தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் Australia: Workers and youth speak on Ferguson, Missouri and police violence ஆஸ்திரேலியா: தொழிலாளர்களும் இளைஞர்களும் மிசோரி ஃபேர்குஷன் சம்பவம் குறித்தும், பொலிஸ் வன்முறை குறித்தும் கருத்து தெரிவிக்கின்றனர்
By a
reporting team Use this version to print| Send feedback மிசோரியின் ஃபேர்குஷனில் நிராயுதபாணியாக இருந்த இளைஞர் மைக்கேல் பிரௌனை மரணதண்டனை வழங்கும் பாணியில் கொன்றமை குறித்து, உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் கடந்த வாரயிறுதியில் மெல்போர்ன், சிட்னி மற்றும் பிரிஸ்பனின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே உரையாற்றினார்கள். பலர் பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் குறித்த அவர்களின் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, வறுமை மற்றும் சமூக பிரச்சினைகளின் அதிகரிப்போடு அதை தொடர்புபடுத்தினர். அடுத்தடுத்து வந்த தொழிற் கட்சி மற்றும் தாராளவாதக் கட்சி அரசாங்கங்களின் கீழ் தசாப்தங்களாக தொழில்துறை அழிக்கப்பட்டதால் மற்றும் மறுகட்டமைப்பு செய்யப்பட்டதால், ஆஸ்திரேலியாவின் சில நகரங்களில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை ஐரோப்பா மட்டங்களுக்கு வந்துள்ளது. மெல்போர்ன் புறநகர் பிராட்மெடோவ்ஸில் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை 16 சதவீதமாகும், அத்துடன் உள்ளூர் ஃபோர்ட் ஆலையில் வேலைகள் குறைக்கப்பட்டதாலும் மற்றும் இதர முக்கிய தொழில்துறைகள் மூடப்பட்டதாலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதமோ 53 சதவீதமாக உள்ளது. செய்திகளில் பெரிதும் குறிப்பிடப்படவில்லை என்றபோதினும், தொழிலாள வர்க்கம் நிறைந்த புறநகர் பகுதிகளில் இளைஞர்கள் மீதான பொலிஸ் தொல்லைகள் அன்றாட யதார்த்தமாக இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14இல் மூன்று குவின்லாந்து பொலிஸ் அதிகாரிகள் பிரிஸ்பனின் ஃபோர்டிட்யூட்டில் நிராயுதபாணியான இருந்த 19 வயது இளைஞனைக் கடுமையாக தாக்கியிருந்தனர். அவ்வழியாக சென்ற ஒருவரால் அச்சம்பவம் படமாக்கப்பட்டதால் மட்டுமே அந்த வன்முறை தாக்குதல் பகிரங்கமாக வெளியே வந்தது. எந்தவொரு விசாரணையையும் முடிக்கும் முன்னரே, குவின்லாந்து பொலிஸ் சங்க தலைவர் அயன் லீவர்ஸ், அதிகாரிகள் "முற்றிலும் கடமையுணர்வோடு, உரிய முறையில், பொறுப்பான விதத்தில் நடந்திருந்ததாக" அறிவித்ததார், அவர்களின் நடவடிக்கைகள் ஒரு உள்துறை புலன்விசாரணையில் "முற்றிலுமாக நிரூபிக்கப்படுமென்றும்" தெரிவித்தார். WSWS ஆல் பெறப்பட்ட நேர்காணல்கள், அதுபோன்ற சம்பவங்கள் பெரிதும் பொதுவாக நடக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. 24.6 சதவீத வேலைவாய்ப்பின்மையைக் கொண்டிருக்கும் தெற்கு பிரிஸ்பனின் புறநகர் பகுதியான இனாலாவில், பூர்வீகமாக ஒரு தொழிலாளரும் வியாபாரரீதியில் கொதிகலன்கள் தயாரிப்பவருமான நைகல், மிசோரியின் ஃபேர்குஷன் மக்களுடன் உடனடியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். “அவ்வாறு இங்கேயும் அடிக்கடி நிகழ்கிறது. அது பூர்வீக குடிமக்களுக்கு மட்டும் நடப்பதில்லை; அது ஏழைகளுக்கு நடக்கிறது, அது வர்க்க அமைப்புமுறை," என்று அவர் தெரிவித்தார்.
