சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Fears of “a new cold war” and conflict in Asia

ஒரு புதிய பனிப்போரின்" அச்சங்களும், ஆசியாவில் மோதலும்

By Peter Symonds
26 August 2014

Use this version to printSend feedback

சீனாவிற்கு எதிரான அதன் "முன்னெடுப்பின்" பாகமாக இந்தோ-பசிபிக் பிராந்தியமெங்கிலும் திட்டமிட்டு பதட்டங்களைத் தூண்டிவிட்டும், வெடிப்பு புள்ளிகளுக்கு எரியூட்டியும், ஒபாமா நிர்வாகம் அதன் கட்டுப்பாட்டுக்கு வெளியே சக்திகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதோடு, யுத்தத்தை நோக்கிய சரிவை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த அதிகளவில் கொந்தளிப்பான மற்றும் அபாயகரமான நிலைமை, அதை உருவாக்க நேரடியாக பொறுப்பானவர்கள் மத்தியிலேயும் சேர்ந்து, வாஷிங்டனில் ஓரளவிற்கு பதட்டங்களைத் தூண்டிவிட்டு வருகிறது.

ஒபாமாவின் முன்னாள் அதிகாரி குர்ட் காம்ப்பெல்லால் கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துரை, அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையிலான முந்தைய மூலோபாய உறவுகளோடு, “அமெரிக்க இராணுவ பிரசன்னம் மற்றும் ஆசியாவில் அதன் தலைமை பாத்திரத்துடன்", ஒரு அதிகரித்த அளவில் துருவமுனைப்படுத்தப்பட்ட பிராந்தியம் உடைந்து வருவதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. உண்மையில் நாடுகள் முறைப்படியோ அல்லது அடிப்படைரீதியாகவோ ஏதேனும் தரப்பைத் தேர்ந்தெடுக்க தொடங்கினால், ஆசியா ஒரு புதிய பனிப்போருக்குள் வேகமாக சரியுமென," அவர் எச்சரிக்கிறார்.

"ஆசியாவின் மூலோபாய வாய்ப்புகள்: நேர்த்தியானதா அல்லது கூர்மையானதா?" என்ற காம்ப்பெல்லின் கட்டுரையில், ஏனைய எல்லாவற்றையும் போலவே, இத்தகைய கருத்துக்களும் வெறுப்பூட்டுவதாகவும், பாசாங்குத்தனத்தோடும் நிரப்பப்பட்டு இருக்கின்றன. கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணை செயலராக அவரும் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பிரதான வடிவமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார்அது அப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை பலவீனப்படுத்துவதன் மூலமாக அமெரிக்க மேலாதிக்கத்தைத் தக்கவைக்கவும் மற்றும் யுத்தத்திற்கு இராணுவரீதியில் தயாரிப்பு செய்வதற்கும் ஒரு பரந்த மூலோபாயமாகும்.

பெரிதும் திரைக்குப்-பின்னால் வசப்படுத்தும் வேலைகளுக்கும், வாஷிங்டன் உடன் தரப்பெடுக்குமாறு அரசாங்கங்களை நிர்பந்திக்க அச்சுறுத்துவதற்கும், மேலதிக ஆக்ரோஷ சீன-விரோத நிலைப்பாட்டை எடுப்பதற்கும் மற்றும் அமெரிக்க இராணுவ தளங்களை விரிவாக்க அனுமதிக்குமாறு செய்வதற்கும், அப்பிராந்தியத்தில் ஒபாமாவின் பிரதான இராஜாங்க அதிகாரியாக இருந்த காம்ப்பெல் பொறுப்பாவார். அவரது பார்வையில், சீனா மற்றும் அதன் அண்டைநாடுகளுக்கு இடையே தென்சீனக் கடலின் பிரச்சினைகளை அமெரிக்கா எரியூட்டியது, கொரிய தீபகற்பத்தில் பதட்டங்களைத் தணிக்க ஆறு-நாடுகள் பேச்சுவார்த்தைக்கு (six-party talks) எவ்விதத்திலும் திரும்புவதைத் தடுத்தது, வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையே ஒரு பிளவை உந்த, லோவர் மேகோங் (Lower Mekong) முன்முயற்சியை ஊக்குவித்தது, மற்றும் அப்பிராந்தியம் முழுவதிலும் இராணுவ கூட்டணிகளை, நட்புறவுகளை மற்றும் தொடர்புகளைப் பலப்படுத்தியது.

