும் பேரழிவுகரமான அபிவிருத்திகள் ஏற்படக்கூடிய சாத்தியம் பற்றி விளக்குவதுடன் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச மாற்றீடு முன்னோக்கிற்காக வாதிடுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்ற ஜி20 கூட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக ஆத்திர மூட்டும் கருத்துகள் வெளியிட்டது பற்றிய விஷயத்தை முதலாவது பேச்சாளரான, நாஅஅகு-உலக சோசலிச வலை தள ஆதரவாளர் குழுவின் காப்பாளர் அருண் குமார் கவனத்திற்கு கொண்டு வந்தார். இது ஏகாதிபத்திய மோதல் உயர்ந்தளவில் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதன் அபாயத்தை தெளிவாக சமிக்கை செய்வதாக அவர் எச்சரித்தார். ‘‘அமெரிக்காவின் ‘வட்டப்பாதைக்குள் புதுதில்லி, மிகவும் நெருக்கமாக சாய்ந்து வாஷிங்டனின் சீனாவிற்கு எதிரான ‘ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை’ ஊக்குவிக்கிறது’’ என்று குமார் குறிப்பிட்டார். ‘தென்சீனக்கடலிலும் மற்றும் ஏனைய எல்லை தகராறுகளிலும் சீனாவிற்கு எதிராக தன்நிலையை நிலைநாட்டும்படி புதுதில்லியை அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஊக்குவிக்கின்றன, இது இந்தியாவை அதன் ‘முன்னெடுப்புக்குள் மிகவும் நெருக்கமாக ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதி’ என்று அவர் சுட்டிக்காட்டினார். ஏகாதிபத்திய போர் அபாயம் மற்றும் தொழிலாள வர்க்கதிற்கு எதிரான தாக்குதல்களை முதலாளித்துவ அமைப்பை உலகளவில் தூக்கிவீசுவதன் மூலமாக மட்டும்தான் தோற்கடிக்க முடியும் என்று கூட்டத்தில் பேச்சாளர் கூறினார்..இந்த போராட்டத்தில் தொழிலாள வர்க்கம், டிராட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கு முதன்மை முண்டுக்கொடுப்பாளானாக இருந்து வரும் பல்வேறு ஸ்டாலினிச கட்சிகளுக்கு எதிராக போராட வேண்டும். இரண்டாவது பேச்சாளர் எம்.அரவிந்தன் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர். அவர் நாஅஅகு வின் இலங்கை பகுதியிலிருந்து தோழமை வாழ்த்தினை தெரிவித்தார். ‘’இந்தக் கூட்டம், ‘’உலக புவிசார் அரசியல் பதட்டங்களின் வேகமான அதிகரிப்பு மற்றும் வர்க்க போராட்டங்களின் வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக சோசலிச முன்னோக்கின் பக்கம் திரும்பும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் முக்கியமான அரசியல் மாற்றங்களை பிரதிபலிக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டார்.