"ஆஸ்திரேலியாவில் ஒரு வர்க்க அமைப்புமுறை இருக்கிறது ஆனால் அது வேறு நாடுகளில் இருப்பதைப் போல அந்தளவிற்கு விளம்பரப்படுத்தப்பட்டோ அல்லது நன்கறியப்பட்டதோ இல்லை. இந்தியாவில், நிறைய பணக்கார்கள் இருக்கும் தாஜ் மஹாலுக்கு வெளியே நீங்கள் நடந்து வந்தால், மக்கள் பிச்சையெடுப்பதை நீங்கள் பார்க்கலாம். பல மில்லியன் டாலர் மாளிகைகள் இருக்கும் பகுதியில் நடந்து செல்கையில், குப்பைகளில் இருந்து உணவுகளை எடுத்து உண்ணும் மக்களை உங்களால் பார்க்க முடியும் ... பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி ஆஸ்திரேலியாவிலும் அதிகரித்து வருகிறது, அரசாங்க கொள்கைகள் மற்றும் சட்டத்திட்டங்கள் தான் அதற்கு காரணம்." “என்னுடைய கருத்து என்னவென்றால் மிசோரி ஃபேர்குஷனில் பொலிஸ் சில சட்டங்களை மீறியுள்ளது. அவர்கள் ஏதோ நீதிபதியைப் போல, நீதிமன்ற நடுவர்மன்ற குழுவைப் போல, மரணதண்டனை விதிப்பவர்களைப் போல நடந்து கொள்கிறார்கள், அது சரியல்ல. அவ்வாறு இங்கேயும் நடப்பதுண்டு, ஆனால் அது வெறுமனே மிதியடிகளின் கீழ் நசுக்கப்பட்டு, அதற்காக மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது," என்றார். நைகல் மேற்கு ஆஸ்திரேலியாவில் நடந்த சமீபத்திய ஒரு விடயத்தைக் குறித்து பேசினார், அங்கே நம்பத்தகுந்த "கிரேடு A" பூர்வீகக்குடி மாணவர் ஒருவரை பொலிஸ் கொன்றிருந்தது. “பொலிஸ் அவரை அடித்து, உதைத்ததோடு, பின்னர் இழுத்து வந்து, அவர் குடித்திருந்தார், வீதியில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார் என்று கூற முயன்றது, அது முற்றிலும் அபத்தமாகும். பொலிஸ் மூடி மறைத்ததோடு பொய்யுரைத்தது, இப்போது அது ஒரு விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறது." பிராட்மெடோவ்ஸில் உள்ள லிபன் கூறுகையில், “ஒரு காவலரோ அல்லது பாதுகாப்புத்துறை சிப்பாயோ பணியில் இருக்கும் போது யாரையாவது கொன்றுவிட்டால், அவருக்கு மனநோய் பிரச்சினைகள் இருந்ததாக அவர்களால் பொய் கூற முடிகிறது, அத்தோடு அவர்கள் வீட்டிலிருந்து ஓய்வெடுப்பதற்காக சம்பளமும் வழங்கப்படுகிறது.