உண்மையில் இவ்விதத்திலான காம்ப்பெல்லின் விமர்சனங்கள், "நீண்டகால மூலோபாய அணிசேர்வை ஒட்டுமொத்தமாக மறுமதிப்பீடு செய்வதற்கான அப்பிராந்தியமெங்கிலுமான உரத்த குரல்களை" நோக்கி திரும்பி இருக்கிறது, இவற்றின் மூலமாக அவர் அமெரிக்க "முன்னெடுப்பின்" விமர்சகர்களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். “ஒரு அடிப்படை மறுநிலைநோக்கை எடுப்பதற்கும் மற்றும் வாஷிங்டன் உடனான அரசியல் உறவுகள் மற்றும் தொடர்புகள் மீதான நெருக்கத்தைக் குறைப்பதற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இது சரியான நேரமாகும் என்று, முன்னாள் பிரதம மந்திரிகள் உட்பட, பல பிரதான மூலோபாயவாதிகள் மற்றும் விமர்சகர்கள் வாதிடுவதாக" அவர் வெளிப்படையாக குறிப்பிடுகிறார்.

அமெரிக்க கப்பற்படைகளுக்கும், போர்கப்பல்களுக்கும் மற்றும் போர்விமானங்களுக்கும் ஆஸ்திரேலிய தளங்களைத் திறந்துவிட்டமை உட்பட "முன்னெடுப்புக்கு" தற்போதைய கூட்டணி அரசாங்கம் மற்றும் முந்தைய தொழிற் கட்சி அரசாங்கத்தின் தங்குதடையற்ற பொறுப்புறுதியை விமர்சித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி மால்கம் ஃபிரேசரை நிச்சயமாக அவர் மனதில் நிறுத்தி இருக்கிறார். சனியன்று ஆஸ்திரேலிய ABC நேர்காணலில் ஃபிரேசர் எச்சரித்தார்: “ஜப்பான் ஏதாவது முட்டாள்தனமாக செய்து சீனா உடன் அமெரிக்கா போருக்கு செல்கிறதென்றால்—அது மிகவும் சாத்தியமான ஒரு சூழலாக இருக்கின்ற நிலையில்அந்த கணத்தில் ஆஸ்திரேலியா, தற்போதைய கொள்கை தகவமைப்புகள்படி, “முடியாது" என்று கூறுவதற்கு தகைமை பெற்றிருக்கவில்லை," என்றார்.

எது எவ்வாறிருந்தாலும் காம்ப்பெல்லின் பிரதான கவலை ஃபிரேசர் போன்றவர்களை விமர்சிப்பதல்ல, அவர் ஏற்கனவே அரசியல்ரீதியாக பெரிதும் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார். அதற்கு மாறாக அது அவரது இறுதி பத்தியில் வெளிப்படுகிறது, டோக்கியோ "அதிகளவில் அதன் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய தடைகளைத் துறந்துள்ள ஜப்பான், சீனாவை நோக்கி ஒரு ஐயவாத நிலைப்பாட்டைத் தழுவி வருவதோடு, சீன ஆக்கிரமிப்புத்தன்மையால் அதிகளவில் அதிருப்தி கண்டுள்ள அரசுகளோடு அணிதிரள்கிறது,” என்று ஜப்பானிய இராணுவவாதத்தின் அபாயங்களைக் குறித்து அவர் ஒரு எச்சரிக்கைபூர்வ ஆனால் தவறுக்கிடமற்ற குறிப்பைத் தருகிறார். “சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே அதிகரித்துவரும் கடுமையான முரண்பாடு, ஒரு துன்பியலான போட்டாபோட்டியின் எல்லா பொறிகளையும் கொண்டிருக்கிறது, அதில் ஏனைய நாடுகள் ஏதாவதொரு தரப்பை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது" என்று காம்ப்பெல் எச்சரிக்கிறார்.