‘சோசலிசம் மற்றும் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டம்’ என்ற `நாஅஅகு வின் சமீபத்திய கூட்டத்தொடர் தீர்மானத்திலிருந்து மேற்கோள் காட்டி, 20ம் நூற்றாண்டில் இரண்டுமுறை செய்தது போல், அமெரிக்க மற்றும் இதர ஏகாதிபத்திய சக்திகள் மற்றொரு முறை மனித இனத்தை , உலக யுத்தத்தை நோக்கி இழுத்து செல்கின்றன என்று அரவிந்தன் விளக்கினார். கடந்த நூற்றாண்டின் முக்கியமான வரலாற்று படிப்பினைகள் பற்றி அரவிந்தன் குறிப்பிட்டார், அதாவது ரஷ்யாவில் போல்ஷேவிக் கட்சி தலைமையில் நடத்தப்பட்ட 1917 அக்டோபர் புரட்சியின் மூலம் தான் முதல் உலக யுத்தம் முடிவுக்கு வந்தது.மற்றும் ரஷ்ய புரட்சியின் சர்வதேச சோசலிச முன்னோக்கை சோவியத் ஸ்டாலினிச அதிகாரத்துவம் காட்டிக்கொடுத்த தனால் அது இரண்டாம் உலகப்போருக்கான நிலைமைகள் உருவாவதற்கு உதவியது.’’ பேச்சாளர் தொடர்ந்தார்; ‘’இரண்டாம் உலக யுத்த காலத்தில், ஸ்டாலினிச இந்திய கம்யூனிச கட்சி, சோவியத் அதிகாரத்துவத்தின் அறிவுரையின் கீழ் ஜேர்மன் பாசிசத்திற்கு எதிராக ‘ஜனநாயகத்தை’ பாதுகாக்கின்றோம் என்ற போர்வையின் கீழ், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு அளித்தது, மற்றும் அதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்தது, அதுவும் பிரிட்டீஷ் ஏகாதிபத்திய யுத்த முயற்சிக்கு ஆதரவளித்தது. நான்காம் அகிலத்தின் இந்திய உப கண்ட பிரிவான இந்திய போல்ஷேவிக் லெனினிச கட்சி மட்டும் தான் இந்த பிராந்தியத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கும் மற்றும் போருக்கு எதிராகவும் போராடியதாகும். அரவிந்தன் சமீபத்திய வளர்ச்சி தொடர்பாக கூறுகையில் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக அதன் புவிசார் அரசியல் நிகழ்ச்சிநிரலை எடுக்கும் பாகமாக இலங்கை ராணுவத்தால் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக கொழும்பு நடத்திய உள்நாட்டுப்போரின் போது இழைக்கப்பட்ட போர் குற்றங்களை, இலங்கை ராஜபக்ஷ அரசாங்கம் மீது அழுத்தம் செலுத்துவதற்கு பயன்படுத்துகிறது.என்றார். “வாஷிங்டனின் உண்மையான கவலை தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் அல்லது போர் குற்றங்கள் அல்ல. ஆனால் சீனாவுடன் ராஜபக்ச வைத்திருக்கும் நெருக்கமான உறவை முறிப்பதும் அமெரிக்க புவிசார் மூலோபாய குறிக்கோள்களுடன் இலங்கையை முழுமையாக இணைப்பதுமாகும்’’’’ என்றும் ‘‘அமெரிக்காவை நோக்கி சாய்வதற்கு கொழும்பு உடன்பட்டால், அனைத்து போர்குற்ற விசாரணைகளும் உடனடியாக கைவிடப்படும்’’ என்றார். அரவிந்தன் தனது உரையை முடிக்கையில் கூட்டத்தில் பங்குபற்றிய அனைவரும் டிராட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோக்கை கவனத்துடன் படிக்கும்படியும், அத்துடன் இந்தியாவில் நான்காம் அகிலத்தின் பகுதியை கட்டுவதற்கு நாஅஅகு மற்றும் அதன் இலங்கை பிரிவு நடத்தும் போராட்டத்தில் பங்கெடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார் உரைகளை தொடர்ந்து ஒரு உயிரோட்டமான கலந்துரையாடல் நடைபெற்றது. சோசலிஸ்டுகளால ஏன் இலங்கையில் உள் நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்தமுடியவில்லை என்ற கேள்விக்கு அரவிந்தன் பதில் அளிக்கையில் போரை உருவாக்கிய அரசியல் நிலைமைகள் பற்றி ஆய்வு செய்தார் மற்றும் குறிப்பாக லங்கா சம சமாஜாக் கட்சியினால் (LSSP). முன்னெடுக்கப்பட்ட காட்டிக்கொடுப்பின் தாக்கம் பற்றி விளக்கினார். ட்ரொட்ஸ்கிஸ்ட் என்று கூறிக்கொண்ட, எல்எஸ்எஸ்பி, 1964 