"அமெரிக்கா ஏனைய நாடுகளைச் சுட்டிக்காட்டி, அவை சர்வாதிகாரங்கள் என்று கூறுகிறது, ஆனால் அமெரிக்கா தான் உண்மையான சர்வாதிகாரம். அமெரிக்காவின் உள்நாட்டையே பாருங்கள், எல்லாம் ஏழை மக்களோடும் மருத்துவ கவனிப்பு கோரும் மக்களோடும் இருக்கிறது. "மத்திய கிழக்கில் என்ன நடந்திருக்கிறதென்று பாருங்கள். சதாம் ஹூசைன் ஒரு பயங்கரவாதி என்றும், அவர் பேரழிவுகரமான ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்றும் கூறி, ஜனாதிபதி புஷ் ஈராக்கிய யுத்தத்திற்குள் சென்றார். ஆனால் அங்கே அவ்வாறான எதுவுமே இல்லை. அமெரிக்கா செய்ததைப் போல அவ்விதமான படுகொலையை ஒரு ஆபிரிக்க நாடு செய்திருந்தால், அவர்கள் அவரை சிறையில் அடைத்திருப்பார்கள், ஆனால் புஷ் சிறையில் அடைக்கப்படவில்லையே," என்றார். திரைப்பட மற்றும் தொலைக்காட்சித்துறை மாணவரும் பகுதி-நேர சில்லறை அங்காடி தொழிலாளியுமான ஆண்ட்ரூ, மெல்போர்னின் கிழக்கு புறநகர் பகுதியான ரிங்வுட்டில் WSWS உடன் பேசினார். “அமெரிக்க அரசாங்கத்தின் விடையிறுப்பு, அதன் குடிமக்களின் கருத்துக்களை நோக்கிய அதன் மனோபாவத்தைத் தெளிவாக பிரதிநிதித்துவம் செய்கிறது. அவர்களின் சொந்த முடிவுகளை எடுக்க குடிமக்களை அவர்கள் நம்புவதில்லை," என்றார்.
"நான் ஒபாமாவைக் குறித்து என்ன கேள்விபட்டிருக்கிறேனோ அதிலிருந்து கூறுவதானால், டோனி அபோட் உடன் நாங்கள் எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்தளவிற்கு தான் அமெரிக்க மக்களும் இருக்கிறார்கள். அவர், மிகவும் பணக்காரர்கள் மற்றும் மிகவும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு மாறாக, அதை விரிவாக்கி வருகிறார், துப்பாக்கிசூடு சம்பவம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும். "இங்கே இருக்கும் அரசாங்கமும் ஏறத்தாழ ஏழை ஆஸ்திரேலியர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, நிச்சயமாக அமெரிக்காவில் என்ன நடந்து வருகிறதோ அதேபோன்ற சமாந்தரங்கள் இங்கேயும் இருக்கின்றன. அது அமெரிக்காவில் நடக்கிறதென்றால், ஆஸ்திரேலியாவில் நடக்காதபடிக்கு எது அதை தடுக்க முடியும்?" சிட்னி புறநகர் பகுதியான மரோப்ராவில், மக்கள் தொடர்புதுறை மாணவரான 17 வயது நிரம்பிய அல்வின் கூறுகையில், அவர் பல முறை பொலிஸால் பலவந்தப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். “அதுவும் முக்கியமாக, நள்ளிரவில் பெண் நண்பர்களோடு நான் திரும்பி வந்தால் நடக்கும். நேற்று இரவு நான் பிடிக்கப்பட்டேன், நகரத்தின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தது தான் நான் செய்தது. தெளிவாக என்னைப் போலவே தெரியும், என்னை போலவே உடை உடுத்திய யாரோ ஒருவர் போதைபொருட்கள் வைத்திருப்பதாக கூறி, அவர்கள் என்னை பிடித்துக் கொண்டார்கள்," என்றார்.