யதார்த்தத்தில், ஃபிரேசர் எதை வெளிப்படுத்தினாரோ அதைத்தான் காம்ப்பெல்லும் குறிப்பாக எடுத்துக்காட்டுகிறார்—அதாவது அமெரிக்க நலன்களுக்காக இல்லாத ஜப்பானால் தூண்டிவிடப்படும் சீனா உடனான ஒரு மோதலுக்குள், ஆஸ்திரேலியாவைப் போலவே, அமெரிக்காவும் இழுக்கப்படும் அபாயம் குறித்து குறிப்பிடுகிறார். இருந்தபோதினும், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அதன் "தடைகளை" —யுத்தம் நடத்துவதன் மீதிருந்த அரசியலமைப்பு தடைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், மற்றும் சீனாவை நோக்கி குறிப்பாக கிழக்கு சீனக் கடலில் பிரச்சினைக்குரிய சென்காயு/தியாவு தீவுகளின் மீது ஓர் ஆக்ரோஷ நிலைப்பாட்டை எடுக்கவும், துல்லியமாக ஒபாமா நிர்வாகம் தான் டோக்கியோவை ஊக்குவித்துள்ளது; அழுத்தம் அளித்துள்ளது.

ஜப்பானிய பிரதம மந்திரி யுகியோ ஹடோயமாவின் ஜப்பான் ஜனநாயகக் கட்சி (DPJ) 2009 தேர்தலை வென்ற பின்னர் அவரை பலவீனப்படுத்த அமெரிக்காவின் ஒருங்கிணைந்த முயற்சிகளில் சந்தேகத்திற்கு இடமின்றி காம்ப்பெல்லின் கரம் இருந்தது. ஜப்பான் ஜனநாயகக் கட்சி தோற்றப்பாட்டளவில் ஒரு அரை நூற்றாண்டாக உடைக்க முடியாமல் அதிகாரத்தில் இருந்த வலதுசாரி தாராளவாத ஜனநாயகக் கட்சியை (LDP) தோற்கடித்திருந்தது.

DPJஇன் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்த ஒகினாவாவில் அமெரிக்க இராணுவ தள ஏற்பாடுகள் மீது மறுபேரம் நடத்துவதற்கான, அனைத்து முயற்சிகளையும் ஒபாமா நிர்வாகம் தடுத்த பின்னர், 2010இன் மத்தியில் ஹடோயமா இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார். ஹடோயமா ஒபாமா நிர்வாகத்தை ஒகினாவா மீது மட்டும் அந்நியப்படுத்தவில்லை, மாறாக அவர் இன்னும் மேலதிகமாக சுதந்திரமான ஜப்பானிய வெளியுறவு கொள்கையை ஊக்குவித்தார் என்பதால் அவர் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்தவும் அழைப்புவிடுத்தார், துல்லியமாக இது வாஷிங்டன் பெய்ஜிங்குடன் மோதலுக்கு முனைந்தபோது வந்தது.

