World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை India and US to further expand military-strategic ties இந்தியாவும் அமெரிக்காவும் இராணுவ மூலோபாய தொடர்புகளை மேலும் விரிவாக்க உள்ளன
By Deepal
Jayasekera கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் புதுதில்லிக்கு ஒரு விஜயம் செய்தபோது இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே இருந்த நெருங்கிய இராணுவ மூலோபாய தொடர்புகளை மேலும் விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளன. அவரது மூன்று நாள் விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்று இரட்டை வேடம் ஏற்றிருக்கும் அருண் ஜேட்லி, பிரதம மந்திரி நரேந்திர மோடி உள்பட இந்தியாவின் புதிய பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் முன்னணி தலைவர்களுடன் ஹெகல் பேச்சுவார்த்தை நடத்தினார். பத்து வருட பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க ஹெகல் மற்றும் ஜேட்லி ஒப்புக்கொண்டனர். 2005இல் உடன்படிக்கை செய்யப்பட்ட ஒப்பந்தம், வரும் ஜூலை காலாவதியாக உள்ளதால் பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் இந்தியாவுடனான இந்திய-அமெரிக்க உறவில் ஒரு அடிப்படை மாற்றத்தை குறிக்கிறது. கூடுதலான பனிப்போர் காலம் முழுவதும் அமெரிக்கா ஒரு விரோதியாகப் பார்த்த இந்தியா பென்டகனின் மிகவும் விரும்பப்பட்ட கூட்டாளிகளில் ஒன்றாக வெளிப்படுகிறது. பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்னெடுப்பு (DTTI) ஐ செயலூக்கத்துடன் முன்னெடுத்துச் செல்லவும் ஹெகல் மற்றும் ஜேட்லி முடிவு செய்தனர். இந்த 2012 ஒப்பந்தத்தின்படி, ஒரு இந்திய-அமெரிக்க "உலகளாவிய மூலோபாய கூட்டை" ஆதரித்து வளர்க்கும் குறிக்கோளுடன் சில உயர் தொழில் நுட்ப ஆயுதங்கள் மற்றும் ஆயுத முறைகளின் தயாரிப்பில் இந்தியாவுடன் கூட்டு சேரும் வாய்ப்பை அமெரிக்கா வழங்கியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை, பார்வையாளர் ஆராய்ச்சி அமைப்பு (Observer Research Foundation) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது DTTI “எங்கள் பாதுகாப்பு உறவின் மையம்" என்று ஹெகல் பிரகடனம் செய்தார். அதாவது வாஷிங்டன், புதுதில்லிக்கு வழங்கிக்கொண்டிருக்கும் இராணுவ கூட்டு அபிவிருத்தி மற்றும் கூட்டு தயாரிப்பு ஒப்பந்தங்கள் அனைத்தும் அமெரிக்கா "மற்ற எந்த ஒரு நாட்டுடனும்" கொண்டுள்ளதை விட வேறுபட்டிருக்கிறது என்று கூறுமளவிற்கு சென்றார். ஏழு இராணுவ தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவுடன் கூட்டாக வேலை செய்ய அமெரிக்கா வாய்ப்பு அளித்திருப்பதாக கூறப்படுகிறது மேலும் ஹேகலின் கூற்றுப்படி "ஒரு டஜனுக்கும் அதிகமான உறுதியான திட்டங்கள்" அமெரிக்கா முன்வைத்துள்ளது. செய்திகளின்படி, அமெரிக்க ஜாவலின் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் அடுத்த தலைமுறை ஜாவலின் ஏவுகணை கூட்டு அபிவிருத்தி, ஹாக் 21 தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை கூட்டு அபிவிருத்தி, மேக்னடிக் காட்டபல்ட்ஸ் (magnetic catapults) அபிவிருத்தியில் ஒத்துழைப்பு ஆகியவை இந்தியாவில் தயாரிப்பதற்கான வாஷிங்டனின் திட்டங்கள் உள்ளடக்கியிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா, $10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்றிருக்கிறது, அது உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளரான இந்தியாவுடனான இராணுவ விற்பனையை விரிவாக்கம் செய்ய ஆர்வமாக இருக்கிறது. ஆனால் DTTI-க்கு அமெரிக்கா கொடுக்கும் முக்கியத்துவம் ஒபாமா நிர்வாகம் மற்றும் பெண்டகன் அதிகாரிகளின் கருத்தில் இருக்கும் தலையாய மூலோபாய கேள்விகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது. சீனாவிற்கு மூலோபாய எதிர்வலிமையாக இந்தியாவை உருவாக்கவும் மற்றும் சீனாவை மூலோபாய முறையில் சுற்றிவளைத்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு முக்கிய இணைப்பாக புதுதில்லியை மாற்றும் குறிக்கோளுடன் அமெரிக்கா ஒரு பத்து வருட காலத்திற்கும் அதிகமாக