சிட்னிக்கு வருவதற்கு முன்னர் பிரிஸ்பனில் வீடின்றி இருந்த அல்வின் தொடர்ந்து கூறுகையில், “அவர்கள் ஒவ்வொருவரையும் சுதந்திரமாக நடமாட விட வேண்டும். அது மிகவும் மோசமாக இருக்கிறது. வீதிகளில் இளைஞர்களுக்கு அவர்கள் உதவ வேண்டும். இப்போதைய நாட்களில் அவர்கள் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகைகள் வழங்குவதையும் வெட்ட முயன்று வருகிறார்கள், அது மிகவும் நேர்மையற்ற செயலாகும் ஏனென்றால் அது தான் குடும்பம் இல்லாத அவர்களுக்கு உதவி வருகிறது, ஆதரவாக இருக்கிறது? அது மிகவும் வேதனையான இருக்கிறது ஆனால் ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்க முடியாது, மேலும் அவர்களை வீதிகளிலேயே வாழவைக்க முடியாது," என்றார். கணக்கியல் படிக்கும் மாணவரும் பகுதிநேர நடிகருமான 22 வயது நிரம்பிய பிலால் கூறுகையில், “நான் கடந்த 10 ஆண்டுகளாக சிட்னியில் ரயில்களில் பயணிக்கிறேன், பெரும்பாலான அத்தகைய நேரங்களில் ரயிலில் இருக்கும் போக்குவரத்து அதிகாரிகள் வெறுமனே வழக்கமான சீருடை அணிந்த பயணச்சீட்டு பரிசோதகர்களாக இருப்பார்கள், அவர்களிடம் எந்தவிதமான பயமுறுத்தும் தொனியும் இருக்காது. "இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து அவர்கள் போக்குவரத்து அதிகாரிகளை நீக்கிவிட்டு, ரயில்களில் வழக்கமான காவலர்களை நிறுத்த முடிவெடுத்தார்கள். இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடு ரயிலில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்றால், மூன்று அல்லது நான்கு காவலர்கள் அவர்களின் பெரிய பெல்டுகள் மற்றும் தொங்கும் கைதடிகளோடும், டேசர் (மின்அதிர்ச்சியூட்டும் கருவி) மற்றும் சுற்றுப்பட்டை மற்றும் துப்பாக்கியோடு நடந்து போவதை பார்க்கலாம். ரயிலில் பொலிஸால் யாரும் சுடப்பட்டார் என்பது போன்ற சம்பவங்கள் இதுவரையில் இல்லை, ஆனால் அமெரிக்காவில் நடந்ததைப் போல இங்கேயும் செய்திகள் வருவதென்பது வெறும் நேரம் சார்ந்த விடயமென்று தான் நான் நினைக்கிறேன்," என்றார்.
மெல்போர்னை மையமாக கொண்ட தெற்கு சூடான் சமூகத்தின் தலைவரான அகுர் ஒரு ஆபிரிக்க சமூக சட்ட மையத்தை ஸ்தாபிக்க முயன்று வருகிறார். “தெற்கு சூடான் இளைஞர்களோடு நீதிமன்றங்களுக்கு செல்வது, பொலிஸ் நிலையங்களில் நேர்காணல்களில் அவர்களோடு இணைந்திருப்பது என நான் தெற்கு சூடான் இளைஞர்களுக்கு உதவ முயன்று வருகிறேன். அமெரிக்காவில் என்ன நடக்கிறதோ அது இங்கேயும் நடக்கிறது. எந்தவொரு வித்தியாசமும் இல்லை," என்று அவர் தெரிவித்தார். "எங்கள் குழந்தைகளைப் பொலிஸ் பின்தொடர்கிறார்கள், எந்தவொரு காரணமும் இல்லாமல் அவர்களை சிறையில் அடைக்கிறார்கள். வேறெவரையும் விட பொலிஸிற்கு அதிக அதிகாரம் இருக்கிறது; அவர்கள் அவர்களுக்கு நிறைய அதிகாரங்களைக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். இது பெரும் பிரச்சினைகளை உருவாக்கி உள்ளது. இந்த நபர் இந்த தவறை செய்தார், இவரை சிறையில் அடைக்க வேண்டுமென பொலிஸார் நீதிபதிகளை நம்ப வைக்கிறார்கள், மேலும் நீதிபதிகளும் பொலிஸூடன் சாதாரணமாக உடன்பட்டு போய்விடுகிறார்கள். அவர் தொடர்ந்து கூறினார், தெற்கு சூடான் இளைஞர்கள் "சாலையில் குறுக்காக போனார்கள் என்பதற்காக கைது செய்யப்படுகிறார்கள் ... பல