ஹடோயமாவிற்கு அடுத்து DPJ அரசாங்கத்தின் தலைமைக்கு வந்தவர் அதே தவறை செய்யவில்லை. பிரச்சினைக்குரிய சென்காயு/தியாவு தீவுகளில் நடந்த ஒரு சம்பவமான ஒரு மீன்பிடி படகின் சீன மாலுமியை பிரதம மந்திரி நாட்டோ கன் கைது செய்து அச்சுறுத்த முயன்றபோது, செப்டம்பர் 2010இல் அந்த தீவுகள் மீது சிறிதே அறியப்பட்டிருந்த பிரச்சினை மேலாதிக்கத்திற்கான முக்கியத்துவமாக மாறியிருந்தது. செப்டம்பர் 2012இல், பிரதம மந்திரி யாஷிஹிகோ நோடா, அப்பகுதியில் ஜப்பானிய மற்றும் சீன கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தீவிர மோதலைத் தூண்டிவிடக்கூடிய நடவடிக்கையாக, அந்த பாறை குன்றுகளை "தேசியமயமாக்கினார்". இரண்டு விடயங்களிலுமே, வாஷிங்டன் முழுமையாக டோக்கியோவை ஆதரித்தது.

DPJஇன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் டிசம்பர் 2012இல் LDPஇன் மீள்வருகைக்கு கதவுகளைத் திறந்துவிட்டது. பிரதம மந்திரி ஷின்ஜோ அபே—இராணுவ செலவுகளை அதிகரித்தும், இராணுவம் மீதிருந்த அரசியலமைப்பு தடைகளை மறுசீரமைத்தும், சென்காயு மீது சீனாவுடன் பேரம்பேசுவதை நிராகரித்தும், மற்றும் கடந்தகால ஜப்பானிய போர் குற்றங்களை பூசிமொழுகியும்—உடனடியாக மீள்இராணுவமயமாக்கலின் நிகழ்முறையைத் தொடங்கினார். அமெரிக்க-ஜப்பான் கூட்டணிக்கு அவரது ஆதரவைப் பறைசாற்றினாலும் கூட, அபே ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் ஜப்பானிய இராஜாங்க மற்றும் இராணுவ உறவுகளை ஊக்குவிக்க அவரது சொந்த இராஜாங்க நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளார்.

"ஆசியாவில் இன்னும் பெரிய பாதுகாப்புத்துறை பாத்திரம்" வகிக்க ஜப்பானை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், காம்ப்பெல்லின் கருத்துரை என்ன கட்டவிழ்ந்துள்ளதோ அது குறித்த வாஷிங்டனின் ஒரு குறிப்பிட்ட அளவிற்கான பயத்தை எதிரொலிக்கிறது. ஆசியாவில் அதன் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கும் அமெரிக்க முயற்சிகளில், ஒரு பயனுள்ள அடிபணிந்த கூட்டாளியாக இருக்குமென்ற ஜப்பான் குறித்த அமெரிக்க மதிப்பீடுகள் அனைத்தும் ஊகங்களாகவே இருந்துள்ளன. எவ்வாறிருந்த போதினும், ஜப்பான் அதன் சொந்த சுதந்திரமான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கொண்டிருக்கிறது, அதைச் செயலாக்க அபே தீர்மானகரமாக இருக்கிறார். 2012 தேர்தல் பிரச்சாரத்தில் அவர் அறிவித்ததைப் போலவே, அவர் "ஒரு பலமான இராணுவத்துடன்" "ஒரு பலமான ஜப்பானை" விரும்புகிறார்.

தற்போது மோசமடைந்துவரும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கு மத்தியில், ஜப்பானிய இராணுவவாதத்தின் புத்துயிரூட்டலின் விளைவுகள், வாஷிங்டனின் வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. சந்தேகமே இல்லை வெறும் 70 ஆண்டுகளுக்கு முன்னர், அப்பிராந்தியத்தில் எந்த சக்தி மேலாதிக்கம் செலுத்த வேண்டுமென்பதை தீர்மானிக்க, அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியம் மில்லியன் கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து, ஆசியாவில் ஒரு இரத்தகளரி மிக்க போரை நடத்தி இருந்ததை குறைந்தபட்சம் சிலராவது நினைவுகூர்வார்கள்.