இந்தியாவின் ஆதரவை பெற தீவிரமாக முயற்சி செய்கிறது. வாஷிங்டனின் சூறையாடும் மூலோபாய நிகழ்ச்சிநிரலுக்கு இந்தியாவிற்கு ஆயுதமளிக்கும் குறிக்கோளுடன் இராணுவ மூலோபாயம், பொருளாதாரம் மற்றும் இராஜாங்கரீதியான முயற்சிகள் ஆகியவற்றின் ஒரு பரந்த உந்துதலின் ஒரு பகுதியாக மேம்பட்ட ஆயுதங்கள் திட்டங்களுக்கான கூட்டு தயாரிப்பு ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலம், அமெரிக்கா மற்றும் இந்திய இராணுவங்களின் நெருக்கமான ஒருங்கிணைவை மேம்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. அதன் ஆக்கிரமிக்கும் மற்றும் ஆத்திரமூட்டும் தன்மையை மறைத்துவைக்க விரும்பும் அதே சமயத்தில் ஹேகல் இந்த நிகழ்ச்சிநிரலுக்கு அவருடைய இந்திய வருகையின்போது தானே மேற்கோள் காட்டினார். "இன்று இந்தியா கிழக்கை பார்க்கையில் அமெரிக்கா ஆசியாவை நோக்கி சமநிலைப்படுத்துகிறது" என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கூறினார். அதாவது மிகப் பெரும்பான்மையான அதன் இராணுவ பலத்தை இந்திய-பசிபிக் மண்டலத்திற்கு மாற்றுகிறது - "முன்னெப்பொழுதையும் விட மிகவும் நெருக்கமாக” இந்த இரண்டு நாடுகளும் ஒரே வரிசையில் சேருகின்றன என்றார். எவ்வாறாயினும் பின்னர், இந்தியாவுடனான அமெரிக்காவின் நெருக்கமான இராணுவ-மூலோபாய தொடர்புகளுக்கான அழுத்தம் சீனாவிற்கு எதிராக திருப்பப்பட்டதல்ல என்று வெட்கம்கெட்டவிதத்தில் கூறினார். அமெரிக்கா மற்றும் அதன் ஆசிய கூட்டணிகள் மற்றும் சீனாவுடனான ஒரு அனுகூலமான உறவுமுறைக்கும் இடையே ஒன்றை தேர்ந்தெடுக்க தேவையில்லை என்பதைப்போல் "அமெரிக்காவுடனான நெருக்கமான கூட்டா அல்லது சீனாவுடனான மேம்பட்ட தொடர்பா என்ற இரண்டில் ஒன்றை,” இந்தியா தேர்ந்தெடுக்க தேவையில்லை என்று ஹேகல் கூறினார். ஒரு எழுச்சிமிக்க சீனா குறித்து அதன் கவலையால் இந்தியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும், குறிப்பாக இந்தியாவுடன் ஆயுத விற்பனைகள் மற்றும் கூட்டு தயாரிப்பு ஒப்பந்தங்களுக்கான அமெரிக்காவின் அழுத்தம் ஆகியவற்றால் ரஷ்யாவுடனான வாஷிங்டனின் மோதல்களின் விரைவான அதிகரிப்புக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த முனையில் அமெரிக்காவின் வெற்றிகள் பெருமளவிற்கு ரஷ்யாவின் இழப்பில் வரக்கூடும். ரஷ்யா மிக நீண்டகாலமாக இந்தியாவின் மிக முக்கியமான ஆயுத வழங்குனராக இருந்து வந்துள்ளது. இந்த இராணுவக் கூட்டணி, குறைந்தது பனிப்போர் முடிவுவரை மாஸ்கோவிற்கும் புதுடில்லிக்கும் இடையே நெருக்கமான இணைப்பிற்கு அடித்தளமாக அமைந்திருந்தது. அதேநேரத்தில் மாஸ்கோவிடமிருந்து தான் விலகி இருக்க ஹெகல் இந்தியாவிற்கு பகிரங்க அழைப்பு விடுக்கவில்லை. அமெரிக்காவின் மிக முக்கிய ஆசிய கூட்டாளி ஜப்பானுடன் முத்தரப்பு ஒத்துழைப்பை ஆதரிக்க புது தில்லியை வலியுறுத்தினார். “ஜப்பானுடன் தங்களின் முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவாக்குவது குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் பரிசீலிக்க வேண்டும்" என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அறிவித்தார். “அமைச்சரக மட்டத்தில் முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை நாம் கொண்டிருக்க வேண்டும்.” என்றார். மூலோபாய பூகோள-அரசியல் விடயங்கள் மீது மோடியுடனான ஹேகலின் பேச்சுக்களில் கவனம்செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது, அமெரிக்கா நேரடி இராணுவ தலையீட்டை தொடர்ந்திருக்கும் ஈராக்கில் உள்ள நிலைமை மற்றும் ஆப்கானிஸ்தானில், அமெரிக்காவால் பதவியிலிருத்தப்பட்ட அரசாங்கத்தின் ஒரு தூணாக வாஷிங்டனின் ஆதரவுடன் புது தில்லி வெளிப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பிஜேபி அரசாங்கம் அதன் முதன்மை குறிக்கோள்களில் ஒன்றான இந்திய இராணுவ படைகளை "நவீனப்படுத்துதல்” என்ற அதன் முதன்மை குறிக்கோள்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது மற்றும் சீனாவின் வளர்ந்துக்கொண்டிருக்கும் இராணுவ பலத்தை எதிர்கொள்ள அமெரிக்காவின் கூட்டுத்தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்ற ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்காண வாய்ப்பின் பயனை எடுத்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஜாவலின் ஏவுகணை கூட்டுத் தயாரிப்புக்கான வாஷிங்டனின் திட்டங்களை மதிப்பீடு செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குறைந்தது 22 அமெரிக்க அபாச்சி மற்றும் 15 சினுக் ஹெலிக்காப்டர்கள் வாங்குவதற்கான ஒரு $US1.4 பில்லியன் டாலர் ஒப்பந்தம் பற்றி முடிவுசெய்யும் தருவாயில் இருக்கிறது. ஹேகலுடனான அவருடைய பேச்சுக்கள் குறித்து கூறும்போது, பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதத்திற்கு அதிகரிக்கும் பிஜேபி அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு, இது கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அதன் அவசியத்தை பாதுகாப்பு அமைச்சர் ஜேட்லி வலியுறுத்தினார். “இது சம்பந்தமாக அமெரிக்காவுடன் நெருக்கமாக வேலை செய்வதை எதிர்நோக்குகிறோம்" என்று ஜேட்லி கூறினார். பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் மீது இந்தியா செய்துள்ள "முன்னேற்றம்” குறித்து ஏற்கனவே ஹேகல் புகழ்ந்திருந்தார். ஹேகலுடன் அவருடைய இந்த பேச்சுக்களில், மோடி எந்தவொரு இராணுவ கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தங்களிலும் "நவீன அல்லது முன்னேறிய தொழில்நுட்ப பரிமாற்றம்” குறித்த அதன் வாக்குறுதிகளில் அமெரிக்கா நன்றாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்திற்கு அழுத்தம் கொடுத்து கூறினார். அவருடைய அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், “இந்திய அமெரிக்க "மூலோபாய கூட்டணி” ஒட்டு மொத்த பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார். "தொழில்நுட்ப பரிமாற்றம்” மற்றும் "பாதுகாப்பு தயாரிப்பில்…. முன்னேற்றத்தை காண்பதற்கான அவரின் விருப்பம்,” அதனோடு விரிவாக்கப்பட்ட கூட்டு இராணுவ பயிற்சிகள் மற்றும் மூலோபாய படிப்புகள் ஆகியவை குறித்து அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார். எக்கானமிக் டைம்ஸ் செய்திகளின்படி, “நடப்பிலுள்ள ரஷ்யாவுடனான ஒத்துழைப்புடன் மேலும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற ஏனைய ஆர்வமிக்க கூட்டாளி நாடுகளுடன் கூட்டுத் தயாரிப்பு மற்றும் இணைந்து மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பு உபகரணத் தயாரிப்பில் தன்னிறைவை அடைவது மோடியின் மந்திரமாக இருக்கிறது.” அதேசமயத்தில், பிஜேபி தலைமையிலான அரசாங்கமும் இந்திய இராணுவ பாதுகாப்பு நிறுவனமும் இராணுவ கூட்டுத் தயாரிப்புக்கான அமெரிக்காவின் வாய்ப்பின் பயனை எடுத்துக்கொள்வதில் சற்று குழப்பமடைந்து இருக்கின்றன. இந்திய இராணுவத்திற்கு ஒரு வழங்குநராக அதன் பங்கை முக்கிய மூலோபாய மற்றும் பூகோள அரசியல் விடயங்களில் அது எதிர்பார்த்ததை செய்ய புதுதில்லியை வாஷிங்டன் உபயோகப்படுத்தக்கூடும் என்ற கவலைகள் இருக்கின்றன. இந்தியா நீண்டகாலம் அதன் அணுசக்தி திட்டங்கள் காரணமாக அமெரிக்க பொருளாதார தடைகளுக்கான இலக்காக இருந்தது. 2006 அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஏற்புறுதியின்போது அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்வதற்கான ஒரு நிபந்தனையாக ஈரானுக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்கு புதுதில்லி ஆதரவளிக்கவேண்டுமென்று வாஷிங்டன் தொடர்ந்து கேட்டு வந்தது. DTTI இன் கீழ் அமெரிக்கா வழங்கிய எந்த ஒரு கூட்டு தயாரிப்பு ஒப்பந்தங்களையும் தொடர தவறியதால் முன்னாள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) மீது பெருவணிகம் மற்றும் இராணுவ- பாதுகாப்பு ஸ்தாபனம் ஆகியவை கோபமடைந்தன, என அது கூறியது. கடந்த சனிக்கிழமை மாலை, இந்திய பெருநிறுவனங்களுடன் ஹேகல் ஒரு வட்டமேசை அமர்வில் கலந்துக் கொண்டபோது, தற்போதைய மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு முரண்பட்டதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்திய தனியார்துறையை DTTI இடமிருந்து ஒரு தொலைவு தள்ளியே வைத்திருந்தது என்று தொழிற்துறை பிரதிநிதிகள் குறைகூறினார்கள். |
|