சமயங்களில் அவர்கள் எதற்காக கைது செய்யப்படுகிறார்கள் என்பதற்கு எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமலேயே கைது செய்யப்படுகிறார்கள். வெறுமனே அங்குமிங்குமாக நடப்பதற்கும் கூட. நான் பலமுறை பொலிஸால் நிறுத்தப்பட்டு, அங்கே ஏன் நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்கப்பட்டிருக்கிறேன். ஒருநாள் ஃபிலிடெர்ஸ் வீதி நிலையத்தில் நான் நின்று கொண்டிருந்தேன், இரண்டு பொலிஸ்காரர்கள் வந்து, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிய விரும்பியதோடு, அங்கிருந்து நகர்ந்து செல்ல கூறினார்கள். நான் அங்கே ஒன்றுமே செய்யவில்லை." விக்டோரியா பல்கலைக்கழகத்தில் சமூக வளர்ச்சிப்பணி மாணவரான அரோப் கூறுகையில், “நான் தெற்கு சூடானிலிருந்து வந்திருக்கிறேன், அங்கே உண்மையில் நிறைய வன்முறை நடக்கின்றன, ஆனால் எல்லோரும் பார்க்கும் வகையில் பொதுவிடத்தில் பொலிஸ் மக்களை கொன்றது என்று உங்களால் கேள்விப்பட முடியாது. அமெரிக்காவில் நீங்கள் பார்ப்பது ஒரு வித்தியாசமான வகைப்பட்ட வன்முறையாகும். "வரவு-செலவு திட்டத்திலிருந்து அவர்கள் [அபோட் அரசாங்கம்] மக்கள் மீது சுமத்த விரும்பும் இத்தகைய சட்டங்கள் ஏழைகளைத் தான் பாதிக்கும். அது ஆஸ்திரேலிய மக்களையும், ஏழைகளையும், புலம்பெயர்ந்தோரையும் காயப்படுத்தும். அதனொரு விளைவாக இன்னும் குற்றங்களுக்கு திரும்புவதே நடக்கும். பொலிஸ் இன்னும் மேற்கொண்டு இளைஞர்களைக் குறிவைக்கக்கூடும்," என்றார். பிராட்மெடோவ்ஸில் ஒரு இளம் கறிக்கடை தொழிலாளரான கிறிஸ் கூறுகையில், “நான் [ஃபேர்குஷன் பொலிஸ் தாக்குதல்களை] தொலைக்காட்சியில் பார்த்தேன், அது தவறென்று தோன்றியது. பொலிஸ் அதை ஏன் செய்தார்கள் என்று எனக்கு ஒரு சுவடு கூட தென்படவில்லை. அவர் ஏதோ திருடிவிட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள், ஆனால் அது உண்மையாக இருந்தாலும் கூட, அதற்காக ஒருவரைக் கொல்வதென்பது மதிப்புடையதல்ல. அது இன்னமும் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.
"பெரும்பாலும் இங்கேயும் அதுபோல நடக்கக்கூடும். ஒரு மாதத்திற்கு முன்னர் நான் பெண்டிகோவில் இருந்தபோது பொலிஸ் ஒரு 17 வயது சிறுவனைத் தரையில் இழுத்து சென்றார்கள். அச்சிறுவனிடம் ஒரு நுழைவுசீட்டு இல்லை என்பதும், PSO [பாதுகாப்பு சேவை அதிகாரிகளோடு] பூசலில் ஈடுபட்டிருந்தான் என்பதும் மிக வெளிப்படையாக இருந்தது. ஆனால் அதை வைத்து அவர்களின் நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. அந்த காவலர்கள் அவர்களின் சிறிய வண்டியின் பின்பகுதியில் ஆறு சிறுவர்களைப் பிடித்து வைத்திருந்தார்கள். "மக்களைப் பெரிதும் அடிமைகள் போல வாழ வைப்பதற்காகவே—பிராட்மெடோவ்ஸில் பெரும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. இன்றைய நாட்களில் மற்றும் இந்த வயதில் இவை மிகவும் துரதிருஷ்டவசமானது. அதனால் தான் ஒவ்வொருவரும் போதைப்பொருட்களை விற்கிறார்கள், திருடுகிறார்கள், மேலும் என்னைக் கேட்டால் அரசாங்கம் அதை தான் செய்ய வைக்கிறது. ஆனால் பொலிஸ் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதென்பது, தனியாக இருந்து வென்றுவிட முடியாது. இந்த அமைப்புமுறை மாற்றப்பட வேண்டியதாக இருக்கிறது," என்றார். |
|
|