இல், சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்து கொண்டது பற்றி பேச்சாளர் விளக்கினார். தொழிலாள வர்க்கத்தை இப்படி காட்டிக்கொடுத்தது, இலங்கை ஆளும் வர்க்கத்தை மட்டும் பாதுகாக்கவில்லை, ஆனால் தமிழ் எதிர்ப்பு இன வாத அரசியல் வளர்ச்சிக்கும் ஊக்கம் அளித்தது, இறுதியாக 1983ல் உள்நாட்டு யுத்த வெடிப்பிற்கு வழி வகுத்தது. எல்எஸ்எஸ்பியின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக புரட்சிகர ட்ரொட்ஸ்கிச பாரம்பரியத்துக்கு புத்துயிர்ப்பு அளிக்கவும் அதனை தொடரவும் நாஅஅகு வின் இலங்கை பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (புகக) 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. கொழும்பின் போருக்கு எதிராகவும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அனைத்து இலங்கை துருப்புக்களும் நிபந்தனையின்றி திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்றும் புகக வும் சோசக யும் மட்டும் தான் போராடின என்று அரவிந்தன் குறிப்பிட்டார் புகக மற்றும் சோசக யின் புரட்சிகர முன்னோக்கு மற்றும் ஜேவிபி, எல்டிடிஈ போன்ற அனைத்துவித குட்டி-முதலாளித்துவ தேசிய இயக்கங்களுக்கும் எதிரான தொடர்ச்சியான சோசலிச சர்வதேசிய போராட்டம் ஆகியவை சரியானது என்று வரலாறு நிரூபணமாக்கியள்ளது. ‘’தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பிராந்தியத்தில் அனைத்துவித முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசுவதற்கான போராட்டத்தின் பாகமாக மட்டும்தான் பாதுகாக்கப்படமுடியும் மற்றும் சர்வதேச சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் பாகமாக தென் ஆசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை நிறுவுவதன் மூலமாகும்.‘’ கூட்டத்திற்கு பிறகு உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் பல பார்வையாளர்களிடம் பேசினர் சதிஷ் குறிப்பிட்டார்; உலகப்போர் அச்சுறுத்தல் பற்றி பேசுவது சரிதான். அமெரிக்க எதிராக போராடுவது எப்படி சாத்தியம் என்று வியந்தேன் இந்த உரைக்குப்பின்னர் அமெரிக்கா பொருளாதார ரீதியாக பலவீனமான நாடு ,இராணுவரீதியாக மட்டும்தான் பலமாக உள்ளது என்று புரிந்து கொள்கிறேன். சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் பலம்வாய்ந்த அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை ஒன்றாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டும் தான் யுத்தத்தை தடுத்து நிறுத்த முடியும். அமெரிக்காவின் ஆழமான பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் அது போருக்கு உந்தப்படுகிறது என்று அறிந்து கொண்டேன். ஒரு சட்டக்கல்லூரி மாணவரான சக்திவேல், கூறினார்; ‘’சீனாவிற்கு எதிராக அமெரிக்க போர் தயாரிப்பில் இலங்கை மற்றும் இந்தியா உட்பட ஆசியா பகுதிகளில் எந்த நாடும் தப்பமுடியாது. உலக முழுவதும் போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டுவதற்கு உடன்படுகிறேன். இது அரசு எல்லைகளை கடந்து வெகுஜன அளவில் சர்வதேச தொழிலாள வர்க்க தலையீட்டில் சோசலிச சமத்துவத்தை ஸ்தாபிப்பதற்கான புரட்சிக்காக போராட வேண்டும். ஒரு தொழிலாளியான ராஜா கூறினார்; ‘’சோசலிசத்திற்காக நாம் போராட வேண்டும் என்பதை நான் உணருகிறேன். அந்த வழியில் மட்டும்தான் யுத்தத்தை தடுத்து நிறுத்தமுடியும். சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்காக ஒரு உலகக் கட்சி போராடுகிறது என்பதை அறிவதில் நான், சந்தோஷப்படுகிறேன். |
|